1. துன்பங்களைத் துச்சமாகத் தூக்கியெறிவோம்
ஏதோ வந்தோம், பிரசாதத்தை வாங்கிக் கொண்டோம்.
நல்ல நிலைகள் பெறலாம்,
உடல் நலம் பெறலாம்,
இன்பம் பெறலாம்,
இன்றைய குறுகிய கால வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழலாம்
என்று
எண்ண வேண்டாம்.
நீடித்த காலம், இந்த உடலின் தன்மை கொண்டு நம்மை அறியாது வரக்கூடிய
துன்பங்களிலிருந்து விடுபட்டு, என்றென்றும் இன்பத்துடன் இருப்போம், நம்மை அணுகும் துன்பமான நிலைகளைத்
துச்சமாகத் தூக்கியெறிவோம். நாம் இந்த மூச்சின் அலைகளைப் பெருக்குவோம்.
மெய்ஞானிகளின் அருளைப் பெருக்குவோம் என்று உறுதி கொள்வோம்.
இப்படி இந்த உணர்வு கொண்டு கணவன், மனைவி ஏற்படுத்தி, உடலைவிட்டு
நாம் பிரிந்தவுடன், நம்மை நம் குழந்தைகள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று
உந்தித் தள்ளி, ஒளி சரீரம் பெறவேண்டும் என்று எண்ணினால், அப்பொழுதுதான் நாம் விண் செல்ல
முடியும். நமது உணர்வுகளை நாம் இங்கிருந்து பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று விஞ்ஞான உலகிலே காலமில்லாமல் இருக்கின்றது. இதைக் கேட்டோர்
அனைவரும் இதை அலட்சியப்படுத்திவிடாமல் ஒவ்வொரு குடும்பத்திலும் செயல்படுத்திப் பாருங்கள்.
கண்ணாடியில் உளி வைத்துத் தட்டினால்
எழுத்திற்குப் பதில் உடைந்து போகும்.
தட்டும் பக்குவம் கொண்டு
தட்ட வேண்டும்.
இதைப் போன்றுதான் இன்றைய மனிதனின் உணர்வுக்குள் எண்ணத்தின் நிலைகள், எதிர்பாராத உணர்ச்சியின் அலைகள் மோதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை ஆதார சக்தியாக வைத்து, ஒவ்வொருவரும் பயணம் செய்ய வேண்டும்.
2. எத்தகைய துன்பங்கள் வந்தாலும், ஆத்ம சுத்தியைக் கடைப்பிடியுங்கள்
எத்தகைய
துன்பங்கள் வந்தாலும்,
ஆத்ம சுத்தியைக் கடைப்பிடியுங்கள்.
எதிர்காலம் உங்கள் கையில்.
எத்தகைய துன்பங்கள் வந்தாலும், நீங்கள் விடும் மூச்சலைகள் நீந்திச் செல்வதற்கு வழி செய்யும். நாம் வளர்க்கும் இந்த தியான நிலைகள் மூலமாக, நாம் நினைத்தவுடனே மழை பெய்து அதனால் நாடு செழிக்கும்.
அத்தகைய எண்ணத்தை, உணர்வின் ஆற்றல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது
என்று, நிரூபிக்கும் பக்குவத்திற்கு வரவேண்டும். நாம் ஒருவர் மட்டும் செய்வதல்ல.
உங்களுக்குள் அதை வளரச் செய்து, நீங்கள் இடும் மூச்சலைகள் உலகையும்
உங்களையும் காக்கச் செய்து, நம் மெய்ஞானிகள் காட்டிய அந்த அருள் ஒலிகளின் சுழற்சிக்குச்
செல்வோம்.
இன்றைய மனித வாழ்க்கையில் நாம் சுழலும் நிலையில், இறந்தபின் இன்னொரு
கூட்டிற்குள்தான் செல்கின்றோம். கூட்டைவிட்டு மீண்டு சென்று, என்றும் பதினாறு என்று
ஒளி சரீரம் பெற்ற, அந்த மகரிஷிகளுடன் கலக்கச் செய்து, அந்த உணர்வுடன் ஒன்றியே நாம்
அங்கே செல்வோம்.
மகரிஷிகள் காட்டிய நெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்போம். இந்த
உணர்வின் தன்மையை உயிருடன் ஒன்றச் செய்வோம். உடலை விட்டுச் சென்றபின்,
ஒளியுடன் ஒளியாகக் கலப்போம்.
அந்த ஒளியின் சரீரமாக இருப்போம்.
அந்த ஒளியின் நிலைகளில்,
உலகத்திற்கு வழிகாட்டும்
உணர்வின் அலைகளாக வளர வேண்டும்.
விஞ்ஞானத்தின் அழிவு நிலைகள், அணுக்கதிரியக்கங்களை எங்கிருந்து
இந்தப் பிரபஞ்சத்தில் தூவினானோ, அந்தப் பிரபஞ்சத்திலிருக்கக்கூடிய விஷத்தின் ஆற்றலும்,
உங்கள் விஷமும் வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் பிரார்த்திக்கின்றோம்.
உங்களிடத்தில் நிச்சயம்
இது வளரும். நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன், நமது குருநாதரின்
அருளாசி உங்கள் எல்லோரிடத்திலும் பதிந்து, அந்த மகரிஷியின் ஆற்றல் உங்கள் எல்லோருக்குள்ளும்
பெருக வேண்டும், பெருகும் என்று யாம் பிரார்த்திக்கின்றோம்.
3. ஆத்ம சுத்தி
“ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று,
புருவ மத்தியில் உள்ள, நம் உயிரான ஈசனை வணங்க வேண்டும்.
பின், தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக
வணங்க வேண்டும்.
அடுத்து, இந்த அருள் வழியில் நம்மை அழைத்துச் செல்லும், ஞானகுரு, சற்குரு, சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்க வேண்டும்.
,
பின், ஞானகுரு நம்மில்
ஆழமாகப் பதிவு செய்துள்ள
அருள் ஞானிகளின் உணர்வுகளை எண்ணி ஏங்கி,
கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி,
நினைவை துருவ நட்சத்திரத்தின்பால்
விண்ணை நோக்கி செலுத்தி,
துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளி பெறவேண்டும் என்று
வலுவாக எண்ணி ஏங்க வேண்டும்.
இவ்வாறு, வலுக்கூட்டிய இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவி செலுத்தி, நமது
கண்களின் காந்தப் புலனறிவால், துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து ஈர்த்து,
உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து,
“உயிர் வழி நுகர வேண்டும்”.
இப்பதிவின் துணை கொண்டு, மீண்டும் துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளியை எண்ணி, ஏக்கமான
நிலையில், அது என் உடல் முழுவதும் படர்ந்து
என் இரத்த நாளங்களில் கலந்து, என்
உடலில் உள்ள ஜீவ ஆன்மா, ஜீவ
அணுக்கள், என் உடல்
உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி,
நம் உடலுக்குள்,
அலை அலையாகப் படரச் செய்யவேண்டும்.
இதுவே ஆத்ம சுத்தி.