ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 28, 2012

வானவியல்



1. கடவுள் என்ற தன்மையும், அணுவின் இயக்கங்களின்
காரணப் பெயர்களும்
ஆதியிலே, அகண்ட அண்டம் இருண்ட நிலைகளில் இருக்கப்படும் பொழுது, அதாவது, சூரியனோ, கோள்களோ எதுவுமே இல்லாத இருண்ட பேரண்டம். அத்தகைய பேரண்டத்தில்,
சிறுகச் சிறுக வெப்பமாகி,
வெப்பத்தால் ஆவியின் தன்மை அடைந்து,
ஆவியின் தன்மை, நாளடைவில் விஷத் தன்மையாக மாறுகின்றது.

இயற்கையில் விளைந்த நிலைகள். உதாரணமாக, இன்று ஒரு வீட்டை நாம் மூடிவிட்டோமென்றால், மூடிய வீட்டிற்குள் வெப்பங்கள் வரும். ஆவியின் நிலைகள் காற்றாக மாறும்.

நாளடைவில் அடர்த்தி அதிகமாகும் பொழுது,  அது விஷமாக மாறுகின்றது.  ந்தப் பூட்டிய வீட்டிற்குள் சென்ற பின், அதில் வரும் நெடியை, நாம் சுவாசித்தபின் தும்முகின்றோம். நம்மையறியாமலேயே, அது இயக்குகின்றது.

இதைப் போன்று, இயற்கையில் அகண்ட பேரண்டம், இருண்ட நிலையை இருக்கப்படும் பொழுது,
 வெப்பத்தின் தன்மை முதலில் உருவாகின்றது,
 ஆவியாக மாறுகின்றது,
 நாளடைவில் ஆவி, நஞ்சாக (விஷம்) மாறுகின்றது.
 விஷத்தின் தன்மை அடர்த்தியாகும் பொழுது
முதல் நிலை ஆகும் வெப்பத்தினால் ஏற்படும், ஆவியின் தன்மைகளுடன் கலக்கப்படும் பொழுது,
இந்த விஷம் தாக்கி, மீண்டும் வெப்பமாகி, நகர்ந்தோடும் தன்மை பெறுகின்றது.
விஷத்தின் தாக்குதலால் வெப்பமடைந்து,
அணுக்களாக சிதறி ஓடுகின்றது.
சிதறி ஓடும் பொழுது, ஈர்க்கும் சக்தி வளர்ச்சி பெற்று,
அணுக்களாக உருவாகின்றது.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு பொருளைக் கண்டுபிடித்து, பின் அந்த பொருளுக்கு தக்கவாறு, எவ்வாறு பெயர் வைத்து அழைக்கின்றனரோ, இதைப் போன்று மகரிஷிகள், இயற்கையில் விளைந்த சக்தியின் நிலைகளை, தனக்குள் கண்டுணர்ந்து காரணப் பெயரிட்டு அழைத்தனர்.

 விஷத்தை ஆதிசக்தி என்றும்
 தாக்குதலால் ஏற்படும்  வெப்பத்தை ஆதிபராசக்தி என்றும்,
வெப்பத்தால் உருவாகும், 
ஈர்க்கும் சக்தி காந்த சக்தியை ஆதிலட்சுமி என்றும்
காரணப் பெயரிட்டு அழைத்தனர் மகரிஷிகள்.

2. பரப்பிரம்மம், காயத்ரி
ஆங்காங்கு, அகண்ட அண்டத்தில்,
மேலும் வெப்பத்தினால் உருவாகும் நிலைகள்,
மற்ற மற்ற விஷமாக மாறிய நிலைகள்,
பல உணர்வுகள், பல சுவை கொண்டதாக வெளிப்படுகின்றது.

இதைப் போன்று, புதிது, புதிதாக உருபெறும் பற்பல ஆவிகள்,
ஒவ்வொரு விதமான நிலைகளில் உருவாகும் அந்த சக்தியினை,
ணுக்கள் கவர்ந்து அதனதன் வலுவாக இயக்கத் தொடங்குகின்றன.

அதாவது விஷம், வெப்பம், காந்தம் என்ற மூன்றென்ற அந்த நிலை அடையும் அணுக்கள்,
ஆங்காங்கு உருவாகும் உணர்வின் சத்தை, தனக்குள் கவர்ந்தால்,
காந்தம் இழுத்து, வெப்பத்துடன் இணைக்கப்படும் பொழுது,
விஷத்தால் உணர்ச்சிகளை இயக்கும் தன்மை வருகின்றது.

