நாம் கையிலே ஆயுதத்தை வைத்துக்கொண்டு, ‘’புலி வருது, புலி வருது’’ என்று சொன்னால், துப்பாக்கி எதற்கு
வைத்திருக்கிறோம். ‘’துப்பாக்கியைக் கையில் கொடுத்திருக்கிறோம்’’, சுடுவதற்கும்
சொல்லிக் கொடுக்கிறோம்.’’
‘’ஐய்யய்யோ! புலி வருது, புலி வருது!’’ என்று, துப்பாக்கியை வைத்துக் கொண்டு, சுடாமல்
இருந்தால் என்ன பண்ணும்? அது நம்மைத் தாக்கிவிடும்.
இதைப் போலத்தான், இந்த ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளேன். சந்தர்ப்பத்தில் நீங்கள் பிறருடைய கஷ்டமான
நிலைகளைக் கேட்டு அறியத்தான் வேண்டும், ‘’நீங்கள் அவர்களுக்கு உதவி செய்துதான் ஆக
வேண்டும்’’.
உதவி செய்தாலும் அவர்கள் சொன்ன துன்பமான
உணர்வுகள், உங்களுக்குள்
ஆட்டிப் படைக்காதபடி ‘’ஆத்மசுத்தி’’ என்ற இந்த ஆயுதத்தை எடுத்து ‘’ஈஸ்வரா’’ என்று உங்கள்
உயிரை வேண்டி ‘’அந்த துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெற வேண்டும் ஈஸ்வரா’’ என்று ஏங்குங்கள்.
‘’அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் இரத்த நாளங்களில் கலந்து, உடல் முழுவதும் படர்ந்து, இரத்தங்களில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்’’ என்று ஏக்க உணர்வுடன் கண் திறந்து ஒரு நிமிடமும், கண்ணை மூடி ஒரு நிமிடமும் நமக்குள் எடுத்துக் கொள்ளுங்கள்.
கண்ணைத் திறந்தபின் துன்பப்பட்டவர்களிடம் ‘’அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள்’’ ’'அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியால் உங்கள் துன்பங்கள் நீங்கும், நீங்கள் நலம் பெறுவீர்கள்’’ என்று சொல்லிவிட்டு அந்தப் பொருளைக் கொடுத்துப் பாருங்கள்.
அவர்களது கஷ்டம், உங்களுக்குள் வராமல் தடுக்கவும் முடிகின்றது, நாம் நகை வாங்கியபின், அடுத்த நகை செய்யும்போது, அதில் உள்ள வெள்ளியையும், செம்பையும் எப்படிச் சுத்தப்படுத்திக் கொள்கிறோமோ, அதே போல அடுத்த நிமிடமே, கேட்டறிந்த பிறருடைய கஷ்டத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டு, நமது மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் ‘’தியானம்’’ என்பது.
நமக்குள் தீயது சேராது தடுக்கும், இந்த ஆற்றல் மிக்க சக்தியின் துணை கொண்டு, நமக்குள் தியானமிருக்க வேண்டும். ‘’தியானம்’’ என்பது எது? நமக்குள் கெட்டது சேரவிடாது, வைராக்கியமான நிலைகள் பெற வேண்டும். இதுதான் தியானம் என்பது.
பக்தியில் என்ன செய்கின்றோம்? நல்லதை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பார்கள், ஆனால், தியானம் என்பது நமக்குள் சேர்த்துக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்வது.
‘’பக்தி என்பது நல்லதை நினைப்பது’’. ‘’தியானம் என்பது உயர்ந்த ஞானிகளின் சக்திகொண்டு, நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது’’ இந்த சக்தி இல்லையேல், செயல்படுத்த முடியாது.
‘’அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் இரத்த நாளங்களில் கலந்து, உடல் முழுவதும் படர்ந்து, இரத்தங்களில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்’’ என்று ஏக்க உணர்வுடன் கண் திறந்து ஒரு நிமிடமும், கண்ணை மூடி ஒரு நிமிடமும் நமக்குள் எடுத்துக் கொள்ளுங்கள்.
கண்ணைத் திறந்தபின் துன்பப்பட்டவர்களிடம் ‘’அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள்’’ ’'அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியால் உங்கள் துன்பங்கள் நீங்கும், நீங்கள் நலம் பெறுவீர்கள்’’ என்று சொல்லிவிட்டு அந்தப் பொருளைக் கொடுத்துப் பாருங்கள்.
அவர்களது கஷ்டம், உங்களுக்குள் வராமல் தடுக்கவும் முடிகின்றது, நாம் நகை வாங்கியபின், அடுத்த நகை செய்யும்போது, அதில் உள்ள வெள்ளியையும், செம்பையும் எப்படிச் சுத்தப்படுத்திக் கொள்கிறோமோ, அதே போல அடுத்த நிமிடமே, கேட்டறிந்த பிறருடைய கஷ்டத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டு, நமது மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் ‘’தியானம்’’ என்பது.
நமக்குள் தீயது சேராது தடுக்கும், இந்த ஆற்றல் மிக்க சக்தியின் துணை கொண்டு, நமக்குள் தியானமிருக்க வேண்டும். ‘’தியானம்’’ என்பது எது? நமக்குள் கெட்டது சேரவிடாது, வைராக்கியமான நிலைகள் பெற வேண்டும். இதுதான் தியானம் என்பது.
