ஒவ்வொரு நிமிடமும், நமது குருநாதர்
அருள்வழி கொண்டு, அவரின் ஆற்றலின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள்
ஒளியைப் பெற்று, அருள் ஒளிகளினுடைய
நிலைகளை நீங்கள் பெறுவதற்கு, இந்த சந்தர்ப்பத்தை நிகழ்த்துகின்றோம்.
இதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தி, சாதாராண
வாழ்க்கையில் சொன்னது போல, “என்னத்த” என்ற சோர்வை விடுத்து, உங்கள் நல்ல உணர்வுகள்
அழிந்துவிடாதபடி, “நாம் நிச்சயம் மகரிஷிகளின் அருள் ஒளியை
பெறுவோம் என்றும், இந்த மனித வாழ்க்கையில் சேர்த்த இருளை
நீக்கிவிட்டு, நிச்சயம் அந்த ஒளி நிலை
பெறுவோம்” என்ற ஏக்க
உணர்வுடன் நீங்கள் செயல்படுங்கள்.
அவ்வாறு செயல்படும் பொழுது,
வாழ்க்கையில் எத்தகைய துன்பங்களைச் சந்தித்தாலும், துன்பங்கள்
வரும் நேரங்களில்தான், அந்த மெய் ஒளியின் உணர்வை, நாம் கூட்டும், நல்ல சந்தர்ப்பமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆக, நமக்குள் வரக்கூடிய துன்பத்தை மறந்து, “நாம் மெய்ஞானியின்
அருள் ஒளியைப் பெறுவோம்” அந்த அருள்
ஒளியாலே, நம்
சொல்லும் செயலும், நம் பேச்சும் மூச்சும், உலகத்தை ஒளியின்
சுடராக்கச் செய்யும். ஒருவரை மகிழச் செய்யும் எண்ணங்களாக, நம் பேச்சும் மூச்சும்
இருக்கும்,
அந்த நிலைகளை நாம் பெறுவோம் என்ற நிலைகளில், எத்தகைய
துன்பங்கள், எந்த நேரத்தில்
வந்தாலும், நமது குருநாதர் அருள் ஒளி கொண்டு, நாம் அதைப் பெறுவோம் என்று உறுதி கொண்டு, அந்த உறுதியான
நிலையைப் பெறுவதற்குண்டான சந்தர்ப்பம், எந்த
மகரிஷிகள், அவர்கள் எதை
விளைய வைத்தார்களோ, அந்த உணர்வலைகளை, சிலிகான்களை, உங்களுக்குள் பதியச் செய்திருக்கின்றோம். இனி, இதைக் கூட்டிப் பெருக்குவது, உங்கள் கையில்தான் இருக்கின்றது.
நீங்கள் பெறவேண்டுமென்ற ஆசை எனக்கிருக்கிறது.
அதை யாம் பதிவு செய்கின்றோம். நீங்கள் அனைவரும் அதைப் பெற வேண்டுமென்ற ஆசையில், யாமும் ஒளி நிலை
பெறுகின்றோம்.
என் பேச்சும், மூச்சும், உலகம் நன்மை பெறச் செய்யும். யாம்
எடுத்துக் கொண்டது, என் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பெறவேண்டும்
என்ற எண்ணத்தைச் செலுத்தி, அதை யாம் பரப்புகின்றோம்.
இதையே நீங்களும் எடுத்து, உங்கள் உடலுக்குள்
இதன் நிலைகளைப் பெருக்கும்போது, உங்களுக்குள்ளும்
உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய நிலைகளை அது நன்மை பெறச்செய்யும்.
2. பிறருடைய உணர்ச்சிகள் நம்மை உணர்ச்சி வசப்படச் செய்யாமல், அருள்ஞானத்தால் பக்குவப்படுத்தும் நிலை
வியாபாரங்களில் கொடுத்தது வரவில்லை என்றால், “கொடுத்தேன், வரவில்லை” என்ற இந்த உணர்வை
எடுத்து, இந்த
உணர்வோடு சேர்த்து, இன்னொருவரைச் சேர்த்தால், கடன் வாங்குவார்கள் பின் போய்விடுவார்கள்.
கடன் கொடுத்தோம், இன்னும் வரவில்லை என்று எண்ணும்போது, அதைச் சமாளிக்க, இருந்த பணத்தைக் கொண்டு சரக்கை வாங்கச் சென்றால், மட்டமான சரக்கை வாங்கி வந்துவிடுவோம்.
அந்த மட்டமான சரக்கு, எப்படி விற்கும்? என் வியாபாரமே
நின்று போய்விட்டது என்போம். இது சந்தர்ப்பங்கள். உணர்வுக்கொப்ப எண்ணங்களை மாற்றி, நல்லவை என்றாலும், மறந்துவிட்டுச் செய்து விடுவோம்.
எப்படியும் லாபத்தைப் பெறுவோம், என்று செய்தாலும், முதலில் லாபம்
வரும். பின், அது தடை
என்ற உணர்வுகளை, ஊட்டிவிடுகின்றது. நம் எண்ணம், நமக்கே எதிரியாக
உருப்பெற்று, நம்முடைய
நினைவும் நல்லதைப் பெறாது, நமக்குள்ளே எதிரியை உருவாக்கி விடுகின்றது.
நல்வாழ்க்கையைப் பயன்படுத்தும்
நிலையில்லை.
இதைக் கேட்டுணர்ந்தோர், உங்களுக்குள் இந்த அறிவின் தன்மை வளர்கின்றது. தீமைகள்
வரும் பொழுது அதை மாற்ற, உங்கள் நினைவின் ஆற்றலை, துருவ நட்சத்திரத்தினுள்
செலுத்தி, சிறிது நேரம்
அதிகமாகிவிட்டால், “இவனுக்கு
வீட்டுக் கவலை இருக்கின்றதா? எவனோ
சாமியார் சொன்னான் என்று எண்ணிக் கொண்டே உட்கார்ந்திருக்கிறான்” என்பார்கள். இது மாதிரி, புலம்ப ஆரம்பித்து
விடுவார்கள்.
பெண்கள், எப்படியோ இவர் பாடுபடுகின்றார். ஆனால்
உணர்வுகள் அவரை அறியாமல் இயக்குகின்றது. நாம் எப்படியாவது, மன வலிமை பெறச்
செய்யவேண்டும் என்று தியானமிருந்தால், கொளுந்தியாலோ, நாத்தனாரோ, “யாராவாது சும்மா
உட்கார்ந்து கொண்டிருந்தால், கஷ்டத்தை
மாற்றிவிட முடியுமா?” என்ற உணர்வுகளை ஊட்டுவார்கள்.
