நிலத்தில் பல களைகள் முளைக்கின்றது. அதை நாம் உழுது பண்படுத்தி, அதற்குள் வித்துக்களைப்
போட்டவுடன் அது முளைக்கின்றது. அதைப் போன்று,
உங்கள் எண்ணங்களில் இருக்கக்கூடிய களைகள்,
“பிள்ளைகள் என்ன செய்கிறதோ?
தொழிலில் நாளைக்கு என்ன செய்வது” போன்ற
பலவிதமான எண்ணங்கள் வருகின்றது.
அப்படிப்பட்ட எண்ணங்களுக்குள் ஆணித்தரமாக ஊடுருவச் செய்ய, யாம் உங்களுக்கு திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.
ஆக, உங்கள் உணர்வுக்குள் பண்படச் செய்து, உங்கள் உடலான நிலத்தைப் பண்படச் செய்து,
மகரிஷிகளால் விளைவிக்கப்பட்ட அந்த ஞான வித்துக்களை, நமது குருநாதர் காட்டிய வழியில்
உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து, உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்,
இதைப் பதியச் செய்ய எடுத்துக்கொண்ட ஒவ்வொரு நாளும்,
மகரிஷிகளின் அருள் ஞானவித்தை
நீங்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டீர்களோ,
அந்த அளவிற்கு
யாம் விதையைப் போட்டுக் கொண்டே போவோம்.
சில மண்ணுக்கு வெளியே இருக்கும். சில எறும்பு தின்றுவிட்டுப் போகும். விதையைப்
போட்டவுடன், கோழி கொத்திவிடும். அதைப் போல யாம் இப்பொழுது ஞான வித்தை உங்களுக்குள்
விதைதிருக்கிறோம் என்றால் அந்த விதையை நல்ல முறையில் முளைக்கச் செய்வதற்கு, நீங்கள்
எண்ணத்தை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு நிமிடமும், நாம் பிறர் மேல் எவ்வளவு பரிவு
கொண்டு வேதனையும் சங்கடமும் எடுத்துக் கொண்டோமோ, இந்த உணர்வுகள் நமக்குள் சோர்வடையச்
செய்கிறது.
அதைப் போன்று, ஒவ்வொரு நிமிடத்திலும், பழக்கத்திற்கு
அனுபவத்திற்கு கொண்டு வரச் செய்வதற்காகத்தான்,
இந்த தியானத்தைச் செய்யச் செய்து,
உங்களுக்கு அந்த இரத்த ஓட்டத்தைக் கொடுப்பதற்கு
ஆத்ம சுத்தி என்ற பயிற்சியும் கொடுக்கின்றோம்,
முந்தைய
அழுக்கைப் போக்கி, அந்த மகரிஷிகளின்
எண்ண ஓட்டத்தை உங்களுக்குள் பெருகச் செய்து, இனி வரும்
விஞ்ஞானத்தால் வரக்கூடிய விஷத்தின் தன்மைகளை மாய்க்கச் செய்வதற்கே, இதைச் சொல்கின்றோம்.
எமது அருளாசிகள்.