பக்தியில் என்ன செய்கின்றோம்? நல்லதை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பார்கள், ஆனால், தியானம் என்பது நமக்குள் சேர்த்துக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்வது.
‘’பக்தி என்பது நல்லதை நினைப்பது’’. ‘’தியானம் என்பது உயர்ந்த ஞானிகளின் சக்திகொண்டு, நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது’’ இந்த சக்தி இல்லையேல், செயல்படுத்த முடியாது.
நமக்கு முன்னால் சுழன்று கொண்டிருக்கும் அந்த ஞானிகளின் அருள் சக்தியை, இந்த ‘’ஆத்ம சுத்தி’’ என்ற நிலைகளில்
வலு கொண்டு உங்களுக்குள் பெறச் செய்து, வாக்கின் நிலையாக உங்களுக்குள் கொடுத்து, கடும் ஆயுதமாக, நீங்கள் எப்பொழுது, கடுமையான நிலைகளில் துன்பம் என்று பார்க்கின்றீர்களோ, நுகர்கின்றீர்களோ, கேட்கின்றீர்களோ, அவைகளையெல்லாம் உங்களுக்குள் சேராமல் தடுப்பதற்காகத்தான், இந்த ‘’ஆத்மசுத்தி’’ என்ற நிலைகள்.
‘’ஆத்மசுத்தி’’ செய்துவிட்டு ‘’நாளை நடப்பவையாவும் நல்லவைகளாக இருக்கவேண்டும், நாம்
பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும், நாம் பார்ப்போரெல்லாம் நலமும் வளமும்
பெறவேண்டும். எங்கள் பேச்சும், மூச்சும் உலகம் நன்மை பயக்கும் சக்தியாக படர
வேண்டும்’’ என்ற எண்ண
அலைகளை நீங்கள் பரப்புங்கள்
2. ஞானகுரு
நமக்குக் கொடுக்கும் ஆயுதம் – “ஆத்ம சுத்தி”
நாம் இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே, மெய் ஒளியின் அருள், அந்த
மகரிஷிகள் பெற்ற அருள் ஒளிகளை, பெறவேண்டுமென்று
எண்ணுங்கள்.
சாமியிடம் போனோம், சாமி
கொடுக்கவில்லை என்று குறையை எண்ணாதீர்கள். சாமியிடம் போய், அந்த அருள் ஒளியை வளர்ப்போம், அந்த அருள்
ஒளியினுடைய நிலைகளில், ஒளி நிலை பெறுவோம். நாம் வாழ்க்கையில் வரக்கூடிய தீமையின் நிலைகளை, நம் மூச்சாலே, நம்மை அணுகாது பாதுகாப்போம்.
அந்த மெய் ஒளியின் நிலைகள் பெறப்படும் போது, இருள் விலகும், அந்தப்
பொருள் தெரியும். இருள் விலகிப் பொருள் காணும்போது, வாழ்க்கையிலும்
நீங்கள் பொருள் காணலாம்.
நம் உடலில், எவ்வளவு
வேதனைகள் நம்மைத் துன்புறுத்தினாலும், அந்த இருளை மாய்க்க, உங்களுக்கு யாம்
கொடுப்பது “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதம்.
எப்படி புலி நம்மைத்
தாக்க வரும்போது, அதை வேட்டையாடுவதற்கு, அம்பைக் கொண்டு எவ்வாறு
எய்கின்றோமோ அதே போன்று, உங்கள் உடலுக்குள் நின்று,
உங்களை வேட்டையாட நினைக்கும் அந்த தீய, விஷ
உணர்வுகளையும், வேதனைப்படச்
செய்யும் அந்த உணர்வின் தன்மைகளையும் வேட்டையாடுவதற்குத்தான், இந்த ஆத்ம சுத்தி.
“ஓம் ஈஸ்வரா” என்று, அந்த உணர்வின் ஆற்றலான ஆயுதத்தை எடுத்து, மகரிஷிகளின்
அருள் சக்திகளை, உங்கள் உடலுக்குள் செலுத்தி (ஆத்ம சுத்தி
செய்து), உங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும், வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும், அந்த
உணர்வின் தன்மைகளை, அந்த மகரிஷியின் அருள் ஒளியாலே,
அடக்கச் செய்யுங்கள். அப்போதுதான்
அடங்கும்.
ஆக, வேதனையாக
இருக்கின்றது என்ற நிலையை மறந்துவிட்டு, அந்த மகரிஷிகளின்
அருள் ஒளியாலே, எனக்குள் இருக்க கூடிய துன்பங்கள்
நீங்கும் என்ற உணர்வைச் சுவாசியுங்கள்.
அந்த உணர்வின் தன்மை, மெய்
ஞானியின் அருள் உணர்வு உங்களுக்கு கிடைக்கும்போது, மெய்ஞானிகள், அவர்கள் உடலிலே எப்படித் தீமையை மாய்த்து, மெய்
ஒளியின் தன்மையைப் பெற்றார்களோ, அந்த தீமையான உணர்வை
மாய்க்க, அருள் ஒளியின் தன்மையிலே சென்றால்தான் முடியும்.
நிறையப் பேர், சாமியிடம் சென்று வந்தோம்,
தலைவலியே போகவில்லை. சாமியிடம் சென்று என்ன கிடைக்கின்றது? என்று எண்ணுவார்கள்.