அவர் குடும்பத்தின் நிலை அறிந்து, எப்படியும்
மாற்றவேண்டும் என்று வீட்டிற்குச் சென்றாலும், சுழன்ற இருளுக்குள் சென்று, அடர்த்தியின் நிலை
சென்றடைந்த பின், ஒளியின் தன்மை வெளிப்படாதபடி, மங்கிவிடுகின்றது.
இப்படி, நல்வழிப்படுத்த வேண்டுமென்றாலும் உலக இயல்புகள், விஷத்தன்மை கொண்ட
நிலைகளில் மாறி வரும்போது, பக்தி கொண்ட உள்ளங்கள் அதைப் பற்றிகொண்டு, அந்த பக்தி என்ற
ஒன்றையே, நம்பும்
நிலை இருகின்றது.
ஆண்டவன்தான், அந்த தெய்வம்தான் காக்கும் என்ற நிலைகளில்
இருக்கின்றனர். ஆனால், அந்த நிலை இருந்தாலும், “நான்
இப்படியெல்லாம் உன்னையே வணங்கினேனே, எனக்குத் துன்பம் வருகின்றதே” என்ற இதுவும் வருகின்றது. நாம், எதன் மேல் பக்தி
கொள்கின்றோம்?
யாராவது நல்லவர்களைப் பார்த்தால், சந்தோஷம் அடைவதற்குப்
பதிலாக, பெருமூச்சு விடுவார்கள். நாம் இத்தனையும் செய்ய, ஆண்டவன் நமக்குக் கொடுக்க மாட்டேன் என்கின்றான்
என்பார்கள். இதுமாதிரி சொல்லி, ஒருவரை குற்றவாளியாக்குவோம்.
வசதி இருப்போரைப் பார்த்தோமென்றால், அவர்களைப்
பார்க்கும் பொழுதெல்லாம், இவர்கள் எதை நினைக்கின்றார்களோ, அந்த உணர்வின்
தன்மையாகி, அவர்களுக்குத் துன்பம் செய்கின்றான், இவர்களுக்குத் துன்பம் செய்கின்றான், ஏமாற்றிக் கொண்டே
உள்ளான், இந்த
தெய்வம் இவனுக்குத் தான்,
கூரையைப் பிய்த்துக் கொட்டிக் கொண்டே இருக்கின்றது,
என்பார்கள்.
இவைகளெல்லாம், சந்தர்ப்பம். இது எதை உருவாக்குகின்றது? இப்படி மாற்றும்
உணர்வுகள் உருப்பெற்றுவிடுகின்றது. ஆனால், நாம் நன்மை செய்யவேண்டுமென்றால், நம்முடைய நல்ல
எண்ணங்கள் வலு இழந்துவிடுகின்றது.
ஆகையினால், நாம் இதனை உருவாக்க, யாம் வெளியிட்ட நூலினை, சிறிது நேரம்
படிக்க வேண்டும். இவர்கள் நினைப்பதை மாற்ற வேண்டுமென்றால், சாமி என்ன சொல்லி
இருக்கின்றார்கள், நம்மை எப்படியெல்லாம் தாக்குகின்றது? என்று சிறிது
நேரம் சத்தமாக படித்தால், இவர்களின் மாறான உணர்வும் இணைக்கப்படும் பொழுது, அவர்களுக்கு
நினைவு வரும்.
என்னடா படிக்கிறாய்? என்பார்கள்.
படிக்கும் பொழுது, முதலில் படிக்காதே என்று சொல்லுவார்கள்.
விடாமல் படிக்கும் பொழுது, நல்ல உதாரணங்களைச் சொல்லும் பொழுது, உற்றுக் கேட்பார்கள். சிறிது சிறிதாக, நம் மேல்
இருக்கும் வெறுப்புகள் மாறும். நல்லணவைகளை அவருக்குள் புகுத்தி, அந்த நிலையை
மாற்றமுடியும்.
சில பேர், வைராக்கியமாக, சாமி சொன்னதை எடுத்துக் கொள்வார்கள். “என்னை விடமாட்டேன் என்கிறார்களே” என்று திருப்பிப்
படித்தால், என்னால் புத்தகமும் படிக்கவில்லை. நாம் எதுவும்
செய்ய முடியவில்லை, என்ற உணர்வுகள் கலந்து, நமக்குள்
மனச்சோர்வும், மனச்சஞ்சலமும், வந்துவிடுகின்றது.
நாம் நல்லவைகளுக்குத் தானே போகின்றோம், இப்படிச்
செய்கின்றார்களே, என்ற உணர்வுகள் விஷத்தின்
உணர்வுகளை, நமக்குள்
மாற்றப்படும் பொழுது, நம்முடைய செயலாக்கங்களும், செயலற்றதாக
மாறிவிடுகின்றது.
இப்படி வாழும் நாம், ஒவ்வொரு நொடியிலும், நமக்குள் அருள் ஞானத்தைப்
பெறவேண்டும். அவர்கள் செயல்களில், உண்மையை உணரும்
பருவம் வரவேண்டும், என்ற ஏக்கத்தைச் சிறிது நேரம் எடுத்துவிட்டு, அந்த உணர்ச்சியை கண்களால் பார்த்துவிட்டு, உணர்வின் அலைகளைப் பரப்பவேண்டும்.
அப்படிச் செய்யும் பொழுது, அவர்களும் அதைக் கேட்க நேருகின்றது. இப்படிச் சில நாள், சிறிது நேரம்
மட்டும் படிக்க வேண்டும்.
அதையே படித்துக் கொண்டிருந்தால், அவர் சங்கடமாக
இருக்கும் பொழுது, அதைச் செய்தால், “ஏண்டா கத்திக் கொண்டிருக்கிறாய்? இருக்கிற துன்பத்தில்”, என்ற நிலைகளில் இதுவும் வந்துவிடும்.
அமைதி கொண்டு இருக்கும் நேரத்தில், இதனைச் சிறிது வெளிப்படுத்தி, உற்று நோக்கும்
சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும்.
நெல் பதரினை நீக்க, “சொலவுகளை” எடுத்துத் தூவுவார்கள். காற்று
இருக்கும் சந்தர்ப்பத்தில் தூவினால், அந்த பதர் நீங்கும். காற்று இல்லாத
சந்தர்ப்பத்தில் தூவினால், போகவே போகாது, திரும்பத் திரும்ப தூவ வேண்டும்.
அப்படி, திரும்பத் திரும்பச் செய்யும் பொழுது, சுத்தப்படுத்த
முடியாதபடி சோர்வடைந்துவிடுவோம். பதர் அதிகமாகி, பிரியாத நிலைகளில் அடைப்பட்டுவிடும். இவைகளெல்லாம், சந்தர்ப்பத்தால், நம்மை அறியாமல்
தவறுகள் கூடுகின்றது.
