ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 7, 2012

சர்வ தீமைகளையும் நீக்க குரு கொடுக்கும் பயிற்சி 2


20. தீமைகள் வராது தடுக்க, ஞானகுரு நமக்குக் கொடுக்கும் பாதுகாப்புக் கவசம்
மெய்ஞானிகள் காண்பித்த அருள் வழியில், மக்கள் அனைவரும் ஏகோபித்த நிலையில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை தம்முள் கவர்ந்து வலுவாக்கும் பொழுது, நம்மிடத்தில் தீமை என்ற நிலைகள் அணுகுவதைத் தடுத்து விலக்கிவிடும்.

நாம் கவராது விட்டுவிட்ட தீமையின் உணர்வுகள் அனைத்தையும், காலையில் ஆறு மணிக்கெல்லாம் சூரியன் கவர்ந்து, மேலே கொண்டு சென்றுவிடும்.

இதனால், நமது பூமியில்பரமாத்மாவாக இருப்பது சுத்தமாகின்றது. நமது ஆன்மாவும் சுத்தமாகின்றது. நமது ஆன்மா சுத்தமாகும் பொழுது, நமது உடலில் உள்ள, ஜீவான்மாவும் சுத்தமாகின்றது. நமது உயிரான்மாஅது ஒளியின் தன்மை பெறுகின்றது.

நாம் மெய்ஞானிகளின் அருள் உணர்வைப் பெறுகின்றபொழுது, அது, நமக்கு சொர்க்கவாசலாக அமைகின்றது. இதை விடுத்து, கோவிலுக்குச் சென்று தெய்வத்தைத் தரிசிக்கின்றேன் என்று சொல்லி, ஒருவர் மீது ஒருவர் விழுந்து, ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, நமக்கு வெறுப்புத்தான் வரும். ஆகவே, இது மனிதருக்குகந்த நிலையல்ல, அசுர உணர்வுதான் வரும்.

அதே போன்று, கோவிலில் பிரசாதம் கொடுக்கும் பொழுது பாருங்கள். நான் முதலில் பெறவேண்டும் என்றுதான் எண்ணுவார்களே தவிர, அனைவரும் ஒன்றுபட்ட உணர்வு கொண்டு, மனதைக் கட்டுப்படுத்தி, அங்கே நிற்கிறார்களா என்றால் இல்லை.

மற்றவர்கள் முதலில் பெறட்டும் என்று நாம் எண்ணும்பொழுது, நமது மனம் கொண்டு, நாம் இருந்த இடத்திலிருந்தே பெறமுடியும். 

அவர்கள் அருகிலே சென்று பெறுகின்றனர். ஆனால், அவர்கள் அருகில் செல்வதற்கு முன்னால்நாம் இருந்த இடத்திலிருந்து, உடனடியாகப் பெறுகின்றோம்.  இந்த உண்மையை, அறிந்து கொள்தல் வேண்டும்.

ஆகவே, நமது மனம் பண்பட்டால்தான், நமது குணங்கள் பண்படும். நமது குணங்கள் பண்பட்டால்தான், நமது வாழ்க்கையினைப் பண்படுத்தும் நிலை வரும். ஆகவேஇதையெல்லாம் நாம் சிந்தித்தல் வேண்டும்.

இவைகளை எல்லாம் யாம் பெறவேண்டும் என்றுதான், எமது குருநாதர் மலை, காடு, என்று பல இடங்களுக்கு எம்மை அழைத்துச் சென்றார்.

அப்படி அழைத்துச் செல்லும் காலத்தில், ஒரு முறை எமக்கு ஒரு பச்சிலையைக் காண்பித்துக் கொடுத்தார். அந்த பச்சிலையைக் கையில் கொடுத்து, “அதில் உன் உணர்வின் மணத்தை ஓது, அதனின் உணர்வின் எண்ணத்தால் எண்ணி, அங்கே போட்டு விட்டு வாஎன்றார் குருநாதர்.

குருநாதர் சொன்ன முறைப்படி, உணர்வின் மணத்தை ஓதிப் போட்டு விட்டு வந்தபின், அந்த பக்கம் புலி ஒன்று வருகின்றது. யாம் அங்கு போட்டிருந்த பச்சிலையை, அந்தப் புலி நுகர்ந்த பின், அப்படியே அசையாமல் நிற்கின்றது. அதே சமயத்தில், மலைக் காட்டுக்குள் மறதிப் பூடு”  என்பதை குருநாதர் எமக்கு காண்பித்தார்.

இந்த மறதிப் பூட்டினை, இலேசாகக் கிள்ளி யாராவது ஒருவரது வீட்டில் போட்டுவிட்டு வந்துவிட்டாலோ, அல்லது அவர்களது வீட்டின் கதவிடுக்குகளில் வைத்து விட்டாலோ போதும், அவர்கள் வீட்டிற்கு வெளியே என்னென்ன செயல்கள், வேலைகள் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தாலும்அவைகளெல்லாம் ஞாபகத்தில் இருக்காது.

இந்நிலையை, நாம் ஒருவருக்குச் செய்தால் என்னவாகும். நாம் பெரிய மனிதர் ஆகிவிடலாம். இது போன்ற நிலைகள், நாட்டில் நிறைய உண்டு. குருநாதர், இன்னும் சில வேர்களைக் காண்பித்தார். அந்த வேர்களைக் கையில் வைத்துக் கொண்டால், விஷப் பூச்சிகள் மட்டுமல்ல, புலியும் கூட ஒடுங்கி நிற்கின்றது.

ஏனென்றால், மனித உடலுக்குள் அந்த மணத்தின் தன்மை கொண்டபின், விஷம் கொண்டவைகள் பயப்படுகின்றன. அவைகளுடைய விஷம் ஒடுங்குவதினால், அவைகள், தங்களுடைய வலுவையும் இழந்துவிடுகின்றன.

இப்படி குருநாதர் ஒவ்வொன்றாகக் காண்பித்து, இயற்கையின் உண்மையின் நிலைகளை உணர்த்தி, எமக்குச் சில ஆசைகளை ஊட்டுகின்றார். இவைகளைக் காணும் பொழுது, எமக்குள் உடனே அகந்தை வருகின்றது. எவராவது வம்புக்கு வரட்டும், அவர்களை ஒரு கை பார்ப்போம், என்ற எண்ணம்தான் வருகின்றது.

ஆனால், தீமைகள் நமக்குள் வராது தடுக்கும், பாதுகாப்புக் கவசமாக வைத்துக் கொள்வோம் என்ற எண்ணம் இல்லை.

அப்பொழுது  குருநாதர், “தீமைகள் உடலுக்குள் புகாது தடுக்கும் நிலைகள் கொண்டு, நல்லுணர்வின் தன்மையை உனக்குள் வலுவாகச் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

தவிர, பிறரை வீழ்த்துவது எளிது.  வீழ்த்தும் உணர்வு, திருட்டுத்தனமாக உனக்குள் சென்று விடுகின்றது. வீழ்த்தும் உணர்வை உனக்குள் எடுக்கும் பொழுது, இந்த உணர்வுகள், உள் நின்று என்ன செய்யும்? அதே தவறைத்தான் செய்ய வைக்கும்”.

ஆகவே, “நான் கொடுத்த சக்தியை நீ இழக்கத்தான் நேருமே தவிர அதை வளர்க்க முடியாது.  ஒருவர் தீமை செய்கிறார் என்றால், அவரைத் தீமையின் உணர்வுகளிலிருந்து மீள வைக்க வேண்டும். அவருக்குத் தெளிந்த உணர்வை ஊட்ட வேண்டும்

"நீ ஏன் அவர்களுக்கு தெளிந்த உணர்வை ஊட்ட வேண்டும்?" என்று குருநாதர் கேட்டார்.

ஓம் நமச்சிவாயஎன்று, அவருக்குள் தவறின் உணர்வுகள் இயங்குகின்றது. அவர் செய்யும் தவறின் உணர்வுகளை நாம் நுகர்ந்தால், “சிவாய நம ஓம்என்று அவருடைய தவறின் உணர்வுகள் உனக்குள் வந்து, அவர் செய்த தவறையே உன்னையும் செய்யத் தூண்டும் என்று தெளிவாக்கினார்.

ஆகவேஒவ்வொரு மனிதருடைய உயிரையும் கடவுளாக மதித்தால், அவர்களுடைய உடலைக் கோவிலாக மதித்தால்அவர்கள் செய்யும் தவறின் உணர்வுகள், உனக்குள் வராதுஎன்று எனக்கு உபதேசித்தார்.

இதன் வழி கொண்டு, உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், என்று நாம் தவம் இருப்போம். அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழவேண்டும், என்று பிரார்த்திப்போம்.  இந்த உடலுக்குப்பின், “பிறவி இல்லா நிலை என்ற அழியா ஒளிச்சரீரம்”  நாம் அனைவரும் பெறுவோம்.


21. “முருகு” மாற்றி அமைக்கும் சக்தி
மனிதனானபின், அன்பால், பரிவால் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டு அறிகின்றோம். வெளியில் நடக்கும், பல தவறான உணர்வுகளை நுகருகின்றோம். இவையனைத்தும் உடலுக்குள் வலிமையாகின்றது.  நம் உடலில் உள்ள நல்ல குணத்திற்கும், இதற்கும் போர் நடக்கின்றது.

இதைத்தான் சாஸ்திரங்களில், பரசுராமனுக்கும் சீதாராமனுக்கும் போர் நடக்கின்றது என்று காட்டினார்கள். சீதாராமனோ, விஷ்ணு தனுசை எடுத்து, பரசுராமனை வீழ்த்துகின்றான். பரசுராமனோ சிவ தனுசை எடுக்கின்றான். ஆனாலும் தோல்வி அடைகின்றான். நமது சாஸ்திரங்களில் தெளிவாகக் காட்டி இருக்கின்றார்கள்.

வராகனுக்குப்பின் (பன்றி), பரசுராமன், மனிதன் என்ற நிலைகள் ஆனபிறகு,  எல்லோரும் பேரன்போடு வாழவேண்டும் என்ற ஆசை வருகின்றது. ஆனால், நமக்குள் இருக்கும் தீமையை நீக்கத் தெரியவில்லை. 

நமது சந்தர்ப்பம் எது வலிமையாகின்றதோ, அதன் வழிதான் செல்லுகின்றோம்.  மனிதனானவன், ஒரு குழம்பு வைக்கவேண்டுமென்றால், மிளகாய், உப்பு, புளி அனைத்தையும் சமமாகச் சேர்த்து, சுவைமிக்கதாகச் சமைக்கின்றோம்.

இதைப்போல, வேதனை என்ற உணர்வை நமக்குள் எடுத்துத் தெரிந்து கொண்டாலும், அதை மாற்றி அமைக்கும் சக்தி, நமக்குள் வேண்டும். அந்த சக்தி பெறச் செய்யும் சந்தர்ப்பத்தை, உங்களுக்கு ஏற்படுத்துவதற்குத்தான், இவ்வாறு உபதேசிப்பது.

இதன் மூலம், உங்களை நீங்கள் அறிகின்றீர்கள். இந்த உயிரின் இயக்கமும், மனிதனான நிலையும், உங்களால் அறிய முடிகின்றது. கோபிப்பது நாமல்ல; வேதனைப்படுவதும் நாமல்ல; வெறுப்படைவதும் நாமல்ல; தற்கொலை செய்யச் சொல்வதும் நாமல்ல, தவறு செய்ய சொல்வதும் நாமல்ல.

நெருப்பிலே ஒரு பொருளைப் போட்டால், அந்த பொருளின் மணம் தான், நுகர்ந்தவரை இயக்குகின்றது. இதைப் போல, நம்முடைய எண்ணம்தான் நம்மை இயக்குகின்றது.

நமது எண்ணம் கொண்டு, வேதனைப்படுவோரை எண்ணினால், கோபப்படுவோரை எண்ணினால், அது வாலி”. நமது நல்ல குணங்களை அது அடக்கி, நமக்குள் வலிமையானதாக மாறி, நம்மை, அதன் வழிகளில் இயக்குகின்றது.

இவைகளை நமக்குள் மாற்றி அமைக்க வேண்டுமென்றால், நமது ஆறாவது அறிவு கொண்டு,தீமைகளை வென்று, ஒளியின் உடல் பெற்ற, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாங்கள் பெற வேண்டும், ங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும், ங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்என்று, இந்த உணர்வைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

இது வலுவானபின், “நாங்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும், கனியைப் போன்ற இனிமையான சொல்லும், செயலும், பெறவேண்டும், தெய்வீக குணத்தைப் பெறவேண்டும், தெய்வீக அன்பைப் பெறவேண்டும், தெய்வீக அருளைப் பெறவேண்டும், தங்கத்தைப் போல, மனம் மங்காத நிலை பெறவேண்டும், மலரைப் போல மணம் பெறவேண்டும், மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.
       
கடவுளின் அவதாரத்தில் ஒன்பதாவது அவதாரமாக, நாராயணன், வாசற்படியில், மடிமீது இரண்யனை வைத்துப் பிளந்தான் என்று காட்டப்பட்டுள்ளது.

சூரியனான நாராயணன்,  27  நட்சத்திரங்களும் வெளிப்படுத்தும் பால்வெளி மண்டலங்களிலிருந்து, தான் கவர்வதை, தனது உடலில் உள்ள பாதரசத்தால் மோதிப் பிளக்கின்றது. இது அதன் சந்தர்ப்பம். 

ஆனால் மனிதனோ, வேதனைப்படும் மனிதனைச் சந்திக்கும்போது, வேதனையைப் படரவைக்கின்றது. நமது அந்த சந்தர்ப்பம், உடல்களில் உள்ள உணர்வுகளை, பலவீனமடையச் செய்கின்றது.

பலகோடி உடல்களில் தீமையை நீக்கிய, "துருவ நட்சத்திரத்தின் பெரருளைப் பெறும் சந்தர்ப்பத்தை, ஏற்படுத்த வேண்டும். அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, நமது கண்களின் நினைவிற்குக் கொண்டு வரவேண்டும்.

பின் புருவ மத்திக்கு, கண்களின் நினைவைக் கொண்டு வரவேண்டும்.  நம் மூக்கின் வழி சுவாசிப்பதற்கு மாறாக,  கண் வழி கவர்ந்து, இதை இணைக்கின்றோம்.  இது வலிமையானபின், உணர்வின் பிராணயாமம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக மாற்றுகின்றோம். இதுதான் முருகு, மாற்றி அமைக்கும் சக்தி.

