ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 16, 2013

மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் பிறக்கக் காரணமும், தடுக்கும் வழியும்

1. கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசிக்கின்றான்
உதாரணமாக, ஒரு கருவுற்றிருக்கும் பெண்மணி ஊனமுற்ற குழந்தையைப் பார்க்கின்றது என்று வைத்துக் கொள்வோம்.. அந்தக் குழந்தையின் உடலிலிருந்து வரக்கூடிய மூச்சலையும், உடலின் அலைகளையும், சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து கொள்கின்றது.

இந்த உணர்வின் சக்தியை, அந்தத் தாய் சுவாசிக்கும் பொழுது, அதை எண்ணி, இந்தக் குழந்தைக்கு இப்படியாகி இருக்கின்றதே என்று சோர்வும், வேதனையும், அடைகின்றது. சஞ்சலமும் படுகின்றது.

ஆக, அந்த உணர்வின் நிலைகள் வரும் பொழுது, அத்தகைய உணர்வைப் பார்வையால் நுகரச்செய்து, அந்த எண்ணத்தால் உடல் இயங்கி, அது எடுத்துக் கொண்ட உணர்வின் சத்து,
ஊனமுற்ற குழந்தையின் உடலில் இருந்து வரும் உணர்வின் சத்தை,
கர்ப்பிணிப் பெண் கவர்ந்து சுவாசிக்கும் பொழுது,
தன் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு,
இந்த உணர்வின் அலைகள் பதிவாகிவிடுகின்றது.

கண்ணன், கருவிலே இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று, கதையைச் சொல்வார்கள். நமது க்கு இந்த உணர்ில் இருந்து வரும் உணர்வின் சத்தை கர்ப்பிணிப் பெண் கவர்ந்து சுவாசிக்கும் பொழுது, தன்னகண், அந்தக் குழந்தை ஊனமுற்று இருக்கும் உணர்வைக் கண்டு, இரக்கப்பட்டு, பரிதாபப்பட்டு, வேதனைப்படும் அந்த உணர்வுகளைச் சுவாசிக்கச் செய்து, உயிரை இயக்கச் செய்கின்றது. உயிர் எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

அந்த உணர்வின் அலைகள் இரத்தத்துடன் கலந்து, தாயின் இரத்தத்தில் இருக்கக்கூடியதைத்தான், கருவில் இருக்கக்கூடிய குழந்தை உணவாக எடுத்து, அதனின் தசைகள் வளர்கின்றது.
2. தாய்க்கு ஊழ்வினை, குழந்தைக்குப் பூர்வ புண்ணியம்
ஆக, தாய் எதைக் கூர்மையாகப் பார்த்ததோ, இந்தக் கண் அந்த ஊனமுற்ற குழந்தையின் உணர்வை, ஆழமாகப் பதிவு செய்கின்றது. ஊழ்வினையான அந்த வினைதான், இந்தக் குழந்தையிடமிருந்து வெளிப்படும் உணர்வை, மீண்டும் சுவாசிக்கச் செய்கின்றது. ஏனென்றால்,
தாயின் கருவிலே அந்த உணர்வுகள்
பதிவாகவில்லை என்றால் எடுக்காது.

நம்முடைய கண்ணின் நினைவலைகள் எங்கே செல்கின்றதோ, அதனின் நிலைதான் பதிவாகி, அதனையே இயக்கும்.

இதைப் போல, அந்தக் கர்ப்பமுற்ற தாய் தான் பார்த்த, ஊனமுற்ற உணர்வின் தன்மையைக் கூர்மையாகக் கவனித்து, அது உடலிலே பதிவாக்கும் பொழுது, தாய்க்கு ஊழ்வினை.

ஊழ் என்பது, நமது எலும்புக்குள் மேக்னட், காந்த சக்தி உண்டு. இந்த உடலிலே பதிவு செய்த அனைத்தும், நமது எலும்புக்குள் ஊழ்வினையாக அது ஊழாக இருக்கின்றது.

