ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 11, 2013

தெய்வம் எங்கு இருக்கின்றது? எந்த ரூபத்தில் இருக்கின்றது?

தெய்வம் எங்கு இருக்கின்றது?
எந்த ரூபத்தில் இருக்கின்றது? என்பதனை
மகா ஞானிகள் காட்டியதை உணரும் பக்குவம் இல்லை.

இதனை வியாசக பகவான் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். நாம் எதை எதையெல்லாம் எண்ணுகின்றோமோ, அந்த எண்ணத்தை
உயிர் ஜீவனாக்கச் செய்கின்றது.
என்று எண்ணிய உணர்வின் சத்து
ம்ன்று (நம் உடலாக) சிவமாக ஆக்குகின்றது.

இதுவே, ஓம் நமச்சிவாய, நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ, அந்த உணர்வின் சத்து இறையாகி, இறைவன் ஆகுகின்றது. அந்த இறையின் சக்தி, நமது உடலுக்குள் இணையப்படும் பொழுது, இறையாகி இறைவன் ஆகி, நமக்குள் செயலாக்கும் பொழுது, தெய்வமாகின்றது

நாம் எந்தெந்த குணங்களை எண்ணுகின்றோமோ, அந்த குணங்களே தெய்வமாக நின்று, நம்மைச் செயல்படுத்துகின்றது.

உதாரணமாக, கோப குணம் என்பது காளி”.
கோப உணர்வுகள் நாம் எண்ணியதைக் காத்திடும் நிலையும்,
நமக்குள் ஆத்திரத்தையும்,
அவனைத் தொலைத்துக் கட்டிவிடுகிறேன் பார்
என்ற உணர்வையும் எடுக்கின்றது.
நாம் தொலைத்துக் கட்டுகிறேன் என்று எண்ணும் பொழுது, அந்தத் தொலைத்துக் கட்டும் உணர்வுகள், நமது நல்ல குணத்தை நமக்குள்ளே தொலைத்துக் கட்டி, அந்தக் காளியின் ரூபமாக நமக்குள் கொதிப்படைந்து, இரத்தக் கொதிப்பாக மாற்றி, என்னால் முடியவில்லையே, தலை சுற்றுகிறதே என்ற நிலை வருகிறது.

மகாபாரதம்           :உயிரின் இயக்கங்கள்
இராமாயணம்         :எண்ணத்தின் இயக்கங்கள்
கந்தபுராணம்          :ஆறாவது அறிவின் தன்மை
சிவபுராணம்           :உடலின் உணர்வின் இயக்கங்கள்
விநாயக புராணம்      :வினைகளுக்கு நாயகனாக உடல் பெறும் நிலை
கீதா உபதேசம்         :கண்ணான கண்ணின் இயக்கங்கள்
புராணம்       :சூட்சமத்தில் நடப்பதை உருவமாக அமைத்துத்                           தெளிவுபடுத்துதல்
நமக்குள் உள்ள குணங்கள் தெய்வமாகச் செயல்படுத்துவதை, மகாஞானிகள் மேல் கண்ட நிலைகளில் தெளிவுற உணர்த்தியுள்ளார்கள்.

இதையெல்லாம் நம் வாழ்க்கையில் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.