ஆகவே, தீமைகளை நீக்கிய அருள் உணர்வை, உயிரிலே இணைத்தபின், தீமைகள் நம் உடலுக்குள் செல்லாது, உடலைச் சுற்றியே நிற்கும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்,ங்கள் இரத்த நாளங்களிலே கலந்து, ங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று வலுவெற்ற வேண்டும். ஒரு நிமிடம் வலுவானபின்,  அந்த சக்தி உடலுக்குள் வலுவாக்கப்படும்போது, உடலைச் சுற்றி இருக்கும் தீமைகள்,  நம்மைவிட்டு அகலும். 

எப்படித் துணியில் அழுக்குப்பட்டால், சோப்பைப் போட்டு, நுரையை ஏற்றி, அழுக்கை அப்புறப்படுத்துகின்றோமோ, அதைப் போல,  துருவ நட்சத்திரத்தின் பேரருளை நம் உடலுக்குள் செலுத்தி, அதை வலுவாக்கி, தீமைகளை, நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டு, அகன்று செல்ல செய்கின்றோம்.

அதற்குப்பின் ஒரு நோயாளியைப் பார்த்தால், துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நீங்கள் பெற்று, உடல் நலம் பெறுவீர்கள் என்று வாக்கினை அங்கு பதிவு செய்தால், அவரும் நலம் பெறுவார்.

ராமனின் பக்தன் ஆஞ்சனேயன். சுவைக்கொப்ப எண்ணங்கள், சீதாராமன். தீமைகளை நீக்கியது துருவ நட்சத்திரம், அது சீதாராம். அந்த ராமனின் பக்தன் ஆஞ்சனேயன். அவன் வாயு புத்திரன், சுக்கிரீவனின் மந்திரி. 

சுக்கிரீவன் என்பது துருவ நட்சத்திரம். அதை எண்ணத்தால் எண்ணி (சீதாராம்), நமக்குள் வலுப் பெற்று, மற்றவர் பெறவேண்டும் என்று சொல்லும்போது,  அந்த வலுவான எண்ணம் (ஆஞ்சனேயன்)  வாயுவாகச் சென்று, மற்றவர்களையும் பெறச் செய்யும்.

22. தீமைகளை நீக்குவதற்கு, “ஞானகுரு நமக்கு இடும் கட்டளை”
நான் ஏதோ சொல்கின்றேன் என்றும், நான் கல்வி அறிவு இல்லாதவன் என்றும், எண்ண வேண்டாம். குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு, விண்ணுலக ஆற்றல்  அனைத்தும் மனிதனின் உடலுக்குள் இருப்பதனால் தான்,
‘’அந்த (உணர்வின்)  புலனறிவின் ஆற்றலை விண்ணிலே வீசி, உணர்வின் ஆற்றலை நீ நுகர்ந்து அறி’’,
‘’அந்த உணர்வின் தன்மையை, உனக்குள் வளர்த்துக்கொள்’’,
‘’இதுவே தீமையற்ற நிலைகளாக ஆக்கு’’.
‘’அது, தீமைகள் இருக்கும் மனிதனுக்கு, தீமைகளை நீக்க உதவட்டும்’’
என்று என் குருநாதர் எமக்குக் கட்டளையிட்டார்.

அவர் இட்ட கட்டளைப்படிதான், இதைச் செய்கின்றேன்.  உங்களிடத்தில் புகழ் தேவைக்கோ, பொருள் தேவைக்கோ அல்ல. எனக்கு, பொருள் ஒன்றும் தேவையில்லை, புகழும் தேவையில்லை.  

நீங்கள் மகிழ்ந்திருக்கவேண்டும், உங்களையறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும், உங்களின் மகிழ்ச்சியான உணர்வு, மற்றவர்களை மகிழ்ச்சி பெறச் செய்யும் சக்தியாக, மலர வேண்டும், அதைக் கண்டு எனக்குள் மகிழ்ச்சி தோன்ற வேண்டும். இது எமது குரு இட்ட கட்டளை.

இந்த உடல் சதமற்றது, நிலையாக இருப்பது உயிர். என்னை சாமி என்று பல பேர் கூப்பிட்டாலும், உயிர் சென்றுவிட்டால், என்னவென்று அழைப்பார்கள்?

சவத்தை எப்பொழுது அடக்கம் செய்வார்கள்? என்றுதான்  கேட்பார்கள்.  எனக்குள் இருக்கும் உயிரைத்தான் மதிக்கின்றார்கள். எல்லோருடைய நிலையும், உயிரைத்தான் மதிக்கின்றார்கள்.

இப்பொழுது, உங்கள் உடலில் இருக்கும் உயிரை மதித்து, நடந்து பாருங்கள், அந்த ஞானியின் உணர்வைச் சேர்த்துப் பாருங்கள், ஆக, இந்த உடலின் தன்மை தூசியாகும்.

ஆக, இந்த உடலுக்குள் நின்றுதான், மெய்ஞானியின் உணர்வை வளர்க்க முடியும். இதில் வளர்த்துத் தான், உயிருடன் ஒன்றச் செய்யமுடியும். உடலை மதிக்கவேண்டும், ஆனால், உடல்மீது பற்று வைக்கக்கூடாது.

உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, என்னைக் கேவலமாகப் பேசிவிட்டானே, இரு உன்னைப் பார்க்கின்றேன் என்று சொன்னால் போதும், உடலுக்கு முக்கியத்துவம் வந்துவிடுகின்றது. அவனின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கின்றீர்கள், அவர்கள் சொன்ன வழியில் சென்று, இந்த சரீரத்தைக் காக்கும் திறன் இழந்துவிடுகின்றீர்கள்.

இதிலிருந்து விடுபட, அந்த மெய்ஞானிகளின் அருளைப் பெற தியானித்து, அந்தத் தீய வினைகளை நீக்கி, மெய் ஒளி பெறும் தகுதி நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே இதை உபதேசிக்கின்றேன். 

நீங்கள் அனைவரும் மெய்யொளி பெறும் தகுதி பெறவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன், தியானிக்கின்றேன், வேண்டுகின்றேன், பிரார்த்திக்கின்றேன்.

உங்களை அறியாது சேர்ந்த இருள் நிலையைப் போக்கிடுவீர். அருள் ஞானியின் அருள் ஒளியைப் பெற்றிடுவீர், ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் வாழ்க்கையினைப் பெற்றிடுவீர், மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்திடுவீர்,  உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளியாகிடுவீர், என்றும் அழியா ஒளிச்சரீரம் பெற்றிடுவீர்.


23. அன்றாட வாழ்க்கையில் நாம் அவ்வப்பொழுது அருள் உணர்வுகளைச் சேர்த்து, தீமைகளை நீக்குதல்
நீங்கள் ஏதேனும் வேலையாக, வீட்டிலிருந்து வெளியே செல்கின்றீர்கள், அல்லது ஒரு தொழிலைத் தொடங்குகின்றீர்கள் என்றால், அது சமயம், அகஸ்திய மாமகரிஷிகளையும், அவர் துருவ மகரிஷியான நிலையையும், துருவ நட்சத்திரமான நிலையையும், இந்த மூன்று நிலைகளையும் ஏங்கி எண்ணுங்கள்.

அதனின் உணர்வுகளை நாங்கள் பெறவேண்டும்என்று எண்ணியபின், உங்கள் தொழிலைச் செய்யத் தொடங்குங்கள்.

இந்த முறையில், உங்களில் நீங்கள் பதிவு செய்யும் ஞானவித்துக்கள், உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் கருவாக வளர்ச்சி பெற்று, நீங்கள் உங்களில் எண்ணிப் பதிவு செய்ததைப் பெறக்கூடிய தகுதியான நிலைகளை, அந்த உணர்வின் அணுக்களை, உங்கள் இரத்த நாளங்களில் பெருக்குகின்றது. முதலில் கரு முட்டையாகின்றது. பின், அதனின் உணர்வின் தன்மையை எண்ண, எண்ண, அவைகள் அணுக்களாக வளர்ச்சியடைகின்றது.

உதாரணமாக, ஒரு கோழி முட்டையிட்டு அதை அடைகாத்து, அதன் உணர்வின் தன்மை கொண்டு அங்கே வெப்பமாக்குகின்றது. அதன்பின், அந்த அணுவின் தன்மை, வெப்பத்தின் துடிப்பு கொண்டு, கருவின் துணை கொண்டு, குஞ்சாக விளைகின்றது.

குஞ்சாக வெளிவந்தபின், தாய்க் கோழி எதைத் தன் உணவாக எடுத்துக் கொண்டதோ, அதே உணவைக் குஞ்சும் தன் உணவாக, உட்கொள்ளத் தொடங்குகின்றது.

 இதைப் போன்று, யாம் இப்பொழுது உங்களுக்குள், உபதேசத்தால் நுகரச் செய்த உணர்வுகள் அனைத்தும், உங்களிடத்தில் கருவாக உருவாகின்றது. அதனின் உணர்வுகளை நீங்கள் மீண்டும், மீண்டும், உங்களில் நினைவுபடுத்தும் பொழுது, உங்களிடத்தில் அந்த உணர்வின் அணுக் கருமுட்டைகள் வளர்ச்சி பெறுகின்றது.

நீங்கள், இதே எண்ணத்தைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது,  அது உங்களுக்குள் அடைகாக்கப்படுவது போன்றதாகி விடுகின்றது.

கோழி, தான் இரை தேடுவதற்கு வெகு தூரம் சென்றிருந்தாலும், தன் குஞ்சின் நினைவு கொண்டு, தான் முட்டையிட்ட அதே இடத்திற்கு வந்து, அடைகாக்கின்றது.

தைப் போன்று, நீங்கள் எந்தத் தொழிலுக்குப் போவதாக இருந்தாலும்,  மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் விளையச் செய்து, அடிக்கடி இந்த நிலைகளை எடுத்து பழகிக் கொண்டால், நீங்கள் வளர்த்துக் கொண்ட இந்த உணர்வுகள், உங்களுக்குள் அடிக்கடி நினைவு படுத்தி, அந்தச் சக்தியை நீங்கள் உங்களுக்குள் வளர்க்கும் திறனும், அடைகாப்பது போன்று, மகரிஷிகளின் அருள் சக்தியும், விளைகின்றது.

கோழி, தான் இரை தேடும் பொழுது, தன் குஞ்சுகளைக் கூவி அழைத்து, தன் குஞ்சுகளுக்கு இரை கொடுப்பதைப் போன்று, நமக்குள் அருள் சக்தியின் உணர்வுகள் அணுக் கருவாகிவிட்டால், இதனின் உணரச்சியின் கிளர்ச்சிகள் நமது இரத்த நாளங்களில் கிளம்பும் பொழுது, நமது உயிர் அந்த உணர்வுகளை இயக்கி, காற்றில் கலந்துள்ள, அருள்மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கண்கள் வழியும், காதுகள் வழியும், உடல் வழியும், நாம் சுவாசிக்கும் அந்த உணர்வு வழியும் நமக்குள் சுவாசித்து,  நமது உடலுக்குள் பரவச் செய்து, அந்த ஒளியான அணுக்களாக உருவாக்குகின்றது.

நாம் அருள் மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் நடந்தால், அது நமக்குள் வளர்ச்சி பெற்று,  பின், நம்முடைய நினைவாற்றல், மாமகரிஷி அகஸ்தியன் சென்ற பாதையில் செல்லும்.

நமது வாழ்க்கையில் எத்தகைய விருப்பு, வெறுப்புகளை நுகர்கின்றோமோ, அது நமக்குள் கருவாகி விடுகின்றது. உதாரணத்திற்கு, நாம் ஒன்றுமே செய்யவேண்டாம்.

ஒருவர் தாக்கப்படுவதை உற்று நோக்கி, அதனின் அச்ச உணர்வை நாம் நுகர்ந்துவிட்டால், அந்த அச்சத்தின் உணர்வுகள் நமது உடலில், ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகிவிடுகின்றது.

நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள், நமது இரத்த நாளங்களில் கருவாக உருப் பெற்றுவிடுகின்றது. இப்படி பதிவாகி,  பதிவானதை மீண்டும் நினைவுபடுத்தினால், அதனின் உணர்வுகளை நாம் நுகரும் சக்தி பெறுகின்றோம். அப்படி நுகரும் சக்தி பெற்றபின், அந்த உணர்வுகளை, நமது உயிர் உடல் முழுவதும் சுழலச் செய்கின்றது.

அந்த உணர்வுகள் நமது இரத்த நாளங்களில் கலக்கப்படும்பொழுது, அணுக்கருக்களின் தன்மையினை அடைகின்றது. நமது உடலில் கருவான அணுக்களுக்கு, வீரியம் ஊட்டுகின்றது.

வேதனைப்படுவோருடைய நிலைகளை நமக்குள் பதிவாக்கிவிட்டால், முதலில் சில காலம் தெரியாது. இந்த அச்சுறுத்தும் உணர்வுகள் நமக்குள் முதலில் நுகர்ந்து, அடைகாப்பது போன்று, அந்த அணுக்கருக்கள் வளர்ந்துவிட்டால். குஞ்சு தன் இரைக்காக கத்தும் பொழுது, தாய் கோழி கூற்று பரப்பி, தன் குஞ்சுக்கு இரை கொடுப்பது போன்று நமது உயிர், உணர்வின் ஒலி அலைகளை எழுப்பி, நமது சிறுமூளை பாகத்திற்கு எட்டச் செய்கின்றது.

பின், அந்த உணர்வின் தன்மை கொண்டு, கண்களுக்கும், செவிகளுக்கும், மூக்கிற்கும், உடலுக்கும் கிளர்ச்சிகளை உந்தி அதன்வழி சுவாசிக்கச் செய்து, அதனின் எண்ணத்தை நமக்குள் பெறச் செய்து, நமது இரத்த நாளங்களில் கலக்கச் செய்து, நமது உடலில் உள்ள அணுக்கருக்களுக்கு, ஆகாரத்தைக் கொடுத்து உதவுகின்றது.

இப்பொழுது, நாம் அருள் மகரிஷிகளின் அருளுணர்வுகளை நமக்குள் பெறவேண்டும், என்ற உணர்வினை, நமது இரத்த நாளங்களில் அணுக்கருவாக உருவாக்கி, காலையில், நாம் தொழிலுக்கு செல்லும் பொழுதோ, தொழில் ஆரம்பிக்கும் பொழுதோ, இந்த உணர்வினை அடிக்கடி கூட்டினோம் என்றால், அதை அடைகாத்தது போன்றதாகின்றது.

அவ்வாறு அடைகாத்து, அந்த உணர்வின் தன்மை குஞ்சாகப்படும் பொழுது, நம்மையறியாமலே நமக்குள் அந்த எண்ணங்கள் வரும்.

