1. உன் நிழல்
உன்னிடமே
உதாரணமாக, ஒருவன்
நம்மை வேதனைப்படுத்தி, கடுமையாகத் துன்புறுத்துகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அடிக்கடி
அவனை எண்ணி, “இப்படிச் செய்தானே” என்றும், அவனை எப்படியும் தொலைத்துக் கட்டவேண்டும்
என்ற எண்ணத்தை ஓங்கி வளர்ப்போமேயானால், அதைக் கொண்டு, அவன் நம்மைத் துன்புறுத்திய உணர்வை
அடிக்கடி எண்ணும் பொழுது, அந்த உணர்வான வித்து இங்கே விளைந்து, நமக்குள் ஊழ்வினையாகப்
பதிவாகின்றது.
இப்படி மீண்டும்
மீண்டும் அவனை எண்ணும் பொழுது,
அவன் உடலிலிருந்து
வந்த உணர்வுகள் அனைத்தும்,
அவன் சொன்ன உணர்வின் தன்மை நமக்குள் நோயாகி, நம்மை
நலிந்திடும் நிலையாக்குகின்றது.
நலிவடைந்தபின்,
நம் உடலைவிட்டு உயிரான்மா பிரிந்து செல்லும் பொழுது, கடைசி நிமிடத்தில், “பாவிப்பயல்,
நமக்கு இப்படியெல்லாம் செய்தானே” என்ற இந்த எண்ணங்கள் வரும்.
இந்த எண்ணத்தை
அதிகமாக உருவாக்கிவிட்டால், உடலை விட்டுப் பிரியும் இந்த உயிரான்மா, யார் துன்புறுத்தினாரோ
அவர் உடலுக்குள் சென்று, இந்த உடலில் நலிவடையச் செய்த நோயை அங்கே உருவாக்கி, அந்த உடலையும்
வீழ்த்திவிட்டு வெளியில் வந்துவிடும்.
பின், இன்னொரு
உடலில் சென்று, எதை எதையெல்லாம் எண்ணியதோ அவரைச் சார்ந்த நிலைகள் கொண்டு பலரிடத்தில்
பேசும் பொழுது, “எனக்கு இப்படிச் செய்தானே” என்று வேறு உடலுக்குள் புகுந்து, அந்த உடலையும்
வீழ்த்தும்.
இப்படி வீழ்த்திவிட்டுச்
சென்றபின், மனிதனாக உருப்பெறும் நிலையை இழந்து, மனித உருவையே உருக்குலைக்கும் நிலையாகச்
செய்து, வேதனை என்ற உணர்வை வளர்த்த இந்த உயிரான்மா,
எந்த உடலில்
எந்த வேதனையை அனுபவித்ததோ,
இழுத்த உணர்வுகள்
அனைத்தும் சேர்ந்து
வேதனைப்பட்டுக்
கொண்டே இருக்கும்.
ஆக, “உன் நிழல்
உன்னிடமே” என்பது போல்
வேதனையை வளர்த்த
இந்த நிலைகள்
மீளாத்துயர் படும் நிலையாக உயிருடன்
ஒன்றியிருக்கும்.
2. இந்த மனித உடலுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றோம்
காரணம், இந்த
உயிர் புழுவிலிருந்து மனிதனாகி தீயதை நீக்கும் நிலை பெற்றபின், இந்த மனித உடலுக்கே
முக்கியத்துவம் கொடுத்து,
தன்னைக் காத்திடும்
கௌரவமும்,
தன்னைப் பழித்துப்
பேசுகின்றான் என்ற இழிநிலை தாங்காது,
அவனை இழித்துப்
பேசிடும் நிலை வருகின்றது.
பின், அவன் இழிவாகப்
பேசிய உணர்வைத் தனக்குள் வளர்த்து, அவனை அழித்திடவேண்டும் என்ற எண்ண உணர்வுகள் நமக்குள்
வளர்த்திடும் நிலை வருகின்றது.
அப்பொழுது, நம்மை
மனிதனாக்கி அறிந்திடும் அறிவைக் கொடுத்து, நல் உணர்வில் படும் அழுக்கினை நீக்கி,
நல்ல உணர்வினை உருவாக்கும் ஆறாவது அறிவையே மாசுபடச்
செய்துவிடுகின்றனர்.
இப்படி மாசுபட்டபின்,
நல்ல உணர்வுகளை நாம் நுகராது, நமக்குள் தீய வினைகள் உருபெற்றபின், இந்த உயிர் வளர்த்த
இந்தத் தன்மையை சாபம் இட்டது போல், கீதையிலே சொல்வது போல், நீ எதை நினைக்கின்றாயோ,
அதுவாகின்றாய் என்றபடி நமக்கு நமது எண்ணமே வினையாகின்றது.
தீமைய அகற்ற
முடியும் என்ற ஆறாவது அறிவின் தன்மையை, தீமையை அகற்ற சரியானபடி பயன்படுத்தவில்லையென்றால்,
நாம் எந்த வேதனையின் தன்மையை வென்றோமோ, அந்த வேதனையின் நிலையாக அதுவாகின்றோம்.
ஆக, நாம் எடுக்கும்
உணர்வுகள் நமது உடலில் வேதனையாகிவிட்டால், அந்த வேதனையின் நினைவலைகள் அதிகமாகும் பொழுது,
அந்த வேதனைக்குண்டான உணர்வை அது கவர்ந்து, அந்த உணர்வின் தன்மையை ஆன்மாவாக மாற்றி,
உயிரிலே படும் பொழுது சங்கநாதம்.
அடிக்கடி அந்த
வேதனையான உணர்வினை ஓதச் செய்து, அந்த உணர்வின் அலைகளாக உடலிலே பரப்பச் செய்து, அதனின்
துணை கொண்டு உடலிலே வேதனையும், நாம் எதை எண்ணுகின்றோமோ அவையனைத்தும் நமது உடலிலே நடக்கும்.
காரத்தின் உணர்வுகள்
எவ்வாறோ, இனிமையின் உணர்வுகள் எவ்வாறோ, இதைப் போல நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தையும்
தீவினையாக இயக்கும்.
இதைத்தான் வியாசக
பகவான் கீதாச் சாரமாக வைத்து,
நீ எதை எண்ணுகின்றாயோ,
அதுவாகின்றாய்” என்றார்.
3. இந்த உடலை யாருமே சதமாக்க முடியாது
இன்று மனித உடலே சதம் என்று நாம் இருக்கின்றோம். இந்த உடலை
“யாரும்” சதமாக்க முடியாது.
ஆனால், இந்த
உடலின் துணை கொண்டு தான் அருள் ஞானிகளின் உணர்வுகளை, நமது ஆறாவது அறிவின் துணை கொண்டு
எடுத்துச் சேர்ப்பிக்க முடியும்.
ஆகவே, நமது குருநாதர்
காட்டிய அருள் வழியில் நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி, அருள் மகரிஷிகளின்
அருள் சக்தியைச் சேர்த்து, உயிருடன்
ஒன்றும் உணர்வுகளை, ஒளியாகவே மாற்றுவோம். அதையே சதமாக்குவோம். எமது அருளாசிகள்.