ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 3, 2013

அர்ச்சனை நாம் எப்படிச் செய்ய வேண்டும்?

1. மாரியம்மன் கோவிலில், அக்கினிச் சட்டி ஏன் வைத்திருக்கிறார்கள்?
நாம் என்ன செய்கின்றோம்? மாரியம்மன் கோவிலுக்குப் போய் நல்லதை எண்ணுகின்றோமா? நம் கஷ்டத்தையெல்லாம் எண்ணி ஏங்குகின்றோம். அர்ச்சனை செய்யும் பொழுது, எதை எண்ணி ஏங்குகின்றோம்?

அந்தச் சாமியின் நிலைகள் வரப்படும் பொழுது, பம்பைத்தட்டு, மேள தாள வாத்தியங்களை, உடுக்கையைத் தட்டினால் உணர்வின் நிலைகள் பொங்குகின்றது.

நாம் கவலையும், வேதனையும் அதிகம் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அந்த மேள தாள வாத்யங்கள் அடிக்கப்படும் பொழுது, உணர்ச்சிகள் உந்துகின்றது. ஆக, எதை எடுத்துக் கொள்கிறோம்? இந்த வேதனையான உணர்வைத் தான் எடுக்கின்றோம்.

மகிழ்ச்சி யாருக்காவது வருகின்றதா? சந்தோஷமாக யாராவது இருக்கிறார்களா? ஏனென்றால், நமக்குள் வரும் நிலைகளைக் காட்டினால் நாம் அதை மாற்றுவதற்கு என்ன செய்கிறோம்? ஏனென்றால், திரும்பும் பக்கமெல்லாம் மாரியம்மன் கோவில் இருக்கும்.

மனித வாழ்க்கையில் அடிக்கடி சலிப்பு வருகிறது, சங்கடம் வருகிறது. ஆனால் ஒருவர் தவறு செய்கின்றார் என்றால், அந்த தவறான நிலைகளைப் பார்க்கும்பொழுது, அந்த உணர்வு தனக்குள் மாறி,  தன்னையறியாமல் ஆட்டிப்படைக்கின்றது. நிவர்த்திப்பதற்கு என்ன செய்கிறார்கள்? 

மாரியம்மன் கோவிலில் நெருப்புச் சட்டி வைத்திருப்பார்கள். அந்தச் சக்தியின் நிலைகளில் நெருப்பு என்ன செய்கிறது? தீமைகளைச்  சுட்டுப் பொசுக்க வேண்டும். 
2. “ஓம் ஈஸ்வரா”, என்று இந்த நெருப்பைக் கூட்ட வேண்டும்
நாம் எடுத்துக்கொண்டது விஷம், நமக்குள் வந்தால் பதறச் செய்கிறது. ஆனால் இதே மாரியம்மனின் கோவிலில், அக்கினிச் சட்டியைக் கொண்டு தீயதைச் சுட்டுப் பொசுக்கவேண்டும்.

அந்த மாரியைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?  நெருப்பு, அதைக் காட்டியிருக்கிறார்களா?  யாராவது சொல்லியிருக்கின்றார்க்ளா? இல்லை

அந்த நெருப்பு யார்?  இந்த மகரிஷிகள். ஆக, இந்த மனித வாழ்க்கையில் வந்த இடைஞ்சல்களை நீக்கிப் பழகியவர்கள்.

ஓம் ஈஸ்வரா’’ இந்த நெருப்பைக் கூட்டி,
மகரிஷிகளின் அருள் ஒளியைக் கூட்டு.

இந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும்’’ என்று ஏங்கி, நாளை அவர்கள் (தவறு செய்தவர்கள்) அறியாமையிலிருந்து விடுபடவேண்டும். அவர்கள் நல்லதைச் செய்யும் எண்ணம் வர வேண்டும் என்ற இந்த உணர்வவை நமக்குள் சுவாசிக்க வேண்டும். 
3. அர்ச்சனை நாம் எப்படிச் செய்ய வேண்டும்?
மாரியம்மன் கோவிலில், மத்தியில் அக்கினிச்சட்டி வைத்திருப்பார்கள். எதற்கு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
கோவில்களெல்லாம் தப்பல்ல,
நாம் வழிப்படும் முறை தான் தப்பாக இருக்கும்.
அர்ச்சனை செய்துவிட்டு, காசைக் கொடுத்துவிட்டு
நாம் என்ன செய்கிறோம்? 

தியானிக்கவேண்டும், எதை?
இந்தத் தெய்வம் நல்லது செய்திருக்கிறது.
இந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெவேண்டும்,
நாங்கள் செய்வது அனைத்தும், நல்லதாக இருக்கவேண்டும்,
ங்கள் பேச்செல்லாம் பிறருக்கு நல்லதாக இருக்கவேண்டும்.
இந்த தெய்வகுணத்தின் சக்தி வளரவேண்டும்.
இதை உணர்த்திய மெய்ஞானிகளின் அருள் ஒளி வளரவேண்டும்.
அந்த அருள் ஒளியால் எல்லாம் நல்லதாக இருக்கவேண்டும் என்று
தியானித்துப் பாருங்கள். இதுதான் அர்ச்சனை,
                       
இதைத் தான் ஆதிசங்கரர் சொன்னார்.  அத்வைதம், சூட்சுமமாக இருப்பதை, உனக்குள் எடுக்கக்கூடிய உணர்வை எடுத்து சுவாசமாக்கு. இந்த சக்தியை உனக்குள் கூட்டு, என்று அன்றைக்கு ஆதிங்கரர் சொன்னார்.

அவர் காட்டிய அருள்வழியில், காற்றில் மறைந்துள்ள அருள் ஞானிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து, அனைவரும் மகிழ்ந்து வாழ்வோம், பிறவியில்லா நிலையெனும் அழியாஒளி நிலை நாம் அனைவரும் பெறுவோம்.