1. பரமாத்மாவிலிருந்து,
ஆன்மாவாகவும், ஜீவான்மாவாகவும் மாற்ற உதவுவது நம் கண்களே
கண்ணன் சர்வத்தையும்
அறிந்து கொண்டவன். அவன் வேறு எங்கோ இருக்கின்றான் என்று போற்றித் துதிக்கின்றோமோ தவிர,
இயற்கையின் உணர்வின் இயக்க நிலைகளை
இன்னும் புரியாத நிலையில் நாம் இருக்கின்றோம்.
நமக்குள் பரமான ஆத்மாவை உணர்த்துபவனும் அவனே
(கண்களே).
நாம் எண்ணிய
நிலைகளில் பரமாத்மாவிலிருந்து தனக்குள் எடுத்து,
அனைத்தையும்
நமது ஆத்மாவாக மாற்றுபவனும் அவனே.
நாம் எண்ணிய
உணர்வின் தன்மை நம் உயிரான ஈசனிடம் இயக்கப்பட்டு, அந்த உணர்வின் சத்தை நமது ஜீவாத்மாவாக
மாற்றுவதும் அவனே.
நாம் எண்ணிய
நிலைகளில், பரமாத்மாவில் இருந்து தனக்குள் எடுத்து, அனைத்தையும் நமது ஆன்மாவாக மாற்றுபவனும் அவனே.
நாம் எண்ணிய
உணர்வின் தன்மை நம் உயிரான ஈசனிடம் இயக்கப்பட்டு, அந்த உணர்வின் சத்தை நமது ஜீவாத்மாவாக மாற்றுவதும் அவனே.
ஜீவாத்மாவுக்குள்
நாம் எண்ணிய நிலைகள் எதுவோ, அந்தத் துடிக்கும் உணர்வலைகள் கண்ணின் நினைவலைகளுக்கு வரும்
பொழுது, இந்தக் கண்ணே பரமாத்மாவில் இருந்து, தன் உணர்வாக இதற்கு உணவாக எடுத்துக் கொடுத்து,
அதனின் உணர்வின் ஜீவ அணுக்களாக விளையச் செய்வதும் கண் தான்.
ஆகவே, நாம் எடுத்த
எண்ண நிலைகளுக்கெல்லாம், இந்தக் கண்ணன் சாரதியாக நின்று, அந்த உணர்வின்
செயலாகக் கண் வழி நடத்தி, அதற்குண்டான உபகாரமும் செய்து கொண்டே வருகின்றான் என்ற இந்த நிலையை, கீதையின்
தத்துவத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார் வியாசக பகவான்.
நமக்குள் எந்தக்
குணத்தின் தன்மை வலு பெற்றிருக்கின்றதோ, இவை அனைத்தும் அர்ச்சுனனே. அர்ச்சுனன் வில்
போரில் வல்லவன் என்று சொல்வார்கள்.
நாம் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் அம்பாகப்
(சொல்லாக) பாய்ந்து, அந்த எண்ணத்தின் நிலையில்
நமக்குள் செயல்படும் உணர்வின் இயக்கத்தின் தன்மையை, மகாபாரதத்தில் தெளிவுற எடுத்துரைத்துள்ளார்
வியாசக பகவான்.
அத்தகைய நிலைகளை
நாம் புரியாது
கண்ணன் எங்கேயோ
இருக்கின்றான் என்று எண்ணுகின்றோம்.
கீதையின் தத்துவத்தைப்
படித்தவர்கள் சாதாரண மக்களை ஏமாற்றப் பயன்படுத்துகின்றனரே தவிர யாராவது தெரிந்து கொண்டு
அதனுடைய சாரத்தைக் கேட்டால், “உனக்கென்ன தெரியும்” என்று அகந்தை கொண்டு மழுப்பிவிடுகின்றனர்.
மெய்ஞானிகள்
வெளியிட்டதைப் பிறருக்கு எளிதில் காட்டினால் பாவம் என்று,
இதைப் பெரிய மலையாக
மறைத்து,
மெய்ப்பொருளைக் காணமுடியாத நிலையில்
முழுமையும் மறைந்துவிட்டது.
நாம் கடவுளைக்
காணவேண்டும். அதனை அடைய வேண்டும். பரமாத்மாவைப் பார்க்க வேண்டும், பரமாத்மாவை அடைய
வேண்டும் என்ற இந்தத் தத்துவத்தைத்தான் வைத்துக் கொண்டிருக்கின்றோம்.
புரியாத நிலையில்
பரமாத்வாவிலிருந்துதான் சகல சக்தியையும் நாம் பெறுகின்றோம். நாம் இறந்துவிட்டால், நமது உயிராத்மா
பரமாத்மாவில்தான் கலக்கும்.
3. இன்றைய செயல், “நாளைய சரீரம்”
இந்த உடலிலே
எந்த உணர்வின் தன்மையை
ஆன்மாவாக நாம்
கவர்கின்றோமோ,
அதை ஜீவான்மாவாக
மாற்றி,
ஜீவாத்மாவில்
விளைந்த நிலையை உயிராத்மாவாக மாற்றி,
இணைத்து, இந்த
உடலை விட்டு நாம் சென்றால்,
இந்த உடலிலே விளைய வைத்த
உணர்வின் ஆற்றலின் தன்மை கொண்டே
வெளியிலே செல்லும்.
அப்படிச் சென்றாலும்,
இந்த உயிருடன் ஒன்றிய உயிராத்மாவின் உணர்விற்கொப்பத்தான் அதனுடைய மணத்தின் துணை கொண்டு,
இன்னொரு உடலின் ஈர்ப்புக்குள் செல்கின்றது.
அப்படிச் சென்று,
அந்த உணர்வு தன் இனமான உணர்வுடன் இருந்தால், அதனின் உடலுக்குள் சென்று,
தனக்குள் இந்த
உணர்வின் நிலையை,
அதனின் உடலிலிருந்து
எடுத்து
அதனின் தசைகளை
இது உருவாக்கும்.
இதைத்தான் கீதையிலே
தெளிவாக உணர்த்தியுள்ளார்கள். இதையே விநாயக தத்துவத்தில் “இன்றைய
செயல், நாளைய சரீரம்” என்று சொன்னார்கள்.
ஒவ்வொரு நிலையிலும்,
நாம் மனித வாழ்க்கையில் தவறு செய்யவில்லை என்றாலும்,
சந்தர்ப்பபேதத்தால்
உணர்வுகள் எவ்வாறு மாறுகின்றது?
எதனின் துணை
கொண்டு இருக்கின்றது? என்ற நிலையை
அந்த மகா ஞானிகள் தெளிவாக்கியதைத்தான்
யாம் உபதேசித்து
வருகின்றோம்.