இதைப் போன்று, குடும்பத்தின் நிலைகளில், தவறுகளை நீக்கும்
நிலைகளைச் செயல்படுத்த வேண்டும்.
ஆகவேதான், இவைகளை எல்லாம் உங்களுக்கு
நினைவுபடுத்துகின்றேன்.
சந்தர்ப்பங்கள், எப்படி நாம் நல்லது பெறாதபடி தடைபடுத்துகின்றது? என்று, அந்த சுற்றுப்புறச் சூழ்நிலையை உணரச்
செய்கின்றது.
அதற்குத்தக்க, சந்தர்ப்பத்தில் படும்பொழுது செயல்படுத்துகின்றது. ஆக, மற்றவர்கள்
உடல்களில் உள்ள, பதர்களை, நீக்கும் சக்தியாக, நம் சொல்
ஆகின்றது.
மதில் என்ற நிலைகள் மறைத்தால், அப்பகுதியில் பதரை
நீக்கினால் என்னவாகும்? அந்தக் காற்று புகாது. அதே மாதிரி, வாகனங்கள்
தொடர்ந்து செல்கின்றது. கரை ஓரத்தில் பதரை நீக்குகின்றீர்கள். ஆனால், அங்கே வரும்
காற்றினைத் தடைப்படுத்தினால், பதர் நீங்காது.
பிறருடைய உணர்வுகள் பல வகையிலும், உணர்ச்சிகளைத்
தூண்டி, வெறுப்பென்ற
நிலைகள் வருகின்றது. அந்த வெறுப்பென்ற உணர்வுகளை மாற்ற, உணர்வின் தன்மை
புத்தகத்தைப் படித்தால், நல்ல சொற்கள்
நமக்குள் ஆகாதபடி, அவர்கள் உணர்ச்சிகள், நமக்குத் திரை
மறைவாக்கிவிடுன்றது.
ஆகவே, திரை மறைவுபடுத்தும் உணர்வினை நீக்க, அருள் ஒளி என்ற
உணர்வை, நமக்குள்
சேர்த்துக் கொண்டால், நமக்குள் வரும், தீமையின் பதர்களை நீக்க இது உதவும்.
ஆக, தியானவழியில் உள்ள அனைவரும், உங்கள்
வாழ்க்கையில் தெரிந்து, தெளிந்து, தெளிவாக வாழச் செய்யும் அந்த அருள்ஞானத்தைப் பெற்று, அருள் சக்தி
பெற்று, என்றென்றும், அந்த துருவ நட்சத்திரத்தின்
ஈர்ப்பு வட்டதில், மகிழ்ந்து வாழ்ந்திட எமது அருளாசிகள்.
3. குரு காட்டிய வழியில் விஷத்தை அடக்கி, அருளாற்றலாக மாற்றும் பக்குவம்
நாம், இன்று எவ்வாறு கோயிலுக்கோ, ஞானியரையோ, தேடிச்
செல்கின்றோமோ, அதைப் போல, ஞானியர் ஒவ்வொருவரும் சாதாராண மக்களைத் தேடி
வருவதனுடைய உட்போருளே, ஒரு மனிதன், எவ்வளவு துன்பத்தில் ஆழ்ந்திருக்கின்றானோ, அந்தத் துன்பத்தை நீக்கி, அந்தத் துன்பத்தை உருவாக்கிய, அந்தக் காரமான தீய உணர்வின்
சக்தியை, விலக்கச் செய்து, ஆற்றல்மிக்க, உள் உணர்விலே தோன்றிய, நல்ல உணர்வின், அணுவின் ஆற்றலை உருவாக்கச் செய்வதற்குத்தான்.
உதாரணமாக, ஒரு கருணைக் கிழங்கு, விஷத்தின் தன்மை
கொண்டிருந்தாலும் அதிலுள்ள விஷத்தை நீக்கிய பின், ஆற்றல் மிக்க
நிலைகள் கொண்டு, நம் சரீரத்திற்குள் சத்தாக ஆகின்றது.
அதைப் போன்று, அரிசி உருவாவதற்கு, அந்த உமியே பிரதானமாகின்றது. இவ்வாறு, கடினமான உணர்வின் ஆற்றல்களாக இருந்தாலும், அதே ஆற்றல், உடலுக்குள்
சென்றுவிட்டால்,
தீயதை விளைவிக்கும்.
நாம் நெல்லின் உமியை நீக்கியபின், அரிசி எவ்வாறு
இருக்கின்றதோ, அதைப் போன்று, கடுமையான அந்த
சுவாசத்தை நாம் சுவாசித்தாலும், நாம் சுவாசித்த அந்த உணர்வின் அலைகள், நம் உடலுக்குள் கலந்து விடுகின்றது.
நெல்லின் உமியை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கக்
கூடிய அரிசியை நாம் எவ்வாறு பெற்றோமோ, அதைப் போன்று, அந்த மகரிஷிகள் விஷத்தின்
ஆற்றலுக்குள் இருக்கக்கூடிய, இயக்கும், அந்த உணர்வின் ஆற்றலை நாம் சுவாசிப்பதற்குதான், அவர்கள் பெற்று, பெற்ற அந்த
உண்மையினுடைய நிலைகளை, மனிதன் உடலிலே செலுத்தி, அந்தத் துன்புறுத்தும் உணர்வலைகளை
நீக்கினார்கள்.
ஏனென்றால், அந்த உடலுக்குள்தான், அந்த துன்புறுத்தும் உணர்வான அணுக்கள் விளைகின்றது. அந்த விளைந்த
அணுவின் தன்மையை, அதை நீக்குவதற்கு அந்த மெய்ஞானியின் அருள்
சக்தியின் தன்மையை, யார் துன்புற்றுக் கொண்டிருக்கின்றனரோ அவர் உடலிலே அந்த
சுவாசத்தைப் பாய்ச்சி, உணரச் செய்தார்கள்.
அங்கே இருக்கக் கூடிய துன்பத்தின் உணர்வலைகளை, நெல்லின் உமியை
நீக்கி, அரிசியை
எடுப்பது போன்று, மனித உடலுக்குள், துன்புறுத்திக் கொண்டிருக்கும் அந்த உமியை
நீக்கியது போன்று, அந்தத் துன்பத்தை நீக்கி, அந்த நல்ல வித்தான சத்தை, அங்கே
உருவாக்கினார்கள், மகரிஷிகள்.
