1. வான்மீகி
முரடனாக இருந்தாலும், தன் மனைவி, குழந்தை என்ற பாச உணர்வு அவனிடம் உண்டு
வான்மீகி ஒரு முரடன், கொள்ளைக்காரன். அவன் வேடனாக இருந்ததால்
தன் பசியைப்போக்க பல உயிரினங்களைக் கொன்று
அவனுடைய ஜீவிதம் நடந்தது. ஆக, கொள்ளையடிப்பது, ஈவு இரக்கமற்ற செயல்களைச் செய்வது, அதாவது
வில்லேந்தி பல பறவைகளைக் கொல்வது, அதைப் புசிப்பது, இப்படி பல வேலைகளைச் செய்து கொண்டிருந்தான்
வான்மீகி.
அவனுக்கோ கல்வியறிவு
கிடையாது,
ஆனால், இந்த வேடன்
இராமாயணக் காவியத்தை எழுதினான்.
இராமாயணக் காவியத்தின் உட்பொருள் என்ன? வியாசகனும், வான்மீகியும்
ஒரே காலகட்டத்தில்தான் ஆற்றல் பெற்றனர். இந்தப் பூமியிலே சந்தர்ப்பத்தால் உணர்வின்
ஆற்றல்மிக்க நிலைகளை இருவருமே பெற்றார்கள்.
வான்மீகி எவ்வளவு மோசமாக ஈவு இரக்கமற்று இருந்தாலும்,
தான் வாழும் பொழுது தன் மனைவி, தன் குழந்தை என்ற எண்ணம் வரப்படும் பொழுது, அந்தப் பாசம்
என்ற ஒன்று இருக்கும்.
கணவன், மனைவி என்ற அன்பின் நிலைகள் கொண்டு, ஒரு உடல் உருவானால்,
அதற்குள் இருக்ககூடிய
இந்தப் பாசத்தில், அந்தக் காந்தத்தின் அலைகள் இருக்கும்.
ஆக, அவர்கள் எவ்வளவு அசுரத்தன்மையாக இருந்தாலும்,
ஒரு கொடூரமான நிலைகொண்ட மனிதனாக இருந்தாலும்
தன் குழந்தை என்ற நிலைகள் வரப்படும் பொழுது,
அந்தப் பாச உணர்வு கொண்டு தனக்குள் இணைக்கும்.
அவனுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டுவிட்டால், அவனைக் காக்க
வேண்டும் என்ற எண்ண உணர்ச்சிகள் இருக்கும்.
ஆகையினாலே, சரீரத்தின் நிலைகளிலில் தனித்து இருந்தாலும்,
அவனை, “தன் இனமான சக்தியைக்
காக்க வேண்டும்” என்று, உணர்வுகள்
உணர்ச்சியைத் தூண்டும்.
ஏனென்றால், ஒரு மரமானாலும் செடியானாலும் இந்த உணர்வுகள்தான்
இயக்கும். இதைப் போன்றுதான் அதனின் செயல் இருக்கும்.
2. மகிழ்ச்சியாக இருக்கும் பட்சிகளில் ஒன்றை, இரக்கமற்றுக் கொல்கிறான்
வான்மீகி
இவ்வாறு வேடுவனோ வேட்டைக்குச் செல்கின்றான். வேட்டைக்குச்
செல்லப்படும் பொழுது இரு பட்சிகள் அது தனது இரையைத்தேடி அது சுழல்கின்றது.
ஆனால், இவனுடைய வாழ்க்கைக்கு இவன் இரையைத் தேடிச் செல்கின்றான்.
அந்த இரண்டு பட்சிகள் மகிழ்ந்து கூடிக் குலாவி இரையைத் தேடி தனக்குள் மகிழ்ச்சியாகச்
சுழன்று கொண்டிருக்கின்றது.
இரையைத் தேடிவிட்டு, தான் மகிழ்ச்சியாகச் சுழன்று கொண்டிருக்கும்
நேரத்தில், தன் மகிழ்ச்சியின் ஆரவாரத்துடன் இருக்கப்படும் பொழுது, இவன் மறைமுகமாக இருந்து
ஒரு பட்சியைக் குறி பார்த்து அம்பை எய்கின்றான். அது அடிபட்டு, துடிதுடித்துக் கீழே
விழுகின்றது.
