“ஓ...ம் ஈஸ்வரா... என்ற
சுவாசத்தின் தன்மையை, புருவ மத்தியில் எண்ணி ஏங்கி சுவாசிக்கும் பொழுது,
உயிரின் துடிப்பின் நிலைகள் கொண்டு நம் உடலில் உள்ள காந்த செல்களை மட்டும் இயக்கும்.
“கரண்ட்” அதிகமாக உண்டாக்கும்.
1.“ஓம்” என்ற உணர்வின் தன்மை கொண்டு,
2.அந்த மெய்ஞானிகள் எதை எடுத்துக் கொண்டார்களோ,
3.அந்த உணர்வின்
அலையை,
4.உங்களுக்குள் வித்தாகப் பதியச் செய்யும் உணர்வைத்
தூண்டி,
5.அந்த வித்தை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.
அதே நினைவுடன், ஓம் என்று சொல்கின்ற பொழுது, அந்த
உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகள் பெருகி, உடலுக்குள் காந்தத்தை அதிகமான நிலைகளில் பிடிக்கச்
செய்து, இந்த அழுத்தத்தின் நிலைகொண்டு,
1.எந்தத்
தீய சக்தியாக இருந்தாலும் ஆவியாக்கி,
2.உணர்வின்
தன்மையை ஒளியாக மாற்றும்.
3.இது குருவின் பலம்.
இதைத்தான் போகர் அவர் எதைச் சுவாசித்தாரோ, ஒரு
தாவரத்தின் நிலைகளையும், ஒவ்வொரு ஞானியின் சுவாச எண்ணத்துடன், எந்த உணர்வில் எவ்வாறு
சென்றார்கள்? என்ற நிலையை, அதை உணர்வதற்காக வேண்டி, நம் குருநாதர் எம்மைக் காட்டிற்குள்
போகச் சொன்னார்.
அப்படி யாம் பெற்ற உணர்வின் அலைகளை, அந்த உணர்வின்
தன்மை (உபதேசம் மூலமாக) நீங்கள் சுவாசிக்கும் பொழுது, நீங்கள் எந்த அளவிற்கு அதைக்
கேட்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுக்குள் பதிந்துவிடுகின்றது.
இரண்டு மூன்று முறை கேட்டுக் கொண்டிருந்தால், உங்களுக்குள்
பதிவாகிவிடும். அப்பொழுது, ஓம் ஈஸ்வரா என்று உங்களுக்குள்
எண்ணும் பொழுது, அந்த மகரிஷியின் அருள் ஒளி கலந்த உணர்வுகள்
உங்களுக்குள் தோன்றும்.
அப்பொழுது, சுவாசிக்கும் நிலை வரும் பொழுது
1.நீங்கள் எவ்வளவு கவலையாக இருந்தாலும் உடனே மாறி,
2.உங்களிடத்தில் அந்த எண்ணத்தின் வலுவைப் பார்க்கலாம்.
இதை உங்கள்
அனுபவத்தில் பார்க்கலாம்.