உதாரணமாக, தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றியவுடன், அதிலே
கலந்திருக்கக் கூடிய பித்தளை, மற்ற மட்டமான சரக்குகள் எப்படி ஆவியாக
மாறுகின்றதோ, அதைப் போல
மகரிஷிகள் அவர்கள் எடுத்துக் கொண்ட ஜெபத்தின் தன்மை கொண்டு, ஒரு மனிதன்
துன்புற்றுக் கொண்டிருக்கும் போது, அவர்களுடைய சுவாசத்திலே இதைச் செலுத்தி, அங்கே இன்புறச் செய்கின்றார்கள்.
அவ்வாறு அவர்களை இன்புறச் செய்து, அந்த மகிழ்ச்சியான
எண்ணங்களை உருவாக்கச்
செய்து, அந்த
உடலிலிருந்து வெளிப்படுத்தி, அதிலிருந்து வெளிப்படும் உண்மையான உணர்வலைகளை
இவர்கள் சுவாசித்து, தன் உடலிலே ஆற்றல் மிக்க சக்திகளாகப் பெற்றார்கள்.
ஆகவே, அந்த மகரிஷிகளைப் போன்றே, நாமும் விஷத்தை
அடக்கி, அதை ஆற்றல்மிக்க சக்தியாக மாற்றி, உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி,
அழியா ஒளிச் சரீரம் பெறுவோம். எமது அருளாசிகள்.
4. மனதைச் சமப்படுத்தும் பக்குவநிலை
ஆறறிவு கொண்ட மனிதரான நாம், பலவிதமான உடல்
உறுப்புகளைக் கொண்ட, உயிரினங்களை உருவாக்குகின்றோம். விஞ்ஞான அறிவால், இதை நாம் அறிந்துகொண்டோம்.
இப்படி அறிந்து கொண்ட உணர்விலிருந்து, நாம் என்ன செய்யவேண்டும்? நமக்குள் எப்படிச் சமைத்தல் வேண்டும்?
ஒருவர் நமக்குத் தீமை செய்தார், என்று அறிகின்றோம்.
ஆனால், அந்தத் தீமையின் உணர்வு, நமக்குள் வளராது தடைப்படுத்துதல் வேண்டும்.
அவ்வாறு தடைப்படுத்த வேண்டுமென்றால், “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி, “துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும்” என்று எண்ணி ஏங்கி, தீய உணர்வினை
நமக்குள் வராது தடைப்படுத்தி, அருள் உணர்வினைச் சேர்க்கப்படும் பொழுது, தீய உணர்வுகளின் வீரியத்தைக் குறைக்கின்றது.
உதாரணமாக, மிளகாய் தனித்துக் காரமாகத்தான் இருக்கும். ஆனால், மற்ற பொருள்களுடன்
இணைக்கப்படும் பொழுது, சுவையாக மாறுகின்றது.
ஒருவர் “தவறு செய்கிறார்” என்று நாம் அறியும் பொழுது, நாம் அருள்
ஒளியின் உணர்வினை நுகர்ந்து, “அவருடைய அறியாமை நீங்கவேண்டும், அருள்ஞானம் அவரில்
பெறவேண்டும், அருள்சக்தி
அவர் பெறவேண்டும், தெளிந்த மனம் அவர் பெறவேண்டும்” என்று எண்ண
வேண்டும்.
இதனால், அவருடைய உணர்வுகள் நமக்குள் வந்தாலும், அவரை இயக்கும் தீய
உணர்வுகள், நமக்குள்
விளையாது.
அவர் தவறு செய்கிறார் என்று நாம் அறிந்தாலும், அவர் வேகத்துடிப்பாக
இருக்கும் பொழுது, நன்மை தரும் சொல்களை நாம் சொன்னால், அவர் கேட்கமாட்டார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, அதாவது சாந்தமாக
இருக்கப்படும் பொழுது, “நீங்கள் இப்படிச் செய்தால், உங்களுக்கு நன்மை” என்று நாம்
சொல்லும் பொழுது, அவர் ஏற்றுக் கொள்ளும் பருவம் வருகின்றது. அப்போது, நாம் சொல்லும்
சொல்லின் உணர்வுகள், அவரிடத்தில்
உருவாகும் தன்மை வருகின்றது.
எண்ணெய் நன்றாக கொதிக்கும் முன், வடையைத் தட்டி, எண்ணெயில் போட்டால் என்னவாகும்? வடை சீராக வேகாது. எண்ணெயை அதிகமாக விழுங்கும்.
பின், அது சூடேறச் சூடேற, வடையில் சுவையும் மாறிவிடும். ஆனால், எண்ணெய் அதிகமாகக் கொதித்து, அதில் வடையைத் தட்டிப் போட்டால், வடையின் மேல்பாகம்
கருகிவிடும். உள் பாகம் மாவாக இருக்கும்.
சமப்படுத்தும், பக்குவப்படுத்தும் உணர்வின் தன்மை கொண்டுதான், பதார்த்தங்களை
உருவாக்கவேண்டும். இதைப் போன்றுதான், நமது வாழ்க்கையில், குழந்தை ஒன்று
தவறு செய்யும் பொழுது, தருணம் பார்த்துத்தான், நல் உணர்வின் தன்மையைக் குழந்தைக்குச் சொல்ல வேண்டும்.
ஏற்றுக் கொள்ளும் பருவம் வரும் பொழுதுதான், நல் உணர்வுகளை
ஊட்டவேண்டும். ஏற்றுக் கொள்ளும் பருவம் இல்லை என்றால், சொல்லிய நல் உணர்வுகள் அங்கே விளையாது. நல்
உணர்வின் தன்மை விளையும் பருவம், அங்கே இழக்கப்படுகின்றது.
ஆனால், தவறைச் சுட்டிக் காட்டி, நல் உணர்வை ஊட்டத் தவறினால், வெறுப்பின் உணர்வே வரும். வெறுப்பின் நிலை வளர்ந்துவிட்டால், ஏற்றுக் கொள்ளும் பண்பே வராது.
ஆகவே, நாம் இதுபோன்ற நிலைகளை அறிந்து, எதனை, எவ்வாறு, எதன் வழியில், நாம் உருவாக்கவேண்டும்? என்ற நிலையில் “நாம் பக்குவப்படுத்தும் நிலையில்” சமப்படுத்துதல்
வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் மனதைச் சமப்படுத்தினால், பக்குவப்படுத்தும்
பண்பும் வருகின்றது.
அருள் ஞானத்தின் உணர்வுகள், நமக்குள் விளைந்தால், நம் வாழ்க்கையில்
வரும் விஷத் தன்மைகளை, கார உணர்ச்சிகளை, அடக்கும் தன்மை வருகின்றது.
