வியாச பகவானின் உடலிலே எப்படி உயர்ந்த ஒளியின் உணர்வுகள்
பட்டு, மெய் உணர்வின் ஒளிகளைப் பரப்பிவிட்டு, தனது உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண்
சென்றாரோ,
அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க உணர்வலைகள்,
அந்த உணர்வைப் பற்றி நாம் சிந்தித்துச் செயல்படும் பொழுது,
அந்த உணர்வலைகள்
நமக்குள் சிக்குகின்றது.
இந்த உணர்வை நாம் வளர்த்து, மெய் உலகை நாம் காண்போம்.
நீங்கள் பெறுவதற்காகவே இதைப் பதிவு செய்கின்றோம்.நாம் ஒரு விதையை நிலத்திலே ஊன்றிவிட்டு, அதற்கு நீரை ஊற்றினால், அந்த வித்திற்குள் எந்தச் சத்தோ, அதைக் காற்றிலிருந்து தன்னிச்சையாகப் பெற்று வளர்கின்றது.
அதைப் போன்று, ஒருவன் நம்மைத் திட்டிவிட்டால், அந்த நினைவு
அடிக்கடி எடுத்தவுடனே, அவன் திட்டிய கோப உணர்வுகள் நமக்குள் உணர்ச்சியாகி, அந்தக் கோபமான
காரமான உணர்வுகளைச் சுவாசித்து, நம் உடலுக்குள் பல வியாதிகளை வரவழைத்துக் கொள்கின்றோம்.
இதைப்போன்று, மெய்ஞானியின் அருள் சக்தியினுடய வித்துக்களை
உங்களுக்குள் செவிக்குள் கேட்க வைத்து, இந்த உணர்வின் வித்துக்களை
உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.
இப்படிப் பதியச் செய்த வித்துக்களுக்கு,
நீங்கள் ஊற்ற
வேண்டிய நீர்,
அந்த மகரிஷிகளின் அருள் சக்திகள்தான்.
ஓம் ஈஸ்வரா என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு, அந்த
மகரிஷியின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி, அந்த மகரிஷியின் அருள்
சக்தி எங்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்று உயிர் வழியாகச் சுவாசியுங்கள் (எண்ணுங்கள்).
இந்தத் தியானத்தை எடுத்து இந்த நன்னீரை ஊற்றுங்கள்.
அந்தச் சுவாசம் உங்கள் உடலுக்குள் அது சென்று, அசுர உணர்வுடைய
நிலைகளை மாற்றுகின்றது. உங்கள் சுவாசம் (எண்ணம்) உங்களுக்கு உதவும்.
விவசாயம் செய்யும் பொழுது, வயல்களிலே அடிக்கடி களைகள்
தோன்றுகின்றது. அந்தக் களைகளை நாமும் உடனுக்குடன் நீக்கி நல்ல பயிர்களை உருவாக்குகின்றோம்,
நல்ல மகசூல் வருகின்றது.
இதே போன்றுதான், மனித வாழ்க்கையிலே இந்த மகரிஷிகளின் அருள்
ஒளியை உங்களுக்குள் பதிவு செய்து,
இந்த வித்தான சத்திற்கு
நீங்கள் எடுக்கும்
மகரிஷிகளின் சக்தி
உங்களையறியாது எத்தகைய நிலைகள் வந்தாலும்
அதை உடனே மாற்றி
உங்களை நல்வழி
நடத்திச் செல்ல
இந்த உணர்வின்
சத்து உங்களுக்கு உதவும்.