உணர்வின் இயக்கங்களை நீங்கள்
தெரிந்துகொள்ள வேண்டும். அது எப்படி இருக்கிறது? உங்களை எப்படி
இயக்கி வருகிறது என்பதைத் தெரிந்து கொள்கிறீர்கள். இந்த உடலில் நாம் எத்தனை காலம்
வாழப் போகிறோம்? என்று தெரிகிறது.
வீட்டில் நல்ல தண்ணீர்
எடுத்து வைத்திருக்கிறோம்
குழந்தை மலம் இருந்து விட்டான் என்றால்.
சாக்கடைத் தண்ணீரைக் கொண்டு கழுவுவீர்களா?
குழந்தை இப்படி மலம் இருந்துவிட்டானே என்று, “இதை நல்ல தண்ணீர்
ஊற்றி அலசுவதா” என்று எண்ணி, சாக்கடைத் தண்ணீர் கொண்டு அலசினால் எப்படி இருக்கும்? அது சரியாக இருக்குமா? மீண்டும் நரகல்
தான் படும். அது சுத்தமாகுமா? ஆகாது.
அதைப்போல், ஒரு குறை என்று
வந்து வந்துவிட்டால், நாம் என்ன செய்ய வேண்டும்? அந்த அருள்ஞானிகள். அவர்கள் தீமையை
வென்றவர்கள்.
அருள்ஞானிகளின் அருள் சக்தியை எடுத்து,
குறையை நீக்குவதற்குத்தான்
அந்த ஆத்மசுத்தி என்ற நிலையைக் கொடுத்து,
அதைச்
செய்யச் சொன்னது.
“ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று,
புருவ மத்தியில் உள்ள, நம் உயிரான ஈசனை வணங்க வேண்டும்.
பின், தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்க வேண்டும்.
அடுத்து, இந்த அருள் வழியில் நம்மை அழைத்துச் செல்லும், ஞானகுரு, சற்குரு, சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்க வேண்டும்.
,
பின், ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள
அருள் ஞானிகளின் உணர்வுகளை எண்ணி ஏங்கி,
கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி,
நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கி செலுத்தி,
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
வலுவாக எண்ணி ஏங்க வேண்டும்.
இவ்வாறு, வலுக்கூட்டிய இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவி செலுத்தி, நமது கண்களின் காந்தப் புலனறிவால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து ஈர்த்து,
உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து,
“உயிர் வழி நுகர வேண்டும்”.
இப்பதிவின் துணை கொண்டு, மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி, ஏக்கமான நிலையில், அது என் உடல் முழுவதும் படர்ந்து என் இரத்த நாளங்களில் கலந்து, என் உடலில் உள்ள ஜீவ ஆன்மா, ஜீவ அணுக்கள், என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி,
நம் உடலுக்குள்,
அலை அலையாகப் படரச் செய்யவேண்டும்.
இதுவே ஆத்ம சுத்தி.