இப்படி அடக்கும் தன்மை வந்தால், சிந்திக்கும்
தன்மை வருகின்றது. சிந்திக்கும் தன்மை வந்தால், நம் செயல் சீராக
அமைய, இது உதவும்.
நாம், நமது வாழ்க்கையில், துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளியின் உணர்வைப் உருவாக்கி, பேரின்பப் பெருவாழ்க்கை என்ற நிலையை, நமக்குள்
உருவாக்குதல் வேண்டும்.
உதாரணமாக, ஒருவர் சாக்கடையில் விழுந்துவிட்டால், அவரை
அங்கேயிருந்து மீட்க நினைக்கின்றோம். அவரைக் கை கொடுத்துத் தூக்குகின்றோம். அவரும்
நம்மைக் கட்டித் தாவி மேலே
வருகின்றார்.
இதனால், நம் மீதும் அசுத்தம் ஆகிவிடுகின்றது. உடனே, அசுத்தத்தை நீரால்
நீக்குகின்றோம். இது புறத்தால் நிகழ்வது. ஆனால், பிறிதொருவரின் வேதனையின் உணர்வை நாம் நுகரும்
பொழுது, நம்
அகத்திற்குள் வந்த, அந்த
அசுத்தத்தை நீக்க வேண்டுமல்லவா?
யாம் அருள் வாக்கினை வழங்குகின்றோம். எம்மை
நீங்கள் பார்க்கின்றீர்கள். யாம் பேசும் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்தபின், அது உங்களுடைய
உயிரினில்பட்டு, இதனின் உணர்வை அறிய நேருகின்றது. இதை உங்களால் பார்க்க முடிகின்றதா? இல்லை, ஆனால், உணர முடிகின்றது.
நீங்கள் எம்மைப் பார்க்கின்றீர்கள், நீங்கள் “எதைப்
பெறவேண்டும்” என்று எண்ணி
ஏங்குகின்றீர்களோ, அந்த உயர்ந்த
எண்ணங்களை எண்ணும்பொழுது, அதனின் உணர்வின் தன்மை உங்களுக்குள்
இயக்குகின்றது.
அப்படி இயக்கப்படும்பொழுது, உங்களுக்குள் அறிய
முடியாத சில சலனங்கள் ஏற்பட்டு, அது எப்படி நம்மை இயக்குகிறதென்று, அறியும் பருவம் வருகின்றது.
அறியும் பருவம் வந்தாலும், நீங்கள் அதை அடக்க
வேண்டுமென்ற உணர்ச்சிகளைத்
தூண்டுகின்றது. அப்போது, “தம்முள் அடக்கவேண்டும், தீமைகள் தம்முள்
வராது தடுக்கவேண்டும்”,
என்ற உணர்வுகள் உங்களிடத்தில் வருகின்றது.
அருள் ஞானியின் அருள் உணர்வுகள், வலிமை கொண்டது. அதே சமயத்தில், வேதனையின் உணர்வுகளும் வலிமை கொண்டது.
ஆனால், அருள் ஞானியின் உணர்வுகள், சிந்தனையைத் தூண்டும். வேதனை உணர்வுகள் சிந்தனையை, இழக்கச் செய்யும்.
“நல்ல மனிதராக
இருந்தார், இன்று
அவருடைய நிலை, அவருடைய குடும்பத்தினர்களே அவரை எதிர்க்கும் நிலை
ஆகிவிட்டதே” என்று
உங்களிடத்தில் சிந்தனையின் தன்மை மாற்றப்பட்டு, வேதனை பற்றிய சிந்தனையை, உங்களிடத்தில் வளர்க்கச்
செய்கின்றது. ஆகவே, அவரிடத்தில் இருந்த, அந்த வேதனையின் வலு, உங்களிடத்தில் வளர்கின்றது.
தீமைகளின் உணர்வை, அடக்கும் ஆற்றல்
கொண்டது துருவ நட்சத்திரம். அதன் உணர்வை எடுத்து, உங்களுக்கு உபதேசிக்கும் பொழுது, தீமைகளை அடக்கும்
ஆற்றல் உங்களிடத்தில் வலிமை பெறுகின்றது.
தீமை என்று ஒன்றை. அறியும் பொழுது, தீமையிலிருந்து
விடுபடும் நிலையை நாம் பெறவேண்டும்.
தீமையிலிருந்து விடுவிக்கும் உணர்வுகள் எது? விடுபட்டவர் யார்? துருவ
நட்சத்திரம். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை, நமக்குள் கவரும் பொழுது, அது நம்முள் உள்ள
தீமைகளை ஒடுக்குகின்றது, தீமைகள் வராது காக்கின்றது.
புழுவிலிருந்து மனிதராகும் வரையிலும், மனிதராக
ஆனபின்னும், ஒவ்வொரு
சரீரத்திலும், தீமைகளை நீக்கிடும்
ஆற்றல் பெற்றது, கண்கள். கண்களின் உணர்வின் தன்மை கொண்டு, தீமைகளை அகற்றிய ஆற்றல்
பெற்றது, துருவ நட்சத்திரம்.
துருவ நட்சத்திரத்தின் அருளுணர்வின் தன்மையை, நாம் நுகர்ந்தால், ஞானிகள் அறிந்த
உணர்வின் அறிவு,
நமக்குள் விளைகின்றது, பகைமை உணர்வுகளை நீக்குகின்றது. தீமைகள் வராது காக்கின்றது.
ஆகவே, நாம் எதைச் செய்யவேண்டும்? ஒருவர் வேதனைப்படுகின்றார், கஷ்டப்படுகின்றார்
என்றால், நாம்
வேதனையை நீக்கிடும் நிலையை பெறவேண்டும்.
உதாரணமாக, ஒருவர் சாக்கடையில் விழுந்துவிட்டால், அவருக்குக் கை கொடுத்து, அரவணைத்து, சாக்கடையிலிருந்து மீட்கிறோம்.
பின், அவரைக் குளிக்கச் செய்கின்றோம். நாமும் குளித்துக் கொள்கின்றோம்.
இதைப் போன்று, வேதனையின் உணர்வினை நாம் நுகர்ந்தால், முதலில் நம்முள் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பின், மகரிஷிகளின்
அருள் உணர்வுகளை,
அவர் பெறவேண்டும், வேதனைகள் அவரிடத்திலிருந்து நீங்கவேண்டும், என்று எண்ணுதல் வேண்டும்.
இதனின் உணர்வின் தன்மையினை நமக்குள் வளர்த்துக்
கொண்டால், அருள் உணர்வின் ஆற்றல், நம்மிடையே பெருகும் நிலை வருகின்றது.