இதனின் உணர்வுகளை நமக்குள் வளர்த்துவிட்டால். நாம் எண்ணுவதற்கு முன்பே, அந்த உணர்வைக் கூட்டி, நமக்குள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, அந்த எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெறவேண்டும் என்று எண்ண, எண்ண, அதனின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. அடைகாப்பது போன்று காத்து, (திரும்பத் திரும்ப நுகரும் உணர்வுகள்) அந்தக் கருக்கள் நமக்குள் விளைந்து கொண்டேயிருக்கும்.

ஏனென்றால், நாம் நுகரும் உணர்வுகளெல்லாம், நம்முள் குஞ்சுகள் ஆனாலும், அடுத்தடுத்து நாம் தியானத்தில் எடுக்கும் பொழுது, இவைகளெல்லாம் கருக்களாகின்றன. பின், நினைவாக்கப்படும் பொழுது, அது வளர்ச்சி அடைந்து கொண்டே, இருக்கும்.

இப்படி நமது வாழ்க்கையில், ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒவ்வொரு குணத்திலும், ஒவ்வொரு உணர்விலும், அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, இணைத்துக் கொண்டே வரவேண்டும்.

அந்த மகரிஷிகள் தங்களுக்குள் வளர்த்துக் கொண்ட, அந்த விண்ணின் ஆற்றல் மிக்க சக்திகளை, அவர்கள்  எவ்வாறு உயிருடன் ஒன்றிய உணர்வுகளை, ஒளியின் சுடராக மாற்றி, இன்று சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து, வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றார்களோ, அந்த அரும் பெரும் சக்திகளை, நமக்குள் அணுக்கருக்களாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.  அதற்குத்தான் இதை உபதேசிப்பது, அந்த நிலைகளை அனைவரும் அடைவதற்குஎமது அருளாசிகள்.


24. விண்ணின் ஆற்றலைப் பெற்று, தீமைகளை நீக்கும் நிலை
பல நிலைகள், நாம் தவறு செய்யாமலே உருவாகின்றன. நாம் தவறு செய்யவில்லை. நாம் வயிறு நிறைய சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, பிறர் நம்முடன் சண்டை போட்டதன் நினைவுகளை,  நாம் கொண்டு வந்தவுடன், அன்று நமக்கு அஜீரணமாகின்றது; அல்லது சாப்பிட்ட ஆகாரத்தை சரியாகச் செயல்படுத்துவதில்லை.

ஏனென்றால்,  நம் உடலில் அனைத்து குணங்களின் செல்கள் பதிவாகியிருக்கின்றது. நாம் எந்த குணத்தைச் செயல்படுத்துகின்றோமோ, அந்த உணர்வான செல்கள் அனைத்துமே, ஒருங்கிணைந்து இயக்கப்படும்போது, அதற்குத்தக்கவாறுதான் நம் நரம்பு இயங்குவதும், நம் சுவாசம் இயங்குவதும், குடல் இயங்குவதும், நம் எண்ணங்கள் பேசுவதும் எல்லாமே.

இப்பொழுது, கோபமாகப் பேசுபவரைப் பார்த்தால், உச்சிமுடி நட்டமாக எழுந்து நிற்கும். பயம் கலந்த, ஒரு கோபத்தை உண்டாக்கப்படும்போதும், சில்லென்ற நிலை ஏற்படும்படி, எதிர்பாராத ஒரு பயத்தை உண்டாக்கினாலும், நம் தலைமுடி கிர்ரென்று மேலே எழுந்துவிடும். இவையெல்லாம், இந்த உணர்வின் செல்கள் இயங்குவதனால்தான். நாம் அல்ல.  நாம் இதைத் தடுத்து நிறுத்த முடியாது.

இப்படித்தான் இயற்கையிலேயே, நம்மை அறியாமலேயே, பல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை நாம் அறிந்துணர்ந்து, நம் உடலில் வரக்கூடிய பிணிகளைப் போக்க வேண்டும். அதற்கு என்ன செய்வது?

மெய்ஞானிகள், விண்ணுலகச் சக்தியைப் பெற்று, அவர்கள் உடலிலே வளர்த்து, அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலங்களில், அவர்கள் உடலில் அத்தகைய ஆற்றல்களைப் பெற்று, தன்னையறியாமல் ஆட்டிப்படைக்கும் சில உணர்வுகளை, அவர்கள் அடக்கினர்.

நமக்குக் கோபம் வருகிறதென்றால், நம்மையறியாமல் துடிப்போம். ஆனால், ஞானிகள் மத்தியில் அந்த உணர்வுகள் சென்றதென்றால், அது அவர்களுக்குள் அடங்கி, அதற்குண்டான ஞானத்தை ஊட்டி, எந்த செயல் வேண்டுமோ, அந்த செயலுக்குண்டான வலுவை ஊட்டும்.

இப்பொழுது,  இந்தக் காரமான உணர்வுகள், நமக்குள்  அதைத் தூண்டச் செய்து அந்த காரமான நிலைகளில் நாம் பேசி பிறிதொன்றைத் தாக்கச் செய்யும். ஏனென்றால்  அதை ஜீரணிக்கக்கூடிய சக்தி நம்மிடத்திலே இல்லை.

ஆக மெய்ஞானிகள், விண்ணின் அந்த ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் எடுத்துக் கொண்டதனால், அவர்களுடைய புலனறிவுகளில் எது சிக்கினாலும், அவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டுவதில்லை. 

ஆனால், எத்தகைய குணங்கள் கொண்டு பிறர் செய்தாலும், அந்த உணர்ச்சிகள் தூண்டாவண்ணம் அவர்களுக்குள் வந்தவுடன் அடங்கி, அவர்களது ஆற்றல் மிக்க சக்திகள் இவருடைய பார்வையில் பட்டவுடன், அவர்களுக்குள் இருக்கக்கூடிய, கெட்ட குணங்கள் அப்படியே அடங்கிவிடும்.

இப்பொழுது, நாம் நல்லவர்களாக இருக்கிறோமென்றால், ஒருவர் சிறு குற்றமான செயலைச் செய்கிறார், நம்மீது ஒரு பழிச்சொல்லைச் சொல்கிறார்,  அந்தச் சொல் வெறும் வார்த்தைதான்.  

அதை நமக்குச் சொன்னவுடன், அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நமக்குள் அடக்கமுடியவில்லை. இவ்வாறு சொல்கிறானே என்று பதட்டமும், பயங்கரமான விளைவுகளும் ஏற்பட்டுவிடும்.

ஏனென்றால், அவர் செய்த உணர்வுகள் நமக்குள் இயக்கி, தவறு செய்யும் நிலைகளுக்கு, எங்கிருந்து அந்தத் தவறு வந்ததோ, அவர்களை அழிப்பதற்கு வருகின்றது. இல்லாததைச் சொல்கிறான் என்ற உணர்ச்சியின் வேகம் தூண்டுகின்றது.

ஆனால் அதே சமயம், இந்த உணர்ச்சியுடன் சேர்ந்து உமிழ்நீராககச் சுரந்து, நம் ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது. இப்படி ஆகாரத்துடன் கலந்தவுடன், அது நம் உடலில் சாப்பிட்டவுடன், சத்தான ஆகாரத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தியிழந்து, அதனுடைய செயல்களைச் செயலாக்கத் தொடங்கிவிடுகின்றது. அது இரத்தமாக மாறி, நம் தசைகளாக மாறி விடுகின்றது.

இதைப்போன்று, மெய்ஞானிகள் அவர்கள் வாழ்க்கையில் வந்த, பெரும் தொல்லைகளையும், இதே மாதிரி விண்ணின் ஆற்றல்களை அவர்கள் பெற்று, அவர்கள் உடலிலே வந்த சில நிலைகளையெல்லாம் மாற்றி, உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றனர். 
அவர்கள், எதை எதையெல்லாம் அவர்கள் மூச்சாலும், பேச்சாலும், சொல்லாலும், அவர்கள் வெளிப்படுத்தினார்களோ, அந்த அலைகள் நம் பூமியில் படர்ந்து கொண்டிருக்கின்றது. அவையெல்லாம் சீக்கிரம் அழிவதில்லை.
நம்மைப்  போன்ற சாதாரண மனிதர்கள் பேசியதெல்லாம், ஆற்றல் மிக்க உணர்வின்  சக்தி கொண்ட வெப்பகாந்தங்கள் தாக்கியவுடன், அது அழிந்துவிடும். அந்த உணர்வுகள், இந்த உணர்வுடன் அதை ஈர்த்துக் கொண்டு, மற்ற உணர்வுகள் காரத்துடன் காரம் சேர்த்து, காரமாக உருப்பெற்று, மற்றவர்களைத் தாக்கும் உணர்வாகச் சென்றுவிடும்.
     
ஆனால், மெய்ஞானியின் சக்தியினுடைய நிலைகளை, அதை மற்ற சாதாரணமான ஒரு அணுவின் தன்மை, புவிக்குள் வருவதை அதைச் செயலிழக்கச் செய்யமுடியாது.

ஆகையினால் அந்த ஞானிகளுடைய சக்தியை, மனிதன் சாதாரணமாக எடுக்க முடியாது. நாம் நினைத்தவுடன், ஆத்மசுத்திக்கு ‘’ஓம் ஈஸ்வரா’’ என்று உயிருடன் தொடர்பு கொண்டு, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கும்போது,  அந்த அருள் சக்தியை நீங்கள் பெற முடியும் என்று, உங்களுக்கு உறுதியாகச் சொல்கின்றோம்.

காரணம், அவர்கள் எடுத்துக்கொண்ட ஆற்றல் எவ்வழிகளில் பெற்றார்களோ, அதை அவருடைய நிலைகளை உபதேசித்து, உங்கள் உணர்வலைகளுக்குள் பதியச் செய்யும்போது, இந்த உணர்வுகள் உங்களுக்குள் வித்தாக மாறுகின்றது.    

அந்த வித்திற்கு, நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை எடுத்து, ஊட்டினால்தான், அந்த வித்திற்குச் சக்தி கூடும்.  அப்பொழுது அந்த ஞானியருடைய உணர்வலைகள், காந்தத்தின் பவர் கூடினால்தான், அந்த ஞானியருடைய எண்ண அலைகளுக்குச் சக்தி கூடுகின்றது.

அப்பொழுது, நாம் ‘’ஓம் ஈஸ்வரா’’ என்று உயிருடன் தொடர்பு கொண்டு, நாம் நினைவுபடுத்தி, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டுமென்று ஏங்கி, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவாத்மா பெற வேண்டுமென்று எண்ணி, நம் உடலுக்குள் எல்லா அணுக்களிலும் செலுத்த முடியும்.

அவ்வாறு எல்லா அணுக்களிலும் செலுத்தி, சர்வ தீமைகளையும் நீக்கி, அனைத்தையும்  ஒளியாக மாற்றி, நாம் மகிழ்ந்து வாழ முடியும், பிறவியில்லா நிலை என்ற, அழியா ஒளிச்சரீரம் நாம் அனைவரும் பெற முடியும்.


25. தீமைகளைக் கிழித்தெறியும் மெய்ஞானிகளின் அலைவரிசை
‘’ஓங்காரக்காளி’’ என்று நாம் சொன்ன, ஓசோன் திரையையும், இன்று அணு குண்டினால் சிதறடித்து விட்டார்கள். இதனால், விஷத்தன்மைகள் பூமியில் வந்து படர்ந்து கொண்டிருக்கின்றது.

விஞ்ஞானக் கருவி கொண்டு, விண்ணிலே பல அலைகளைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள். விண்ணிலே பாய்ச்சினால், இங்கே பாதிக்காது என்பது அவர்களுடைய எண்ணம்.  விண்ணிலேயும் விஷத் துகள்கள் பரப்பப்படும்போது, புவியின் ஈர்ப்புக்குள் சுழற்சியில் வரப்படும்போது, அந்த அலைகள் பூமிக்குள் வருகிறது.

அப்படி அலைகள் வரப்படும்போதுதான், விஷத்தின் தன்மையை முறியடிக்கக் கூடிய சக்தி இருந்தாலும், மனிதன் விஞ்ஞானத்தினால் செய்யப்பட்ட நிலைகள், ஒன்றை அழித்துவிட்டு ஒசோன் திரையைக் கிழித்து விடுகின்றது.

ஆக, விண்ணிலே இருக்கக்கூடிய ஆற்றல்கள், துரித நிலைகளில் நம் பூமிக்கு வரக்கூடிய நிகழ்ச்சிகள், நடந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறு வரக்கூடிய நிகழ்ச்சிகளினாலே, மனிதனுடைய சிந்தனைகள் குறைக்கப்பட்டு, நாமெல்லாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமென்று எண்ணுகின்றோம்.

ஆனால், உணர்வுக்குள் வேதனை தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரி நிலைகளிலிருந்து மீட்டிக்கொள்வதற்கு, நாம் செய்யவேண்டிய ஒரே முறை, அந்த மெய்ஞானியரின் அருளை, நாம் பெற வேண்டும்.

இன்று எப்படி, ஓசோன் திரை கிழிந்து வருகிறதோ, அதைப் போன்று  மற்ற விஷத்தின் தன்மையைக் கிழித்தெறியும் தன்மை, நாம் பெற வேண்டும். 

நாம் சாதாரண மனிதர்கள் என்று, எண்ண வேண்டாம். இவையெல்லாம் சாதாரணமானவைதான். நம்மிடமிருப்பது சாதாரண ஆயுதம்தான், பணவசதியுள்ளவர்கள் யாருமில்லை.

நமக்குள், எண்ணத்தின் வலுவின் தன்மைகளை நாம் பெற வேண்டும். நாம் மெய்ஞானியரின் அருள் சக்திகளைப் பெற வேண்டும். நம் எண்ணத்தின் வலுகொண்டு, தீயசக்திகள் நம்மை அணுகாது, நாம் பாதுகாக்கவேண்டும். அந்த உர்வின் ஆற்றல் மிக்க சக்திகளை, நாம் பெற வேண்டும், நமக்குள் பெருக்கவேண்டும்.

ஆகையினாலே, எப்படி அலைவரிசையினாலே மனிதனை இயக்க முடியுமென்று விஞ்ஞானிகள் சொல்லுகின்றனரோ, அதைப்போல மெய்ஞானிகள் அருள்வழிப்படி, அந்த மெய்ஞானியரின் அருள்ஒளியை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் கூட்டி,  இந்த அலைவரிசைகளை நமக்குள் பெருக்கிப் பழகவேண்டும்.  அப்படி பழகுவதற்குத்தான் இந்த ஆத்மசுத்தியும், பயிற்சியும் கொடுத்தது.

