உடல் நமக்குச்
சொந்தமல்ல, என்று யாம்
கூறியுள்ளோம்.
இந்த உயிருக்குத்தான் இந்த உடல் சொந்தம்.
இந்த உயிரை நாம் சொந்தமாக்க வேண்டும்
ஏனென்றால், பலகோடிச் சரீரங்கள் எடுத்து உயிர் நம்மை
மனிதனாக உருவாக்கியுள்ளது. அந்த உயிரை நாம் மதிக்க
வேண்டும்.
ஒவ்வொரு நிலையிலும் நம்மைக்
காத்துக்கொள்ளும் உணர்வை வைத்து, உயிர் நம்மை மனிதனாக ஆக்கிய பெருமையை, நாம் உணர வேண்டும்.
இந்த வாழ்க்கையில் மனிதன் ஆனபின், இந்தத் தீமையை வென்று, கணவனும் மனைவியும் ஒன்றாகி துருவ மகரிஷியாகி, இன்று துருவ நட்சத்திரமாக ஒளியின்
சிகரமாக நிலைத்திருக்கிறான் நாம் அவர்களது உணர்வைப் பெறவேண்டும்.
காலம் காலமாக, ஞானிகள் காட்டிய இந்த நிலைகள் தவறிவிட்டது. இன்று ஒரு மதத்திற்குள் பல
இனங்கள் இருக்கிறது. ஆக உன் இனம் என் இனம் என்ற நிலைகளை, இந்தப் பகைமை உணர்வுகளை
நமக்குள் வளர்துக் கொள்ள முடிகிறது.
ஆக, இன்று இனப் பிரச்சினைகள் அதிகமாக வளர்கிறது. ஏனென்றால், பிரிவினையை ஊட்டும் இதைப் போன்றவைகள்
மகா மோசமான நிலைகள். ஆகவே, நாம் என்ன செய்ய வேண்டும்?
அவர்களெல்லாம் மிக உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.
ஒவ்வொருவருக்குள்ளும் அவர்களை
ஆண்டு கொண்டிருக்கும்
உயிரை, மதித்து நடக்கும் தன்மை நமக்குள் வரவேண்டும்.
நமக்குள் அந்த எண்ணங்களைக்
கூட்டிக்கொண்டால் மற்ற இனங்களைக் குறைவாகப் பேசும் உணர்வுகள்
நமக்குள் பதிவாகாது. நமக்குள் அதைப் பதிவாக்காதபடி, இதை நினைவுபடுத்த வேண்டும்.
நமது குருநாதர் காட்டிய வழிப்படி, உலக மக்கள் அனவர்களுக்குள்ளும், ஒன்றுபட்ட நிலையில், இனங்கள் இல்லாத நிலைகள் அங்கு
வரவேண்டும் என்று எண்ணி,
அதை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதேபோல் பிறரைப் பற்றி குறையாக யாராவது போசுகிறார்கள் என்றால், அடுத்த நிமிடம், நமக்குள் நம்
குருகாட்டிய வழியில் அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள்
உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ண வேண்டும்.
பின், அந்தக் குறைகள்
காணுவோர் நிலைகள்
அவர்களும் அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும்.
அவர்கள் நல்ல உணர்வுகள் பெறும் தகுதி பெறவேண்டும் என்று
நாம் எண்ண வேண்டும்.