கண ஹோமம் எது என்றே தெரியாது இருக்கின்றோம். கண ஹோமம் என்பது நம் உடலுக்குள் இருக்கக்கூடிய
நல்ல குணங்கள். உயிர் ஒரு நெருப்பு,
நாம் உயர்ந்த
குணங்களை எண்ணும் பொழுது,
பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்று எண்ணுகின்றேன். அந்த உணர்வின் தன்மை எனக்குள்
வரப்படும்பொழுது
உயிரான இயக்கத்திற்குள் (நெருப்புக்குள்) உணர்வு பட்டவுடனே
அந்த உணர்வுகள் என் உடலுக்குள் பரவுகின்றது,
என் சொல்லின் அலைகள் வெளிப்படுகின்றது.
வெளிப்பட்ட
நிலைகள் மீண்டும் எனது உடலில் உள்ள காந்தப்புலன், எனது ஆத்மாவாக
மாற்றிக்கொள்கின்றது. இதற்குப் பெயர் தான் கண ஹோமம்.
ஹோமத்தில் மலரைப்
போட்டுவிட்டு, நெய்யை ஊற்றுகின்றார்கள். பாலில் இருந்து தயிரைக் கடைந்து,
வெண்ணையாக்குகின்றோம். அந்த வெண்ணையை உருக்கி நெய்யாக்குகின்றோம்.
இதைபோலத்தான், உயிர் இனங்களில்
இருந்து மனிதனாகி,
மனித நிலைகளில்
இருந்து
மிகச் சக்தி வாய்ந்த உணர்வின் தன்மையை
நெய்யாக மாற்றிச் சென்றவர்கள் மகரிஷிகள்.
ஆகவே, ஒவ்வொரு பொருளையும் நெருப்புக்குள் இடப்படும்பொழுதெல்லாம் சொல்லித்தான் போடுவார்கள். ஏன்
போடுகிறோம், எதற்குப் போடுகின்றோம் என்று தெரியாது,
புறத்தீயிட்டு அல்ல,
அகத்தீயில் போடவேண்டும்.
மகரிஷிகளின் அருள்
சக்தி நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர
வேண்டும், எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும், இந்த மலரைப் போல
மணம் பெற வேண்டும், நாங்கள் பார்க்கும் அனைவரும் இதையெல்லாம் பெறவேண்டும், என்று நாம் எண்ணும் பொழுது நம் உயிரான ஈசனுக்கு அபிஷேகம்
ஆகின்றது,
நம் உயிருக்குள் இருக்கும்
நெருப்புக்குள் இந்த மணம் பட்டவுடன்
உணர்வலைகளாக உடல்
முழுவதும் பரவுகின்றது,
சொல்லாக
வெளிப்படுகின்றது.
இதுதான் கண ஹோமம் என்பதும்
அபிஷேகம் என்பதும்.