அவ்வாறு, வாழ்க்கையில் நாம் அனைவரும் ஒவ்வொரு நொடிப் பொழுதும், அந்த மெய்ஞானியரின் அலைவரிசையின் தொடர் கொண்டு, நமக்குள்ளும், இந்த உலகிற்குள்ளும் வரும் எத்தகைய தீமைகளையும் நீக்கிடும் அருள் சக்தி பெறுவோம். எமது அருளாசிகள்.

26. ஞானியரின் அருள் உணர்வுகள், தீமைகளை விழுங்கிவிடும்
      இப்பொழுது உங்களுக்கு, எது எது, எதை எதை விழுங்குகிறது என்ற நிலையை, அதாவது உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை, அந்தத் தீமையை எடுத்து, அதை ஞானியர்களுடைய உணர்வுகளுடன் கலந்தவுடன், அது விழுங்கி, தீமையை அடக்குகின்றது.

அதை அடக்கிய நிலைகள் கொண்டு உணவாக, ஆக உணவு தேவைதான், ஆனால், இதனுடைய தன்மை அதற்குத் தேவை. 

ஒரு மரம், அந்தக் கட்டை எரிகிறதென்றால் பல உணர்வுகள் சேர்த்து, எண்ணெய்ப்பசை இருந்தால்தான் எரியும். எண்ணெய்ப்பசை இல்லை என்றால் கருகிவிடும்.

இதைபோலத்தான் எதனின் உணர்வின் தன்மை எதுவாக இருப்பினும், ஒரு குழம்பிற்குள் சுவை தேவை என்றால், காரம் தேவை. அந்தக் காரத்தை எவ்வளவு சேர்க்கின்றோமோ, அதற்குத் தக்கவாறுதான் அந்த உணர்ச்சிகள் உந்தும்.

ஆகவே இதைபோல, நமக்குள் எத்தகைய தீய குணம் இருப்பினும், அருள்ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து, இதை விழுங்கிடல் வேண்டும்.

ஆக, அருள்ஞானிகளின் உணர்வை நாம் விழுங்கினால், அது தீமைகளை விழுங்கும். எனவே, நாம் மகரிஷிகளின் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்க வேண்டும்.

ஞானத்தை அறிய வேண்டும் என்றால், இப்பொழுது உங்களுக்குள் கேட்டறிந்த உணர்வுகள், உங்களுக்குள் எத்தனை கோடி குணங்கள் இருப்பினும், அவை அனைத்திலும், எண்ணத்தால் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்க வேண்டும்.

அவ்வாறு கலக்கும்பொழுது, இது உங்களுக்குள் பால்வெளி மண்டலமாக, துகள்களாக இது சேர்கின்றது. இவ்வாறு சேர்த்துகொண்ட இந்த துகள்கள்,  இந்த உணர்வுகள் நுகர, நுகர, எண்ணங்களாக விரிவடைகின்றது.

ஆக, எண்ணங்களின் தன்மை விரிவடையப்படும்பொழுது, இங்கே பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் ஏற்படுகின்றது. அந்தத் திறன் இல்லையென்றால் நாம் செயலாக்கமுடியாது.

அந்தத் திறன் நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த உணர்வைப் பதிவு செய்வதும், அந்த உணர்வின் துணைகொண்டு தீமைகளை அகற்றும் வல்லமை நீங்கள் பெற வேண்டும் என்றும், அதே சமயத்தில், அருள் ஞானிகளின் உணர்வை அடிக்கடி எண்ணும் பொழுது, நுகர வேண்டுமென்பதற்கும் இதை உபதேசிப்பது.

நம் உடல், நாம் உணவாக உட்கொள்ளும் நிலைகளில், உணவில் கலந்துள்ள நஞ்சினை, மலமாக மாற்றிடும் திறன் பெற்றது. அதே போன்று, நமக்குள் உணர்வின் தன்மை பதிவு செய்த நிலைகள் கொண்டு, கேள்விப்பட்ட தீமையான நஞ்சுகளையும்  அது நீக்கி, நல்ல உணர்வைப் படைத்திடும் ஆற்றல் பெற்றது.

ஆக, இவ்வாறு நஞ்சினை நீக்கியவன் மகரிஷி. மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து, எடுத்து, நமக்குள் இணைத்திடவேண்டும் என்பதற்குத் தான்,  பல வட்டங்களை இங்கு எழுப்பி, உங்கள் உணர்வின் நினைவாற்றலை இணைத்து, அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை இணைத்து, உங்களுக்குள் இது பெறும் தகுதியை ஏற்படுத்தியது.

அவ்வாறு, மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களை நுகரும்படி செய்யும் பொழுது, உங்களுக்கு அது பால்வெளி மண்டலங்களாக வருகின்றது. ஆனால், நீங்கள் இதை நினைவு கொள்ள வேண்டும்.

பிறருடைய குறைகளை எவர் சொன்னாலும், அதை எண்ணத்தால் பதிவு செய்யக்கூடாது. உடனடியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற நினைவை, அங்கேயே அதிகமாக்கி, இந்த கணக்கைக் கூட்டவேண்டும்.

எந்த அளவிற்கு, நீங்கள் இந்த கணக்கை, அளவு கோல் கூட்டுகின்றீர்களோ, ஆக, அந்தத் தீமைகளின் நிலைகள் நமக்குள் வராது. ஆனால், அவர் தீமை செய்தார் என்ற கணக்கினைக் கூட்டினால் நன்மை செய்யும் கணக்குகள் குறைந்துவிடும். ஆகவே, நீங்கள் இதை மாற்றுதல் வேண்டும்.

நாம் நன்மையினுடைய நிலைகள், நன்மை, நன்மை, என்று நாம் சொன்னாலும், ஆக, இந்த நன்மை நன்மையாகாது. நல்லது நல்லதும் ஆகாது, கெட்டது கெட்டதும் ஆகாது.

தீமை என்ற காரத்தின் உணர்வினுடைய நிலைகளை, நாம் நன்மை என்ற நிலைகள், நல்ல பொருளை அதிகமாகக் கூட்டினால், அந்த தீமையின் நிலைகள் இதுக்குள் உள்ளடங்கி, நன்மை பயக்கும் நிலையாக இணைந்தே இயக்கும்.

இதைப் போலத்தான், மகரிஷிகளின் அருள் வட்டத்தை நமக்குள், இதை இணைத்துப் பழகவேண்டும். சித்ரபுத்திரன் கணக்குப் பிரகாரம், இதில் அடிக்கடி, இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும், அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் என்னிலே பெற வேண்டும் என்று, இதைப் பெருக்கிக் கொண்டிருக்க வேண்டும். 

இந்தத் தீமை என்ற கணக்கை, இங்கே தள்ளிவிடனும், இது சரியில்லை, தப்பான கணக்கு, என்ற நிலைகள் நீக்கிப் பழகவேண்டும். இது இல்லையென்றால், நமக்குள் நாம் இந்த ஆறாவது அறிவை, சீராகப் பயன்படுத்தவில்லை என்றுதான் பொருள்.

இந்த ஆறாவது அறிவு, தெளிந்திடும் நிலைகள் பெற்றவன். பிரம்மாவைச் சிறைபிடித்தான் முருகன், நாம் மனிதனான பின் சிருஷ்டிக்கும் வலிமை பெற்றவர்கள்.

மகரிஷிகள் சென்ற பாதையில், நாமும் பிறவியில்லா நிலைகளை அடைவோம், உணர்வுகளை உயிரோடு ஒன்றி, உயிரைப்போன்று ஒளியாக மாற்றிடுவோம். பேரொளியாக மாற்றி, பெரு வீடு என்ற நிலையாக, நாம் அனைவரும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைவோம், மெய் உலகை சிருஷ்டி செய்வோம்.

27. நம் உடலுக்குள் இருக்கும், தீமையை அகற்றிடும் அணுசெல்கள்
பல கோடிச் சரீரங்களில், தீமை என்று உணர்ந்து, தன்னைக் காத்திடும் உணர்வுகளைச் செயலாக்கிப்  பெற்ற மனிதச் சரீரத்தில், அனைத்துத் தீமைகளையும் அகற்றிடும் அணு செல்கள் உள்ளன.

ஆகையினால்தான், கார்த்திகேயா என்றும், ஆயிரம் கண்ணுடையான் என்றும் ஞானிகள் உரைத்தனர்.  மனிதனின் நிலையில்,  ஆயிரம் குணங்களின் சத்து, நமது உடலில் இருக்கின்றது. 

இதனால், நாம் எத்திசையிலும், எந்நிலையையும் நமது உணர்வின் அறிவு கொண்டு, அறிந்து கொள்கின்றோம். ஆலயங்களில், 1008  அபிஷேகங்கள் செய்வார்கள். மனிதரிடத்தில், 1008  குணங்கள் உள்ளன.

பகைமை உணர்வுகள் வரும்பொழுது, அதிலிருந்து மீண்டிடும் நிலையாக, அறிவைக் கூட்டி, பகைமையிலிருந்து விடுபடுகின்றோம். பலகோடிச் சரீரங்களில் சேர்ந்துள்ள, தீமைகளை வென்ற உணர்வுகள், நமக்குள் இருக்கப்படும் பொழுது, பகைமையுணர்வுகளைக் கண்ணால் பார்க்கப்படும் பொழுது, நமது உடலில் இருக்கும் அறிவு, இது பகைமை கொண்டது என்று உணர்த்துகின்றது. அறியும் தன்மை வருகின்றது.

தீமையை வென்றவர் துருவ மகரிஷி. அவர் துருவ நட்சத்திரமானார் என்ற நிலையில், அவருடைய உணர்வை நாம் நுகர்ந்து, “ஈஸ்வராஎன்று எண்ணி, கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி, துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால், இதன்வழி கொண்டு, தீமைகளை வென்றிடும் சக்தியினை, நமக்குள் உருவாக்குகின்றது நமது உயிர்.

ஏனென்றால், கண்ணால் காக்கும் நிலை பெற்றிருந்தாலும், கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றும் பொழுது, உணர்வினை உயிர்வழி கொண்டு, உடலில் பரப்புகின்றது.

ஆக, உடலில் பரப்பிய உணர்வுகள் உந்தி, மூக்கின் வழி சுவாசிக்கும் உணர்வின் தன்மையினை இடைமறித்து, அருள் ஒளி என்ற உணர்வுகள் இணையும் பொழுது, தீமை என்ற நிலை வராது தடுக்கின்றது.

அருள் ஒளியின் உணர்வின் தன்மை, நமக்குள் வலு பெறும் பொழுது, பகைமையை உட்புகாது தடுக்கும் நிலை, வருகின்றது. இதைத்தான், கார்த்திகேயா என்று உணர்த்தினர், ஞானிகள்.

ஏனென்றால், நாம் நமது ஆறாவது அறிவால், அனைத்தையும் அறிந்திடும் தன்மை இருந்தாலும், ஆறாவது அறிவு சேனாதிபதியாக நின்று, தீமைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் செய்கின்றது.

நம்முள் எண்ணத்தால், உணர்வின் ஒளியை உருவாக்கினால், உயிரென்ற நிலைகள் இணைந்து, அருள்ஒளி எனும் பேரொளியின் தன்மையை, நம்முள் உருவாக்கும். ஆக, இவையனைத்தும், எதிர்காலத்தில், உங்களைப் பகைமையுணர்வு தாக்காது, அதனின்று பாதுகாக்கும் சேனாதிபதியாக உருப்பெறுகின்றது. 

உங்களுக்குள், பாதுகாப்பு கவசத்தின் உணர்வின் அணுக்களைப் பெறுவதற்கு, துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நீங்கள்  நுகர்ந்து, உங்களுக்குள் உருவாக்கினால்,  இந்த உணர்வின்  எண்ணம் உங்களைக் காக்கும். இதுவே சேனாதிபதி.

ஞானிகளின் தத்துவக் கருத்துக்கள், மனிதன் தீமைகளிலிருந்து மீளும் மார்க்கத்தைத்தான் உரைக்கின்றன. அதற்காகத்தான், விநாயகரை வணங்கச் செய்தது.

நாம் பலகோடிச் சரீரங்களில், தீமைகளில் இருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வைப் பெற்று, தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வைச் சுவாசித்து, நம்மை மனிதனாக உருவாக்க மூலமாக இருந்தது நமது உயிர். தீமையிலிருந்து விடுபடும் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து, எண்ணத்தின் வலிமை பெற்றது மனித உடல்,

இன்றைய மனிதன், தன் எண்ண வலுவின் உணர்வின் துணை கொண்டு, 1000 டன் கொண்ட ஒரு எடையை, விண்ணில் செலுத்துகின்றான். பெரும் பாறைகளைச் சிறு கடப்பாரை கொண்டு நகர்த்தி, இடம் மாற்றுகின்றான். ஆக,  இது மனிதனின் எண்ண வலு.

எண்ணத்தின் வலுகொண்டு இவன் சுவாசிக்கும் பொழுது,  அதனின் உணர்வின் யுக்தியின் அணுக்கள் உருவாகி,  அது காலத்தால் தனக்கேற்ற உணர்வை உருமாற்றிக்  கொண்டேயிருக்கும்.

எண்ணத்தின் வலுகொண்டு, தீமைகளை அகற்றும் உணர்வை நமக்குள் சேர்க்கும் பொழுது, அந்த உணர்வினை வலுப் பெறச்செய்யும், வளர்க்கச் செய்யும் உணர்வினைச் செயல்படச் செய்கின்றது.

ஆகவே, நாம் அருள் ஞானிகள் காண்பித்த அருள் நெறிப்படி, துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நமக்குள் சேர்த்து, ஈஸ்வராஎன்று உயிர்வழி கொண்டு, தீமைகளை வெல்லும் அருள் உணர்வினைக் கவர்ந்து, உடல் முழுவதும் பரப்பி,  தம்மையறியாது நமக்குள் சேர்ந்துள்ள, தீமைகளைப் பிளந்திடும் நிலை பெறவேண்டும். 

இதன் வழியைப் பின்பற்றும் அன்பர்கள் அனைவரும், தம்முள் தீமைகளை வென்றிடும் நிலையாக, ஒளியின் உணர்வுகளைப் பெற்று, இவ்வாழ்வில் பேரின்பப் பெருவாழ்வாக, பெருவீடு, பெருநிலை பெரும் நிலையாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருளாசிகள். 

28. எல்லா அணுக்களிலும் தீமையை நீக்கும் அருள்சக்தி
உங்களையெல்லாம் யாம் எங்கே கொண்டு போகின்றோம் என்றால்அந்த அகஸ்தியன் உணர்வு கொண்டுதுருவ நட்சத்திரத்துடன் இணைக்கின்றோம். குருநாதர், என்னை இப்படித்தான் கொண்டு சென்றார். அந்த குரு காட்டிய நிலைகளில்தான், யாம் உங்களை அங்கே இணைக்க முடியும்.