அருள் வழியில் நன்றாக ஆகிவிட்டதென்றால், மீண்டும் வருவார்கள். அடுத்த முறை வந்து,
“சாமி” என்று கேட்பார்கள். மூன்றாம்
முறை வரும் போது, என்ன செய்கிறார்கள்?
நம் வாழ்க்கையில், அடிக்கடி
அசுத்தங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்போது என்ன செய்கின்றோம்?
அன்று நடந்தது, இன்று “யாம் சொன்ன வழிகளிலே நடந்தீர்களா?” என்று யாம்
அவர்களிடம் கேட்டால், “நேரம் இல்லைங்கே” என்று சொல்வார்கள்.
இது போன்று, நேரமில்லை
என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்றால், அவர்கள்,
எம்மிடம் “என்ன சாமி, ஒன்றுமே இல்லை” என்ற நிலைக்குப்
போய்க்கொண்டிருப்பார்கள்.
இம்மாதிரியாக, நமது
வாழ்க்கையினுடைய நிலைகள் பயனற்றதாகப் போய் விடாதபடி, நாம்
மெய்வழி காண்போம். நமக்குள் இருக்கக் கூடிய துன்பத்தைப் போக்குவதற்குத்தான்,
இப்பொழுது யாம் உபதேசிப்பது. அந்த ஆயுதத்திற்குள், (ஆத்ம சுத்தி) பல இரகசியங்கள் இருக்கின்றது.
நாம் அனைவரும் இந்த தியானத்தின் நிலைகள் கொண்டு, நமக்குள் ஆற்றல் பெற்றபின், யார் துன்பப்பட்டு வந்தாலும், நாம் ஆத்ம
சுத்தி செய்து கொண்டு, அவர்கள் உடலில் இருக்கக்
கூடிய தீமைகளை நீக்க, அவர்களையும், அந்த “ஆத்ம சுத்தி” செய்யப்
பழக்குங்கள்.
யாம் எப்படி, உங்களை
நல்லதாக்க வேண்டுமென்று விரும்பி, இந்த ஞானத்தின் வழி
முறை கொண்டு உங்களுக்குள் சேர்க்கச் செய்கின்றோமோ, இதைப் போன்று, நீங்களும் செய்யுங்கள்.
உங்கள் மூச்சாலும் பேச்சாலும், மற்றவர்களுடைய துன்பத்தைப் போக்கச் செய்யுங்கள். இதை, உங்கள் அனுபவத்திலே நீங்கள் பார்க்கலாம். நீங்கள் உங்களை நம்புங்கள்.
நாம் எடுக்கும் தியானத்தின் மூலமாக, ஆற்றல் மிக்க சக்தியை
நாம் பெறமுடியும்.
யாரோ செய்து கொடுக்கிறார், எவரோ
செய்து கொடுப்பார் என்று எண்ணாதபடி, நாம் இதைப்
பெறமுடியும். இந்த ஆற்றல் மிக்க சக்தி நம் உடலில் உண்டு, அந்த
ஆற்றல் மிக்க சக்தியை நாம் பெற முடியும், என்ற நிலைக்கு,
நாம் வரவேண்டும்.
உயிருடன் தொடர் கொண்டு, அந்த
அலையின் வரிசையில் இங்கே பாய்ச்சப்படும் போது, ஒவ்வொன்றும்
நல்லதாகும். நம்மால் முடியுமா? என்ற பலவீனத்தை மட்டும் விட்டு விடுங்கள். எண்ணியதை படைக்கும் சக்தி, உங்களை இயக்கிக்
கொண்டிருக்கும், உங்களை ஆண்டு கொண்டிருக்கும், இந்த உயிருக்கு உண்டு.
ஆக, அதனுடைய துணை கொண்டு,
அது எப்படி ஒளியாக நம்மை உருவாக்குகின்றதோ, நம் உணர்வின் செயலை உருவாக்குகின்றதோ, அதைப்
போன்று, நம் உணர்வுகள் அனைத்தும், அந்த ஈசனின் உணர்வின் ஒளி அலைகளாக மாறி, அந்த உணர்வுகள் செயல்படும். உயிர் நம்மை
ஒளியாக இயக்கிக் கொண்டிருக்கும், அந்த உணர்வாக, நாம் மாற்ற வேண்டும்.
ஒன்றை ஒன்று விழுங்கித்தான், ஒன்றுக்குள் மறைந்து வருகின்றது. ஆனால், எல்லாவற்றிருக்கும்
ஞானம் உண்டு. இன்றைக்குக் காற்றாக வருகிறதென்றால், இந்தக்
காற்றும், போர் முறைகளிலேதான் வருகின்றது.
பல அணுக்களின் நிலைகள் கொண்டு, நம் பூமிக்குள் விளைந்த நிலைகள் கொண்டு, எதிர்
நிலையான அலைகள் பட்டவுடன், ஒன்றுக்கொன்று போர் செய்துதான்,
சுழிக்காற்றும் வருகின்றது. ஆக,
இவையெல்லாம், ஒன்றையொன்று வெல்லும் போது, ஏற்படக் கூடிய மூச்சின் அலைகள்தான்.
