ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 16, 2013

கோழியை விரும்பிச் சாப்பிடுபவர்களின் கதி என்ன?

1. கோழி விஷமானவற்றை உணவாக உட்கொள்கின்றது
கோழி என்ன செய்கிறது? தேளையும் சாப்பிடுகிறது. பாம்பையும் சாப்பிடுகிறது .அதற்கு ஒன்றும் செய்வதில்லை. விஷத்தை முறிக்கக்கூடிய சக்தி இருக்கிறது. ஆனால், கோழிக்கு அந்தச் சக்தி இருக்கிறது. அந்த விஷத்தையும், அதைப்போல பலவற்றையும் தின்று, கோழியாகப் பிறக்கிறது.

தேளை ஒரு பித்தளைப் பாத்திரத்தில் ஒரு போட்டு, அது பாத்திரத்தில் கொட்டினால் பாத்திரத்தில் ஓட்டை விழுந்துவிடும். தேளுக்கு அவ்வளவு விஷம் உள்ளது.

ஆனால் அந்தக் கோழி என்ன செய்கிறது? அதைக் கொத்துகின்றது. தேள் கொட்டுகிறது. ஆனால் அந்த விஷம் அதை அடிக்க முடியாததால் அதற்கு ஒன்றும் தெரிவதில்லை.

கோழி அதை இரண்டு உதறி உதறி, உள்ளுக்குள் விழுங்குகிறது. அந்த விஷத்தைச் சாப்பிடுகிறது. பாம்பையும் சாப்பிடுகிறது. ஆனால் அதற்கு ஒன்றும் ஆவதில்லை.
2. கோழியை விரும்பிச் சாப்பிடுபவர்களின் கதி என்ன?
ஆனால் அந்தக் கோழியை மனிதன் சாப்பிடுகிறான். மனிதன் கோழியைச் சாப்பிடும் போது என்ன ஆகிறது?.
அந்தக் கோழி எதை எதைச் சாப்பிட்டதோ,
அந்த மாதிரி விஷத் தன்மையான குணங்களே 
மனிதனுக்கு வரும். விஷத்தின் ஆற்றல் இங்கு வளரும்
பாலில் விஷத்தைப் போட்டதுபோல், நல்லதைச் சிந்தித்துச் செயல்படுத்தும் தன்மை வராது.

கோழி சாப்பிடுபவர்களைப் பாருங்கள். அவர்களிடம் இரக்கம் என்பது இருக்காது. மற்றவர்களைக் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள்.

அந்தக் குறை கூறும் உணர்வுகள் கொண்டு இரக்கமற்ற செயல்களைச் செய்து கொண்டிருப்பார்கள். தன் பிள்ளையானாலும் மற்ற நிலைகளைச் செய்வார்கள். இதை நீங்கள் வாழ்க்கையில் பார்க்கலாம்.

நாம் இப்பொழுது என்ன செய்கிறோம்? கோழி எப்படி ஏங்குகிறதோ அதைப்போல, குறைகளை எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.

அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்,
அப்படிச் செய்கிறார்கள் என்றும், அப்படிப் பேசினார்கள் என்று
இந்த உணர்வைப் பற்றாக்கி விடுகிறோம்.

கோழியை ரசித்துச் சாப்பிடுபவர்களுக்கு, அப்புறம் கோழியின் மேலேயே எண்ணங்கள் வரும். கோழியை அதிகமாகச் சாப்பிட்டால்,
செத்த பிறகு கோழியின் ஞாபகமே வரும்.
இவன் கோழியாகப் பிறப்பான்.
அதன் ஈர்ப்பிலே முட்டையாக வந்துவிடும்.
யாராக இருந்தாலும் சரி.
உயிருடைய வேலை அதுதான்.

அதுதான் கீதையிலே, "நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகிறாய்". நாம் எண்ணக்கூடிய எண்ணம் எதுவோ, அதன் வழியில், நாம் அதுவாகவே ஆவோம்.