நாம் எப்படி டேப்புகளிலே முலாம் பூசுகின்றோமோ, அதைப் போல நமக்குள் உருவான இந்த நிலை, நாம் வளர்ச்சி பெறும் வண்ணம், நமது எலும்புக்குள் இந்த ஊண்.
நாம் கண்ணால் பார்த்த உணர்வின் தன்மையை,
அந்த ஊணுக்குள் பதிவு செய்துவிடும்.

இவ்வாறு, தாய் சந்தித்த (ஊனமுற்ற குழந்தையைப் பார்த்த) சந்தர்ப்பத்தின் உணர்வுகள், தாய்க்கு ஊழ்வினையாகி, சுவாசிக்கும் உணர்வுகள் தாயின் இரத்தத்திலே கலந்து, கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு, இது பூர்வ புண்ணியமாக அமைகின்றது.
3. ஊனமான குழந்தையாகப் பிறக்கின்றது
ஆகவே, இந்தக் குறை உணர்வைக் கண்டுணர்ந்த தாய்,
அந்த குழந்தையின் உணர்வுகள் பட்டபின்,
இந்த வேதனை என்ற நஞ்சு வரப்படும் பொழுது,
அந்தக் கருவிலே சிந்திக்கும் திறன் இழந்து,
மூளையின் வளர்ச்சி குறைவாக இருக்கும்.

அவ்வாறு, அந்த மூளையின் வளர்ச்சி குறைவாக இருக்கப்படும் பொழுது, இந்த உடலிலே வளர்ச்சியின் தன்மை குறைவாக ஆகி, எதனின் உணர்வுடன், அந்தக் குழந்தையைப் பார்த்ததோ, அதே நிலைகள் கொண்டு, கருவிலே இருக்கக்கூடிய குழந்தை உடலும் ஊனமாகும்.

குழந்தை தவறு செய்ததா? தாயின் கருவிலே வளரப்படும் பொழுது, தாய் சந்தித்த சந்தப்பத்தின் உணர்வுகள், தாய்க்கு ஊழ்வினையாகவும், குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகவும் அமைகின்றது. ஆக, தாய் எடுத்துக் கொண்ட, பார்த்த உணர்வு கொண்டு குழந்தைக்குப் புண்ணியமாக அமைகின்றது.

தைத்தான், கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது.

நமது கண்ணின் நினவலைகள், அங்கே இருப்பதைக் கவர்ந்து, உடலுக்குள் அது செல்லப்படும் பொழுது, குழந்தைக்கு அந்த உணர்வின் சக்தி கிடைக்கின்றது, என்ற நிலையைக் காட்டுகின்றனர்.

இயற்கையின் உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றது என்ற நிலையைத் தெளிவுறக் காட்டுவதற்குத்தான், அன்றைய ஞானிகள் இவ்வாறெல்லாம் கதைகளை எழுதி, நாம் அறிந்து கொள்ளும்படிச் செய்தார்கள்.
4. உலகைக் காக்கும் ஞானக் குழந்தையைப் பெற்றெடுக்கும் வழி
கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் அனைவரும், கருவிலிருக்கும் தன் குழந்தையை எண்ணி, அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில், விண்ணை நோக்கி கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும், என்று ஏங்கவேண்டும். அந்த ஏக்கத்துடன்,  
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளி
என் கருவுக்குள் இருக்கும் குழந்தை பெற வேண்டும் என்று,
கண்ணின் நினைவலைகளை,
கருவுக்குள் செலுத்த வேண்டும்.

இவ்வாறு செய்யும் பொழுது, கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசிப்பது போல, நம் உணர்வின் தன்மை கண்ணால் எண்ணி, அந்த
துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை,
உள்ளே பாய்ச்சப்படும் பொழுது,
அது ஞானக் குழந்தையாக வளருகின்றது.

அது வளர வளர, நமக்குள் தெளிவான நிலைகள் வளருகின்றது. அது நம்மைக் காத்திடும் நிலையாக வருகின்றது. அந்தக் குழந்தை, அகஸ்தியனைப் போன்ற ஞானக் குழந்தையாக உருவாகும்.
இந்த உலகைக் காத்திடும்,
உத்தம ஞானக் குழந்தையாக வளரும்.