ஆகையினாலே, எல்லாமே
இயற்கையின் செயல்தான். இவை அனைத்தையுமே அறிந்துணரக்கூடிய ஆற்றல், மனிதனுக்கு உண்டு. ஆகவே, மனிதனாக இருக்கக்
கூடிய நாம் எதைக் கொண்டு, எதை வெல்ல வேண்டும்? நாம் இருளை வென்று,
ஒளியாக்க வேண்டும். இதுதான் கடைசி நிலை.
ஆகையினாலே, அத்தகைய
தன்மையை உங்களுக்குள் வளர்க்கச் செய்வதற்குத்தான், எமது
குருநாதர், யாம் பெறுவதற்கு எதைச் செய்தாரோ, அதைப் போன்று, எமக்குள் அவர் காட்டிய ஆற்றலை யாம் பெற்றாலும், அந்த ஆற்றலின் தன்மையை உங்களுக்குப் பாய்ச்சுகின்றேன்.
இவ்வாறு, ஆத்ம சுத்தியைச் சீராகக் கடைப்பிடித்து, அந்த
ஆற்றலை நீங்களும் பெறலாம். நீங்கள் பெறப் போகும்போது, உங்கள்
மூச்சலைகளை, நீங்கள் சந்திப்போரும் பெற்று அவர்களும் அந்த
ஆற்றலைப் பெறலாம்.
3. அதிகமான துன்பம் ஏற்படும் சமயத்தில், ஆத்மசுத்தி மூலம், விண்ணின் ஆற்றலை
அதீதமாகப் பெறும் நிலை
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வாழ்க்கையில் நமக்குத் துன்பம் என்ற நிலைகள் எப்போது
வருகிறதோ, அந்தத் துன்பத்தை மனதார நாம் ஏற்றுக்கொண்டு, இந்த இன்பத்திற்குண்டான வழியை, அந்த மெய் ஞானியின் அருள் ஒளியை நாம் ஏற்றுக்கொண்டு, அந்தத் துன்பத்தை நீக்கும் முயற்சியை எடுப்பதற்கு, இந்தச் சந்தர்ப்பத்தை எடுத்து, தியானமும், உங்களுக்கு ஆத்மசுத்தியும் கொடுக்கின்றோம்.
ஆத்ம சுத்தியின் தன்மையைக் கொடுக்கப்படும்போது, “ஓம் ஈஸ்வரா” என்று உயிரான ஈசனை எண்ணி, புருவ மத்தியில் நினைவினைச்
செலுத்தி, விண்ணிலிருந்து நம் பூமிக்குள் வந்து கொண்டிருக்கும், அந்த
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து,
எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்
என்று உடலுக்குள் கண்ணின் நினைவினைச் செலுத்தி, ஆத்மசுத்தியை
நீங்கள் எடுக்கப்படும் பொழுது, வாழ்க்கையில் வரக்கூடிய
துன்பத்தை நீக்கி, வாழ்வினுடைய நிலைகளில், மனிதனாகப் பெற்ற புனிதத்தன்மையை நாம் பெறுகின்றோம்.
சந்தர்ப்பவசத்தால் எல்லை கடந்து துன்பங்கள் வரப்படும்பொழுது, நாம்
ஏங்கியிருக்கக்கூடிய நிலைகள், நம்மை மறந்து, துன்பத்தை மறந்து, நாம் மெய் ஒளியின் தன்மை
பெறவேண்டுமென்று, இப்பொழுது, தியானத்தின் வழி நாம்
கூட்டும் இந்த உணர்வின் ஆற்றல், அதை நாம் பெருக்கப்படும்போது, விண்ணின் ஆற்றலை
நாம் பெறமுடியும்.
ஆகவே, நாம் ஒவ்வொரு நாளும் மெய்ஒளி பெறும், தியானத்தைக் கூட்டிக்கொள்வோம். ஒரு நாள் முழுவதும் உடலுக்காக வேண்டி, நாம் பாடுபட்டு உழைத்தாலும், மெய்ஒளி பெறும்
அந்த சந்தர்ப்பத்தை, ஒவ்வொரு நாளும் ஒரு 10 நிமிடமாவது, மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறவேண்டும்
என்று தியானித்து, அந்த ஆற்றல் மிக்க காந்தத்தைக் கூட்டிக் கொள்வோம்.
அதை நம் உடலிலே சேர்த்துக்கொண்டு, ஒவ்வொரு நிமிடமும் நமக்குத் துன்பம் வரும்போது, “ஈஸ்வரா” என்ற எண்ணத்தைக்
கொண்டு “மகரிஷிகளின்
அருள் சக்தியைப் பெறவேண்டும், என் ஜீவாத்மா
பெறவேண்டும் என்று,
நாம் எண்ணி சுவாசித்து, நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.
ஒரு சமயம் இல்லாவிட்டாலும் ஒரு சமயம், எதிர்பாராத
சங்கடத்தில் நாம் துன்பப்பட்டு, நம் உணர்ச்சிகளைத் தூண்டி, மிக அதிகமான
கஷ்டங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்திலே,
உணர்ச்சியின்
வேகங்கள் உந்தி,
நாம் விண்ணின் ஆற்றலை, மிக ஆற்றல் மிக்க நிலைகளை, துரித நிலைகளில்
பெறும் சந்தர்ப்பமும் கிடைக்கலாம்.
