ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 28, 2013

"நாளை நடப்பது" யார் அறிவார்? யார் பார்ப்பது? என்றிருப்பவர்களை யாரும் தடைப்படுத்த முடியாது

1. நம் பூமி முதுமை அடைந்துவிட்டது
அடுத்துவரும் உலகத்தில் மனிதனுக்கு எப்படி வயது ஆகுகின்றதோ, பூமியும் முதுமை அடைந்துவிட்டது. முதுமை அடைந்ததினால், பூமி செயலற்றதாக மாறப்போகின்றது,

காரணம், இன்று அணு விசையால் உருவாக்கப்பட்ட உணர்வின் அலைகள் காந்தப்புலனால் கவரப்பட்டு, பூமியின் நடுமையம் சென்று அடையும் தருணம் வந்துவிட்டது.

வெப்பக்கனல் உள்ளே அதிக கொதிகலனாகப்படும் பொழுது பூமியில் நிலநடுக்கமும், மற்ற பாகங்கள் உள் செல்வதும்,
கடல் பெருகுவதும்,
கடல் வளருவதும்,
இதைப்போல் நிலங்கள் குறையும் தன்மை கூடியசீக்கிரம் வரப்போகின்றது.

னென்றால், பூமியில் பனிப்பாறைகள் அனைத்தும் உருகி, கடல்கள் பெருகி, நீர் நிலைகள் அதிகமாகிவிட்டால் சூரியனைக் கடந்து வெகு தூரம் சென்றுவிடும்.

வெகு தூரம் சென்றுவிட்டால், அன்று வியாழன் கோள் எப்படிப் பனிப்பாறைகளாக உறைந்ததோ, இதைப் போல துரித நிலைகள் கொண்டு நாமெல்லாம் பல ஆயிரம் அடிக்குள் பனிப்பாறைக்குள் உறைந்து, அதற்குள் நமது உயிரணு சிக்கிவிடும்.

எப்படி ஒரு ஐஸ் பெட்டியை இன்று நாம் வைத்திருக்கின்றோமோ, அதைப் போல அதற்குள் நாம் இருந்து, துடிப்பின் நிலைகள் கொண்டு இந்த மனித உடலில் எத்தனை வேதனைப்பட்டோமோ, உள்ளே சிக்கி அந்த வேதனை அனைத்தையும் நாம் அனுபவிப்போம், மீள முடியாது.

இந்த உயிரணுவுக்குத் தகுந்த வெப்பத் துடிப்பு கொண்டு நாம் சிக்கிக்கொண்டு, வேதனையை அனுபவித்துக்கொண்டே இருப்போம். அவ்வாறு ஆனால்
இந்த பூமியே மீண்டும் அதனின் இயக்கச் சக்தி மாறி,
இதனின்று கடந்து இந்த உயிரணு வெளி ந்தால்,
இன்னொரு பிரபஞ்சம் ஏற்படும் நிலைகளில்,
அதிலே கலந்தால்தான் நாம் செல்ல முடியும்.
2. கார்த்திகை நட்சத்திரம் நம் சூரியக் குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றுவிட்டது
னென்றால் இந்த பூமிக்கே, மிகவும் முதன்மை பெற்றது கார்த்திகை நட்சத்திரம். நமது சூரியன் எப்படி மற்ற கோள்களை வளர்த்துக் கொண்டதோ, அதைப் போல கார்த்திகை நட்சத்திரம் தனக்கென்று கோள்களை உருவாக்கிக் கொண்டது,

கார்த்திகை நட்சத்திரம் அது முழுமை பெற்று ஒரு சூரியக் குடும்பமாக மாறிக் கொண்டு உள்ளது. ரேவதி நட்சத்திரமும் இதைப் போல ஆகிக்கொண்டுள்ளது. இதைப் போல ஏனைய இரண்டு, மூன்று நட்சத்திரங்கள் சூரியக் குடும்பமாக மாறிக்கொண்டுள்ளது

இப்படிப் பிரிந்து செல்வதால், நமது சூரியக் குடும்பத்திற்கு விண்ணின் ஆற்றலை மாற்றி, உணர்வினைக் கொடுக்கும் சக்தி அது இழக்கும் தருணம் வந்துவிட்டது. 

ஆகவே, சூரியனே மங்கும் நிலை வருகின்றது. அதற்குள் சிக்கிய நிலைகள், பூமி பிரிந்து செல்கின்றது.
நாம் எப்படி முதுமையாகிப் பிரிந்து செல்கின்றோமோ,
சூரிய குடும்பத்தில் வளர்ந்த நமது பூமியே,
இந்த சூரியக் குடும்பத்தில் இருந்து
பிரிந்து செல்லும் நிலையாகின்றது.

அப்பொழுது தனித்துச் செல்லும் நிலையும், இது வியாழன் கோள் போல ஆகி, மீண்டும் இது நட்சத்திரமாக அடையும் பருவம் வெகு காலம் ஆகும்.

அதற்குள் உயிரணுக்கள் சிக்கிய நிலைகள் கொண்டு, இதிலிருந்து வீசும் வெப்பத்தால் உயிரணுக்கள் அதனுடைய பிரபஞ்சத்திற்குள் சிக்கி, மீண்டும் மனித உணர்வோ, உயிர் இனங்களின் தோற்றங்கள் வருவதற்கோ, பல கோடி ஆண்டுகள் ஆகும்.
3. நாளை நடப்பது யாருக்குத் தெரியும்? என்றிருப்பவர்களை யாரும் தடைப்படுத்த முடியாது
அதுவரை இந்த மனித உடலில் நாம் எத்தனை வேதனைப்பட்டோமோ, அத்தகைய வேதனையை அனுபவித்தே தீரவேண்டும். உங்களுக்கு அது சம்மதமானால்,
நாளை நடப்பதை யார் அறிவார்?
யார் பார்ப்பது? என்ற நிலைகளில்
இன்றைய வாழ்க்கையே எங்களுக்குப் பிரதானம் என்று இருக்கலாம்.
அதை யாரும் தடைப்படுத்த முடியாது.

கார்த்திகை நட்சத்திரம் நமது குடும்பத்தில் இருந்து வெளி செல்கின்றது. இப்பொழுது உங்களுக்குச் சொல்கின்றேன், எலக்ட்ரானிக் கம்ப்யூட்டர் என்ற சாதனத்தின் உதவியுடன், பிரபஞ்சத்தை அளவிட்டுச் சொல்லும் டெலஸ்கோப் மூலம் துரித நிலைகள் கொண்டு பார்க்கலாம்,

கார்த்திகை நட்சத்திரத்தைச் சுற்றிக் கோள்கள் விளைகின்றது என்ற நிலையில், பின் நாளில் கண்டுபிடிப்புகள் வரும், விஞ்ஞான அறிவால் வெளிப்படுத்துவார்கள், நீங்கள் பார்க்கலாம்.

மெய்ஞானிகள் காட்டிய அருள் வழியில், நீங்கள் தெரிந்து உணர வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்லுகின்றேன்