1 ஊரையும் உலகையும் காக்கும் நிலை
விஷத்தன்மைகள் பரவி, புவியின் காற்று மண்டலத்தில் கலக்கப்படும் பொழுது, அது நமது சுவாசத்தில் கலந்து உடலுக்குள் செல்வதால், உயிரின் இயக்கத்தால் நமது சுவாசம் பலவீமடைகின்றது. ஒரு
விஷத்தை நாம் உட்கொண்டால், நமது உடல்
எப்படி பலவீனமடைகின்றதோ, அதைப் போன்ற
உணர்வுகளை நமக்குள் தோற்றுவிக்கின்றது. இது இயற்கையின் செயல்களில் ஒன்று..
விண்ணில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும், துருவ மகரிஷி, சப்தரிஷி மண்டலங்களாக உள்ளவர்கள், இத்தகைய நஞ்சுகளை அடக்கி, ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.
தியான வழியில் உள்ளவர்கள் அனைவரும், அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவருவதனால், அவர்களை இந்த விஷத் தன்மைகள் பாதிப்பதில்லை. இதைப் போன்ற
நேரங்களில், நம் குருநாதர் காட்டிய அருள்
வழியில், அனைவரும் ஒருங்கிணைந்து, துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள்
பெருக்குவது நல்லது.
ஏனென்றால், ஏற்கனவே
நமக்குள் பதிவாகி இருக்கும் இருண்ட உணர்வுகளைக் கரைப்பதற்கு, இது
ஒரு நல்ல சந்தர்ப்பம். நாம் விடும் மூச்சலைகளால், இந்த பூமியில் படர்ந்துள்ள விஷத்தன்மைகள்
முறியடிக்கப்படுகின்றன.
இந்த பூமியில், சங்கடத்தாலும், வேதனனையாலும், வெளிப்படுத்தப்பட்டுள்ள உணர்வின் அலைகள்
பரவிப் படர்ந்துள்ளன. நாம் கூட்டமைப்பாக இருந்து, நல்லுணர்வின் அலைகளை வலுவாக வெளிப்படுத்தினோம் என்றால், நமது
மூச்சலைகள், காற்று மண்டலத்தில் சிறுகச் சிறுக
பெருகுகின்றது.
ஒரு முறை செய்துவிட்டு, அடுத்த முறை தொடராமல் விட்டு விட்டால், கடலில் பெருங்காயத்தைக் கரைத்தது போல் ஆகிவிடும். அதாவது, கடலில் கரைத்த பெருங்காயத்தின் மணம், சிறிது நேரம் கரைத்த இடத்தில் இருக்கும்.
பிறகு, அதனின் மணம் கொஞ்சம் கொஞ்சமாக, மறைந்துவிடும்.
இதைப் போன்று அல்லாது, நமது மூச்சலைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி, இந்தக் காற்று
மண்டலத்தில், மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தியைப் பெருகச் செய்வதன் மூலம், இதனின் வலு அதிகமாகின்றது. இதனால், புறத்தில் பரவிக்
கொண்டிருக்கும் நஞ்சின் வலுவினை இழக்கச் செய்கின்றோம்.
நாம் அனைவரும் கூட்டுத் தியானமிருந்து, நமது மூச்சலைகளை வெளிப்படுத்தும் பொழுது, அந்த அலைகள் நமது காற்று மண்டலத்தில், குறைந்த பட்சம் “10 மைல்” சுற்றளவிற்கு மேலேயும், அகலமாகவும் பரவுகின்றது. நாம் விடும் மூச்சலைகள், காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மையினைக் குறைப்பதற்கு
உதவும்.
ஏனென்றால், ஒரு
நூலால் கனமான பொருளைத் தூக்க
முடியாது. பல நூலை ஒன்றாகச் சேர்த்து, கயிறாகத் திரித்து, ஒரு கனமான பொருளைத் தூக்குவது போன்று, நம்முடைய எண்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்துடன்
இணைத்து, அதனின் உணர்வினை நமக்குள் சுவாசித்து, மூச்சலைகளை நாம் வெளிப்படுத்தும் பொழுது, அது இந்தக் காற்று
மண்டலத்தில் பரவும்.
