ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 24, 2013

பேரண்டம் (UNIVERSE) எப்படி வளர்கின்றது?

1. ஒரு பொருள் (அணு) உருவாக, வளரக்  காரணமான வெப்பமும், காந்தமும்
பூமிக்குள், ஒரு பாறையில் தங்க உலோகச் சத்தின் தாதுக்கள் படிந்திருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். பூமி சுழலும் வேகத்திலே விண்வெளியில் இருக்கக்கூடிய காந்த அலைகளை பூமி ஈர்க்கும் பொழுது, வரும் அந்த வெப்பகாந்தங்கள் பூமிக்குள் மோதுகின்றது.

அப்படி மோதியவுடன், இந்த தங்கச் சந்தான படிவங்களில் பட்டவுடனே, அது சூடாகி, அதற்குள் கலந்த நிலைகள் ஆவியாக வெளிச் செல்கின்றது. ஆனால்,  
தங்கப் படிவத்திற்குள் கலந்திருந்த வெப்ப காந்தத்தில்
இந்தக் காந்தங்கள் மோதியவுடனே,
அதற்குள் இந்த வெப்ப காந்தங்கள் ஈர்க்கப்பட்டு,
தன் இனமான சத்தை,
பூமிக்குள் படர்ந்திருக்கக்கூடிய ஆவியின் தன்மையை
தனக்குள் ஈர்த்து உறையச் செய்கின்றது காந்தம்.
வெப்பத்திற்குள், காந்த அணுக்களினுடைய நிலைகள் இழுக்கும் பொழுது, தங்கத்தின் வளர்ச்சி பெறுகின்றது.

ஆனால், வெளியிலிருந்து எடுத்து,
மற்ற உணர்வுடன் கலந்த இந்த ஆவியின் தன்மையை,
தனக்குள் கலக்கப்படும் பொழுது,
தன் இனத்தைச் சேர்த்துக் கொண்டு,
மற்றதை ஆவியாக வெளியேற்றிவிடுகின்றது வெப்பம்.

காந்தமோ, தனக்குள் ஈர்த்து, அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் பிணைக்கச் செய்கின்றது. பிணைக்கும் சந்தர்ப்பத்திலே சூடாகும் பொழுது, அந்த உணர்வின் சத்துக்கள் தனக்குள் திடப்பொருளாக அந்த வெப்பத்தினால் மாறுகின்றது.

ஆக, அந்தப் பொருளின் தன்மை வெப்பத்தினால் அது கலந்து, அந்த மணத்தின் தன்மை கலக்கின்றது. அந்த மணத்தின் தன்மையே, தங்கத்திற்கு ஞானமாகின்றது.
தன் ஞானத்தின் தன்மை கொண்டு தங்கம் வளர்ந்தாலும், அதிலிருந்து வெளிப்படும் கழிவின் தன்மை ஆவியாக பூமியிலே படர்கின்றது.

இதே போன்று, எத்தனையோ படிவங்களிலிருந்து வரக்கூடிய ஆவியின் சத்துக்களை, அங்கிருந்து வரக்கூடிய வெப்பகாந்தங்கள் தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.

தனக்குள் கவர்ந்த உணர்வின் சத்தை, எந்தப் படிவத்தின் கழிவின் சத்தைத் தனக்குள் ஈர்த்து அது செல்கின்றதோ, அத்தகைய அணுக்களாக பூமியிலே படர்ந்து, அலை அலையாகச் செல்கின்றது.
2. ஒரு அணு படைக்கும் ஆற்றலைப் பெறும் விதம்
அப்படி அலை அலையாகச் செல்லும் பொழுது, அணுக்களுக்குள் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதும்பொழுது, அதற்குள் இருக்கக்கூடிய வெப்ப காந்தங்கள் மோதும் பொழுது, வெப்பங்கள் ஒன்று சேர்ந்துவிடுகின்றன.

அதே சமயம், அதற்குள் இருக்கக்கூடிய ஈர்ப்பு காந்தங்கள்
வெப்பத்தினாலே துடித்து,
தனக்குள் ஆற்றல்மிக்க இரு அணுக்களும்,
இரு காந்தங்களும் ஒன்று சேர்த்து,
ஒரு அணுவின் வலிமை பெறுகின்றது.

ஒரு தங்கப்படிவத்தின் நிலையும், ஒரு பித்தளைப் படிவத்தின் நிலையும், அதிலிருந்து வரக்கூடிய ஆவிகள் இரண்டும் தங்கப் படிவத்திற்குள் கலக்கப்படும் பொழுது, இரண்டும் சேர்த்து மாறுபட்ட உணர்வின் சத்தாக, அந்த மணத்தின் தன்மை ஞானமாக மாறுகின்றது.

இதைப் போன்று, பல அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றுக்குள் ஐக்கியமாகி, வெப்பமும் காந்தமும் அதிகமாகின்றது. இத்தருணத்தில், இதே போல பல அணுக்கள்
ஒன்றுக்குள் ஒன்று மோதிய நிலைகள் கொண்டு,
ஒன்றுக்குள் ஒன்று ஐக்கியமாகி,
ஒன்றின் சத்தைத் தனக்குள் விழுங்கி
ஒரு ஆற்றலின் சக்தியாகி, வளர்ச்சி பெறுகின்றது.

அவ்வாறு நாம் பூமியிலே வளர்ச்சி பெறும் பொழுதுதான், ஒன்றை ஒன்று விழுங்கி, ஒரு அணுவிற்குள் ஆற்றலின் சக்தி வெப்பமும், காந்தமும் கூடிக் கொண்டே வருகின்றது.

அதே சமயம், உணர்வின் சத்தின் மணங்கள் ஒன்றுக்குள் ஒன்று கூடி, கலந்து வரப்படும் பொழுது,
சுவையின் தன்மைகள்,
உணர்ச்சியின் தன்மைகள், 
உணர்வின் தன்மைகள் மாறுபடுகின்றது.
ஆனால், காந்த ஈர்ப்பின் சக்தி அதிகமாகின்றது. தனக்குள் பிணைக்கும் ஆற்றல் அதிகமாகின்றது.

அதே சமயம் வெப்பத்தின் தன்மை மோதியவுடனே,
வெப்பம் அதிகமாகி, துரித நிலைகள் கொண்டு,
தனக்குள் படைக்கும் ஆற்றல் பெறுகின்றது “ஒரு அணு”.
3. பேரண்டம் (UNIVERSE) வளரும் விதம்
ஒன்றுடன் ஒன்று மோதி
ஒன்றுக்குள் ஒன்று இணைந்து,
அந்த ஆற்றல் பெற்றது.

தாழ்ந்த அணுவிற்குள் மோதியவுடனே அது தனக்குள் கவர்ந்து சென்று தனதின் ஆற்றலைப் பெருக்கி இப்படித்தான் வளர்ந்தது.
ஒன்றுக்குள் ஒன்று சென்று, ஒன்றின் தன்மை வளர்ந்து,
அவ்வாறு வளர்ந்து வந்த அந்த அணுக்கள்தான்
பேரண்டத்தின் பெருநிலையான நிலைகள்.