ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 19, 2013

பரிணாம வளர்ச்சியில் வந்த மனிதனின் இன்றைய நிலையும், இனி அடைய வேண்டிய எல்லையும்

ஒரு நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எரிந்தாலும், பலவீனமான நிலைகள் எரியும் பொழுது, மொத்தமாக பொருளைப் போட்டால் அணைந்துவிடும்.
                                       
இதே போன்று, ஒரு பலவீனமான சத்து நமக்குள் நிறைந்துவிட்டால், நம் உடலின் உணர்வின் தன்மைகள், நாம் பலவீனமாக ஆகும் பொழுது,
கடும் விஷமான எண்ணங்களையோ,
மற்ற நிலைகளையோ நாம் சுவாசித்து விட்டால்,
நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்தையுமே
செயலிழக்கச் செய்துவிடும்.

உயிரினங்களில் புழுவிலிருந்து தோன்றி, மனிதனாக வரும் வரையிலும் அதனதன் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு, தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுடன் வளர்ந்து, அந்த உயிரணுக்களாக இருக்கின்றது.

இருந்தாலும், மிருகங்கள் வரையிலும் அதனுடைய உடல் அமைப்புகளில் விஷத்தின் ஆற்றலைத் தன் உடலாகப் பெற்றிருப்பதனால்,
அதற்கு எத்தகைய இம்சை வந்தாலும்,
எத்தகைய தொல்லை வந்தாலும்
மற்ற உயிரினங்கள் வேதனையைப் பற்றிச் சிந்திக்காது.
ஏனென்றால், அதைத் தாங்கும் சக்தி அதற்கு உண்டு.
அதற்கு அதுதான் பாதுகாப்பு.

ரோஜாப்பூவின் மணத்திற்குள் விஷம் கலந்திருக்கின்றது. அந்த மணத்தைத் துரித நிலைகளுக்கு வெளிப்படுத்தும் பொழுது, அந்த விஷம் இல்லையென்றால், அந்த மணத்தை வேகமாக வெளிப்படுத்தாது.

இதே போன்று மிருகங்களிடத்திலே, பல உணர்வின் சக்தியினுடைய நிலைகள் தனக்குள் கலந்து, உடலின் தன்மை விஷமாக இருந்தாலும்,
அந்த உடலுக்குள், விஷத்திற்குள்,
இந்த உணர்வின் சத்து கலந்திருக்கும் பொழுது,
பிறிதொரு வேதனையான நிலைகளைத்
தாங்கும் ஆற்றல் இருந்தாலும்,
தன் எண்ணத்தை நினைவுபடுத்தும் பொழுது
அந்த விஷம் கலந்த தன் உணர்வுடன் ஊடுருவி
நுகரும் சக்தி அதிகமாகி,
பிறிதொன்றை அறிந்துணரக்கூடிய ஆற்றலும்
அதற்கு இருக்கின்றது.

ஆக, உயிரினங்கள் தனது ஆற்றலைக் கொண்டு,
வேதனையைத் தான் சிந்திக்காதபடி,
தான் வாழ்வதற்கு
எப்படியெல்லாம் பாதுகாப்பான உணர்வுகள் வேண்டும்
என்ற நிலைகளை உணர்ந்து,
அதன் உணர்வின் தன்மையை நினைவுபடுத்தி,
அதைச் சுவாசித்து,
தன் உணர்வுக்குள் சத்தைச் சேர்த்து,
இப்படித்தான் பரிணாம வளர்ச்சிகள் வளர்ந்து,
இன்று நாம் மனிதனாகப் பிறந்துள்ளோம்.

இப்படி நாம் மனிதனாக வந்தபின், மனிதனுடைய வாழ்க்கையில் நாம் எத்தனையோ ஜாதகங்களையும், ஜோதிடத்தையும், எல்லா தெய்வ நிலைகளையும் எண்ணி, அதன் மூலம் எல்லாமே நமக்கு வரும் என்று நாம் வாழ்கிறோம்.

ஆக, “அனைத்தையும் அறிந்துணர்ந்து செயல்படக்கூடிய, ஆற்றலின் உணர்வின் சத்தான நிலைகள் கொண்டு” மனிதனை உருவாக்கிய இந்த உணர்வுகள் கொண்டு நாம் செயலாக்கினாலும்,
இன்று, நம்மால் சிறு வேதனையானாலும் தாங்க முடிவதில்லை.
இதைக் காப்பதற்கு
நமக்கு நினைவு வருவதில்லை.

ஆக, மகிழ்ச்சியாக இருக்கிறவரையிலும் மகிழ்ந்திருப்போம். பேரானந்த நிலைகள் கொண்டாலும், சிறு வேதனையான சொற்கள் நம் காதில் பட்டால் அந்த நிமிடமே நம் உடல் சோர்வடைந்து விடுகின்றோம்.

சோர்வடைந்து, பின் அந்த உணர்வை நாம் சுவாசித்து
அதை அதிகமாகச் சேர்த்துக் கொண்டு
அதைத் துடைக்கும் செயலற்ற நிலைகளில்

விஷத்தை நம் உடலுக்குள் அதிகமாகக் கூட்டிக் கொள்கின்றோம்.

ஆக, இதைப் போன்ற நிலைகளை உடனடியாக மாற்றத்தான் யாம் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம். அதைப் பயன்படுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருளை உயிர் வழி நுகர்ந்து, உடலுக்குள் சேர்த்து, எத்தகைய கடுமையான நிலைகளையும் உங்களால் மாற்றியமைக்க முடியும். 

அதைத் தொடர்ந்து செய்து வரும் பொழுது, இந்த உடலைவிட்டு எப்பொழுது சென்றாலும், நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து வாழும் தகுதி பெறுவோம். ஆக, பரிணாம வளர்ச்சியில் மனிதன் அடைய வேண்டிய நிலையும் அதுதான்.