இது துடிப்பதைக் கண்டு, மற்றொரு பட்சி, அதுவும் தன் பாசத்தாலே
துடிக்கின்றது. ஆனால், இதனுடன் கூடிக்குலாவிக் கொண்டிருந்த அந்தப் பட்சியோ, அடிபட்டுக்
கீழே விழுந்து தரையிலே துடித்துக் கொண்டிருக்கின்றது.
ஆனால், துடித்துக் கொண்டிருப்பதைத் தன் பாசத்தால் ஏங்கிப்
பார்க்கின்றது. ஆனால், அது ஏங்கிப் பார்க்கப்படும் பொழுது, அந்தப் பட்சியை இவன் எடுத்து
வைத்துக் கொண்டான்.
ஆக, இவன் அந்த அடுத்த பட்சியையும் தான் கவர்ந்து, அதையும்
அம்பால் தாக்க வேண்டுமென்று தன் கண்ணின் புலனறிவைக் கூர்மையான நிலைகளில், பட்சி மீது
எண்ணத்தைச் செலுத்துகின்றான்.
3. பட்சியின் எல்லை கடந்த பாச உணர்வு, வேடனுக்குள்
ஆழமாக ஊடுருவுகின்றது
அப்பொழுது, அந்தப்
பட்சியோ இவன் கையிலிருக்கக்கூடிய அடிபட்ட அந்தப் பட்சியை ஏங்கி, அது பரிதவித்து,
அந்தப் பாசத்தின் உணர்வு கொண்டு பார்க்கின்றது.
இவன் தனக்குக் கிடைத்தது என்ற நிலையில் அதைக் குறிவைத்து,
அதைத் தாக்கும் நிலைகளுக்குச் செல்கின்றான். இவனுடைய எண்ணம் அந்தப் பட்சியின் மேல்
படுகின்றது.
அந்தப் பட்சியிடமிருந்து வரக்கூடிய உணர்வின் மணத்தை, அதனின்
பாசமான உணர்வின் சத்தை,
இவனின் கண் புலனறிவு
அந்தப் பட்சியைப்
படமெடுக்கின்றது.
ஈர்க்கும் சக்தியினுடைய
காந்தம்,
அந்த உணர்வின்
பாச அலைகளை
இவனுக்குள் ஈர்த்துச்
சுவாசிக்கச் செய்கின்றது
ஆனால், இவன் அதைச் சுவாசித்து,
நாணை இழுத்து அம்பை எய்யப்படும் பொழுது,
இந்தப் பாசத்தாலே
அம்புகள் திசை மாறுகின்றது.
அது தப்பித்துக் கொள்கின்றது.
தன் பாசத்தாலே அது ஏங்கித் தவிக்கப்டும் பொழுது, இந்த
உணர்வுகள் கூர்மை இரண்டிலேயும் சேர்க்கப்படும் பொழுது, அது மாறுகின்றது.
இன்றைக்கு, கம்ப்யூட்டரில் பல அலைகள் வரப்படும் பொழுது
சமமான அலைகள்,
மாறுபட்ட அலைகளை ஒதுக்கிவிட்டு, நாம் ஆணையிட்ட
பாஷைகள் மூலம் தெளிவானவற்றைக் காட்டுகின்றது. அதை நாம் அறிந்து கொள்கின்றோம்.
அதைப் போன்று, வேடனுடைய எண்ணமோ பட்சியைக் குறி வைத்து,
அதைத் தாக்கும் நிலைகொண்டு கூர்மையாக எண்ணும் பொழுது,
பட்சியினுடைய உடலிலிருந்து வரக்கூடிய உணர்வின் அலைகளை
இவனுடைய புலனறிவு
இவனுக்குள் ஈர்க்கின்றது.
அது அவனுக்குள் ஆழமாக ஊடுருவுகின்றது.
4. வேடன் விண்ணை நோக்கி ஏகுகின்றான்
வேடன், தன் இனத்தைப் பாதுகாக்கும் உணர்வின் தன்மை, குழந்தைப்
பருவத்திலிருந்து கூட்டிக் கொண்ட, அந்த மறைந்திருந்த உணர்வுக்குள் பட்சியுனுடைய பாச
உணர்ச்சி தாக்குகின்றது.
ஆனால், வேடன் பல முறை அம்புகளை எய்கின்றான், அது தப்பிக்கின்றது.
