இன்றைய பூமியின் தன்மையில் நஞ்சினை அகற்றும் ஆற்றல் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. நஞ்சினை நீக்கிடும்
ஆற்றல் நீங்கள் பெறவேண்டும் என்று யாம் உபதேசிக்கின்றோம்.
ஆக, கீதையிலே சொன்ன மாதிரி, நீ எதை
நினைக்கின்றாயோ, அதுவாகின்றாய். நீங்கள் அனைவரும் மகரிஷிகளின்
அருள் சக்தி பெற வேண்டும்; உங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க
வேண்டும்; மெய்ப்பொருள்
காணும் உணர்வுகள் விளைய வேண்டும் என்ற உணர்வின் நோக்கம் கொண்டு நான் உங்களுக்குள்
உபதேசிக்கின்றேன்.
இதைக்
கேட்டுணர்ந்த நீங்கள் அனைவரும் இதைப்
பின்பற்றினால்,
பிறர் வாழவேண்டும் என்ற உணர்வு,
உங்களுக்குள் “வாழும் சக்தியாக” வளர்ந்து,
உங்களுக்குள் தீமையை
விளைவிக்கும் நிலைகளை அது ஒடுக்குகின்றது.
அப்பொழுது, மெய் உணர்வைக் காணும் நிலைகளில் உங்கள் பேச்சும், மூச்சும் வெளிப்பட்டு, இன்று விஞ்ஞான உலகால்
ஏற்பபடுத்தப்பட்ட நஞ்சினை வென்றிடும் உணர்வலைகளாகப் படர்கின்றது.
பூமியில் படர்ந்துள்ள நஞ்சினை அகற்றும் இத்தகைய
ஆற்றல் உங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்த அருள் ஞானியின் உணர்வை உங்கள் உடலுக்குள்
செலுத்தி, இந்த உணர்வலைகள்
மூச்சலைகளாக வெளிப்பட வேண்டும்.
விஞ்ஞஞான அறிவால்
ஏற்படுத்தப்பட்ட கடும் நஞ்சினை வெல்ல, ஒவ்வொரு மனிதனும் இந்த சக்தி பெறவேண்டும்.
அந்த அருள்
ஞானியின் சக்தியை நீங்கள் பெற்றால் ஒழிய
இந்த நாட்டில்
வரும் தீய விளைவுகளில் இருந்து
மனிதன் தப்பிப்பதே
மிகக்கடினம்.
நம் நினைவின்
ஆற்றலை விண்ணை நோக்கி ஏகி, அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் பதிவு
செய்துகொண்டு, நாம் இடும் மூச்சலைகளால் சிறிதேனும் சிறிதளவு
காக்கமுடியும்.
எதைக் காத்திட்டாலும், இந்த
உடலே ஒளியின் சரீரமாக வேண்டும். இது நமக்கு திண்ணமான நிலை.
ஒளி சரீரம் நீங்கள் அனைவரும்
பெறவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்,
என் குரு இட்ட கட்டளைப்படி
நான் உங்களை தியானிக்கின்றேன். எமது அருளாசிகள்.