உதாரணமாக, நம் குழந்தை கீழே
விழுந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். குழந்தை அவஸ்தைப்
பட்டுத் துன்பப்படுகின்றது. நீங்கள் குழந்தை மேல் பாசம்
கொண்டு,
“இப்படி
விழுந்துவிட்டானே”, என்ற வேதனையை உணரச் செய்து,
அந்த வேதனை
உணரக்கூடிய நிலை இருந்தாலும்,
ஈசனுக்கு வேதனையாகிறது.
இந்த
உணர்வின் தன்மை அங்கு பட்டவுடன், உடலுக்குள் இருக்கும் சக்திகளெல்லாம் சிவமாகி
விடுகின்றது. உடலான சிவம் என்ன செய்கின்றது? உடல் பயத்தால் நடுங்க ஆரம்பித்து விடுகின்றது. நீங்கள் ஆடவில்லை
என்றாலும், சிவன் நர்த்தனமாட ஆரம்பித்து விடுகின்றான். கை
கால் எல்லாம் ஆடும்.
உடல் சிவம்.
சிவ நடனத்தைப் பற்றிக் காட்டியிருக்கிறார்கள்.
ஆக, வாசுகி – “நீ
சுவாசித்த உணர்வின் சக்தியே”,
அது உனக்குள் சக்தியாக இருந்து,
ஆட்டிப் படைக்கின்றது என்ற தத்துவத்தை
தெளிவாக
எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.
யார்
படித்திருக்கின்றோம்?
அதை யாரும்
படிப்பதில்லை. தெரிந்து கொள்வதுமில்லை.
நாம்
ஒவ்வொருவரும் இந்த நிலையை எடுத்து எப்பொழுதெல்லாம், நமக்கு அந்தக் கஷ்டமான நிலைகள்
வருகின்றதோ, அப்பொழுதெல்லாம் நாம் ஒன்றும் செய்யாமல் இருப்போம்.
பையன் கீழே
விழுந்துவிட்டான் என்று அங்கு தபால் வந்திருக்கும். அப்பொழுது என்ன செய்வோம்? அந்த
எண்ணத்தை எடுத்து உடனே என்ன செய்கிறோம்?
அந்த எண்ணமே நம் உடலில் வேதனையாகிவிடுகின்றது.
பிறருடைய வேதனையான நிலைகளை நாம் எண்ணினால், அந்த வேதனை
நமக்குள் வந்துவிடும்.
அது என்ன செய்யும்?
மீண்டும் வேதனையான சொல்லை
நம்மைச் சொல்ல வைக்கும்.
வேதனையான சுவாசத்தினால்,
நம் உடலில் நோய் வரும்.
இதையெல்லாம் நாம் நம் வாழ்க்கையில் தெரிந்து, தெளிந்து, தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும். அதற்குத்தான் இதை உபதேசிப்பது.