1. துன்பம் இல்லையென்றால் – இன்பம் இல்லை
உயர்ந்த எண்ணங்களைக் கொண்ட மனிதனாக இருக்கும் நாம், மெய்ஞானிகள்
பெற்ற உயர்ந்த விண்ணின் ஆற்றல்களை, அந்த வித்தை நமக்குள் விளையச் செய்து, அதைப் பிரம்மமாக்கி
தானே சிருஷ்டிக்கும் நிலை பெறமுடியும்.
உயிர் எப்படி நாம் எடுக்கும் எண்ணத்தைச் சிருஷ்டிக்கின்றதோ,
அதே போன்று உணர்வின் எண்ணங்களும் உயிருடன் ஒன்றி நாம் அனைத்தையும் சிருஷ்டிக்கும் பக்குவம்
பெறலாம்.
நாம் எதை எதையெல்லாம் ஒளியாக இன்று மாற்றுகின்றோமோ,
துன்பம் வரும் பொழுது,
மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் சேர்த்து,
அந்த இருளை மாய்த்து, ஒளியாகப் பெறும் பொழுது
நமக்குள் வரும் அனைத்து உணர்வுகளும் ஒளியாக மாறி,
உயிருடன் ஒன்றி ஒளியாகச் சேர்கின்றது.
அவ்வாறு, நாம் இன்று சேர்க்கும் இந்த நிலைகள் நம் உயிருடன்
ஒன்றி, நமக்குள் நினைவிருக்கும் பொழுதே அதைச் சிருஷ்டித்துவிட்டால் இந்த உணர்வின் தன்மை
கொண்டு, நம் உயிராத்மா ஒளி சரீரம் பெறுகின்றது.
மறந்துவிடாதீர்கள்,
துன்பம் இல்லையேல் - இன்பம் இல்லை.
இருள் இல்லையென்றால் - ஒளி இல்லை.
2. இருளுக்குள் இருந்து தோன்றியதுதான் ஒளி
“இருளுக்குள் தோன்றியது தான் ஒளி”.
நமக்குள் இருந்து ஒளியாக நின்று,
இருளான உடலுக்குள் அது மறைந்திருக்கின்றது. (உயிர்)
இந்த உணர்வைத்
தட்டியெழுப்பும் பொழுது,
உணர்வின் நிலைகள் கொண்டு,
நாம் இப்பொழுது எடுக்கும் உணர்வைச் சுவாசித்து,
உணர்வுக்குள் உணர்வின் நிலைகள் இயங்கச் செய்து
பொருளை அறிகின்றோம்.
பொருளின் நிலைகள் கொண்டு, நாம் செயல்படுகின்றோம்.
இதே போன்று, சூரியன் ஒளியின் தன்மை வரும் பொழுது, நாம்
கண்ணிலே புலனறிவாலே பார்ப்பதற்கு ஒளியாகக் காட்டுகின்றது. இந்த சூரியன் எப்படி ஒளியாகக்
காட்டுகின்றதோ, இதைப் போன்று நம் உயிரின் நிலைகள் உள் நின்று அடங்கியிருக்கும் நிலையே,
நாம் உணர்வின் நிலைகளை ஒளியாக்கி,
இந்த உடலின் தன்மைகளை ஒளியாக்கி
உலகத்தின் தன்மையை நாம் ஒளியாக்கி,
இந்த உணர்வின் தன்மை இருளை ஒளியாக்கச் செய்யும். நிலை
பெறுவதே, மனிதனின் கடைசி நிலை.
ஆகையினாலே, நீங்கள் ஒவ்வொருவரும் இந்த உண்மையை உணர்ந்து
கொள்ள வேண்டும். மனிதனாகப் பிறப்பது அபூர்வம். நாம் ஒளிச் சரீரமாக ஆவதுதான் மனிதனின்
கடைசி நிலை.