1. நாம் சுவாசிப்பது உயிரிலே பட்டு என்ன நடக்கின்றது?
நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மை நாம் உயிரிலே பட்டவுடனே,
அந்த நாதங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி, அந்த உணர்வின் அலைகள் கொண்டு நாம் பேசுகின்றோம்.
அந்த உணர்வின் நாதங்கள்தான் நம் உடலை இயக்குகின்றது.
நாம் நீரை வெப்பமாக்கி அதைக் கொதிக்கச் செய்யும் பொழுது,
சப்தங்கள் வருகின்றது. இதே போன்று,
நம் உயிரின் துடிப்பான
வெப்பத்திற்குள்
நாம் சுவாசிக்கும் உணர்வுகள் பட்டவுடனே அந்த வெப்பத்திற்குள்
இந்த உணர்வின் ஆற்றல்
நாதங்களாக இயக்குகின்றது.
நாம் எந்த குணத்தின் தன்மை கொண்டு இருக்கின்றோமோ, அதை
நாம் சுவாசிக்கும் பொழுது, நமக்குள் அந்த நாத ஒலிகளாக எழுப்பி, அந்த தொனிக்குத் தக்கவாறு நம் உடலை இயக்குகின்றது.
ஒருவர் கோபமாகப் பேசுகிறார் என்றால், அதைக் காதிலே கேட்டவுடனே,
அந்த உணர்வுகளை நம் செவிப்புலன் கொண்டு கேட்டவுடனே, நம் உடல் அதுவாகின்றது, ஆத்திரத்தை
ஊட்டுகின்றது.
அதே போன்று, ஒரு மகிழ்ச்சியான சொற்களைச் சொல்லும் பொழுது,
அந்த உணர்வுகளை நாம் செவி கொண்டு கேட்டவுடனே, அந்த உணர்வலைகள் நமக்குள் மகிழச் செய்கின்றது.
ஏனென்றால், அந்த
உணர்வின் அலைகள் நமக்குள் இயக்குகின்றது.
2. நாரதன் கையில் இருக்கும் வீணை
உயர்ந்த ஆற்றல்மிக்க நாதத்தின் நிலைகள் கொண்டு உள்ளடக்கியவர்கள்
சப்தரிஷிகள்.
அந்தச் சப்தரிஷிகள்
நாதத்தை உள்ளடக்கி
ஒளியின் சரீரமாக நின்ற அந்த அணுவின் தன்மையைத்தான்
நாரதன் என்று பெயர் வைத்து
அவருக்கு வீணையைக் கையில் கொடுத்து
மனிதனுடைய ரூபத்தைக் காட்டினார்கள்.
சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரக்கூடிய ஒளி, அது எத்தகைய
ஆற்றலைப் பெற்றதோ, அந்த உணர்வின் நிலைகள் கொண்டு விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும் மெய்
உணர்வுதான் நாரதன் என்பது.
வியாசர் கடலிலே வீழ்ந்தபின், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக்
கூடிய உணர்வின் எண்ணத்துடன் அவன் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது, அந்த உணர்வலைகள்
கொண்ட மீனின் உணர்ச்சிகள் தூண்டி இவன் எண்ணத்திற்குப் பக்கபலமாக இருந்து, இவனைக் கரை
சேர்க்கின்றது.
இந்த இரண்டு உணர்வுகளும் வியாசர் உணர்வுக்குள் சேர்த்தவுடனே,
பயம் கலந்த, தான்
தப்பித்த ஆற்றல்மிக்க அந்த உணர்வின் சக்தி இவனுக்குள் கூடி,
இந்த உணர்வலைகள் தூண்டச் செய்து,
தன் புலனறிவான கண்ணுக்குள் பாய்ந்து
தன் ஏக்கத்தின் அளவை விண்ணை நோக்கி ஏகும் பொழுது
அந்த உணர்வின் ஆற்றலுக்குள் சிக்கியதுதான்
சப்தரிஷி மண்டலங்களின் அந்த ஒளிகாந்த சக்தி (நாரதன்)
ஆக, இது ஒரு சந்தர்ப்பம் அதற்கு முன் மீனவனுக்கு ஒன்றும்
தெரியாது ஆக, அந்த சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்பட்ட அந்த அணுவின் உணர்வணுக்கள்
இவர் உடலிலே புகுகின்றது.
வியாசரின் உணர்வுக்குள் அது ஈர்க்கப்பட்டு, அவர் சுவாசித்த
அந்த உணர்வின் தன்மை உடலிலே படும்பொழுது, அந்த சப்தரிஷி மண்டலமாக இயங்கி, அந்த உணர்வின்
ஆற்றல் விண்ணுலகை எப்படித் தனக்குள்
கண்டறிந்ததோ, அந்தப் பேருண்மைகள் வியாசனான, ஒன்றுமறியாத அந்த மீனவனுடைய உடலிலே தென்படுகின்றது.