ஆக, பட்சி அது பாசத்தாலே துடிப்பதை, அதனுடைய குறிப்பை, பல முறைகள் எண்ணி எண்ணிப் பார்க்கின்றான்.
அப்பொழுது, இவனுக்குள் மறைந்திருந்த பாசத்தின் நிலைகள்
தட்டியெழுப்பும் பொழுதுதான் இவனுடைய சிந்தனைகள் தடுமாறுகின்றது. அம்பைக் கீழே போடுகின்றான்.
இவனையறியாமல்
தட்டியெழுப்பிய அந்த உணர்ச்சி கொண்டு, அந்தப் பட்சியின் பாச உணர்வை ஏக்கத்தாலே எண்ணி, ஏங்கிப்
பார்க்கின்றான்.
இவன் கையிலே இருக்கும் பொழுதே அடிபட்ட பட்சி துடித்து
இறந்துவிட்டது. ஜீவனுடன் உள்ள மற்றொரு பட்சி, தன்னுடைய பாசத்தால்
ஏங்கிப் பார்க்கின்றது. இவனையே பின் தொடர்கின்றது.
ஆக, இவன் அம்பை எய்யும் பொழுது,
பட்சியின் பாச அலைகளை இவனுக்குள் காந்தம் இழுத்துக் கொள்கின்றது. அது, இவனுக்குள் மறைந்திருக்கக்கூடிய,
தன் இனத்தைக் காக்கும் அந்தப்
பாசத்திற்குள் தாக்கியவுடன்,
இந்த உணர்வுகள் உந்தி
சிந்தனையைக் கிளரும் நிலைகள்
வருகின்றது.
அப்பொழுது, இவனுக்குள் இருக்கும்
அசுரத்தன்மைகள் அனைத்தும் மாய்ந்து, அவனுக்குள் மறைந்திருக்கும் தன் இனத்தின் பாச
உணர்ச்சிகள் உந்தி, அந்தப் பட்சியின் எண்ணத்தின் துடிப்பின் ஆழத்தை இவன்
அறிகின்றான்.
அறிந்துகொண்ட அந்த உணர்வை
வைத்து,
இவனிடம் இருக்கக் கூடிய அசுரச்
சக்திகள் அனைத்துமே,
இவனுக்குள்
மறைந்திருக்கக்கூடிய பாச எண்ணத்திற்குள் சிக்கி,
அவன் கண்ணான புலனறிவுக்குள் ஊட்டி,
விண்ணை நோக்கி ஏகுகின்றான்.
5. துருவ நட்சத்திரத்திலிருந்து வந்த ஒரு அணுவின் ஆற்றல், இவனுக்குள்
சிக்குகின்றது
கதிரவன், அவன் ஒவ்வொரு
நிமிடமும் நமக்கு ஒளி கொடுத்து உலகத்தைச் சிருஷ்டிக்கிறான், என்ற அந்த பக்தியின்
நிலைகள் கொண்டு ஏங்கித் தவித்து, அன்று ஒவ்வொரு உணர்விலேயும் சேர்ந்து
கொண்டிருக்கக்கூடிய ஏக்கம் கொண்டு, விண்ணை நோக்கி ஏகி இருந்தான் அந்த வேடன். “வான்மீகி” என்று அப்பொழுதுதான் பெயர் வந்தது.
அவனுடைய சந்தர்ப்பம், அவன்
தேக்கிய அந்த உணர்வுதான், விண்ணின் ஆற்றலைத்தான் கவர்ந்து கொண்டது, அந்த விண்ணின்
ஆற்றலை, எந்தெந்த அணுவின் தன்மை எப்படி ஆவியாக இருந்தது? இன்று எவ்வாறு கோள்களாக
மாறியது? என்ற பேருண்மையை அறிந்துணர்ந்தவன் வான்மீகி.
அவன் வானை நோக்கி ஏகும்
பொழுது, அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வந்த ஒரு
அணுவின் ஆற்றல்தான், இவன் ஈர்ப்புக்குள் செல்கின்றது.
அன்று அகஸ்தியன்,
தான் எந்தப் பாசத்தைச் செலுத்தி,
தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றானோ,
அந்த ஆற்றலை இவன் நுகர
நேருகின்றது.
அதன்வழி கொண்டு சிந்திக்கச்
செய்யும் ஆற்றல் கூடி,
தன்னை அறியும் நிலை அவனுக்குள்
வருகின்றது.