ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 4, 2013

நம்முடைய முன்னோர்கள், எங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்?

நமக்கு முன் தோன்றியவர்கள்,
பேரண்டத்தில் பெரும் படைப்பான நிலைகளில் நின்று,
பெருவீடான பெரு நிலைகள் பெற்று,
ஒளியின் நிலைகள் பேரண்டத்திற்கு வழிகாட்டி,
உலகில் அலைகளாக, உலகைச் சீராகச் செயல்படுத்தச் செய்யும்,
இந்த மனிதன் உடலுக்குள் விளைவித்த,
உணர்வின் எண்ண அலைகள்தான்,
இதை மறந்துவிடாதீர்கள். 

சீர்கெட்டு திசைதிருப்பி, திசையின் நிலைகளில் சென்று கொண்டிருந்த பேரண்டமே ரு பிரபஞ்சமாகி, பிரபஞ்சத்திற்குள் மனிதனாக உருபெற்றபின், அவனுடைய எண்ண ஒலிகளில், ஒரு சீரான நிலைகளில், பிரபஞ்சத்தை உருவாக்கி,
பேரண்டத்தில் குடும்பமா
இன்று 2000 சூரிய குடும்பங்கள் உருவானாலும்,
அதில், பல மனித உணர்வுகள் உண்டு.
இதிலிருந்து தேர்ந்தெடுத்துச் சென்றவர்கள் மகரிஷிகள். 


இன்று நம் பிரபஞ்சத்திற்கு முன் இருப்பவர், துருவ மகரிஷி, துருவ நட்சத்திரம், அதன் வழிகளில் பின்பர்றிச் சென்ற மனிதர்கள் அனைவரும், முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள், சப்தரிஷி மண்டலம்.

‘’ஓம் ஈஸ்வரா’’ என்ற இந்த உணர்வில், நம் உடலை இயக்கச் செய்து, இந்த உடலின் நிலை கொண்டு, மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர், மகரிஷிகளின் அருள் ஒளிகளை நம்மைப் பெறச்செய்து,  நம் எல்லோருக்கும் ஒரு பாக்கியமாக, இந்த ஆற்றல் மிக்க நிலையைக் கொடுத்து உணர்த்தினார்கள்.

இது நமக்கெல்லாம் ஒரு நல்ல சந்தர்ப்பம், மனிதன் என்ற தன்னிலையில், இந்த உலகை சிருஷ்டிக்கும் சரீரமாகப் பெறுவோம் என்று உறுதிப்படுத்தி நாம் வாழ்வோம்.