சூரியனுடைய கதிரியக்கங்களில் அதிகமாக நச்சுத் தன்மை தாங்கியிருந்தாலும், நாம் வெளியிடும் மூச்சலைகள், அந்த நச்சுத் தன்மையை முறியடிக்கும் உணர்வலைகளாக “10 மைல்” அளவுக்காவது
இது பரவும்.
அப்போது, இந்த “10 மைல்” சுற்றளவில் உள்ளவர்களுக்கு, தீங்குகள் இல்லாத நிலைகளும், அவர்கள் சுவாசத்தில், நல்ல தன்மையினைப் பெறும் நிலையும் ஏற்படுகின்றன. நம்மிடத்திலும்
இந்த நிலையைப் பெறுகின்றோம்.
ஆகவே நாம் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உயிர்
வழி கவர்ந்து, உடலுக்குள் பரவச் செய்து, நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
உணர்வுகளை, உணவாகக் கொடுப்போம்.
அவ்வாறு, அந்த சக்தி வாய்ந்த உணர்வின் ஒளி அலைகளை, மூச்சலைகளை, நாம் வாழும் ஊர் முழுவதும் படரச் செய்வோம்.
நம் ஊர் மக்கள் அனைவரும், அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற்று, இனி வரும் எல்லாத் தீமைகளில் இருந்து விடுபடச் செய்து, மகிழ்ந்து வாழச் செய்து, அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில், அனைவரும் இணைந்து வாழச் செய்வோம்.
எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி, நம் அனைவருக்கும் துணையாக இருக்கும். ஓம் ஈஸ்வரா குருதேவா.
2 தாய் பூமியை
மகிழச் செய்யும் நிலை
நமது பூமியே, நமக்குத் தாய். நாம் மகிழ்ச்சியுடன் இருக்கும் பொழுது, அதனைக் காணும் தாய் மனமும் மகிழ்ச்சி அடைகின்றது.
அது போன்று, நாம்
மகிழ்ச்சியடையும் பொழுது வெளிப்படும் மூச்சலைகள், நமது
தாய் பூமியில் படர்கின்றது. இந்த
மகிழ்ச்சியான உணர்வுகள் பரவும் பொழுது, நமது தாய்
நாடு மகிழ்ந்திருக்கும். இதில் வாழும் கோடிக்கணக்கான மக்களும். மகிழ்ச்சியின் உணர்வுகளைப் பெறுவர்.
பூமியில் ஒரு வெடிகுண்டை வீசினால், அதனின்
நச்சுத் தன்மை காற்றில் பரவி, அதனைச் சுவாசிக்க நேர்பவர்கள் மடிகின்றனர். ஆனால் மகிழ்ச்சியான
உணர்வுகள் காற்றில் பரவும் பொழுது, அதனை
நுகர்பவர்கள், மகிழும் நிலை வருகின்றது.
நமது பூமியே, நமக்குத் தாய் என்கின்ற பொழுது, அந்தத் தாய்க்கு, நாம் சேவை செய்வது எவ்வாறு இருக்க
வேண்டும்? என்ற நிலையில் சிந்தித்து, இந்தப் பூமியில் பிறந்த நாம், இந்தத் தாயின் பிள்ளைகள் என்று ஒருங்கிணைந்து,
தாயுடன் நாம் எவ்வாறு அரவணைத்துச் செல்கின்றோமோ, தாய் எவ்வாறு நம்மை அரவணைத்து வாழ்த்துகின்றதோ, இது போன்று, நாம் தாயுடன் அணுகிய நிலைகள்
கொண்டு, நாம் அனைவரும் சகோதரர் என்றும், இன பேதமின்றி, மத பேதமின்றி, மொழி பேதமின்றி, மன பேதமின்றி, நாம் வாழ்நிடுவதே நலம்.
நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள், என்று
எண்ண வேண்டும். இந்த எண்ணமானது
நம் பூமியைக் காக்கும்.
இந்த பூமித்தாயைக் காப்பது போன்று, நம்மை ஈன்ற
தாயும், மகிழ்ந்திடும் நிலையாக நாம் செயலாற்றிட வேண்டும்.
நமது தாய் தந்தையர், எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில்,
நம்மிடத்தில் அன்பைக் காட்டி, நல்லறிவை
ஊட்டி நம்மை வளர்த்தனர். உணவும் உடையும் கொடுத்து, கல்விக்கு
வேண்டிய வசதிகளும் செய்து கொடுத்தனர்.
ஆகவே நாம், நம் தாய், தந்தையை மகிழ்ந்திடச் செய்யும் நிலை பெறவேண்டும். தீய உணர்வுகளை அடக்க
வேண்டுமென்றால், தாயின் பேரன்பைப் பெறவேண்டும்.
தாயின் பேரன்பைப் பெற்றால்,
மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெற முடியும். அதைப் பெற்று, உங்கள் வாழ்க்கையில் அறியாது
சேர்ந்த தீய உணர்வுகளை அடக்கி, மெய்ஞானிகளின் உணர்வை
உங்களில் வளர்த்து, அன்னை தந்தையை, பேரின்பப் பெருநிலை பெறச் செய்ய வேண்டும்.
அன்னை, தந்தை, அவர்கள் பெறுகின்ற
மகிழ்ச்சியினால் வெளிப்படும் மூச்சலைகள், இந்த பூமியில்
படர்கின்றன. நம் தாய் பூமியான இந்த பூமியில், நாம்
அனைவரும் மகிழ்ந்திடும் உணர்வை வெளிப்படுத்தினால், தாய்
பூமியும் மகிழ்ந்திடும் நிலை உருவாகும்.
3 குரு காட்டிய வழியில் மெய் உலகம்
நாம் அனைவரும், அந்த மகரிஷிகளின் அருள்வட்டத்தில் கலந்து, நம்மையறியாது சேர்ந்த தீமைகள் நீங்கி, நம்முடைய மூச்சும், பேச்சும் உலக நன்மை பயக்கும் சக்தியாக, நாம் எண்ணிய உணர்வுகள், நமக்குள் தீமையை அடக்கும் சக்தியாகவும், நன்மை பயக்கும் சொல்லாகவும், செயலாகவும், நமக்குள் வளரவேண்டும்.
நம்முடைய உணர்வுகள், எண்ணங்கள் அனைத்தும், உலக மக்களைக் காத்திடும் நிலையாகவும், சகோதர உணர்வை வளர்த்திடும் நிலையாகவும், அது வளர்ந்திட வேண்டும்.
அந்த மெய்ஞானியின் உணர்வுகள், அவர்கள் எல்லோரும் எவ்வாறு அனைத்தும் உணர்ந்து, உறவாடினார்களோ, அதைப்போன்று நம் உணர்வுகள் அனைத்தும், வெளியிடும் அனைத்து உணர்வுகளும், நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளும், நமக்குள் ஆகாத உணர்வுகள் வந்தாலும், சகோதர உணர்ச்சியுடன் ஒன்றுபட்டு, சேர்த்து, தீமையற்ற
நிலையாக வளரும் நாம், தனித்த
சரீரங்களாக இருந்தாலும், சகோதர உணர்வுகளுடன் வாழ்ந்திடும் உணர்வாக, நாம் இடும் மூச்சலைகள், இங்கே படர்ந்து அதன் வழிகளில், நம் பூமியான பரமாத்மாவும், அது பரிசுத்தப்படும் நிலைகள் ஏற்படும். இந்தப் பரமாத்மாவில் இருந்து, நுகர்ந்து எடுக்கும் அனைத்து உயிரான மக்களும், அந்த மெய்வழி பெறும் நிலைகள் ஏற்படும்.