அப்பொழுது, ஓர் அணுத் தன்மையின் இயக்கச் சக்தியாக மாறுகின்றது. இதனை பரப்பிரம்மம் என்ற காரணப் பெயர் வைத்து அழைத்தனர்.
தன்னுடன் இணைந்து கொண்ட மணத்தை, விஷம் இயக்கி, வெளிப்படுத்தும் பொழுது,
ஞானம், சரஸ்வதி (பிரம்மாவின் மனைவி) என்று பெயரை வைத்தனர்,
விஷம் இல்லை என்றால், அந்த சத்தின் இயக்கத்தை இயக்க முடியாது. இந்த காந்தம் இழுத்து, வெப்பத்தில் மோதவில்லை என்றால், அந்த உணர்வின் தன்மை, அணுவுடன் சேர்ந்து இயக்க முடியாது.

இதை நாம் தெரிந்து கொள்வதற்காக, விஷம், வெப்பம், காந்தம் என்ற மூன்றையும் மும்மலம் என்று காரணப் பெயரிட்டு, கவர்ந்து கொண்ட உணர்வை பரப்பிரம்மம் என்று காரணப் பெயரிட்டு அழைத்தனர்.
பிரம்மம் ஆகும் பொழுது நான்கு, அதே சமயத்தில்
எந்த சத்தின் தன்மையோ, அது மணமாக வெளிப்படுத்தும் பொழுது
அதன் ஞானமாக இயக்கும், இது காயத்ரி
காயத்ரி என்றால் எந்த உணர்வினை கவர்ந்ததோ,
அதன் வலுவாக இயக்கும் என்று பொருள் புலனறிவு ஐந்து.

இதனைத்தான் காயத்ரி என்று பெண்பால் பெயரை வைத்து, அதன் சக்திகள் எவ்வாறு உருவாகின்றது என்பதை, சூட்சமத்தில் நடப்பதை, உருவம் அமைத்து, அருவ நிலையை அறியச் செய்தனர் மகரிஷிகள்.

அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த உண்மைகளையும், அவர்களுக்குள் விளைந்த நிலைகள் அனைத்தையும், நாம் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக, காரணப் பெயர் வைத்தார்கள் மகரிஷிகள்.

இவ்வாறு, வான்வீதியில் இயக்க அணுக்களாக மாறும்பொழுது, உதாரணமாக, ஒரு கசப்பின் உணர்வின் தன்மை பெற்ற அணு, துவர்ப்பின் உணர்வின் தன்மை பெற்ற அணு, விஷத்தின் உணர்வின் தன்மை பெற்ற அணு,
கசப்பின் அணுவைக் கண்டபின், துவர்ப்பின் அணு இதை அணுகாது ஓடுவதும்,
ஓடும் வேகத்தில், விஷ அணுவில் மோதிய பின்,
விஷத்தின் தன்மையை தாங்காது சுழற்சியின் தன்மை அடைகின்றது.

அவ்வாறு சுழற்சியின் தன்மை அடையும் பொழுது,
அந்த கசப்பின் அணுவை தன்னுடன் இனைத்து,
மோதலில் ஏற்படும் வெப்பம், ஆவியாக மாறுவதும்,
மோதலில் ஏற்பட்ட வெப்பத்தால், மூன்றும், இரண்டறக் கலப்பதும்,
இவ்வாறு, அணுப் பரிமாணம் வித்தியாசமான நிலைகள் அடைகின்றது,

அணுக்கள் மாறுகின்றது.
கசப்பும், துவர்ப்பும், அரிப்பும் ஒன்றாகக் கலந்து ஒரு அணுப் பரிமாணம் ஆகின்றது.

இவ்வாறு ஆகும்பொழுது, தன்னில் வெப்பமாகும் நிலைகள்,
ஆவிகளாக மாறும்பொழுது, மேகங்களாக ஆகின்றது,














3. கோள்கள் உருப் பெறும் நிலை
இவ்வாறு, வான் வீதியில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து,
அணுக்களின் பரிணாம மாற்றங்களும் அதிகமாகின்றன.
இவ்வாறு அதிகமாகி, மேகத்துக்குள் இணைந்து,
அதற்குள் போர்முறை வரப்படும் பொழுது, நீராக மாறுகின்றது.

நீரானபின், எடை கூடி ஓடும் நிலைகள் வருகின்றது.
பல அணுக்கள், கூட்டமைப்பாக பல உணர்வு கொண்ட நிலைகள்,
இந்த நீருக்குள் சிக்குண்டு, இந்த உணர்வின் தன்மை
எடை கூடி ஓடும் தன்மைகள் வருகின்றது.

