ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 15, 2013

மேரு என்ற மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து பாற்கடலைக் கடைந்தார்கள் - வியாசகர் சொன்னது

ஆதிசக்தி எவ்வாறு உருபெற்றது, அது சூரியனாக எவ்வாறு தோன்றியது என்பதையும், பிரபஞ்சத்திற்குள் நமது பூமி –
மேரு என்ற மலையை மத்தாகவும்,
வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் வைத்து
பாற்கடலிலே கடைந்தெடுத்தான் என்று
மகாபாரதத்திலே வியாசர் அருளினார்.

மேரு மலை – அதாவது நம் பிரபஞ்சத்திற்குள் நம் சூரியக் குடும்பத்திற்குள் சிறு சிறு துளிகளாக அணுக்களாகச் சேர்ந்து, ஒரு மலையாக, பாற்கடலில் விண்ணிலே தோன்றியது நமது பூமி.

பூமியின் சுழற்சியால் ஏற்படும் உராய்வின் தன்மை கொண்டு, அது இயங்குகின்றது. வாசுகி,
அதாவது சுழலும் பொழுது,
தான் ஈர்த்து, தனக்குள் மோதி
அந்த உணர்வின் சத்தாக
நமது பூமி சுழற்சியின் நிலைகள் பெற்றது.

வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து, மேரு என்ற மலை அதாவது, அடுக்கடுக்காகச் சேர்ந்த நமது பூமியை மத்தாக வைத்து பாற்கடலிலே கடைந்தான் என்று, விண்ணுலகிலே அணுக்களின் சேர்க்கை நிலையை நாம் அறிந்து கொள்வதற்காக இவ்வளவு இரத்தினச் சுருக்கமாக வியாச பகவான் அருளியுள்ளார்.

பாற்கடலிலே நமது பூமி சுழலும் பொழுது, விண்ணிலிருக்கக்கூடிய ஆற்றல்மிக்க சக்தியைப் பாறைகளாகவும், கற்களாகவும், இதற்குள் விளையச் செய்து, மரம், செடி, கொடிகளாக விளையச் செய்கின்றது.

அதிலிருந்து வெளிப்படும் மணத்தின் சத்தை, விண்ணிலே தோன்றும் ஒரு உயிரணு நம் பூமிக்குள் வந்து, தாவர இனச் சத்தை அது வெளிப்படுத்தும் ஆவியின் தன்மையைச் சுவாசித்து, அந்தச் சத்து அணுத்திசுக்களாகி புழுவாகத் தோன்றியது.

பின் மாட்டுத்தலை, பன்றித்தலை, குதிரைத்தலை, யானைத்தலை என்று இப்படி பல தலைகளை, அதாவது மிருகங்களுடைய சிரசுகளைப் போட்டு, அதற்குப் பின் மனிதனுடைய உடல்களைப் போட்டார்கள். ஆக, அவரவர்கள் விழுங்கிய நிலைகள் கொண்டு உடல்கள் உருப்பெற்றார்கள்.

ஆக, விண்ணிலே தோன்றியதைக் கடைந்து, நம் பூமியில் விளையச் செய்து, இந்தச் சக்தியின் தன்மையை ஒரு உயிரணு சுவாசித்து, உடல் பெறுகின்றது.

எந்தத் தாவர இனச் சத்தின் ஆவியின் தன்மையை
தான் சுவாசித்து, ஒரு உயிரணு உடல் பெற்றதோ,
அதே தாவர இனச் சத்தைத் ஆகாரமாகப் பசிக்கு உட்கொண்டு,
அதே உணர்வின் சத்தைத் தான் சுவாசித்து,
சுவாசித்த நிலைகள் கொண்டு அணுத் திசுக்கள் விளைந்து,
விளைந்த உயிரணுக்களின் அணுதிசுக்களினுடைய நிலைகளை
அணு திசுக்களாகத் தன் உயிராத்மாவாகச் சேர்த்து,
அது வளர்ச்சி பெற்றது என்ற இந்தப் பேருண்மையை
நமக்கு உணர்த்துவதற்குத்தான், அன்று மெய்ஞானிகள் அவர்கள் கண்ட விண்ணின் ஆற்றல்களை, அது எவ்வாறு பெறுகிறது என்ற உண்மையை வெளிப்படுத்தினார்கள்.

ஆக, நமது பூமியோ விண்ணிலே சுற்றும்  பொழுது, வட துருவப் பகுதியிலே அது ஈர்க்கும் ஆற்றல் கொண்டு, அது உறையும் பனியாக அது தேங்கி நிற்பதைத்தான், எல்லோருடைய நன்மை கருதி சிவன் தன் கழுத்திலே விஷத்தைத் தேக்கிக் கொண்டான் என்று உணர்த்தினார்கள்.
முதன் முதலிலே தலை பாகம் இருப்பவன் சிவன் என்றார்கள். நமது பூமி சக்தியாக ஆவியாகத் திரண்டு, அது பல நிலைகள் கொண்டு உருப்பெற்று, ஒரு திடப்பொருளாக ஆகும் பொழுது சிவம்.

அந்த சிவமான நிலைகள் கொண்டு, நமது பூமி, விண்ணிலே தோன்றிய அந்த அணுக்களின் சக்தியை தனக்குள் பனிப் பாறைகளாக உறையச் செய்து, இது சுழலும் சக்தியாலே
தனக்குள் எடுத்துக் கொண்ட வெப்பத்தாலே,
ஆவியாகவும், நீராகவும், மாற்றி
பூமியை வளரச் செய்கின்றது.

அதனால்தான், சிவன். எல்லோருடைய நன்மையைக் கருதி, விஷத்தைத் தன்னுள் கழுத்திலே அடக்கிக் கொண்டான் என்று காவியத்தைப் பிரித்துக் காட்டினார்கள்.

இதே போன்று, அத்தகைய அணுக்களின் தன்மை பூமியிலே படர்ந்து, புழுவிலிருந்து மற்ற உயிரினங்களகத் தோன்றி, நாம் மனிதனாகத் தோன்றினோம் என்பதற்காக,
ஒவ்வொரு உயிரினங்களின் தன்மையை,
அது அது விழுங்கிய நிலைகள் கொண்டு
உடல்கள் பெற்றது என்று எழுதினார்கள்.

அதிலே தலை பாகம் இருப்போர் அனைவருமே தேவர்கள் என்றும் வால் பாகம் கடைந்தவர்கள் அனைவருமே அசுரர்கள் என்றார்கள். இப்பொழுது உணவை உட்கொண்டால் என்ன ஆகின்றது? முதலில் நம் உடலிலே சத்தாக வளரச் செய்கின்றது.

நாம் சாப்பிட்ட ஆகாரங்கள் கழிவாகும் பொழுது என்னவாகின்றது? நச்சுத்தன்மை விஷமாக மாறுகின்றது. இதே போன்றுதான்
பாற்கடலிலே கடையும் பொழுது,
அது தெளிந்த நிலைகள் கொண்டு
சத்தான நிலைகள் விளைகின்றது.
அதனின் கழிவின் மலம்
விஷத்தன்மையாகப் படர்கின்றது
என்ற நிலையைத் தெளிவாகக் காட்டினார் மெய்ஞானி வியாசர்..