நாம் எந்தத் தாவர
இனச்சத்தை நுகர்ந்து, உணவாக உட்கொண்டு,
உடலாக ஆனோமோ, இந்த மனித
உடலுக்குள் எண்ணிய உயர்ந்த எண்ணங்கள், சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப்
படர்ந்து, நாம்
எந்த உணர்வின் தன்மை உணவாக எடுத்துக் கொண்டோமோ, நாம் அதை உணவாக்கியபின், நம்
உணர்வின் எண்ண அலைகள் படர்ந்து, நாம்
செல்லும் இடங்களில் பரவியுள்ள, நஞ்சு கொண்ட உணர்வுகளைத்
தாக்கி, நஞ்சு கொண்ட தாவர இனமே வளராது, மனிதனை வீழ்த்திடும் நிலையைத் தடுக்கும்.
ஆக இதைப்போன்ற நிலைகளிலிருந்து, நீங்களிடும் மூச்சலைகள், இன்று தாவர இனச்சத்தும் சத்தான
நிலைகளில் வளர்ந்து, அந்த
உணர்வின் தன்மையை, உணவாகப் புசிக்கும்
மக்கள் அனைவரும், மெய் உணர்வின் தன்மையைப் பெறும் தகுதியாக, உங்களுடைய
மூச்சுகள் அமையவேண்டும் என்றும், கேட்டுணர்ந்த
உணர்வுகள் இது படர்ந்து, மெய்
உலகைப் படைக்கும் உணர்வாக உங்களுக்குள்
விளைந்து, நீங்கள்
இடும் மூச்சலைகள் உலகில் உள்ள தீமையான நிலைகளை நீக்கி, மெய் உணர்வைப் பெறும் சக்தியாக மலர
வேண்டும் என்று, எல்லாம் வல்ல குருநாதர் அருள் வழியில், அந்த மெய்ஞானியின் அருள் வட்டத்திற்குள், உங்கள் எண்ணங்கள் சென்று, அதன் வழிகளிலே தீமையை நீக்கி, நல் உணர்வான, நல்வினைகளைச் சேர்த்து, நல்வினைக்கு
உடல் அமைத்து, அது, வினைக்கு நாயகனாக,
மெய்ப்பொருள் கண்டுணர்ந்த, அந்த
மெய்ஞானியின் அருள்வட்டத்தில், நாம்
அனைவரும் என்றும் நிலையான “பெருவீடு பெருநிலை” என்ற நிலையடைந்து, வளர்ந்து, அதைப்
போன்று, என்றும் மங்காத ஒளிச்சரீரத்தைப் பெறுவோம்.
இன்றைய நிலையில், நம் பூமியில் வாழும் உயிரினங்கள், மிருகங்களிலிருந்து,
மனிதன் வளர மிகவும் சிரமமான நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காற்று மண்டலமோ,
நச்சுத்தன்மையாக மாறிக் கொண்டு வருகின்றது.
அதே சமயம், மனிதனுடைய எண்ண அலைகள் அனைத்தும் சிந்தனையற்ற நிலைகள்
கொண்டு, மனித உடலில் விளைய வைத்த இந்த உணர்வுகள், இங்கே படர்ந்து கொண்டிருக்கின்றது.
இத்தகைய உணர்விலிருந்து, நாம் மீள வேண்டும்.
நமது குருநாதர், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்,
எமக்கு உணர்த்தியருளிய அருள் வழியை, நீங்களும் பெற வேண்டுமென்ற இந்த ஆசையினால்தான்,
நம் குருநாதர் காண்பித்தருளிய உணர்வுகளை, உங்களுக்குள்ளும் விளையச் செய்து, அதை நீங்கள்
எண்ணும் பொழுது, அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெற்று, உங்களை அறியாது புகுந்த தீமைகளை
நீக்கி, நல்லுணர்வின் தன்மையாக நீங்கள் வளர வேண்டும் என்று பிரார்த்திக்க, நாம் அதனின்
சத்தை, ஒருங்கிணைந்து விளையும் சத்தாகச் செயல்படுவோம்.