எடை கூடி, நகர்ந்து ஓடும் பொழுது உராய்வாகி,
உராய்வினால் வெப்பமாகி, நீர் ஆவியாகின்றது.
இந்த பற்பல அணுக்களின் கூட்டமைப்பு, ஓர் ரூபமாகின்றது.
ஓர் எல்லையாகின்றது, ஓர் பரமாகின்றது.

வான் வீதியில், ஆவியாக இருக்கும் பொழுது எல்லை இல்லை. ஆனால், திடப் பொருளாக மாறும் பொழுது, எல்லையாகின்றது. அது தான் பரம்பொருள், ஓர் ரூபமாகின்றது என்பதை நாமெல்லாம் தெரிந்து கொள்வதற்கு, மகரிஷிகள், உலகம் எவ்வாறு உருவானது? என்பதைத் தெளிவாக்கி உள்ளார்கள்.

இவ்வாறு, அணுக்களின் சக்தியைத் தனக்குள் சேர்த்துக் கொண்டபின், பரம்பொருளாகிஅதற்குள் அடைபட்ட உணர்வுகள் அனைத்தும்
பரம்பொருள் சுழலும் பொழுது, சுழற்சியில் வெப்பமாகி,
வெப்பத்தின் தன்மை ஈர்க்கப்பட்டு,
தன் அருகில் உள்ள பொருள்களை,
உருகச் செய்து ஒன்றாக மாற்றுகின்றது.
பொருள்களின் உணர்ச்சிகள் மாறுகின்றது.

இப்படிப் பாறைகளாகவும், கற்களாகவும் மாறுகின்றது. அப்பொழுது உள் நின்று இயக்குவது யார்?  இந்தப் பொருளின் தன்மை கலந்து, உருப்பெறும் தன்மை வரப்படும் பொழுது,  உள் நின்று இயக்குவது கடவுள்

இவ்வாறு அந்த பரம்பொருள், தன் அருகில் உள்ள காந்தப்புலனில் உராயும் பொழுது, சுழற்சியாவதும், சுழற்சியால் வெப்பம் உருவாகி, ஈர்க்கும் சக்தி பெற்று, தான் ஈர்க்கும் பொருள்கள் மேலே விழுந்தாலும், சுழற்சியால் ஏற்படும் வெப்பம், ஊடுருவி, பரம்பொருளின் நடு மையம் அடைகின்றது.

அந்த வெப்பத்தால் தன் அருகிலே இருப்பது அனைத்தும், உருகுகின்றது, ஆவியாக மாற்றுகின்றது, வெளி வருகின்றது. மீண்டும் இதனுடைய ஈர்ப்பு வட்டத்தில், மேல் எழுந்தவாறே சுழல்கின்றது.

மேலேயும் சுழற்சிகள் மாறுகின்றது. நடு மையமும், உணர்வுகள், குணங்கள் மாறுகின்றது.  இவ்வாறு வளர்ச்சி அடைந்ததுதான் கடவுள் என்ற தன்மையே, சிறுகச் சிறுக வளர்ச்சி அடைந்து, பெரும் கோளாக மாறுகின்றது.

4. கோள்கள் தனது வளர்ச்சியில் நட்சத்திரமாதல்
கோளின் சுழற்சி வேகம் கூடும்பொழுது,
வெப்பத்தின் தணல் கூடுகின்றது.
வெப்பத்தின் தணல்,  நடு மையம் அதிகமாக,
தன் அருகிலே இருப்பதனைத்தையும் அமிலமாக மாற்றுகின்றது.

இவ்வாறு, பல கலவைகள் ஒன்றாகி, ஒரே ரூபமாக, ஒரே அமில சக்தியாக மாறுகின்றது.  முதலில் நீரானது,  பின் அமிலத் தன்மை அடைகின்றது.

அமிலத்தன்மை அடைந்தபின், அதிலிருந்து உமிழ்த்தும் நிலைகள்
அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழல்கின்றது.
இதைக் கடந்து வெளிச் சென்றபின், உறைவதும்,
உறைந்த பின், அதனின் ஈர்ப்பில் சுழல்வதும்
என்ற நிலைகள் அடைகின்றது. இப்படி அடைந்ததுதான் நட்சத்திரம்

உதாரணமாக, நூலம்படைப் பூச்சி எவ்வாறு தான் உணவாக உட்கொள்வது அனைத்தையும், அது நூலாம்படை போல, தனக்குள் மலங்களை வெளியிடும் பொழுது, கூடாக அமைத்து விடுகின்றது.