இதனைப் பின்பற்றி வரும் அனைத்து அன்பர்களும், மகரிஷிகளின் அருள்
சக்தி பெற்று, சர்வ
தீமைகளில் இருந்தும் விடுபட்டு, மன பலம் பெற்று, உடல் நலம் பெற்று, செல்வம், செல்வாக்கு பெற்று, வாழ்க்கையில்
எல்லா நலமும் வளமும் பெற்றிட, எமது அருளாசிகள்.
5. தியானம் செய்து கொண்டே இருக்கும் நாம், எதற்கு வலு கொடுக்கின்றோம்?
எதற்கு வலு கொடுக்க வேண்டும்?
நான் தியானம் பண்ணிக் கொண்டே இருக்கின்றேன், என் வீட்டுக்காரர் இப்படித் திட்டுகின்றார். நானும் தியானம் பண்ணிக்கொண்டே இருக்கின்றேன், கொடுத்த கடன்காரன் கொடுக்கவே மாட்டேன் என்கிறான் என்று விட்டுவிட்டால் என்ன்வாகும்? இது சவாரி பண்ணி விடும்.
தியானம் பண்ணிக்கிட்டேயிருக்கேன், நோய் வந்துவிட்டது என்று நினைத்தால், இதை விட்டுவிட்டு, அதை எடுத்துக் கொள்கிறீர்கள். ஆக, கெட்டதுக்குத்தான்
நீங்கள் சக்தி வளர்க்கின்றீர்கள். ஆக, எதுக்கு
ஜீவன் ஊட்டுக்கின்றீர்கள்? நம் எண்ணங்கள் எதில் வருகின்றது?
நம்முள் உள்ள அணுக்கள், பசியைத்
தூண்டும் பொழுது, நல்லதை
எடுக்க விடாமல் தடுக்கின்றது. அந்த மாதிரி தடுக்கின்ற நேரத்தில், நாம்
என்ன செய்ய வேண்டும்?
ஆன்மாவைச் சுத்தப்படுத்திப் பழகவேண்டும். “ஈஸ்வரா” என்று
உயிரை எண்ணி, அந்த
துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும்
பெறனும், என் உடல் முழுவதும் படரனும், என்
ஜீவான்மா பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை நல்ல உரமாகக் கொடுத்து, அந்த
ஞானத்தை நாம் பெருக்க வேண்டும். தீமையான
உணர்வு, நமக்குள் போகாமல் தடுக்க முடியும். இப்படிச்
சுத்தப்படுத்த வேண்டும்.
6. குரு காட்டும்
பரிபக்குவ நிலை
நாம் எண்ணக்கூடிய உணர்வை, உயிர் நம்முள்
உருவாக்குகின்றது. ரேடியோவிற்கும், T.V. க்கும் எப்படி ஆண்டெனா இருக்கின்றதோ, இதைப் போன்று, நமது உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்திற்கும், நமது கண் கருவிழிதான் பதிவாக்கி, ஆண்டெனாவாக வேலை
செய்கின்றது. நாம், நமது நினைவைச் செலுத்தும் பொழுது, காற்றிலிருப்பதை இழுத்துக் கொடுப்பது, நமது கண்கள்தான்.
நமது கண்வழிதான் வருகின்றது. இப்படி வந்த
உணர்வுகள், நமது உயிரில் மோதும்
பொழுது, எண்ணம்
வருகின்றது. இதன் உணர்ச்சியின் தன்மை, உடலை இயக்குகின்றது.
ஒருவரைப் பற்றிக் கோபமான நிலைகளில், நம்முள் பதிவாக்கி
விட்டோமென்றால், பிறகு அவரைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம், நமக்குள் ஆத்திரம் வரும்.
இது போன்று, வெறுப்புடன் அடுப்பில் பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தால்
போதும், நினைவிழந்து, அடுப்பில் வைத்த
பொருள் பொங்கி வரும் பொழுது, உடனே அந்தப் பாத்திரத்தை, வெறும் கையினால்
தூக்குவார்கள். கையும் புண்ணாகிவிடும். இதை நீங்கள், உங்களுடைய
வாழ்க்கையில் பார்க்கலாம்.
ஏனென்றால், வெறுப்பின் உனர்வுகள் நம்மை இயக்கும் பொழுது, நாம் செய்யும்
பணியில் தவறு நேர்கின்றது. இது மாதிரி இயக்காமல் தடுக்க வேண்டுமல்லவா? தீமைகளை மாற்றி
அமைக்ககூடிய சக்தி, நமது ஆறாவது அறிவிற்கு உண்டு.
உதாரணமாக, டாக்டருக்குப் படிக்கப் போகின்றீர்கள் என்றால், “நன்றாகப் படிக்க வேண்டும்” என்ற அக்கறை
உள்ளவர்கள், முன்னுக்கு
வந்து விடுகின்றார்கள். “ஏதோ கடமைக்குப் படிக்கப் போகிறேன்” என்று இருப்பவர்களுக்கு, படிப்பு
ஏறுவதில்லை. அவரால், சரியாக இயங்கவும் முடிவதில்லை.
ஒரு செயலை நல்ல விதத்தில் செய்ய வேண்டும், என்று வலுவான
உணர்வை எடுத்து முயற்சிக்கின்ற பொழுது, அது உங்களுக்கு நல்ல நேரம், அதன்படி செயலும் நடந்துவிடும்.
யாம், உங்களுடைய உயிரைக் கடவுளாக மதிக்கின்றோம். உங்களுடைய உடலைக் கோவிலாக மதிக்கின்றோம். இயற்கையின் இயக்கத்தின் உணமைகளை, குருநாதரின் அருள்
துனை கொண்டு, யாம்
அறிந்து கொண்டோம்.
உங்களை அறியாமல் இயக்கக்கூடிய நிலைகளில்
இருந்து, நீங்கள் மீளவேண்டும் என்பதற்குத்தான், இவைகளை யாம் உங்களிடத்தில் பதிவு செய்கின்றோம்.
சில பேர், “நான் நினைத்தது நடக்கவில்லை” என்றிருப்பார்கள்.
ஆக, அவர்கள் தன்
ஆசையின் நிலையிலேயே இருப்பார்கள். ஆனால், யாம், “இதையெண்ணி, இப்படி ஏங்கியிருங்கள்” என்று ஒன்றைச் சொல்வோம். ஆனால், கேட்பவர்களோ
சொன்னதை விட்டுவிடுவார்கள்.
உதாரணமாக, தோசையை சுடும் பொழுது, தோசை மேல்தான்
ஆசையாக இருப்போம். ஆனால், நெருப்பு எப்படி எரிந்து கொண்டிருக்கின்றது
என்பதைக் கவனிப்பதில்லை.