இதைப் போன்றுதான், நமது வாழ்க்கையிலே, நாம் சாதாரண மனிதனுக்குள் பழக்கப்பட்டுப் பழகி
வரப்படும்பொழுது, எதிர்பாராத சலிப்போ, சஞ்சலமோ, பயமோ, ஆத்திரமோ, கோபமோ, வேதனையோ இதைப்
போன்ற உணர்ச்சிகள் தூண்டும்பொழுதெல்லாம், அடுத்தகணம், நாம் ஆத்ம சுத்தி செய்து, நம் உடலில் வரக்கூடிய
துன்பங்களை நாம் துடைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
4. அனைத்துத் துன்பத்தையும் நீக்கும் “மிஷின் கண்” (MACHINE GUN) – “ஆத்ம
சுத்தி”
நம்மை அறியாமலே
நம்மைத் துன்பப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான், தக்க ஆயுதமாக ”மிஷின் கண்” போன்று உங்களுக்கு ‘’ஆத்மசுத்தி’’ என்ற ஆயுதத்தை
கையில் கொடுக்கிறோம்.
ஒரு உணர்வின் தன்மை ஒரு அணுவின் தன்மை
சேர்க்கப்படும் போது,
அது எந்தெந்த
குணத்தின் தன்மை அதிகமாகச் சேர்க்கின்றதோ, அது ஆற்றல் பெறுகின்றது. இதைப் போன்றுதான், இயற்கையின் உண்மையினுடைய
நிலைகள்.
ஆக நாம் மெய்யுணர்வின் தன்மையை
அறிந்துணர்ந்தபின், அந்த மகரிஷிகள் அருள் வழியைக் காட்டியபின், இந்த உடலில்
இருக்கப்படும் பொழுதே, யாம் சொல்லும்
நிலைகளில், எப்பொழுதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய
பிரச்சினைகளையும், சங்கடங்களையும் எதிர் கொள்கின்றீர்களோ, அதையெல்லாம் உங்களுக்கு நன்மை
பயக்கும் நேரமென்று எடுத்துக் கொள்ளுங்கள்.
எப்படியென்றால், ‘’இப்படி என்னை திட்டிவிட்டானே, இரு, நான்
பார்க்கின்றேன்’’ என்றால் துன்பத்தைக் கொடுக்கும் நாள். அவர்கள்
சொன்னவுடன், அல்லது நம் பையனே “இப்படிப் பேசிவிட்டானே” என்ற
உணர்வுகள், ஆத்திர உணர்வுடன் தீர்க்கப்படும்போது நமக்குக் ‘’கெட்ட நாள்’’. நமக்குள் அந்த உணர்வின் தன்மையைக் கூட்டுகின்றது.
அதே சமயத்தில், நம்மை யாராவது திட்டினால், இந்த உணர்வின்
தன்மை கொண்டு, உணர்ச்சிவசப்பட்டு ஏசும் நிலை
வந்தாலும், ‘’ஓம் ஈஸ்வரா’’ என்று உயிரை எண்ணுங்கள், அந்த ‘’மகரிஷிகளின் அருள்
ஒளியை நான் பெற வேண்டும்’’ என்று ஏங்குங்கள், ‘’என் ஜீவாத்மா பெற
வேண்டும்’’ என்று
உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள். அப்பொழுதே இது அடங்கும்.
ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு நம்மைத் தூண்டும்
நேரத்திலும், நாம் அந்த
ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக்
கையில் எடுத்துக் கொண்டால், அவர்களால் சங்கடமாக ஏற்படுத்திய உணர்வுகள்
நம்மை ஆட்டிப்படைக்காதபடி, அதை அடக்க இந்த ஆயுதம் உதவும்.
அடுத்து யார் நமக்கு தவறு செய்தார்களோ, அவர்கள்
மகரிஷிகளின் அருளால், அவர்கள் எண்ணத்திலே, அவர்கள்
நாளை செய்வது நல்லதாக வேண்டும் என்று ஆணையிடுங்கள். ஆக, உங்களுக்குள் இந்த உணர்வுகளைத்
தடுக்கச் செய்யுங்கள்.
இதை நீங்கள் பயன்படுத்தி, ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின்
அருள் ஒளிகளைச் சேர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். மனித
வாழ்க்கை, அது எந்த நிமிடமென்று சொல்ல முடியாது.
நாம் இப்பொழுது எந்த நிலைகளில் இருந்தாலும், மனிதருடன் வாழப்படும்
பொழுது குறைகளைக் காணாமல் இருக்க முடியாது. இன்றைய விஞ்ஞான உலகத்தில், குறைகள் கண்டு கொண்டுதான்
இருக்கிறது.
ஆனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் இந்த ‘’ஆத்ம சுத்தி’’ செய்து புனிதப்
பயணத்தை, அந்த
மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் சேர்த்து, ஒவ்வொரு நிமிடமும் அந்த புனிதப் பயணமாக இருக்க
வேண்டும்.
உங்களிடம் யாம் பேசுவது என்ன? நீங்களெல்லாம்
மகிழ்ந்திருந்தால் தான், நீங்கள் மகிழ்ச்சியான எண்ணங்களைச் சொன்னால்தான், எமக்கும் ஒரு மகிழ்ச்சி
ஏற்படுகின்றது.
அதைப் போல, நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு,
யாராவது துன்புற்று வந்தாலும், உடனே “அவர்களுக்கு நன்றாகிப் போகும்” என்று
நீங்கள் சொல்லுங்கள். அவர்களுக்கு உடல் நலமாகிவிடும்.