அதிலே எப்பொருள் சிக்கினாலும், உணவாக எடுத்துக் கொள்கின்றது. சிலவற்றை, தனக்குள் பெற்ற விஷத்தின் சக்தியைப் பாய்ச்சுகின்றது. அப்படிப் பாய்ச்சப்படும் பொழுது, அதற்குள் அணுக்கள் மாற்றமாகி, அந்த நூலாம்படைப் பூச்சி போல கருவாக உருவாகின்றது.

இதைப் போன்றுதான்,
நட்சத்திரம் தன் மலங்களை வீசப்படும் பொழுது,
வீசியது அனைத்தும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழலும் பொழுது,
தூசிகளும் துகள்களும் அதற்குள் சிக்கி விடுகின்றது.
இது பால்வெளி மண்டலங்களாக மாறுகின்றது.

இருப்பினும், அதனுடைய சுழற்சியின் வேகத்தில்,
மீண்டும் இது தூசிகளாக மாறுகின்றது.
இதன் சுழற்சியில் தனக்குள் உணவாக உட்கொண்டு,
இந்த உணர்வின் தன்மை தனக்குள் உருவாகும் சக்தி பெறுகின்றது.

5. நட்சத்திரம் சூரியனாதல்
நட்சத்திரம் இவ்வாறு சுழன்று வளர்ந்து வரப்படும் பொழுது,
பேரண்டத்தில் தனக்குள் ஈர்த்துக் கொண்ட சக்தியை,
சிறுகச் சிறுக தனக்குள் சேர்த்து,
எடை கூடிய நிலைகள் கொண்டு,
பாதரசமாக உருவாகும் சக்தி பெறுகின்றது.
அவ்வாறு சக்தி பெற்று,  முழுமை அடைந்ததுதான் சூரியன்”.


6. சூரிய பிரபஞ்சம் உருவாகும் நிலை
சூரியன் தன் சுழற்சியில் வெளிப்படுத்தும் பொழுது,
னக்குள் விளைந்த பாதரசத்தின் தன்மை கொண்டு,
தான் கவர்ந்த அனைத்திலும் மோதி,
வெப்பமாக்கி, விஷத்தைப் பிரிக்கின்றது.
ஈர்க்கும் காந்தம் உருவாகின்றது.
பேரண்டத்தில், மற்றதோடு மோதும் பொழுது ஏற்படும் வெப்பமே, சூரியனுக்கு வெளிப்புறமாகத் தோன்றுகின்றது.

அவ்வாறு, வெளிப்படுத்தும் இந்த சத்தின் தன்மைகள், அது பரவி
பல சத்தின் தன்மைகள் ஒன்றுக்கொன்று மோதி,
பல அணுக்களின், பல உணர்வின் சத்துகள்
ஒன்றுடன் ஒன்று கலந்து, அது கலக்கப்படும் பொழுது,
அதற்குள் சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப,
கோள்களாக உருவாகி,
சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழலச் செய்கின்றது.

ஆதியில் ஒரு நீரின் சத்து, தனக்குள், தனக்குள் பல அணுக்களின் தன்மை வளர்த்து, எப்படி ஒரு பரமாகி வந்ததோ, அதைப் போன்று, தன் உடலில் ஆற்றல் மிக்க நிலைகள் வளர்ந்து, சூரியனாக வளர்ந்தபின், அது வெளிப்படுத்தும், இந்த அணுக்களின் சக்தி, ஒன்றுடன் ஒன்று இணைந்து, கோள்களாக உருவாகின்றது.

அந்தக் கோள்களின் வளர்ச்சி,
சூரியனின் அமைப்பிலேயே வளரப்படும் பொழுது,
நட்சத்திரங்களாக விளைந்து, விரிவடைகின்றது.

நட்சத்திரங்கள், பிற மண்டலங்களிலிருந்து அது கவர்ந்து, அதனுடைய பால்வெளி மண்டலங்களாக அமைத்து, தூசிகளாக மாற்றுகின்றது. அந்தத் தூசிகளை, சூரியன் தனக்குள் இழுக்கப்படும் பொழுது, இடைமறித்து, தனக்குள் கவர்ந்து கொண்டு, வளர்ச்சி பெற்றது கோள்கள். அப்படி வளர்ச்சி அடைந்ததுதான், நமது பூமியும், செவ்வாய், புதன், வியாழன் போன்ற மற்ற கோள்களும்.

இப்படி, நமது சூரியன், தனது உணவாக எடுத்து வளரும் நிலைகளில் பிரபஞ்சத்தை உருவாக்கும் முதல் கடவுள் ஆகின்றது. அதனைத்தான் நாராயணன் என்று பெயரை வைத்தனர் மகரிஷிகள்.