4 தபோவனத்தின் தத்துவம்
இன்று கெமிக்கல் கலந்த அணுக்களை, அதாவது செல்கள், அதாவது சிலிகான்களைப் போன்று, நமக்குள்
உணர்வின் எண்ணங்களைப் பதியச்
செய்து, நமக்குள் ஒவ்வொரு
உணர்வுக்குள்ளும், இன்று, விஞ்ஞான அறிவு கொண்ட, கெமிக்கல் கலந்த உணர்வின் ஆற்றல், நமக்குள் அதிகமாகப்
பதிந்து விட்டது. பின், அதிலிருந்து நாம் திசை திரும்பவே இல்லை.
மனிதன் என்ற எண்ணமே, இங்கே போய்விட்டது, இயந்திர வாழ்க்கை வாழும் நிலைக்கு, இன்று நாம் வந்துவிட்டோம். இவ்வாறு, நாம்
அந்த நிலைகள் கொண்டு, இதை
நமக்குள் பதிவு செய்தபின், இருந்த
இடத்திலே இருந்துகொண்டே, ஆட்டிப்படைக்கும்
தன்மைக்கு வந்துவிட்டது, இன்றைய
விஞ்ஞானம்.
ஆக, மனிதனுடைய
சிந்தனைகள் சிதறுண்டு போகும் நிலைகளும், சூரியனே சுக்குநூறாகிக் கரையும் நிலைக்கும், இந்த பூமியினுடைய நிலைகளும், அணுக்களாக பொசுங்கிப் போகும் நிலைக்கு வருகின்றது அல்லது இருள் சூழ்ந்த நிலைக்கு வருகின்றது.
இன்று,
பூமியினுடைய நிலைகளில் அணுகுண்டு வெடித்தால், இவன் பதுக்கி வைத்திருக்கும், லேசர் கதிரியக்கங்கள், நீருக்குள்ளும், நீர் நிலைகளுக்குள்ளும் பதித்து வைத்திருக்கின்ற அணுக்கள்
வெடிக்கும். இதை அப்புறப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கின்றனர்.
அவ்வாறு எடுத்தாலும், அணு நீர் மூழ்கியினுடைய நிலைகளை ஒரு இயந்திரத்திற்குள்
பாய்ச்சி இருந்தாலும், அது ஒவ்வொரு
இயக்கத்திற்குள்ளும் அணு கதிரியக்கங்கள் தாக்கி, அதை நீர் நிலைகளில்தான் மறைக்க வேண்டும்,
அல்லது வேறொரு மண்ணுக்குள் பதிய வைத்தாலும், பூமியின் வெப்ப அலைகள் கலக்கப்பட்டு, இந்த அணுக்கள் மண்ணுக்குள் பூமிக்குள் ஊடுருவி, வெகுதூரம் ஊடுருவி வரும் நிலைகள் வருகின்றது.
அவ்வாறு வந்தாலும், இன்று வரக்கூடிய நிலநடுக்கங்கள் இவன் அணு உலையாலே, இவன் அணுக்களைக் கண்டுபிடித்து, மண்ணுக்குள்ளே மறைக்க வேண்டுமென்று, இவன் எண்ணுவான்.
ஆனால், இந்த
அணுக்கதிரியக்கங்கள் பூமிக்குள் ஆனவுடன், இந்த இயற்கையின் துடிப்பு கொண்டு, தன் கதிரியக்கச் சக்தியை அதிகமாகக் காட்டும். அங்கே எதிர்நிலையான
நிலை வரப்படும்போது, பூமியில்
நிலநடுக்கம் ஏற்படும், எல்லாமே
போய்விடும். இந்த அளவுக்குத்தான், உலகின் தன்மைகள் இருக்கின்றது.