நெருப்பை “திகு திகு” என்று எரித்துவிட்டு, தோசைச் சட்டியில் மாவை ஊற்றினால், எப்படி இருக்கும்? தோசைச் சட்டியில், எந்த பக்கம் அனல்
அதிகமாக இருக்கின்றதோ, அந்தப் பக்கம் தோசை ஒட்டிக் கொள்ளும். பிறகு
தோசையை எடுத்தால், “வரமாட்டேன் என்கிறது” என்று இருப்பார்கள்.
ஞானகுரு, தோசையை இப்படிச் சுடச் சொன்னார். ஆனால், தோசை, சட்டியை விட்டு
வரமாட்டேன் என்கிறது, என்று சொன்னால் எப்படி?
நாம் அடுப்பில் நெருப்பு வைத்திருக்கும்
பக்குவத்தில்தான்,
இதெல்லாம் இருக்கின்றது.
இதைப் போன்றுதான், நமது உயிர் ஒரு நெருப்பு. அதில், நாம் எதனுடைய பக்குவத்தைச் செலுத்துகின்றோமோ, நிச்சயம் அது
செயல்படும்.
நீங்கள் வேறு யாரிடமும், யோசனை கேட்க வேண்டியதில்லை.
ஆனால், அருள்
உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொள்ள வேண்டும். உங்களிடம், அதைத்தான்
பதிவாக்குகின்றோம்.
அடுப்பில் நெருப்பு அதிகமாக இருக்கும் பொழுது, பக்குவம்
தெரிந்தவர்கள் என்ன செய்வார்கள்? முதலில் தோசைச் சட்டியில் தண்ணீரை ஊற்றி, சூட்டைத் தணிக்கின்றார்கள்.
எரியும் விறகை வெளியில் எடுத்து, நெருப்பின் வேகத்தைக் குறைக்கின்றார்கள். இப்படி நெருப்பையும், தோசைச் சட்டியின் சூட்டையும் சமப்படுத்தியபின், மாவை தோசைச் சட்டியில் ஊற்றினால், தோசை மிகவும் அருமையாக வருகின்றது.
ஆனால், நெருப்பையும், தோசைச் சட்டியின் சூடையும் சமப்படுத்தாதபடி, “சனியன், தோசை வரமாட்டேன்
என்கிறதே,” என்று
சுரண்டு சுரண்டு என்று சுரண்டிவிட்டு, மறுபடியும் எண்ணையைப் போட்டார்கள் என்றால், அதுவும் சூடாகின்றது.
ஆக, பக்குவமில்லை என்றால், நாம் தோசையைக் கூடச் சுடமுடியாது.
இது போன்றுதான், நமது வாழ்க்கையிலும் பக்குவம் தேவை.
பக்குவப்படுத்துவதற்கு ஞானம் தேவை. அந்த பக்குவத்தை, உங்களுக்குப் பெறச் செய்வதற்காகத்தான், யாம் இப்பொழுது
உபதேசிக்கின்றோம்.
நமக்குள் வரும் தீமைகளை மாற்றுவது எப்படி, என்பதன் உண்மைகளை
அறிய, குருநாதர்
எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று, பல அவஸ்தைகளைக் கொடுத்து உணர்த்தினார், அறியச் செய்தார்.
குருநாதர் காட்டிய அருள் வழியில், தீமைகளை மாற்றி
அமைக்கும் நிலையாக, அகத்தின் இயக்கம் எப்படி என்பதை உங்களுக்கு
உணர்த்தி, "சக்தி வாய்ந்த வாக்காக" உங்களிடம் பதிவு செய்கின்றோம்.
7. நமது நலத்தையும், பொது நலத்தையும் ஒன்றிணைக்கும் பக்குவ நிலை
மெய்ஞானிகள், தமது மனித வாழ்க்கைக் காலத்தில், பேரண்டத்தினுடைய, சூட்சம இயக்கங்களை
அறிந்துணரும் நிலைகளையும், மனித
வாழ்க்கையில் வரும் தீமையான நிலைகளிலிருந்து, தம்மைக் காத்து, உயிருடன் ஒன்றிய
உணர்வினை, ஒளி பெறச்
செய்யும் நிலையினையும் பெற்றனர்.
அந்த மெய்ஞானிகள், பேரண்டத்தின் பெரும் உண்மையினைக்
கண்டுணர்ந்து, உணர்வின் ஆற்றலைத் தம்முள் வளர்த்து வெளிப்படுத்தியதின் தன்மைகள், சூரியனின் காந்த
சக்தியால் கவரப்பட்டு, இந்த பூமியெங்கும் படர்ந்து, பரவியிருக்கின்றன.
மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அவர்கள், நமக்குக் காண்பித்த அருள் வழிகளை, நாம் பின்பற்றுவதன்
மூலம், இந்த பூமியில்
படர்ந்துள்ள மெய்ஞானிகளின் உணர்வலைகளை, நாம் பெறமுடியும்.
நீங்கள் அனைவரும் மெய்ஞானிகளின் அருள் ஆற்றலைப்
பெறவேண்டும் என்பதற்காக,
யாம் உயர்ந்த தன்மைகளை உங்களுக்கு
உபதேசித்தோம் என்றால், அதனைக் கேட்கும் நீங்கள், அந்தத் தத்துவங்களை, உங்களுடைய அகத்தில் இருத்தி, அதனைத் திரும்பத் திரும்ப எண்ணுவீர்கள் என்றால், உங்களிடத்தில் மகிழ்ச்சியின் தன்மை
பெருகுகின்றது.
அதுபோன்றே, நீங்கள் உயர்ந்த செயல்களைச் செய்யும் பொழுது, அதனின் உணர்வுகள், உங்களை உயர்ந்த நிலைக்கு
அழைத்துச் செல்கின்றது.
நாம் கடைக்குச் செல்கின்றோம் என்று வைத்துக்
கொள்வோம். ஒவ்வொரு பொருளையும், தரம் பார்த்து வாங்குகின்றோம். இருந்தாலும், வீடு வந்து
சேர்ந்த பின், அந்தப்
பொருள்களை எடுத்துப் பார்க்கும் பொழுது, அவைகளில் ஒன்றிரண்டு பொருள்கள், உபயோகிக்க முடியாத
அளவுக்கு கெட்டுப் போயிருப்பதை பார்த்து, வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா?
கெட்டதைத் தூக்கி எறிந்துவிட்டு, இனி, அடுத்து எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய வேண்டும். ஆகாததைத் தூக்கிப்
போட்டுவிட்டு, இனி, அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும்.