இந்த பிரபஞ்சத்தை உருவாக்கும் சக்தி பெறும் பொழுது சர்வேஸ்வரன் என்று காரணப் பெயரை வைத்தார்கள்.

கடவுள்  என்ற  தன்மையில், தனித்து எதுவும் வளர்ந்ததில்லைவாழ்வதில்லை,  வாழப்போவதும் இல்லை

எதனின் உணர்வுகள் அதனுள் கவர்ந்ததோ, பாதரசமாக உருவாகின்றது. சூரியனிலிருந்து வெளிப்படும் இந்தப் பாதரசம், மற்றதோடு மோதும்பொழுது, அதிலே வரும் விஷத்தன்மையைப் பிரித்து, தூசிகளாக மாறும் பொழுதுதான். (இப்பொழுது நாம் காணும்) ஒன்றுடன் ஒன்று மோதி, மின் அணுக்களாக மாறுகின்றது.

கோள்களாக வரப்படும் பொழுது, நடுமையத்தில் ஏற்படும் வெப்பத்தால், அது கவரும் ஒவ்வொன்றையும், பாறைப் படிவங்களாகவும், மற்ற தாதுப் பொருள்களாகவும் உருப் பெறச் செய்கின்றது.

சுழற்சியின் வேகத்தில்,  வெப்பம் அதிகமாகி, அது எடுத்துக் கொண்ட பொருள்கள் அனைத்தும், உருகச்செய்து, எல்லா உலோகப் படிவங்களையும் உருகச்செய்து, அமிலமாக்குகின்றது. கோள் நட்சத்திரமாகின்றது.

அவ்வாறு நட்சத்திரம் ஆன பின்,
அதன் சுயேச்சையான ஒளி, எதனுள்ளும் ஊடுருவுகின்றது.
ஆனால்,  இதற்குள் எதுவும் ஊடுருவுவது கடினமாகின்றது.

இப்படி திரவ சக்தியாகி (அமிலங்களாகி),
நடு மையம் திடப் பொருளாகி விடுவதும் உண்டு. இப்படி,
அதாவது சில பூமிகளில், நடு மையம் வெப்பத்தில் திரவமாகி,
மேலே பாறைகள், நீர் நிலைகள் இருப்பது போன்று.
இந்த அமில சக்திகள்,  ஆவியாக வெளிப்படுத்திய நிலைகள்,
கதிரியக்கச் சக்தியாக மாறி,வளர்ச்சி பெறும் பொழுது
மறுபடியும் இறுகி, பாதரசத்தை உருவாக்கும் பொழுது
குளிர்ச்சியாகின்றது, சூரியனாகின்றது.

சுழற்சியின் மோதலில், சூரியனின் வெளிப்புறமே, வெப்பம் உருவாகின்றது. நாம் வெயிலாகக் காண்பதும் அதுதான். மற்ற கோள்களின் சுழற்சியில், சூரியனின் நிலைகள் தாக்கப்படும் பொழுது, இரவிலே வெளிச்சமாக, மின் அணுக்களாகத் தெரிகின்றது.

சூரியனானபின், அதன் வரிசை அமைப்பில் இது எப்படி கோளாகி, நட்சத்திரமாகி, சூரியனானதோ,
அதைப் போல கூட்டமைப்பின் தன்மை கொண்டு,
தன் ஈர்ப்பு வட்டத்தில் 27  நட்சத்திரங்களும்,
அதைத் தொடர்ந்து நவக் கோள்களும்,
அந்த கோள்களுக்கு உப கோள்களும் அமைத்து, இப்படி
ஓர் பிரபஞ்சம் (சூரிய குடும்பம்) என்ற நிலைகள் அடைகின்றது.

இது எப்படி ஒரு சூரியக் குடும்பமாக விளைந்ததோ,  இதைப் போன்று, பேரண்டத்தில் எண்ணிலடங்கா சூரியக் குடும்பங்கள் உருவாகி இருக்கின்றன.

இப்பொழுது நமது சூரிய குடும்பம் ஒரு பிரபஞ்சமாக, 27 நட்சத்திரம், நவ கோள்களும், உப கோள்களும் கொண்டிருப்பதைப் போன்று,  2000  சூரிய குடும்பங்கள், ஒன்றை ஒன்று தழுவிய நிலையில் இயங்கிக் கொண்டு உள்ளன.

இதைப் போன்று,  பேரண்டத்தில் எத்தனையோ சூரிய குடும்பங்கள்,  2000 சூரியக் குடும்பங்களாகவும், 1000 சூரியக் குடும்பங்களாகவும், ஒன்றுடன் ஒன்று பிணைந்து, பெரும் சுழற்சி வட்டமாகச் சுழல்கின்றது.