ஆக, இயற்கையின்
நிலைகளில் ஒவ்வொரு நிமிடமும், மனிதனின்
உணர்வுக்குள் எட்டியதை அசுத்தப்படுத்திக் கொண்டு, மனித உணர்வுக்குள்ளும் பதியச் செய்து, இன்று
மனிதன் என்ற நிலையே கூண்டுடன் அற்றுப்போகும் நிலை வருகின்றது.
ஆனால், இதுபோன்று
வெடித்தாலும், வெடிக்கும் நிலைகள் கொண்டு, புகை மண்டலங்களாகக் கூட்டப்பட்டு, சூரியனுடைய
ஆற்றல்மிக்க சக்திவாய்ந்த கதிரியக்கங்கள் படாதபடி, பூமியில் இருக்கக்கூடிய, நீர் வளங்கள் அனைத்துமே, உறையும் தன்மை பெறும். இங்கே, நாம் இருக்ககூடிய நிலைகள் அனைத்துமே, உறையும் தன்மை வருகின்றது.
இதிலிருந்து வெளிப்படும், இந்தக் கதிரியக்கச் சக்தியின்
தன்மைகள் சூரியனுடைய கதிர் வெப்பங்கள் கலந்தவுடன், இதிலிருந்து ஆவியாக வெளிப்படுத்தி, இதே உணர்வின் தன்மைகள், சூரியனே
மாறுபடும் காலங்கள் வருகின்றது. மனிதனாலே இந்தப் பிரபஞ்சமே, இன்று சூனிய நிலைகளாக ஆகும் காலம் வந்துவிட்டது.
யாம் சொல்வது, உங்களுக்குப் புதிராக இருக்கலாம். ஆனால், விஞ்ஞானிகள் கணக்குப் போட்டு, நாளைக்கு உங்களுக்கு வரப்போகிறது என்று சொல்வார்கள். இன்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள். யாம் சொல்வது (1989 ஆம் வருடம்) உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியலாம்.
நமது குருநாதர், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு அணுவிற்குள்ளும் ஊடுருவி, மனிதனுடைய நிலைகள் எவ்வாறு இருக்கின்றது? அதிலே, நீ
எவ்வாறு செயல்பட வேண்டும்? என்ற
நிலைக்கு, எமக்கு உபதேசித்தார். ஆகையினாலே, இன்று
மனித வாழ்க்கையினுடைய நிலைகளை விடுத்து, இது சரி, இது
தப்பு, என்று வரவேண்டாம்.
இந்த தபோவனத்தில், நாம் அனைவரும் மெய் ஒளியைக் காணவேண்டும். குறைகளைக் காண
வேண்டாம், மெய்யைக் காண்போம்.
மெய்யுணர்வின் தன்மையை நாம் பெறுவோம். இதிலே நாம் அனைவரும் ஓரே குடும்பம், ஓரே நிலைகள்தான்.
நமக்குள், இருளான
நிலைகள் வந்தாலும் உடனடியாக மாற்றிச் சென்று, மகரிஷிகளின் அருளாலே, இந்த இருள்கள் நீங்கவேண்டும், நாம் அனைவரும் ஒளிநிலைகள் பெறவேண்டும் என்ற உணர்ச்சிகளைக்
கூட்டுவதற்கு தான், நமது
குருநாதர் ஆணைப்படி, இதை யாம் செயல்படுத்தினோம்.
நாம் எடுக்கும் எண்ணங்கள் அனைத்தும், ஒன்றாக இருக்க வேண்டும். இந்த உணர்வின் ஒளிகள், நமக்குள் ஒன்றாக இருக்க வேண்டும்.
நாம் இடும் மூச்சலைகள், நாளை, மழை
நீராகக் கொட்டவேண்டும். அப்படிப்
பெய்யும் மழை நீருக்குள், இந்த
விஷத்தன்மைகள் (விஷக் கதிரியக்கங்கள்)
மாயவேண்டும். அந்த
விஷத்தின் தன்மைகளை, நீக்கும்
ஆற்றல்களை, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
தூண்டும் நிலைகள்தான், யாம்
செயல்படுத்தும், இந்த
தபோவனத்தின் தத்துவம்.