ஒவ்வொன்றையும் சேர்த்துஉங்கள் உடலில், எத்தனை விதமான குணங்கள் இருந்தாலும், அதனுடன் இணைத்து, இணைத்து, அதனின் உணர்வை உங்களுக்குள் பாய்ச்சுகிறேன். 

உங்கள் கண்ணின் நினைவு, உடலிலுள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் இதை சேர்க்கும். அப்படிச் சேர்க்கும் பொழுது, நம் உடலிலுள்ள அணுக்கள், துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஏற்கும் பருவம் வருகின்றது.  அதை ஏற்கக்கூடிய பருவத்தைச் செய்தால்தான் ஈர்க்கும், இல்லையென்றால் எடுக்காது.

அதனால்தான், அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு, நமது குருநாதர் கொடுத்த அருள் வழியில், இதை உங்களிடம் சேர்க்கின்றோம். இதை பக்குவப்படுத்துதல், உங்கள் கையில்தான் இருக்கின்றது. ஆனாலும், உங்களை ஆயுள் மெம்பராகச் சேர்த்துக் கொண்டோம்.

வீட்டில், ஏதாவது சலிப்பு சஞ்சலம் வந்துவிட்டால், “ஈஸ்வரா” என்று புருவ மத்தியில் எண்ணி, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் படர்ந்து, எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று, சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். உற்சாகம் ஊட்டும்.

குழந்தைகள் ஏதாவது குறும்புத்தனம் செய்தால், இதே போல ஆத்ம சுத்தி செய்து விட்டு,.என் பிள்ளை ஞானியாக வேண்டும். அவன் கல்வியில் உயர்ந்தவனாக வேண்டும், உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

யாராவது எதிரியாகப் பேசுகிறார்கள் என்றால், உடனே ஈஸ்வராஎன்று எண்ணி, அதை தடுத்துவிடுங்கள். அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும். அவர்கள் செய்வது, யாருக்கும் தொல்லையில்லாத நிலை பெறவேண்டும், அவர்களது பகைமையூட்டும் இந்த நிலைகள் மாற வேண்டும் என்று எண்ணுங்கள். இவ்வாறு நாம் எண்ணும் பொழுது, அவர்கள் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

ஏனென்றால், “ஈஸ்வராஎன்று எண்ணி நம் உடலுக்குள் பெற செய்துவிட்டு, அந்த உணர்வின் தன்மையை சொல்லப்படும் பொழுது, இந்த உணர்வு (நாம் எடுக்கும் அருள் உணர்வுகள்) இரத்தத்தில் கலந்து செல்லும். இந்த அருள் உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கின்றது.

அப்பொழுது, இதே மாதிரி நம்மை எப்பொழுது திட்டினானோ, இது கொஞ்சம் கொஞ்சமாக, போய் சேரும். ஆக அவன் திருந்தும் நிலை வரும்.  அவன் எடுத்துக் கொண்ட உணர்வு, திருந்த எண்ணினால் வருகின்றது.  நம்மை திட்டும்போது, நம் உடலுக்கு பாதுகாப்பாக இருக்கும்.  சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.

      இதே மாதிரி, வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடத்திலும், ஒவ்வொரு குணங்களிலும், ஒவ்வொரு உணர்விலும், ஒவ்வொரு செயல்களிலும், துருவ நட்சத்திரத்தின் உணர்வை கலந்து கொண்டே வரவேண்டும்.

பலவிதமான குழம்பு வைக்கிறோம், பலவிதமான பலகாரம் செய்கின்றோம். இதே மாதிரி, நமக்குள் அந்த உணர்வை (தீமை செய்யும் உணர்வை)  மாற்றி, சுவை மிக்கதாக மாற்றிவிடுகிறோம்.. இப்படி, நம் இரத்தத்தில் கலக்கும் பொழுது, நம் உடலிலுள்ள அணுக்களுக்கு எல்லாம் சேர்கின்றது. கொஞ்சம்,  இதில் பொறுமை தேவை.

ஏனென்றால், மனிதனுடைய உணர்வுகள் ஒருவர் மேல் வெறுப்பாகி விட்டால், ரோட்டில் போகும் பொழுது பார்த்தால், “போகின்றான் பார்என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொள்கின்றோம்.

இதே மாதிரி, ஒருவன் யாருக்கோ தவறு செய்கின்றான். அதை நாம் பார்த்துவிடுகின்றோம். பார்த்தவுடன் அவனின் நினைவு வருகின்றது. அதே உணர்வை எடுத்து, தவறு செய்யும் அணுக்களைத்தான் நாம் வளர்க்கின்றோம்.

ஒருவன் சாபம் விடுகின்றான், அவனைப் பார்த்தவுடன் பதிவு செய்து விடுகின்றோம்.. அவன், எதைப் பார்த்தாலும் சாபம் விட்டுக் கொண்டே இருப்பான். இந்த உணர்வுகள், சாப அலைகள் என்று நமக்குள் எதை எடுத்தாலும், அந்தத் தீமை செய்யும் அணுக்கள் வளர்ச்சி பெறுகின்றது.

அந்த மாதிரி உணர்வுகள் வரும் பொழுதுஅந்த கணமே ஈஸ்வராஎன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை, புருவ மத்தியில் கொண்டு வரவேண்டும்அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள், ஜீவ ஆன்மாக்கள் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

நம் வாழ்நாளில் இதை பழக்கத்திற்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு செய்து, அந்தத் தீமையான உணர்வுகளை, நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து தள்ளிப் பழக வேண்டும்..

ஒருவர் திட்டினார் என்று வைத்துக் கொள்ளுங்கள், உங்களைத் திட்டியவர்களை எண்ணினால், புரை ஓட வைக்கின்றது. இங்கிருந்து தானே போகின்றது. யார் உடலில் விளைந்ததோ அங்கே போகிறது.

அப்படி உங்களை நினைக்கும்போது, அந்த துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வை நாங்கள் பெறவேண்டும், என்று நீங்களே இதைப் பெற்றிடவேண்டும்.

அதாவது, மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். ங்கள் உடல் முழுவதும் பெறவேண்டும் எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று எண்ணிவிட்டு, அவர்களுக்குள் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும், அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போதுஇந்த உணர்வு நமக்குள் வருகிறது. அவர்கள் உணர்வு பதிவாகிறது.  இதனுடன் கலந்து, இதை யாம் மாற்றிவிடுகின்றோம்.

அப்பொழுது, துருவ நட்சத்திரத்தின் பேரருளை இங்கே இணைத்துவிடுகிறோம்.. உள்ளே கெட்டது போகாமல் மாற்றிவிடுகிறோம். இந்த உணர்வு இரத்தத்தில் கலக்கிறது.

ரத்தத்தில் கலந்தவுடன் அதை எடுப்பதற்கு வழிவேண்டுமல்லவா!  அது கலந்தவுடன், இதை மாற்றிவிட்டுதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும், என்று இதை முந்திக் கொடுத்துவிடுகிறோம். 

அதைக் கொடுத்தவுடன்நாம் கலந்து போவதை, எடுத்துப் பழக வேண்டும். ஒன்றில்லாது ஒன்றில்லை. எதுவுமே, ஒன்று இணைந்தால்தான், அது வளரும்.

ஏனென்றால், வடதுருவத்தில் இருப்பது  இழுக்கும்.  தென் துருவத்தில் இருப்பது தள்ளும்.  ஏனென்றால், தென் துருவம் சூரியனைப் பார்த்து இருக்கின்றது. வட துருவம் மேலே இருந்து இழுக்கிறது. காந்தத்தில் மற்றொரு காந்தத்தை வைத்தால், தள்ளிக் கொண்டே போகும்.

இதை போன்று, நாம் நமது வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

நம் உடலில் உள்ள இரத்தத்தில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கலந்து கொண்டே இருக்க வேண்டும், நம் உடலை உருவாக்கிய அனைத்து அணுக்களிலும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை கலந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த மகரிஷிகள்  சென்று அடைந்த எல்லையை நாம் அடைய வேண்டும், எமது அருளாசிகள்.  

29. துருவன் நஞ்சை நீக்கி ஒளியாக மாற்றிய சக்தியை, நம் கிட்னிக்குக் கொடுத்து, நல்ல இரத்தமாக மாற்றும் நிலை
      வயல்களில், நாம் களைகளை நீக்கினாலும், அதற்குள் மறைந்த வித்துக்கள், மீண்டும் முளைத்து வந்துவிடுகின்றது. இதைப்போலத்தான் நமது வாழ்க்கையில் எத்தனையோ விதமான வெறுப்பு உணர்வுகளை, நாம் நுகர நேருகின்றது.

      அந்தக் கண்களால், நாம் பதிவாக்கித்தான் நாம் நுகருகின்றோம். நுகர்ந்த உணர்வால் நாம் அறிகின்றோம். அந்த உணர்வுகள அனைத்தும் நம் இரத்தத்தில் கலந்து, நம் இரத்தமே மாசுபடும் நிலைகள்  கொண்டு, மாசுபடும் இரத்தங்கள் நம் உடல் முழுவதும் படரப்படும்பொழுது, நமது நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றி, கடும் நோயாகி, நம் உறுப்புகளில் நோய்கள் உருவாகிவிடுகின்றது.

      இதைப்போன்ற நிலைகளை நாம் தடுப்பதற்குத்தான், அகஸ்தியன் துருவனாகி, துருவ நட்சத்திரமாகி, ஒளியின் உடலாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கும், அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நாம் எண்ணி ஏங்கி, நம் நினைவினைப் புருவ மத்தியில் வைக்க வேண்டும்.

      அப்படி வைக்கப்படும்பொழுது, நாம் இதற்கு முன்னாடி தீமைகளை நுகர்ந்திருந்தாலும், அந்த வெறுப்பு, வேதனை, சலிப்பு, சஞ்சலம், சங்கடம், கோபம், குரோதம் போன்ற உணர்வுகள், நம் உடலுக்குள் போகாது தடைப்படுத்தி, நம் கண்ணின் நினைவினை ஒவ்வொரு உறுப்புகளுக்கும் உருவாக்கிய அணுக்களுக்கு, இந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தப்படும் பொழுது, அது வீரியமடைந்து, இந்த இரத்தங்களில் இருந்து வரும் விஷத்தன்மைகளை, அது ஏற்காது அது கழித்துவிடும்.

      பின், அது அந்த விஷத்தின் தன்மைகளை வடிகட்டும், கிட்னிக்குள் இந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டும்என்று வீரிய சக்தி உண்டாக்கப்படும்பொழுது, எப்படி அகஸ்தியன், அவன் துருவனாகும் பொழுது விஷத்தின் தன்மை நீக்கி, உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றானோ, அத்தகைய வலுவான நிலைகள் இந்த கிட்னிக்குள், விஷத்தின் தன்மை வடிகட்டி, நல்ல இரத்தங்களாக உருவாக்கி, நம் இருதயத்தைச் சீராக இயக்கி, இந்த இருதயத்திலிருந்து மூளை பாகம் செல்லும் இந்த இரத்தங்களைப் பரிசுத்தமாக்கி, நமக்குள் நல்ல இயக்கமும், நல்ல நினைவும் உருவாக்குகின்றது. 

      இவ்வாறு, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள்நமக்குள் இருளை நீக்கி ஒளி பெறும் தன்மையாக, நமது அறிவாக இயக்கி, இந்த வாழ்க்கையில் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க, அதைப் பற்றுடன் பற்றி, எந்த நிமிடம் எந்த நேரம் வந்தாலும், நமக்குள் சலிப்போ, சோர்வோ, சஞ்சலமோ, வேதனையோ, கோபமோ இந்த உணர்ச்சிகள் வரும்பொழுதெல்லாம் இந்த முறைப்படி,  ஈஸ்வரா: என்று உங்கள் கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் உயிரின்பால் செலுத்தி,  உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நினைவினைச் செலுத்தினால், அங்கே தீமைகள் புகாது தடுக்கப்படுகின்றது.

      பின், அதே கண்ணின் நினைவினை, ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கும் செலுத்தப்படும் பொழுது அது வீரியத்தன்மை அடைந்துவிடுகின்றது.

      பின் எல்லா உறுப்புகளுக்கும் அது செலுத்தப்படும் பொழுது,  நாம் அறியாது நுகர்ந்த வேதனை என்ற உணர்வுகளை, அது இரத்தத்தில் கலந்தாலும், இதைப்போல கிட்னி அது சுத்தப்படுத்தி, நல்ல உணர்வுகளை நம் உடலுக்குள் பரவச் செய்கின்றது.

      அதே போன்று,  எல்லா அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின்உணர்வுகளை வலுவாக்கப்படும் பொழுது, அதை உடலில் உள்ள அணுக்கள் தீமைகளை ஏற்காது, அதை நீக்குகின்றது. 

இப்படி ஒதுக்கும்போது, நமது வாழ்க்கையில் நோய் வராததும், மன வலிமையும், சிந்தித்துச் செயல்படும் தன்மையும், இந்த வாழ்க்கையில் நாம் எத்தகைய தீமையைப் பார்த்தாலும், அந்த தீமையின் உணர்வு நம்மை இயக்காது, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

30. கணவன் மனைவி தியானத்தால், குடும்பத்திற்குள் இருள் நீங்கி, ஒளி படரும் நிலை
ரோட்டிலே ஒருவன், யாரையோ கோபமாகப் பேசுகின்றான். “நடுரோட்டில், இந்த மாதிரிப் பேசுகின்றானேஎன்ற உணர்வு வந்தவுடனே, உயிரில் பட்டவுடனே, நமக்கும் அந்த உணர்ச்சியைத் தூண்டுகிறது.

அவன் உணர்வு, நம்மை இயக்குகின்றது. அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? “ஈஸ்வராஎன்று கண்ணின் நினைவை உயிருக்கு, புருவமத்தியில் கொண்டு போகவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும், எங்கள் உடலில் படரவேண்டும், எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று, உள்ளுக்குள் செலுத்த வேண்டும். இந்த வலுவான நிலைகள் இங்கே வந்தவுடனே, இதைத் தள்ளிவிட்டு விடுகிறது. இங்கே அடைத்து வலுக்கூட்டி, ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்.

துணியில் அழுக்குப் பட்டவுடன், சோப்பு போட்டவுடன், நுரை உள்ளுக்குள் போய், அழுக்கை வெளியே தள்ளிவிட்டு விடுகிறது. சோப்புப் போடாமல், என்னதான் துவைத்தாலும், இருட்டடித்த மாதிரிதான் இருக்கும். வெள்ளையாக வருவதில்லை.

