நீங்கள் என்னைப் போல் காட்டுக்குள்ளேயும், வீட்டுக்கு வெளியேயும்,
மிருகங்களுக்குள்ளேயும், கடும் மழையிலேயும், சேற்றுக்குள்ளேயும், அட்டைக்குள்ளேயும்
போய்,
நீங்கள் என்றைக்குக் கற்றுக் கொள்வது, தெரிந்து கொள்வது?
என்று இந்தச் சத்தை வளர்த்துக் கொள்வது?
அதற்கு நேரமில்லை, காலமுமில்லை.
நீங்கள் சாப்பாட்டிற்குப் பார்ப்பீர்களா?
அல்லது சக்தியை வளர்பீர்களா?
குருநாதர் என்னை ஒருவனை உருவாக்கினார். குருநாதர் சொன்னதைச்
செய்தோம் இதைச் சொல்கின்றோம். எனக்கு குருநாதர் எப்படிச் சொன்னாரோ, அதே மாதிரித்தான்
உங்களைக் காத்துக் கொள்வதற்காக இதைச் சொல்கின்றோம்.
ஆகையினாலே, இதை அலட்சியப்படுத்தாதபடி என்னமோ சாமி விஞ்ஞானத்தைப்
பற்றிச் சொல்கிறார், இதைப் பற்றிச் சொல்கிறார் என்று எண்ணிவிட்டு, சாமியிடம் விபூதி
வாங்கிக் கொண்டு போனால்,
தலைவலி போனால் போதும்,
உடல் வலி போனால் போதும் என்று எண்ண வேண்டாம்.
யாம் சொல்லும் இந்த நிலைகளை எடுத்தால்,
உங்களுக்கு வரும் தலைவலியை
நீங்கள் உங்கள்
மூச்சினாலே வராமல் தடுக்க முடியும்.
அப்படி வராமல் தடுத்து விட்டீர்கள் என்றால், இனி வரக்கூடிய
அணுகுண்டின் அந்த விஷத்தின் தன்மையையும், உங்களாலே தடுக்க முடியும். இதை நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்.
அதே மாதிரி, ஒருவர் நமக்குக் கெடுதல் செய்து கொண்டேயிருக்கிறார்
என்றால், யாம் சொன்ன வழியில் ஆத்ம சுத்தி செய்துவிட்டு, உங்கள் எண்ணத்தை அவர் மேல்
பாய்ச்சி, “நாளை அவர் எனக்கு
நல்லது செய்ய வேண்டும்” என்று எண்ணினால், அந்த எண்ணங்கள் மாறி வரும்.
நாளைக்கு, விஞ்ஞானத்தால் வரும் நம்மை மயக்கும் நிலையை
துடிப்பின் நிலையைத் தடுக்கவும் முடியும். இது உங்களுக்குப் பரீட்சை, உங்களை நீங்கள்
நம்ப முடியும்.
உங்களக் காக்க வேண்டும் என்ற நிலையிலே, உங்களை எண்ணி பேரண்டத்தின்
நிலைகளின் சில சத்துக்களை எடுத்து, யாம் தியானமிருக்கின்றோம். உங்களுக்கு அந்த ஆற்றலைக்
கொடுக்கின்றோம்.
நீங்கள், உங்கள் கஷ்டத்தை எண்ணி வரக்கூடிய மூச்சையெல்லாம்
மாற்ற வேண்டும். உங்களுக்கு அருள்சக்தி கிடைக்கச் செய்ய வேண்டுமென்றுதான், இத்தனையும் செய்து கொண்டிருக்கின்றோம்.
எமது அருளாசிகள்.