இந்த மனிதன் முழுமை அடைய வேண்டுமென்றால், “இந்த உடலில்
எவ்வளவு குணச் செல்வங்கள் இருந்தாலும், வேதனை என்ற நஞ்சான உணர்வானால், குணச் செல்வம் அழிந்துவிடுகின்றது”. வேதனையைக் கேட்டறியும்
நிலையில், அது நம்முள் வளர்ந்து, அது நமது பொருள்
செல்வத்தையும் இழக்கச் செய்யும்” என்பதை நாம் அறிய வேண்டும்.
அழியாப் பேரின்பப் பெருவாழ்வு, என்ற அருள்ஞானியின் உணர்வை, நாம் கவர்ந்து
கொண்டால், இந்த
வாழ்க்கையில் வரும் தீமைகளை நாம் அகற்ற முடியும்.
பேரின்பப் பெரு வாழ்வை எண்ணி எடுக்கின்ற
உணர்வுகளால், நம்முடைய
சொல், செயல்
புனிதம் பெறும். நம்மைப் பார்ப்பவர் அனைவரும், மகிழ்ச்சி பெறும் நிலை உண்டாகும். அறியாமை என்ற இருள் அகன்று, அனைத்தும் அறியும்
ஞானம் உருவாகும்.
சொல்லில் பொருள் இருப்பது போன்று, நமது செயலில்
நன்மைகள் இருக்க வேண்டும், நாமும், நமது சமுதாயமும் “ஒரே இனம்” என்ற நிலையில், நமது நலத்தையும், பொது நலத்தையும் ஒன்றிணைப்பதாக, நமது செயல்கள் இருக்க
வேண்டும்.
ஏனெனில், பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்று, நீங்கள் எண்ணும் பொழுது, அதனின் உணர்வின்
சத்து உங்களிடத்தில் விளைந்து, நன்மையை உங்களிடத்தில் விளையச் செய்யும்.
இவ்வாறு இதனின் உண்மைகளை அறிந்து, அருள் ஞானிகள்
வகுத்துக் கொடுத்த அறங்களை கடைப் பிடித்து, அதனின் வழியில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் அனைவருக்கும், எமது ஆசிகள்.
8. குரு கொடுத்த அருள் ஞானச் சக்கரத்தைப் பயன்படுத்தும் முறை
குரு
வழியில் நாம் செல்லப்படும் பொழுது, அவர்
பிறவியில்லா நிலையை அடைந்தார். ஒளியின்
சரீரமாக இருக்கின்றார். அதிலிருந்து வரக்கூடிய உணர்வை, நமக்குள்
சேர்த்து இருளைப் போக்கிப் பழக வேண்டும். அது
ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.
ஆகவே நாம் ஒவ்வொருவரும், இப்பொழுது இங்கு கொடுக்கின்ற அருள் ஞானச்சக்கரத்தில், துருவ
தியான நேரத்தில், நாம்
எண்ணி, துருவ தியானம் முடிந்தவுடன், அந்த அருள் ஞானச்சக்கரத்தைப் பார்த்தீர்கள் என்றால், அந்த
துருவ நட்சத்திரத்தின் உணர்வின் ஒளிகள், இதிலிருந்து
வரும். நாளுக்கு நாள், அது
வளர ஆரம்பிக்கும். உங்கள் உணர்வுகளில், ஒரு தெளிவான மணம் கிடைக்கும்.
இதனுடைய வரிசையில் வரப்படும் பொழுது, சில
சமயங்களிலே, பிரபஞ்சங்களும் தெரியலாம். அந்த
மகரிஷிகள் யார் என்ற நிலைகளும், உங்களுக்குத்
தெரியவரும்.
தெரியவரும் என்று சொன்னவுடன், தெரியவில்லையே என்ற உணர்வுக்குப் போய்விடாதீர்கள். நாம் அதைப் பெற வேண்டும் என்ற உணர்வை மட்டும், செலுத்திக்
கொண்டு வந்தால் போதும். ஏனெனில், அந்த உணர்வு உங்களுக்குள் வளர்ச்சியாகும்.
ஒரு செடியை வைத்துவிட்டு, உடனே பூ பூக்கவில்லை. காய் காய்க்கவில்லை என்றால் முடியுமோ? எத்தனையோ
ஆண்டுகள், பல உடல்கள் பெற்று, இப்பொழுது
மனிதனாகப் பிறந்துள்ளோம். இவ்வாறு மனிதனாகப் பிறந்ததில், துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒவ்வொன்றாகச் சேர்க்கிறோம்.
அந்த நினைவின் ஆற்றலும், ஈர்ப்பும்
வருவதற்காகவே, இந்த அருள் ஞானச்சக்கரத்தைக் குறைந்தது, மூன்று
வருடமாக பூஜை அறையிலே வைத்து, அதற்காகத்
தியானம் பண்ணியுள்ளேன்.
எங்கே போக வேண்டும் என்றாலும், கொஞ்ச
நேரம் சக்கரத்தின் முன் நின்று, சக்கரத்தைப்
பார்த்து, “ஈஸ்வரா” என்று
உயிரை எண்ணி, அந்த
துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும்
நாங்கள் பெற வேண்டும், என்று
எண்ண வேண்டும். எங்கள்
உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள்
ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணிப் பிரார்த்தனை பண்ணிக் கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு, நன்றாகப் படிப்பு வரவேண்டும். நல்ல ஞாபக சக்தி வரவேண்டும், என்று எண்ண வேண்டும். தொழிலுக்குப்
போகும் பொழுது, என்
தொழில் நன்றாக இருக்க வேண்டும். என்
வாடிக்கையாளர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று, எண்ணிவிட்டுச்
செல்லுங்கள்.
அந்தச் சக்கரத்தின் முன்னால் நின்று, அதற்குச்
சௌகரியப்படும் இடத்தில் சக்கரத்தை வைத்து, உடகார்ந்து
பார்ப்பதற்கோ, நின்று பார்ப்பதற்கோ, தகுந்த மாதிரி செய்து கொள்ளுங்கள்.
அதைப் பார்த்துவிட்டு, நீங்கள் போனீர்கள் என்றால், எந்தக்
காரியமும் ஜெயமாக வேண்டும் என்று, இந்த
உணர்வை, மீண்டும் மீண்டும், வலுப்
பெறச் செய்து கொள்ளுங்கள்.
மன உறுதி கிடைக்கும். உங்க சொல் கேட்போருக்கு ஓரளவுக்கு மகிழ்ச்சியை ஊட்டும். ஆகையினால், நாமும், நம்
குழந்தைகளும், இந்த மாதிரி செய்து, அதைக்
கட்டாயாமாக்கி, பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.