அதுபோல, நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும். இவ்வாறு ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்கு, நம் எண்ணத்துக்கு வலு கொடுப்பதற்கு, ஜீவன் ஊட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

காலையில் எழுந்தவுடனே, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் பெறனும், ங்கள் உடல் முழுவதும் படரனும், ங்கள் இரத்த நாளங்களில் கலக்கனும், என் ஜீவான்மா, ஜீவனுக்கள் அனைத்தும் பெறனும் என்று நினைத்து, தன் கணவருக்கு அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணி, அவர் உடல் முழுவதும் படரனும், அவர் ஜீவாத்மா பெறனும் என்று எண்ண வேண்டும். அதேபோல, ஆண்களும், தன் மனைவிம் பெற வேண்டும் என்றும் எண்ண வேண்டும்.

இரண்டு பேர் சண்டை போட்டார்கள் என்றால், அமெரிக்காவில் இருந்தாலும் புரையோடுகின்றது. நன்மை செய்தான் என்று எண்ணினால், விக்கலாகின்றது. இங்கே, குடும்பத்தில் பாசத்துடன் இருந்து, “குழந்தைக்கு இந்த மாதிரி ஆகிப்போய்விட்டதுஎன்று எண்ணிப் பாருங்கள், அங்கே தொல்லை கொடுக்கும்.

கணவர், ரொம்ப உழைத்துக் கொண்டேயிருக்கிறார். இருக்கிறவன் எல்லாம் இப்படி பேசுகிறார்களே என்று மனைவி எண்ணினால், ஆண்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் செயலற்றதாக ஆக்கிவிடும். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?

அந்த அருள் ஒளி பெற வேண்டும். என் கணவர் ஜீவான்மா பெற வேண்டும். நாங்கள் இருமனமும் ஒன்றி, இரு உயிரும் ஒன்றவேண்டும். வாழ்க்கையில் இருளை அகற்றும், அந்த அருள்சக்தி பெற வேண்டும் என்று, இரண்டு பேரும் அதிக நேரம் இல்லையென்றாலும், கொஞ்ச நேரம் எண்ண வேண்டும். ராத்திரியிலே விழிப்பு வரும்பொழுது, இந்த மாதிரி செய்து பழக வேண்டும்.

தியானத்திலே இருக்கிறவர்களுக்கு, காலை 4 மணியில் இருந்து 6 மணி வரை, இந்த உணர்வுகள் தட்டி எழுப்புவதை நீங்கள் பார்க்கலாம். உங்களையறியாமலேயே விழிப்பு வரும். அந்த நேரத்திலே, அந்த அருள்சக்திகளை நுகருங்கள்.

அப்பொழுது பெண்கள், தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும், ஆண்கள், தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். எண்ணியபின், அந்த குரு அருளைப் பெற வேண்டும். என் கணவர் பார்வையில், தீமைகள் அகற்றும் அந்த சக்தி பெற எண்ண வேண்டும். அவர் செயலிலே புனிதம் பெற வேண்டும், அவரைப் பார்ப்போரெல்லாம், அந்தப் புனிதநிலை பெற வேண்டும் என்று, எண்ண வேண்டும்.

அதே மாதிரி, கணவன், மனைவியை ஓர் 5 நிமிடம் எண்ணிப் பழக வேண்டும். இப்படி நீங்கள் எண்ணினால், காலையில் 6 மணிக்கு விழித்தெழும் பொழுது, ஓர் ஆனந்தமான நிலை வரும்.

இந்த மாதிரி எண்ணுபொழுது பார்த்தால், உங்கள் உடலில்பளீர், பளீரென்றுவெளிச்சம் வரும். ஏனெனில், அது நுகரப்படும் பொழுது, இது பட்டவுடன் மோதி, அந்த இருள் நீக்கி, வீட்டிற்குள் ஒரு வெளிச்சம் வருவதைப் பார்க்கலாம்.

சூரியன், தன் உடலில் எடுத்துக் கொண்ட பாதரசத்தால், தன் அருகில் வந்தவுடன் மோதி, பளீரென்று உலகம் முழுவதும் ஓர் வெளிச்சத்தை கொடுக்கிறது. அதே மாதிரி, நம் மூச்சலைகள் பட்டவுடன், நமது வீட்டிற்குள் இவ்வாறு எண்ணும் பொழுது, நம் உடலில் எடுத்து கொண்ட சக்தி, தீமை என்ற நிலையில் மோதியவுடனே, அது விலகிப் போகும். உடலில், ஒரு விதமான வெளிச்சம் வரும். உடலில் மகிழ்ச்சி ஏற்படும்.

இதை நீங்கள், ஒவ்வொரு நாளும் காலையில் 4 மணிக்கெல்லாம் செய்து பழக வேண்டும். அப்படிச் செய்தால், யாம் பதிவு செய்கின்ற ஞானவித்திற்கு, அப்பொழுதுநீங்கள் சக்தி ஊட்டுகிறீர்கள்என்று அர்த்தம்.

31. குழந்தைகளுக்கு நாம் எப்படி தியானிக்க வேண்டும்?
நமது குடும்பத்தில், குழந்தைகள் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, சந்தர்ப்ப பேதத்தால் படிப்பு குறைந்து போனால், “ஐயோ, நன்றாகப் படித்துக் கொண்டிருந்த குழந்தை, இப்படி ஆகிவிட்டதேஎன்று வேதனைப்பட்டு, குழந்தைகளை எண்ணவே கூடாது.

அந்த மாதிரி சொற்கள் வந்தாலே, “ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும், என்று எண்ண வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இந்த மாதிரி, நம் உடலுக்குள் அதைச் செலுத்தி, குழந்தையை நினைத்து, அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியும், துருவ மகரிஷியின் அருள் சக்தியும், சிந்தித்துச் செயல்படும் அந்த சக்தி பெற வேண்டும், நல்ல மனவலிமை பெறவேண்டும், கல்வியில் சிறந்த ஞானம் பெறக்கூடிய அருள் சக்தி பெற வேண்டும், என்று நமது உடலில், இதை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் இதை எண்ணினாலே போதும். கல்வியில் சிறந்த மாணவனாக, மாணவியாக வர வேண்டும் என்று நாம் குழந்தைகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த உணர்வோடு பார்த்து, நீ வெற்றி பெறுவாய், தேர்வில் முன்னனியில் வருவாய், என்று மனதில் எண்ணிப் பார்த்தால் போதும்.

பள்ளிக்குப் போகும் பொழுது, ஆசீர்வாதம் கேட்டால், இதே போன்று சொல்லால் சொல்லி, அந்த உணர்வைப் பாய்ச்சி அனுப்ப வேண்டும்.

அதே சமயத்தில், குழந்தைகள் மற்ற நேரங்களில், சில செயல்களில் அவர்கள் உணர்வுக்குத்தக்கச் சில குறைபாடுகள் வருகிறது என்றால், அந்த உணர்வு நமக்குள் வந்துவிடும்.

அந்த உணர்வு நமக்குள் வராதபடி, “ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின் பையனை எண்ணி, சிந்தித்துச் செயல்படும் சக்தியும், மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும், மகிழச் செய்யும் உணர்வுகளும் அவனுக்குள் வளரவேண்டும். தெளிந்த மணமும், தெளிவான நிலை அவன் பெறவேண்டும் என்று அவன் உணர்வை எடுத்து, நமக்குள் மாற்றி உருவாக்கிவிட்டால், அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த எண்ணம் வரும்.

இல்லாவிடில், குறை வந்துவிட்டால் அவனை எண்ணும் பொழுதெல்லாம் கோபம் வரும். நம் உணர்வு அவன் மேல் பாயும், அப்பொழுது, அந்த உணர்வின் எண்ணங்கள் அவன் மீது, “இப்படியே பண்ணிக் கொண்டிருக்கிறானே”, என்ன ஆகப்போகிறானோ?” என்று எண்ணும் போது, அவன் சிந்தனை பூராவுமே குறைக்கப்பட்டு, அவன் சிந்திக்கும் தன்மையையே இழந்து விடுகிறான்.

அதனால், நாம் இந்தக் குடும்பங்களிலே அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் ஒவ்வொரு நொடியிலேயும் நம் உடலுக்குள்ளேயும், குழைந்தைக்குள்ளேயும், தொழில் செய்யும் பொழுதும், எடுத்துப் பழக வேண்டும்.

32. தீய உணர்வுகளைக் கடலுக்குள் கரைக்கும் நிலை
விநாயகர் சதுர்த்தி நன்னாளில்,  விநாயகர் உருவத்தைக் களிமண்ணால் செய்து, பூஜித்து,  பின் கடலில் கரைக்கின்றோம். 

இதைப் போன்றுதான், சந்தர்ப்பத்தால், நமக்குள் சேர்ந்த தீய உணர்வுகளை வளராது தடுத்து, “அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், எல்லாக் குடும்பங்களும் நலம் பெறவேண்டும், எங்கள் பகைமைகள் அழிய வேண்டும்என்று ஏகோபித்த நிலையில் பிரார்த்திக்கும் பொழுது,  நம் உடலிலும், நம் பகைவர்களின் உடலிலும் பதிந்த, தீய உணர்வுகள் அனைத்தும் கரைந்து விடுகின்றன.

ஒரு மரம், எந்த நறுமணத்தின் உணர்வுகளைக் கொண்டிருக்கின்றதோ, அதனின் உணர்வின் சக்தியைக் காற்றில் இருந்து ஈர்க்கின்றது.

ஆனால்,  அதனுடைய வேரை அறுத்துவிட்டால், அது நீரைக் கவரும் திறனை இழந்து, தன் ஜீவ சக்தியை இழந்து, தன் இனத்தைக் கவரும் தன்மையையும், அது இழந்து விடுகின்றது.

இதைப் போன்றுதான், நமக்குள் மற்றவரின் உணர்வின் தன்மையைப் பதிவு செய்து,  அதனின் நினைவாற்றல் வராதபடி, தடுத்து நிறுத்தும் நிலையாக,  மகரிஷிகளின் அருள் சக்தியை இணைக்கப்படும் பொழுது, தீய உணர்வுகளின் விழுதுகள் தடைப்படுகின்றன.

இவ்வாறு தடைப்பட்டபின், நாம் அனைவரும் ஏகோபித்த நிலையில், எல்லோரும் நம் நண்பர்கள் என்று வளரப்படும்போது, நம் அனைவரிடமும் இருந்து வெளிப்பட்டிருந்த, காற்றில் கலந்துள்ள தீய உணர்வுகள்,  நகர்ந்து, கடலின் ஈர்ப்புக்குள் சென்று மறைந்து விடுகின்றன.

அப்பொழுதுதான், இந்த பூமியில் பரிசுத்த நிலைகள் பெருகி, அதே சிந்தனை மக்களின் மத்தியிலும் தோன்றுகின்றது.

ஏனென்றால், உலக மக்கள் அனைவரும் ஓரினம், நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள், நாம் ஈசனின் இயக்கத்தால்தான் இயங்குகின்றோம். நம்மை இயக்கும் உயிரான ஈசனுக்கு, மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, வெறுப்பையோ, குரோதத்தையோ, கொடுத்துவிடக் கூடாது.

ஆகவேதான், நமது உயிரான ஈசனுக்கு செய்யக் கூடிய கடமைகள் எதுவென்று உணர்ந்து, நமது வாழ்க்கையில் நல்ல குணங்களைச் சுதந்திரமாக்க,  அருள் ஞானிகளின் உணர்வைக் கவசமாக மாற்றிட வேண்டும்.

அரசியல், மத, இன, மொழி பேதங்களால் விளைந்த தீய உணர்வுகள் இந்த பூமியில் படர்ந்து இருக்கின்றது. இவைகளில் இருந்து நாம் விடுபட்டு, நமது நல்ல உணர்வுகளைச் சுதந்திரமாக செயல்படச் செய்ய வேண்டும்.

அவ்வாறு செயல்பட்டு, தீமையற்ற உலகைப் படைப்போம். தீமையற்ற உலகத்தை முதலில், நம்மிடத்தில் உருவாக்க வேண்டும்.  இதைச் செய்தோமானால், பேருலகத்தையும் படைக்க முடியும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ, அதைப் படைக்கும் திறன் பெற்றது நமது உயிர். ஆகவே உயிரை ஈசனாக மதித்து, உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சிகரமாக்குவோம்.

நம் முன் படர்ந்து கொண்டிருக்கும் தீய உணர்வுகள், நமக்குள் ஊடுருவ இடம் கொடுக்காது, துருவ நட்சத்திரத்தின் துணைகொண்டு, அதனைக் கடலுக்குத் துரத்தியடிக்க வேண்டும். 

ஏனென்றால், தீய உணர்வுகளை ஈர்ப்பதற்கு இடமில்லையென்றால். அது, வேறு வழி இல்லாது, இறுதியில்,  கடலின் ஈர்ப்பிற்குச் சென்று மறைந்துவிடும். இவ்வாறு, இனி தீய உணர்வுகளுக்கு, இங்கு இடமில்லை என்று செய்வோம். 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை, இவ்வுலகமெங்கும் படரச் செய்வோம். அனைவரிடத்திலும் பகைமையை நீக்குவோம். மத, இன, மொழி, அரசியல் பேதங்களை அகற்றுவோம்.

அனைவரும் ஒன்றுபட்டு வாழ, எல்லா மகரிஷிகளின் அருளை வேண்டிப் பிரார்த்திப்போம். இவ்வுலகில் அமைதி படர்ந்து, அனைவரும் பிறவா நிலை எனும் நிலைஎய்த வேண்டும், என்று எண்ணி நாம் தவமிருப்போம்.

இதன் வழியில், மகரிஷிகளின் அருள் வழியைப்  பின்பற்றி, செயலாக்கி வரும் அனைவருக்கும், எமது ஆசீர்வாதங்கள்.

33. “பிறர் வாழவேண்டும்என்று நாம் எடுக்கும் உணர்வுகள், நமக்குள் வாழும் சக்தியாக வரும்
இந்த பூமியின் தன்மையில், நஞ்சினை அகற்றும் ஆற்றல் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. நீங்கள் பெற வேண்டும் என்ற இச்செயல், யாம் உபதேசித்ததை, கீதையிலே சொன்ன மாதிரி, நீ எதை நினைக்கின்றாயோ, அதுவாகின்றாய்.

நீங்கள் அனைவரும், மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்; உங்களை அறியாது சேர்ந்த, இருள்கள் நீங்க வேண்டும்; மெய்ப்பொருள் காணும் உணர்வுகள் விளைய வேண்டும் என்ற உணர்வின் நோக்கம் கொண்டு, யாம் உங்களுக்குள் உபதேசிக்கின்றேன்.