அப்பொழுது அவர்களுடைய எண்ணங்களைச் சொல்லும்போது, அந்த மகிழ்ச்சியான எண்ணங்களை, உங்களுக்குச்
சொந்தமாக்குங்கள்.
இப்பொழுது நான் எப்படி உங்களுக்கு நல்லதாக
வேண்டுமென்று எண்ணுகின்றேனோ, அதைப் போன்று, நீங்கள் ஒவ்வொருவரும் இந்த ‘’ஆத்ம சுத்தி’’ செய்துகொண்டு
நீங்கள் ஒவ்வொருவரும் இந்த எண்ணத்தைப் பரப்புங்கள்.
நம்முடைய மூச்சு, பிறருடைய துன்பங்களைப் போக்க உதவ வேண்டும். துன்பமான உணர்வுகளை காதிலே கேட்டு, நம் உடலுக்குள் நின்று, அந்தத் துன்பங்கள் நம்மை ஆட்டிப்படைத்துவிடக் கூடாது.
ஏனென்றால், நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், பிற துன்ப அலைகள், இவை எல்லாம்
விஷம். அது ஊடுருவி நம்மைக் கெடுக்கத் துரித நிலைகளில் செயல்படும். அதை மாற்றுவதற்கு, நமக்குள் மெய்ஞானிகளின் அருள் ஒளி இருந்தால்தான் முடியும்.
மெய் ஞானிகளின் அருள் ஒளி நெருப்பு. அந்த நிலையின் தன்மையை நாம் பெற வேண்டும். ஆனால், இதற்கு குருவின் துணை வேண்டும். குருவின் இணைப்பு கொண்டு, அன்று மகரிஷிகள் எவ்வழிகளில் எடுத்தார்களோ, அந்த உணர்வின் ஆற்றலின் நிலைகள் கொண்டு, அதைப் பின்பற்றி நடப்போரின் நிலைகள் கொண்டுதான், அந்த சக்தியைப் பெற்றிட முடியும்.
ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி செய்து, நீங்கள் இந்த வாழ்க்கையில் புனிதம் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சி, உங்களுக்கு வெற்றியைத் தரும்.
உங்கள் குடும்பத்தில், யாருக்கு எந்தச் சிக்கல் வந்தாலும், இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள், எல்லாமே நல்லதாக வேண்டுமென்று எண்ணுங்கள்.
இதைப்போன்று சிறிது நாளைக்கு முயற்சி எடுத்துப் பாருங்கள். இந்த உண்மை நிலைகளை நீங்கள், உங்கள் உடலுக்குள்ளும், உணர்வுக்குள்ளும் பார்க்கலாம். எமது அருளாசிகள்.
மெய் ஞானிகளின் அருள் ஒளி நெருப்பு. அந்த நிலையின் தன்மையை நாம் பெற வேண்டும். ஆனால், இதற்கு குருவின் துணை வேண்டும். குருவின் இணைப்பு கொண்டு, அன்று மகரிஷிகள் எவ்வழிகளில் எடுத்தார்களோ, அந்த உணர்வின் ஆற்றலின் நிலைகள் கொண்டு, அதைப் பின்பற்றி நடப்போரின் நிலைகள் கொண்டுதான், அந்த சக்தியைப் பெற்றிட முடியும்.
ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி செய்து, நீங்கள் இந்த வாழ்க்கையில் புனிதம் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சி, உங்களுக்கு வெற்றியைத் தரும்.
உங்கள் குடும்பத்தில், யாருக்கு எந்தச் சிக்கல் வந்தாலும், இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள், எல்லாமே நல்லதாக வேண்டுமென்று எண்ணுங்கள்.
இதைப்போன்று சிறிது நாளைக்கு முயற்சி எடுத்துப் பாருங்கள். இந்த உண்மை நிலைகளை நீங்கள், உங்கள் உடலுக்குள்ளும், உணர்வுக்குள்ளும் பார்க்கலாம். எமது அருளாசிகள்.
5. ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் ஏன் ஆத்மசுத்தி
செய்ய வேண்டும்? - விளக்கம்
உதாரணமாக, சில
வருடங்களுக்கு முன் ஒருவன் நமக்கு கெடுதல் செய்திருப்பான். அதனால் நம் குடும்பமே
நஷ்டம் அடைந்திருக்கும். இல்லாததைச் சொல்லி இருப்பான்,
அவனைப் பார்த்தவுடன், கஷ்டமான
நிலைகள் நமக்குள் ஏற்கனவே பதிவானது, இழுத்து நம்
ஆன்மாவில் வந்துவிடும்.
அப்பொழுது, அவனை
வெறுக்கும் நிலைகள், நமக்குள் உருவாக
ஆரம்பித்துவிடும். சிறிது நாள், அதற்குச் சாப்பாடு இல்லாமல் இருந்தது. சாப்பாடு கிடைத்ததும், வீரியம் அடைய ஆரம்பித்துவிடும்.
மண்ணுக்குள், எத்தனையோ
வித்துகள் மறைந்து இருக்கின்றது. சிறிது காலம் மழை இல்லையென்றால், வறண்டு போய்விடுகின்றது. ஒரு நாள் மழை பெய்துவிட்டால், தளதளவென்று வெளியில் வரத் தொடங்கி விடுகின்றது.
