ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 14, 2013

நாம் விண் செல்வதற்கு நம் குழந்தைகளைப் பக்குவப்படுத்த வேண்டும்

நாம் ஒவ்வொருவரும் சேர்ந்து, வாரத்தில் ஒரு நாள் தாய் தந்தையுடன் குழந்தைகளை அமரச் செய்து, வீட்டிலே கூட்டு குடும்பத் தியானமிருந்து ஒருங்கிணைந்த நிலைகளை உருவாக்குங்கள். தியானித்துவிட்டு, இறந்த மூதாதையர்களின் உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணுங்கள்.

உடலைவிட்டுச் சென்ற அந்த உயிராத்மாக்களை, சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து, அவர்கள் அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று ஏக்கத்துடன், அந்த உயிராத்மாக்களை விண்ணிலே உந்தித் தள்ளுங்கள்.

நம் குழந்தைகளுக்கு இதைப் போன்ற தியான நேரங்களில் பதிவு செய்யும் பொழுது, அந்தக் குழந்தைகள் குடும்ப ஒற்றுமையுடன் வாழ உதவும்.

எப்பொழுதுமே, குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தாய் தந்தைய்ர்கள் செலுத்தும் பொழுது, அந்தக் குழந்தைகள் ஆர்வமாக தியானம் எடுக்கும் நிலையில், அவர்களிடம் இருக்கக்கூடிய தீயகுணங்கள் மறைந்து நல்ல உணர்வின் சத்துக்கள் வளர்கின்றது.

இதைப் போன்று நாம் செய்து பழகிவிட்டால்,
நம் உடலை விட்டு உயிராத்மா பிரிந்தபின்,
நாம் சொன்ன முறைப்படி,
“என் தாய் தந்தையின் உயிராத்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்” என்று அந்தக் குழந்தைகள் சொன்னால் போதும், துள்ளி அங்கே அனுப்பிவிடும்.

இதைத்தான் அன்று மெய்ஞானிகள் அவர்களுக்குக் குழந்தைகள் இல்லையென்றாலும்கூட, நம்மை அவர்கள் குழந்தைகளாக நினைத்து, அவர்கள் உடல்களின் நிலைகளில் சென்று, பிறருடைய உதவி கொண்டு விண் சென்றார்கள்.

ஆகவே, நாமும் நம் குழந்தைகளைப் பக்குவப்படுத்தி, இந்த முறைகளிலே விண் செல்ல வேண்டும்.