இதைக் கேட்டுணர்ந்த நீங்கள், இதைப் பின்பற்றினால்,  பிறர் வாழவேண்டும் என்ற உணர்வு, உங்களுக்குள் வாழும் சக்தியாக வளர்ந்து,  உங்களுக்குள் தீமையை விளைவிக்கும் நிலைகள் அது ஒடுங்கும்.

தீமைகள் அவ்வாறு ஒடுங்கி, மெய் உணர்வைக் காணும் நிலைகளில், உங்கள் பேச்சும், மூச்சும் வெளிப்பட்டு, இன்று விஞ்ஞான உலகால் ஏற்பபடுத்தப்பட்ட நஞ்சினை வென்று, இந்த பூமியின் தன்மையில், நஞ்சினை அகற்றி, அனைவரும் ஏகாந்தமாக மகிழ்ந்து வாழ முடியும்.

இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச்சரீரம் பெற்று, மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில், என்றும் பதினாறு என்ற நிலையை அடைந்திட முடியும்.

34. ஞானகுரு அனைவருக்குள்ளும் விளைய வைக்கும், “துன்பத்தை நீக்கும் அருள் ஞானவித்துக்கள்”
நாம் தவறு செய்யவில்லை, கேட்டுணர்கின்றோம், ஒவ்வொரு நிமிடத்திலும், பிறர் செய்யும் தவறுகளை நாம் பார்க்கின்றோம். அவர்களுடைய கஷ்டங்களைக் கேட்கின்றோம், அதைப் பார்க்கின்றோம்.

இன்று பத்திரிக்கை வாயிலாகப் பார்க்கப்படும்போது, அடிக்கடி நம்மையறியாமலே வேதனையும், துயரமும், பயமும்,ங்களுக்குள் வந்து சேர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. இதை எப்படிப் போக்கிக் கொள்வது? எதாவது வழி இருக்கிறதா?

அதற்குத்தான், அந்த  ஞானிகள் சொன்ன உண்மையின் சக்தியை, உங்களுக்குள் உபதேசித்து, கூட்டுத் தியானத்தில் எல்லோருடைய அருள்வாக்கும், யாம் மட்டுமல்ல, உங்கள் அனைவருடைய அருள்வாக்கும் சேர்க்கப்படும்போதுதான், அந்த வலு கூடுகின்றது என்று, மது குருநாதர் கூறினார்.

‘’உன்னிடம் எவ்வளவு பெரிய சக்தியைக் கொடுத்தாலும், ஒரு விதையைக் கொண்டுபோய் விதைத்து, அது, பலவிதைகளாக விளைந்தால் தான் சாப்பாட்டிற்கு உதவும். இல்லையென்றால், ஒரு விதை ஒன்றுக்குமே உதவாது’’ என்று மது குருநாதர் எம்மிடம் கூறினார்.

‘’ஒரு நெல்லை வைத்துக்கொண்டு, பசியைப் போக்கிவிடுவேன் என்று சொன்னால் முடியுமோ, முடியாது. ஒரு நெல்லை வைத்துச் சாப்பிட முடியாது. அந்த நெல்லை விளையவைத்து, அது பல நெல்லான பின் தான், சாப்பிடமுடியும்.

அதே மாதிரிதான்,  உங்களிடமுள்ள துன்பத்தையெல்லாம் போக்க வைக்கிறோம், ‘’நன்றாக இருக்கிறேன், நன்றாக இருக்கிறேன், நன்றாக இருக்கிறேன்’’, என்று நீங்கள் சொல்லவேண்டும்.

அவ்வாறான சொல் வரவேண்டும். உங்கள் பேச்சைப் பார்த்து சந்தோஷப்படுகிறவர்களுக்கெல்லாம், நல்லது விளைய வேண்டும். அப்படித்தான், அங்கே நல்லதை விளைவிக்க முடியும்.

இதைத்தான் நமது குருநாதர் சொன்னார். ஆக,  ‘’அவர்கள் நன்றாக இருக்கவேண்டும்’’ என்ற எண்ணத்தை, உனக்குள் வளர்த்து, நல்ல வித்தினை அவர்களுக்குள் பதியச் செய்து, அந்த வித்தினை நீ எப்படி வளர்க்கவேண்டும் என்று குருநாதர் சொன்னார். 

ஆகையினாலேதான், இதைப்போல அந்த உணர்வின் தன்மையை நமக்குள் பெறச் செய்யவேண்டும்.

*அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை, நீங்கள் பெற வேண்டும். அதன் வழிகளில், உங்களுக்குள் மெய்வழி வளர வேண்டும். உங்கள் பேச்சும், மூச்சும், பிறருக்கு நன்மை பயக்கும் சக்தியாகப் பெற வேண்டும் என்று,  மது குருநாதர் காட்டியபடி யாம் தியானிக்கின்றோம்.

அவ்வாறு தியானித்து, அந்த சக்தியின் நிலைகளை  உங்களுக்கு உபதேசித்து, உங்களுக்கு வித்தாகக் கொடுத்து, அந்த எண்ணத்தை உங்களுக்குள் தூண்டச் செய்யும்போது,  நீங்கள் எல்லோ\ரும் பெற வேண்டும் என்று எண்ணும்போது, முதலில் நான் பெறுகின்றேன். நாம் எல்லோரும் சேர்ந்து சொல்லும்போது, அந்த எண்ணத்தின் நிலைகள் அங்கே வளர்கின்றது.

இதுதான், எமது குருநாதர் காட்டிய அந்த நிலை.  ஆகவே, இதை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். அந்த ஞானியரின் அருள்சக்தியை உங்களுக்குள் கிடைக்கச் செய்வதற்குத் தான், யாம் உங்களுக்கு இதைச் செய்தது.

ஆக, ‘’ஆத்மசுத்தி’’ செய்துகொண்டதின்  நிலைகள், நாம் இத்தனை பேரும் சேர்ந்து என்ன செய்திருக்கிறோம். ’’மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்’’,  ‘’தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரும், அவர்களது வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும்’’ என்று எல்லோரும் சொல்லும் பொழுது, அனைவருக்கும் அந்த பேராற்றல் எளிதாகக் கிடைக்கின்றது.

இவ்வாறு, எல்லோரும் சேர்ந்து செயல்படும் பொழுது, உலகில் உள்ள மக்கள் அனைவரும், மெய் ஒளி பெறும் சந்தர்ப்பம் உருவாகின்றது.  நன்மைகள் பல செய்யத் துணிவோம், எமது அருளாசிகள்.

35. தீமை தரக்கூடிய அணுக்களை, நன்மை செய்யக் கூடிய அணுக்களாக மாற்றும் நிலை
ஒருவன் தீமையைச் செய்கிறான் என்றால், அவனிடம் உள்ள தீமையின் உணர்வுகளை வீழ்த்துவதற்குப் பதில், தீமை செய்தவனின் உடலையே சாய்த்துவிடும் நிலை வருகிறது என்று தெளிவாகக் காண்பித்தருளினார்,  நமது குருநாதர்.

தீமை தரக்கூடியவைகளாக இருந்தாலும், மனிதன் அவைகளை, தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் வல்லமை வாய்ந்தவன். 

அதே போன்று, தீமை செய்வோரின் உணர்வுகள் நமது உணர்வில் கலந்துவிட்டால், அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வுகள், நமக்குள் விளையாது தடுத்து,  சமப்படுத்தும் நிலை பெறவேண்டும்.

மகரிஷிகள், தம்மிடத்தில் தீமையின் உணர்வுகள் வந்து மோதும்பொழுது அவைகளைச் செயலற்றதாக்கி, தீமையின் உணர்வுகளை ஒடுக்கி, அவைகளுடைய செயலாக்கங்களை மாற்றி, தம்முள் நல்லுணர்வினைவலிமை மிக்கதாக மாற்றியவர்கள்.

அவர்களைப் போன்று, நாம் நம்முள் தீமையின் உணர்வுகளை ஒடுக்குகின்ற பொழுது,  ஒருவன், நமக்கு எத்தகைய தீமைகளைச் செய்து கொண்டிருந்தாலும்,  அது நம் உடலுக்குள், தீமை விளைவிக்கும் அணுக்களை உருவாக்குவதில்லை.

மகரிஷிகளின் அருளுணர்வுகள், நமது உடலில் கலக்கப்படும் பொழுது,  நமது உடலில் தீமைகளை உருவாக்கும் அணுக்கள் விளைந்திருப்பினும், அவைகளை,  நமக்குள் நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றுகின்றன.

உதாரணமாகஉடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல மருந்துடன், சிறிது விஷத்தைக் கலக்கப்படும் பொழுது, விஷம் நல்ல மருந்திற்கு ஊட்டச்சக்தியாக மாறுகின்றது.

எந்த மருந்தை, சிறிது விஷத்துடன் கலந்து கொடுக்கின்றோமோ, அந்த விஷம் ஊடுருவி, இந்த நல்ல மருந்தின் தன்மையை, உடலெங்கும் பரவச் செய்கின்றது.

நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடலில், மருந்தினைச் செலுத்தும் பொழுது, மருந்துடன் கலந்துள்ள விஷம், மருந்தினை எடுத்துச் சென்று, உடலில் உள்ள வேதனையை உருவாக்கும் உணர்வின் அணுக்களை உணவாக உட்கொண்டு, தன் இனத்தை உருவாக்கும் தன்மையால், நல்ல மருந்தின் தன்மை அடர்த்தியாகி, வேதனையை உருவாக்கும் அணுக்களை, வளரவிடாமல் தடுக்கச் செய்கின்றது, மருந்துடன் கலந்துள்ள விஷம்.

ஆக, இதைப் போன்று ஞானிகள் காண்பித்த வழியில், அருள்ஞானியின் உணர்வை, நம் எண்ணத்துடன் கலந்து, நாம், எத்தகைய தீமையின் உணர்வைக் கண்டறிந்தோமோ, அப்பொழுது, மகரிஷியின் ஆற்றல் மிக்கசக்தி நாம் பெற வேண்டும், எனும் உணர்வினை இணைத்து, நமது உடலுக்குள் செலுத்திவிட்டால் அருள் ஞானியின் உணர்வுகள் இந்த விஷமான நிலையை ஒடுக்கிவிட்டு, நமக்குள் வலு கொண்ட நிலையாக, மாறுகின்றது.

இந்த உண்மைகளை, எமது குருநாதர் எமக்கு உணர்த்தி, எம்முள் உணர்ச்சிகளை தூண்டச் செய்து, எமக்குள், இதனின் நினைவின் ஆற்றலை பதியச் செய்து, துருவமகரிஷிகளின் ஆற்றலை நீ பருகு என்றார்.

யாம் காட்டினுள் இருந்தபொழுது, “பல உயிரினங்கள் தன் பசியைத் தணிப்பதற்காக மற்ற உயிரினங்களைத் துரத்துவதும், மற்றவைகள் அஞ்சி ஓடுவதும், சிக்கிக் கொண்டவைகள் ஓலமிடுவதும்போன்றவைகளைக் கண்டுயாம் அச்சப்படும் நிலை உண்டானது.

அவைகள் செய்த துயர நிலைகளால், துயரத்தை உருவாக்கும் அணுக்கள் எமக்குள் எப்படி விளைகின்றது என்றும், இதை உடனடியாக மாற்றுவதற்கு யாம் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்றும், எமக்கு குருநாதர் உபதேசித்தார்.

ஆக, மகரிஷிகள் தமக்குள் வளர்த்துக்கொண்ட உணர்வை, உன்னிடத்தில் வளர்த்துக்கொண்டால், மற்றொன்றைக் கொன்று புசிக்கும் அந்த உயிரினங்கள், உன்னைப் பார்த்தாலும், உன்னுள் வளர்த்துக் கொண்ட உணர்வின் மணம் கண்டு, அது அஞ்சி ஓடும். ஆக, அச்சுறுத்தும் உணர்வுகள் உனக்குள் வந்தாலும்அதை அடக்கி ஒளியாக உனக்குள் மாற்றுகின்றாய்.

எதனின் உணர்வை உனக்குள் அடக்குகின்றாயோ, அதனின் உணர்வுகள் உனக்குள் வலு பெறும்பொழுது, வெளிப்படும் நுண்ணிய அலைகளை நுகரும் ஆற்றல், மற்ற உயிரினங்களுக்கு உண்டு. இதனை நுகரும் உயிரினம், இவன் நம்மை அடக்கி விடுவான், என்ற உணர்வு கொண்டு அது அஞ்சி ஓடும் என்ற நிலைப்படுத்தி, அதை நிதர்சனமாகக் காண்பித்தார் குருநாதர்.

ஆகவே, நாம், “மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் ஈஸ்வரா”, என்று எண்ணி ஏங்கி தியானிக்க வேண்டும்.

 நம்மில் கேட்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு, மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எண்ணி,  நமக்குள் இருக்கும், துன்புறுத்தும் உணர்வின் அணுக்களுடன், மகரிஷிகளின் அருள்சக்தியை இணைக்கப்படும் பொழுது,  அது நம்முள் தீமைகளைக் கவர்ந்திடும் நிலைகளை மாற்றி,  அருள் மகரிஷிகளின் இனங்களை, கவர்ந்திடும் நிலை வருகின்றது.

இப்படி, மகரிஷிகளின் அருளுணர்வுகளை நம்முள் இணைக்கப்படும் பொழுது, நமக்குள், தீமைகளை அடக்கிடும் தன்மை வருகின்றது. நம்முள் அஞ்சிடும் நிலை மாறுகின்றது. தெளிந்த மனதின் தன்மை, நம்மில் உருவாகின்றது.

36. தீமைகளைச் செயல்பட விடாது அடக்கி, அதை அரவணைத்து ஒளியாக மாற்றும் மகரிஷிகளின் செயல்
அனைவரையும் மகிழ்ந்திடும் நிலை பெறச் செய்து,  அந்த மகிழ்ச்சியின் தன்மையில், நமது மகிழ்ச்சியின் தன்மையை, நம்மில் வளர்த்திடும் நிலை பெற வேண்டும்.

இராமாயணத்தில் கல்யாணராமா... என்று பாடினார்கள். கல்யாணராமனாக எப்பொழுது ஆகின்றான் என்றால், சீதையை மணக்க வேண்டுமென்றால், அரசன் வைத்திருக்கும் வில்லைத் தூக்கி நிறுத்தி, வளைத்து முறிக்க வேண்டும். அவ்வாறு வில்லை வளைத்து முறிப்பவர் எவரோ, அவரே சீதையை மணக்கும் தகுதியுடைவர் என்கிற நிலையைக் காண்பித்தனர்.

