ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 30, 2013

சிவலிங்கம் - வெப்பம் தான் “உயிர்”

1. கண்ணுக்குப் புலப்படுவது சிவம்
கண்ணுக்குப் புலப்படாத சக்தி, ஒரு பொருளாகச் சேர்க்கப்படும் பொழுது சிவமாகின்றது. இவ்வாறு சிவமான அந்த சக்தி திடப் பொருளாக ஆகும் பொழுது,
பேரண்டத்திலே ஒன்றுமே இல்லாத இடத்தில்
ஒரு பொருள் அந்த எல்லையாகத் தெரிகின்றது.

இப்பொழுது, நாம் இங்கிருந்து சூரியனைப் பார்க்கும் பொழுது, அது ஒரு எல்லையாகத் தெரிகின்றது. ஒரு நட்சத்திரத்தைப் பார்க்கும் பொழுது ஒரு எல்லையாகத் தெரிகின்றது. கடலுக்குள் நீருக்குள் பார்த்தால், அதற்குள் தனியாக ஒரு திட்டாகத் தெரிந்தது என்றால், அங்கேதான் நாம் தங்க முடியும்.

அதாவது, கடலுக்குள் ஒரு திட்டாக எப்படி இருக்கின்றதோ (மிதக்கின்றதோ), பாற்கடலிலே பேரண்டத்தில் பல உணர்வின் சத்தான ஆவியான அலைகளுக்குள், அது பரம் பொருளாகினறது. பரம் என்பது ஒரு எல்லை. எல்லையான நிலைகளாகின்றது.

பல சக்திகள் ஒன்று சேர்த்து, பரமான நிலையாகும் பொழுது பரமசிவம். மெய்ஞானிகள் வைத்த பெயர் அது. நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது தனக்குள் எடுத்துக் கொண்ட பல உணர்வின் சக்திகள் கொண்டு, அண்டத்திலே ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, மற்ற காந்த அலைகளுடன் சேர்க்கப்படும் பொழுது சுழல்கின்றது.

நாம் ஒரு கல்லை வீசியெறிந்தால், காற்றுடன் உராயப்படும் பொழுது சுற்றுகின்றது. ஆக, அதைப் போல
விண்ணிலே ஓடும் வேகத்தில்
மற்ற காந்த அலைகளுடன் மோதும் பொழுது,
அந்தப் பரம்பொருள் சுழற்சியின் சக்தியாகும் பொழுது,
ஈர்ப்பின் சக்தியாகின்றது.
ஆனால் சுழற்சியாகும் பொழுது,
வெப்பம் தனக்குள் ஆகாரத்தை எடுத்துக் கொள்கின்றது.
2. வெப்பம் தான் “உயிர்” - சிவலிங்கம்
நம் உயிரின் துடிப்பாகும் பொழுது வெப்பம். ஆனால், உயிரின் துடிப்பாகும் பொழுது, நமக்குள் இழுக்கும் சக்தி “மூச்சு”. இதைப் போன்றுதான், பரம்பொருள் சுழலும் பொழுது, தன் அருகிலே இருக்கக்கூடிய சத்தைத் தனக்குள் இழுத்துக் கொள்கின்றது.

ஆனால், சுழற்சியின் நிலைகளில் வெப்பமாகின்றது. அந்த வெப்பத்தின் நிலைகள் கொண்டு ஈர்ப்புத்தன்மை வரும் பொழுது, ஏற்படும் வெப்ப அலைகளை தனக்குள் மாற்றி “ம்” என்று பொருள்களுக்குள் மோதுகின்றது.

மோதியவுடனே, வெப்ப அலைகள் உருவாகி, அது நடு மையத்திற்கே வெப்பத்தைக் கொண்டு செல்கின்றது. ஆக, ஒவ்வொரு பொருளுக்குள் கலந்திருக்கும் வெப்பங்ககள் அதிகமாகி, அந்தப் பரம்பொருளான திடப்பொருளுக்குள் வெப்பம் அதிகமாகக் கூட்டிக் கொண்டிருக்கிறது.

அந்த வெப்பம்தான் அதற்கு உயிர். அதனால்தான் ஒரு திடப்பொருளாக ஆனதை சீவலிங்கம் – நாம் சிவலிங்கம் என்று சொல்வதை, மெய்ஞானிகள் சீவலிங்கம் என்று பெயர் வைத்தார்கள்.
3. வெப்பத்தால் தான் பேரண்டத்தில் வெளிச்சமே வருகின்றது
அந்தச் சீவலிங்கத்தின் தோற்றம் தான் பல சக்திகளாகி, அதாவது சிவ சக்தி என்று பெயரை வைத்து நம்மை அறியச் செய்தார்கள் மெய்ஞானிகள். இவ்வாறுதான் அது வளர்ச்சியாக வளர்ச்சியாக, தான் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்தை, அது விண்ணிலேயிருந்து பல சக்திகளை விழுங்கி விழுங்கித்தான், பெரும் கோளாக மாறுகின்றது.

முதலில் கல், மண் மற்ற பொருள்கள் உருவாகின்றது. வெப்பம் அதிகமாக, கல் மண் உருகி, உலோகங்களாக மாறுகின்றது. வெப்பம் அதிகமாகும் பொழுது உலோகங்கள் உருகி அமிலமாகின்றது, கோள் நட்சத்திரமாக மாறுகின்றது. தன்னிச்சையாக ஒளி பெறும் தன்மை பெறுகின்றது நட்சத்திரம்.

அதற்குப்பிறகுதான் பேரண்டத்திலே வெளிச்சமாகின்றது. ஆக, தனக்குள் சுழற்சியின் வேகம் கூடி, வெப்பம் கூடி, ஈர்க்கும் திறன் கூடும் பொழுது, நட்சத்திரம் சூரியனாக மாறுகின்றது.

சூரியனாகும் பொழுது வெப்பம் அது குளிர்ந்து,
தனக்குள் இருக்கும் சக்தியை வெளிப்படுத்தும் பொழுது,
பிரபஞ்சத்திலிருக்கக்கூடிய மற்ற ஆற்றலினுடய சக்திகளை
செயலிழக்கச் செய்து,
சுலபமான நிலைகளில் தனக்குள் சக்தியை எடுத்துக் கொள்கின்றது.
சூரியன் குளிர்ச்சியான நிலை.

ஆனால், அதிலிருந்து வெளிப்படுத்தும் அற்றலின் தன்மைகள்தான், அது பல இலட்சம் மைலுக்கு அந்தப் பக்கம், வெப்பத்தை உண்டாக்குகின்றது.

ஆனால், சூரியனைச் சுற்றி அது வெளிப்படுத்தும் ஒளிகளிலே இருக்கக்கூடிய அந்த வெளிச்சத்துக்குள் ஊடுருவி, சூரியனின் நிலத்தை நாம் பார்க்க முடிவதில்லை.

ஆனால், அதில் வெளிப்படும் அந்த ஒளியின் தன்மை அதற்குள் ஊடுருவி, அந்தச் சத்துக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு நிலையும், அது அதிகமான ஆற்றலின் தன்மையை வெளிப்படுத்துகின்றது.