இதைப் போன்றுதான்,
பகைமை உணர்வுகள், அவன் செய்த தவறான நிலைகள் நமக்குள் பதிவானாலும், அவனைப்
பார்த்தவுடனே, அந்த இனத்தைத் தனக்குள் கவர்ந்து, அதனின் செயலாகத் தனக்குள் ஆகாரம் தேட
ஆரம்பித்துவிடும்.
அப்பொழுது, நாம் இவ்வளவு
தியானம் எடுக்கின்றோம், அவனைப் பார்த்தவுடனே,
கோபம் வருகின்றது என்று நினைப்போம்.
இந்த உணர்வு இங்கு வந்தபின், இரவு தூங்கினால் கெட்ட கனவாக வரும். அந்த வெறுப்பின் உணர்வுகள்,
நமக்குள் வரும் பொழுது எப்படியெல்லாம் இருந்தோமோ, நம் எண்ணத்திற்கு அவன் நினைவு வராது. கெடுதல் செய்தவனைப் பார்த்து,
அந்த உணர்ச்சி நமக்குள் தூண்டப்பட்டாலும், அவன் உரு நமக்குள் நினைவிற்கு வராது.
அந்த நேரத்தில், மற்ற மனிதர்களிடத்தில் உருவான, கெடுதல் செய்த
உணர்வின் தன்மை, நமக்கு எதிரில்
இருந்தால், அது வந்துவிடும்.
இரவில் தூங்கும் பொழுது,
யாரோ கெடுதல் செய்கின்ற மாதிரி, இன்னொரு உரு நமக்குள்
தெரியும். நாம் முன்பின் பார்த்திருக்க மாட்டோம். அந்த மனிதனின் உருவம் நமக்குள்
தெரியும். அப்பொழுது நம்மை அறியாமலே, இரவு
வேளைகளில், தீமையின் உணர்வுகள் நம் தூக்கத்தைக்
கெடுக்கும்.
அந்த மாதிரி நேரங்களில், நாம் இரவில் தூங்கும் பொழுதெல்லாம், இந்த
உணர்வுகள் வரும் பொழுதெல்லாம், “ஈஸ்வரா” என்று உயிரை வேண்டி, துருவ நட்சத்திரத்தின்
உணர்வுடன் இணைத்து, அதைப் பெற வேண்டும் என்று எண்ணி,
உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும். அதைச் செலுத்தியவுடன், தன்னை அறியாமலே தூக்கம்
வரும்.
எந்தெந்த வகையில் தீமைகள் வந்தாலும், இப்படி நாம் எடுத்துக் கொண்டால்தான், நமக்குள் தூய்மைப்படுத்த முடியுமே தவிர, ஒரேடியாக
ஜெபமிருந்து ஆண்டவன் அருளைப் பெறுவேன், என்று சொன்னால்
நடக்காது.
ஒவ்வொரு நிமிடத்திலும், உணர்ச்சிகளைத்
தூண்டிக் கொண்டே இருக்கும். அவ்வப்பொழுது, அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வை, இணைத்துக்
கொண்டே இருக்க வேண்டும். அதை அடக்கிக் கொண்டே வரவேண்டும். இப்படி ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும், அதை அடக்கிக் கொண்டே வரவேண்டும்.
அப்படி அடக்கிக் கொண்டே வந்தோமென்றால் அது அப்படியே
உறைந்துவிடும். எல்லா உணர்வுகளிலும், அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துக்
கொள்ளவேண்டும்.
இப்படி மனிதன் அடக்கிய நிலைகள்தான், இந்த பூமியில் எத்தனையோ விதமான விஷங்கள்,
கோபங்கள், வெறுப்புகள் இவைகளை எல்லாம்
அடக்கினான்.
அவ்வாறு அடக்கி, அவனுடைய வாழ்க்கையில் செய்யும் முறைகள்,
இப்படி அந்த உணர்வைச்
சேர்த்துக் கொண்டு வரும் பொழுது, பேரானந்தப் பெரும் செல்வம் நமக்குக் கிடைக்கின்றது.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்,
மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் இணைத்துப் பழகவேண்டும். இல்லையென்றால், நான் எல்லாம் செய்கின்றேன், ஆனால்
உலகில் எங்கு திரும்பிப் பார்த்தாலும், இப்படித்தான்
இருக்கும் என்று, இதற்கு வலு கொடுத்து விடுகின்றோம்.
அப்பொழுது, நாம்
போகும் பாதையில் புவியின் ஈர்ப்பிற்கு வந்து விடுகின்றோம்.
எது எப்படி இருந்தாலும், எவ்வளவு கடுமையான நிலைகளை,
நாம் பார்த்துணர்ந்தாலும், ஒவ்வொரு
நொடியிலும், ஆத்ம சுத்தி என்ற நிலையை, நம் ஆன்மாவில் கலக்கும் நிலையை அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப்
பெறச்செய்து, தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
இதுதான் ஆத்மசுத்தி என்பது. இதை, முறைப்படி நம் வாழ்க்கையில் செய்து கொண்டே இருக்க வேண்டும். காற்று பலமாக அடிக்கும் பொழுது, தூசி
வருகின்றது. அதிகமாகத் தூசி வரும்போது, ஒதுங்கிக் கொள்கின்றோம்.