ஏனெனில்,  காண்டீபத்தில் பொருத்தி எய்யப்படும் அம்பு, பிறரைத் துன்புறுத்தும் தன்மை கொண்டது.  ஆகவே, துன்புறுத்தும் உணர்வினை வென்றவர் எவரோ, அவரே சீதையைத் திருமணம் செய்து கொள்ளும் தகுதியுடையவர், என்னும் நிலையைக் காண்பித்தனர்.

வீர தீரம் காட்டிய பலரும், வில்லின் வலிமையைத்தான் உணர்ந்தனரே தவிர, வில்லைத் தூக்கக் கூட அவர்களால் முடியவில்லை. ஆனால்  இராமனோ,  தீமை விளைவிக்கும் நிலைகளில் இருந்து, தீமையில்லாத நிலையை விளைவிக்கின்றான், என்பதை உணர்த்தும் பொருட்டு, இராமன் வில்லை தூக்கி நிறுத்தி, வளைத்து, முறித்து விடுகின்றான்.

அதன்பின், சீதையை இராமன் மணந்து கொள்கின்றான் எனக் காண்பித்து, தீமையை அடக்கும் சக்தியைத் தன்னுடன் இணைத்துக் கொண்ட நிலையைத் தான் கல்யாணராமன்என்று எடுத்துரைத்தனர். இவ்வாறு வளர்ந்தவர்கள்தான் மகரிஷிகள்.

அந்த மகரிஷிகள்,  இந்த மனித வாழ்க்கையில் தீமையை அகற்றி,  தீமையைச் செயல்படவிடாது தம்முடன் அரவணைத்து, ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவர்கள்.  துருவ மகரிஷியை பின்பற்றிச் சென்றவர்கள், சப்தரிஷிகள் எனும் நிலையைக் காண்பித்தார்கள்.

காரம், எரிச்சலைத் தருவது என்றும், புளி கூசச் செய்வது என்றும், உப்பு உமட்டலைத் தருவது என்றும் நாம் அறிந்திருக்கின்றோம். ஆனாலும், நாம் ஒரு கருணைக் கிழங்கை எடுத்து வேக வைத்து, கிழங்கில் உள்ள விஷத் தன்மையை நீக்கி, அதனுடன் காரம், புளி, உப்பு இவைகளை அளவாக இணைத்துக் குழம்பு வைத்து, சுவை மிக்கதாகச் செய்து சாப்பிட்டு, மகிழ்ச்சி அடைகின்றோம். இதைத்தான், நாம் கல்யாணராமன்என்று உணர வேண்டும்.

பல கோடித் தீமைகளைக் கேட்டு, பார்த்து உணர்ந்தாலும், அதனை, மகரிஷிகள் தமது அரவணைப்பாக,  தமக்குள் சுவைமிக்க ஒளியாக, மாற்றிக் கொண்டவர்கள். 

துருவ மகரிஷியும், சப்தரிஷிகளும் தங்களுடைய உயர்ந்த எண்ணங்களின் துணை கொண்டு, மற்றவர்களுடைய எண்ணங்களைத் தம்முள் வளர்த்திடாது, ஒளி பெறும் உணர்வினைத் தம்முடன் இணைத்து, ஒளியின் சரீரமாக மாற்றியவர்கள். இதுதான் கல்யாணராமா என்பது.

37. “பேரண்ட மகரிஷிகளின்” தீமைகளைப் பிளக்கும் பேராற்றல்கள்
ஞானத்தின் வழித்தொடரை நமக்குள் விளைய வைத்தால், இந்த உடலை விட்டு அகன்றால், பேரண்டத்தில் எத்தனை தீமையின் நிலைகள் நஞ்சாக இருப்பினும், தன்னை அணுகாது அதை அடக்கிடும் நிலைகள் கொண்டு, ஒளியின் சரீரமாக மாற்றிடும் நிலைகள் வருகின்றது.

அப்படி ஆனவர்கள்தான், இன்று எதனையும் பிளந்திடும் நிலைகள் பெற்றவர்கள்,  சப்தரிஷிகள். ஆக, இந்த பூமியின் தொடர் கொண்டு வாழுகின்றார்கள். இந்தப் பிரபஞ்சம் இறந்தாலும், இவர்கள் தனி மண்டலமாக இயக்கப்பட்டு, தீமையற்ற உலகை அவர்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டிருப்பார்கள்.

ஆக,  ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஏற்பட்ட இந்த மண்டலங்கள், வேறு வேறு விதமாக இருப்பினும், உடல் பெற்ற உணர்வின் நிலைகளிலிருந்து, தீமைகளைப் பிளந்த உணர்வுகள் ஒருக்கிணைந்து, பெரும் மண்டலமாகத் திகழ்கின்றார்கள்.

இந்த அகண்ட பேரண்டத்தில், இப்பேர்ப்பட்ட மகரிஷிகளும் உண்டு. ஆக, மனிதனில் தெளிந்த நிலைகள் கொண்டு, அது பெரும் வட்டமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள். மனிதனின்  நிலைகள், நாம் இன்று அதிலே இணைந்தால்தான் நல்லது.

பேரண்டம், முதலிலே இருண்ட நிலைகளில் இருந்தது, ஆக ஒன்றுடன் ஒன்று மோதி, சுழற்சி வேகம் கொண்டு,  சூரியன்களாக விளைந்து, நட்சத்திரங்களாக விளைந்து, அதிலே தோன்றிய கோள்களாக விளைந்து, உயிரணுக்களாக விளைந்து.

உயிரணுக்கள் அதனின் நிலைகள் நுகர்ந்து, நுகர்ந்து, உணர்வின் தன்மை உடல் பெற்று, எண்ணத்தின் நிலைகள் கொண்டு, இயங்கத் தொடங்கும் நிலைகள் கொண்டு, தன்னைக் காத்திடும், காத்திடும், நிலைகள் கொண்டு வந்தது.

இப்படி, இந்த உயிரின் நிலைகள், உடல்களைக் காத்திடும் நிலையாக வந்தாலும்,  இந்த உயிருடன் ஒன்றி, ஒளியின் சரீரமாகத்  தன்னைக் காத்திடும் நிலைகளில் விளைந்தவர்கள்தான், மகரிஷிகள்.

ஆகவே,து அனைத்தும் நாம் பெறமுடியும். நமக்குள் இருக்கும் இந்த பாதுகாப்பு நிலையை பிளக்காது, அதிலே, இந்த மகரிஷிகளின் உணர்வுடன் பாதுகாக்கும் அரணாக, நாம் அமைத்திடல் வேண்டும். 

நமக்குள் நம் ஆறாவது அறிவை, இந்த ஓசோன் திரையைக் கிழித்திடாது, மற்ற தீமைகள் நமக்குள் படர்ந்திடாது, அருள் மகரிஷிகளின் நிலைகளை, நாம் ஓசோன் திரையாக அமைத்திடல் வேண்டும், அமைக்க முடியும்.

அந்த நிலைகள் பெறச் செய்வதற்குத்தான், மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி, விண்ணின் ஆற்றலைக் காண, அந்த உணர்வைப் பெற, அவர் செய்து அருளிய அந்த உணர்வின் தன்மை, அதைப் பெறும் பாக்கியத்தை, இன்று   நாம் அனைவரும் பெற்றுள்ளோம்.

ஆகவே, நமது குருநாதர் காட்டிய அருள்வழியில், நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக, ஒருங்கிணைந்து செயல்படுவோம். எமது அருளாசிகள்.

38. தீமையை நீக்கி, “துருவ நட்சத்திரம் சென்று பழகும் நிலை”
நாம் இன்று பரிணாம வளர்ச்சியடைந்து, மனிதனாக வந்து இருக்கிறோம். பரிணாம வளர்ச்சியடைந்து வந்த நாம், இனி எப்படி இருக்க வேண்டும்?

அகஸ்தியனும் பரிணாம வளர்ச்சியில் வந்தவன் தான். கதிரியக்கங்களை அகஸ்தியன் தனக்குள் நுகர்ந்து,  உடல் பெறும் உணர்வை மாற்றி, உயிரைப்போல உணர்வின் அணுக்களை மாற்றி, உணர்வின் ஒளியின் சரீரமாக, துருவ நட்சத்திரமாக இன்று நிலை கொண்டிருப்பவன். மனிதனில் அவன் வளர்ச்சி பெற்றவன்.

அவ்வாறு ஆன, அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நாம் ஒவ்வொரு நேரத்திலும், வெறுப்போ, வேதனையோ, சலிப்போ, பகைமையோ, இதைப் போன்ற உணர்வுகள் நாம் எடுத்து, தவறின் உணர்வுகள் இயங்கச் செய்வதை, அதைத் தடுத்து, அதன் உணர்வின் தன்மைகளை அடக்கவேண்டும்.

எப்படி காரம், புளிப்பு, உப்பு என்று தனித்தனித் தன்மையாக இருக்கும்போது, அந்த உணர்ச்சிகள் அதை ஊட்டுகின்றது, அதன் வழியில் செயலாக்குகின்றது. இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்த்து, மனிதனின் ஆறாவது அறிவு கலவையாக்கி, சுவையான, உணவாக உட்கொள்கின்றோம். அந்த சுவையாக மாற்றும் தன்மையை, நம் வாழ்க்கையில் பெறுதல் வேண்டும்.

நாம் நமது வாழ்க்கையில், எப்பொழுதெல்லாம் பகைமை உணர்வு வருகின்றதோ, அதை அடக்க உங்களுக்குள், இப்பொழுது தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பதிவு செய்கின்றோம்.

அதன் உணர்ச்சியின் வேகமாக, உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பதிவு செய்தை, அதன் நினைவு கொண்டு நீங்கள் எடுக்க வேண்டும். ஆக நினைவு கொண்டு எடுத்து, உங்களைக் காக்க உங்கள் எண்ணம்தான் உதவும்.

திட்டியவனின் உணர்வை நுகர்ந்தபின், அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் வருகின்றது. அதன்வழி   எண்ணும் பொழுது, அவனை வெறுக்கும் தன்மை, வருகின்றது, அந்த வெறுக்கும் தன்மை உங்களுக்குள் வரும்பொழுது, ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முடியாதபடி, அது தடையாக வருகிறது.

த்தகைய தடைகள் வருவதைத் தடுப்பதற்கும், அந்த உணர்வின் தன்மையை அடக்குவதற்கும்தான், அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை, இப்பொழுது உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்வது. அப்பொழுது, இந்த உணர்வை எடுத்தால், அந்தத் தீமைகளை மாற்றி அமைக்க முடியும்.

ஆக என்னுடைய ஜெபமே, என்னுடைய தியானமே, யார் யார் கேட்டறிந்தனரோ, அவர்களுக்கெல்லாம், அவர்கள் எண்ணும் பொழுதெல்லாம், அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் கிடைக்க வேண்டும் என்று, உணர்வின் வலுவை ஊட்டிக் கொண்டிருக்கின்றேன்.  இதை நீங்கள் எடுத்து வளர்ந்தால்தான், நாட்டுக்கும் நல்லது, நம் அனைவருக்கும் நல்லது.

னென்றால், நாளை வரும் எதிர்காலம், மிகவும் விஷத்தன்மையாக மாறும் பொழுது, அதைக் கழித்து, வடித்து, நாம் இந்த உடலில் இந்த உணர்வின் அணு,  எந்த நிமிடம் ஆனாலும், அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்றுவிடலாம். 

இல்லையென்றால், இந்த பூமியில் மாற்றங்கள் துரித நிலைகள் ஆகிவிட்டால், பூமி கொஞ்சம் நகர்ந்தால், ஐஸ் பாறையாக மாறிவிடும். அந்த ஐஸ் பாறையாக மாறியபின், விஞ்ஞான அறிவில் உள்ளவர்களும், சிலர் தப்பலாம்.

ஆனாலும், இங்கே அசுத்தமான நிலைகள், பனிப்பாறைகள் மூடி உள்ளுக்குள் சென்றுவிட்டால், யார் காப்பாற்றுவது?  அந்த நிலைகள் சீக்கிரம் வரத்தான் செய்யும்.

அதற்குள், நாம் இதிலிருந்து பூமியை விட்டு, நாம் வளர்த்த, இந்த உலகத்தின் தன்மை கொண்டு, அங்கே தப்பிச் சென்ற அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கி, நாம் இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது,  நாம் அங்கே  (துருவ நட்சத்திரம்)  சென்று, பழகும் தன்மை வர வேண்டும். 

எந்த நிலையிலும் சரி, இந்த உடல் நமக்கு சொந்தமல்ல. உயிரின் உணர்வு வந்து, ஒளியாகும் தன்மை வரப்போகும் பொழுது, ஒளியாக மாற்றும் தன்மை பெற வேண்டும்,

அதற்குத்தான் இந்த உபதேசமே தவிர, நான் சொத்தைச் சம்பாரிக்க வேண்டும், இதைச் செய்தேன், என் பிள்ளை இப்படி இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தால், அந்த பிள்ளையின் தவறின் உணர்வை, நாம் வளர்த்தால், தவறின் உணர்வுகள்தான் நமக்குள் விளைகின்றது.

அவன் செய்யும் தவறின் தன்மை, வீரியத்தன்மை பெற்றது, இப்படிச் செய்கிறான் என்று, பாசத்தால் நுகரப்படும்போது, இங்கே நல்ல குணங்கள் அனைத்தையும் வீழ்த்தி விடுகின்றது. 

ஆகவே, நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து, அவன் உணர்வு நம்மை இயக்கிடாது, அவனுக்கு, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்; அவனுக்குள் நல்ல உணர்வுகள் வர வேண்டும்; அவன் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் என்று அவன் உடலிலே,  இந்த உணர்வின் தன்மையை பாய்ச்சி, அவனை மாற்றி அமைக்க வேண்டும்.  

ஆகவே, பிற தீமைகளின் உணர்வுகள், நம்மை இயக்கிவிடக்கூடாது. சிந்தித்துப் பாருங்கள், ஏனென்றால், உங்களைப் பக்குவப்படுத்துவதற்காக, யாம்  இந்த நிலைகளைச் செய்தது.

நமக்குள்,  இதைப் பேணிக்காக்கும் திறன் வர வேண்டும். இவ்வாறு,  அந்த பேணிக்காக்கும் திறன்  இருக்கும்போதுதான்,  ஞானிகள் மற்றவர்களுக்கு இதைக் கொடுப்பார்கள். 

அவ்வாறு, இந்த அருள் உணர்வுகளை நீங்கள் அனைவரும், ஒவ்வொரு நாளும் வளர்த்து, அதைப் பேணிக்காக்கும் திறன் பெற்றிட, எமது அருளும், குரு அருளும் உறுதுணையாக இருக்கும்