இதே மாதிரி, தீமையான
உணர்வு வரும் பொழுது, அந்த எண்ணத்தில் இருந்து விலகி
நிற்க, அந்த மகரிஷிகளின்
உணர்வை ஆதாரமாக வைத்து, இதிலிருந்து. சிறிது நேரமாவது விலகி நிற்க வேண்டும்.
நாம் எப்படியும் ஒரு இடத்திற்குப் போக வேண்டும் என்று
நினைக்கின்றோம். அங்கு வெயில் குறைவாக இருந்தது. போகப் போக, வெயில் சூடு அதிகமாகின்றது. அதிகமான அந்த
நேரத்தில், விலகி நிற்கின்றோம்.
இதைப் போன்று, நம்
வாழ்க்கையில், கடுமையான நிலைகள் வரும் நேரத்தில், மகரிஷிகளின் அருள்சக்தி நாம் பெறவேண்டும், என்று
ஆத்ம சுத்தி செய்து, அந்த எண்ணத்திலிருந்து விலகி இருக்க
வேண்டும்.
6. உயிரான ஈசனுக்கு மகிழ்ச்சி
நாம் இங்கே கற்றுக் கொண்ட நிலைகள், நம் குடும்ப வாழ்க்கையிலும் சரி, நம் எதிரியாக இருந்தாலும் சரி,
நம் சொல்லின் நிலைகள் அங்கே இனிமைப்படுத்த வேண்டும்.
மற்றவர்கள் காரமான நிலைகளில் பேசினாலும், நாம் எடுத்துக் கொண்ட ஜெபத்தின்
பலன், பிறர் காரமாக பேசக்கூடிய உணர்வுகளைத் தடுத்து
நிறுத்தும் ஆற்றலாகப் பெறவேண்டும்.
ஆக, இதை ஒவ்வொரு
நிமிடமும், உங்களுக்குள் ஆற்றல் பெறுவதற்கு சதா, நீங்கள் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை எடுத்து,
உங்கள் உயிரை ஈசனாக மதித்து, அந்த
ஈசனுக்கு, “பாலாபிஷகம்” ஆலயங்களில்
செய்வது போன்று, உங்கள் ஈசனுக்கு, அந்த மெய்ஞானியின் அருள் சக்தியான நிலைகளை, நீங்கள்
சுவாசித்து, அபிஷேகிக்க வேண்டும்.
அந்த மெய்ஞானிகளின் உணர்வின் மணங்கள், உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக,
உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து, அந்த
அபிஷேகத்தை, யாம் செய்து கொண்டே இருக்கின்றோம்.
ஆகையினாலே, உங்கள் உயிரான
ஈசனுக்கு, இந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று, ஒவ்வொரு நிமிடமும் இந்த ஆத்ம சுத்தியைச்
செய்து, அங்கே
உங்கள் உயிரான நிலைகளுக்கு, அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைச் சுவாசித்து, உங்களுக்குள் மகிழச் செய்யுங்கள்.
இதைப் போல, ஆத்ம சுத்தி என்ற
ஆயுதத்தை நாம் எடுத்து பிறருக்குச் சொன்னாலும், அவர்
உடலில் இருக்கக்கூடிய உயிரான ஈசனிடம், நாம்
வெளிப்படுத்தும், இந்த உணர்வுகளை அவர்கள் சுவாசித்து,
ஒலிகள் மூலம் உயிரிலே பட்டு, அந்த
உணர்வுகள் தூண்டப்படுகின்றது.
நாம் பேசிய உணர்வுக்கொப்ப, அந்த
உணர்வின் நிலைகள் அந்த உடலை இயக்கச் செய்து. நம்மைப்
பக்குவப்படுத்துவதோ, நம்மை சொல்லச் செய்வதோ, இதைப் போன்ற நிலைகள்
ஏற்படுகின்றது.
ஆகையினாலே, இதையெல்லாம்
கண்டுணர்ந்த நாம், ஒவ்வொரு நிமிடமும் இதைப் பாச
அணைப்புடன், நாம் எப்படி, குழந்தை
தவறு செய்தாலும், பாசத்துடன் அணைத்துக் கொள்கின்றோமோ,
அதைப் போன்று, நாம் உடலிலே வேதனையாகும்
பொழுது நமக்குள் ஒரு அசுத்தம் பட்டுவிட்டால், அசுத்தம்
என்ற நிலைகளை எண்ணாதபடி, அதைத் துடைக்க முற்படுகின்றோம்.
அதைப் போன்று, பிறருடைய
எண்ணங்களில், அசுத்த சொற்கள் வந்தாலும், நாம் எண்ணத்தாலே துடைக்கும் பக்குவத்தை, எப்படி
அசுத்தமான நிலைகள் இருந்தாலும், மனமுவந்து துடைக்கின்றோமோ,
அதைப் போன்று, பிறருடைய அசுத்த
உணர்வின் எண்ணங்கள் தோற்றுவித்தாலும், நாம் இந்த “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி,
அவருடைய அசுத்தத்தை நீக்கும் ஆற்றலை,
நாம் செய்து பழகுவோமேயானால், நமக்குள் ஐக்கியமாகும்
நிலைகள் பிறக்கும்.
இதன் மூலம், நாம் அனைவரும்
ஏகாந்தமாக மகிழ்ந்து வாழலாம். அந்த மகரிஷிகள் சென்ற
எல்லையை, அனைவரும் எளிதாக அடைய முடியும். எமது
அருளாசிகள்.