ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 29, 2012

புவியியல்


1. துருவப் பகுதியிலிருந்து பூமி கவரும் நிலை
 பூமியின் ஈர்ப்பு வட்டத்துக்குள் துருவப் பகுதியில் ஈர்த்து, கலக்கும் உணர்வின் அணுக்கள், பூமியின் நிலப்பரப்பின் மேலே படுகின்றன. அதே சமயத்தில், சுழற்சியில் ஏற்படும் வெப்பம், நடு மையம் சென்றடைகின்றது.

நடு மையம் கொதிகலனாகி, தன் அருகில் இருப்பது உருகுவதும், மாற்றங்கள் ஏற்படுவதும் ஆகி, உருவாகும் ஆவியின் தன்மை, அடர்த்தி அதிகமாகும் பொழுது, வாயுத்தன்மை வெடித்து (உதாரணமாக ஒரு பாத்திரத்தில் வெப்பம் அதிகரிக்கும் பொழுது வாயுக்கள் உருவாகி, திடீரென்று வெடிப்பது போன்று) மற்ற பக்கம் கலந்து ஊடுருவி, கலவைகள் ஆவியாக மாறுவதும், ஒரு பக்கம் எரிமலையாக வெடித்துக் கக்கி வெளிவருகிறது. பூமியில் நில நடுக்கங்களும் வருகின்றது.

அதே சமயத்தில், பூமியில் வட துருவத்தில், கவரும் ஆற்றல் மிக்க சக்திகள் அனைத்தும் பனிப் பாறைகளாக உறைகின்றது. பனிப் பாறைகளாக உறைந்தாலும், வெப்பத்தின் நிலைகளுக்கு ஒப்ப உருகி, நீராக கடலாக பரவுகின்றது. 

இவ்வாறு உருவாகும் கடலுக்குள், எரிமலைகளும் நில நடுக்கங்களும் ஏற்பட்டு. கடலுக்குள்ளும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கடலில் மலைகளாக எழுவதும், ஒரு பக்கம் ஆவியின் அடர்த்தியின் காரணமாக, சில பகுதிகள் ஆழப்பகுதியாக செல்லும் நிலையாகின்றது.

வான் வீதியில் நட்சத்திரங்கள் உமிழ்த்தும் உணர்வுகளை, நமது பூமி கவரும் பொழுது, இந்த உணர்வுகள் கலவையாகி, பல விதமான பாறைகள் உருவாகின்றன.

நட்சத்திரங்கள், ஆண் பெண் என்ற நிலைகளில் வரும்பொழுது,
கீழே இருக்கும் வெப்பத்தினால்,
இது இணைந்து மண்ணாகவும், மணலாகவும் மாறுகின்றது.
இவை இரண்டும் இணையும் பொழுதுதான்,
அந்த மண்ணின் கருத்தன்மை கூடி,
தன் இனத்தைச் சேர்த்து, விருத்தி ஆகின்றது.

அதே சமயத்தில், விளைந்த உணர்வின் தன்மை,
சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி,
இதனுடைய கருக்கள் மேற்பரப்பில் வீழ்வதும்,
அதனதன் இனத்தைக் கவர்ந்து,
ஒரு சில அடி வித்தியாசத்தில் கூட மண்ணின் தன்மை மாறி,
நிறத்தின் தன்மை மாறி உருவாகின்றது.
அதனதன் கருவிற்குத் தக்கவாறு
அதனதன் இனதைக் கவர்ந்து மணலாக விளைகின்றது.
உதாரணமாக செம்மண்ணாக இருந்தால்,
வெங்கச் செங்கலாக மாறுகின்றது.

ஒத்த உணர்வின் நட்சத்திரத்தின் தன்மை, அதிகமாக அதற்குள் கலந்திருந்தால், மின்னல்கள் வரப்படும் பொழுது, ஈர்க்கும் ஆற்றல் பெற்று, கருவாகி, உருவாகி, அந்த நட்சத்திரத்தின் தன்மை எதுவோ, அதன் கலராக இதற்குள் உருவாகி, வைரக் கல்லாக மாறுகின்றது. தாவர இனங்களுக்கு சத்து கொடுக்காது, வறண்ட நிலைகளில் இருக்கும்.

கடல் அலைகளிலிருந்து வெளிப்படும் ஆவியின் தன்மை, ஈர்க்கப்பட்டு, கடல் வாழ் பாறைகளில், பல சத்தின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று மோதி, பல உணர்வின் சக்திகளாகி, ஒரு அழுக்கைப் போன்று தேங்குகின்றது.

மின்னல்  தாக்கப்படும் பொழுது, இயக்கச் சக்தியாகி, கடல் வாழ் காளான்களாக உருப் பெறுகின்றது.

அது சீக்கிரம் கரைகின்து. அதன் சக்திகள் மற்றதோடு கலந்து, ஒரு விஷத்தன்மை வாய்ந்த செடி, அதாவது பாசம் போன்று அடர்த்தியின் நிலைகளில் விளைகின்றது.

இவ்வாறு விளைந்த ஒவ்வொன்றும் அணுக் கருக்களாக உருமாறி, பல செடி கொடிகளாக உருவாகி, அதன் வளர்ச்சியின் தன்மை பெறுகின்றன.

2. பிரபஞ்சத்தில் உயிரணு உருப்பெறுதல்
இப்படி வளர்ச்சி அடையும் தன்மை வரப்படும் பொழுது தான்,
வான் வீதியில்  ஆண்பால் என்ற நட்சத்திரமும்,
பெண்பால் என்ற நட்சத்திரமும்
உமிழ்த்தும் உணர்வின் தன்மை,
சூரியனால் வெப்ப காந்தங்களால் கவரப்பட்டு
அணுக்களாக பரவி வருகின்றது.
இவ்வாறு, 27 நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய துகள்கள், மற்றது எதிலேயும் மோதாதபடி, வியாழன் கோளின் ஈர்ப்புக்குள் வரப்படும் பொழுது,

உதாரணமாக,
கார்த்திகை நட்சத்திரத்தின் துகள் முதலில் வந்து விடுகிறது என்றால்,
அதன்பின் ரேவதி நட்சத்திரத்தின் துகள் பிண்ணனியில் வரப்படும் பொழுது,
வியாழன்கோள் ஈர்ப்பு வட்டத்திற்குள்மோதுகின்றது.
மோதும்பொழுது மின்னலாக மாறுவதில்லை,
துடிப்பின் தன்மை பெறுகின்றது. 

இப்படி, துடிப்பின் தன்மை வந்ததினால், பெண்பால், ஆண்பால் என்ற இந்த நட்சத்திரங்களின் உணர்வலைகள் ஒன்றாகச் சேர்ந்து உயிரணுவாக மாறுகின்றது.

வியாழன் கோள், எவ்வாறு இந்தப் பிரபஞ்சத்திற்குள்,
இணைக்கும் பாலமாக,
பல கோள்களை  உருவாக்குவதற்கோ,
கோள்களை வளர்ப்பதற்கோ, மாற்றி அமைப்பதற்கோ,
குருவாக இருப்பது போன்று,
நம் உயிரின் தன்மை, வியாழன் கோளிலிருந்து உருவாக்கப்பட்டு, உயிரணுக்கள் அதிலிருந்து வெளிப்படுகின்றன.

இவ்வாறு, பல நட்சத்திரங்கள் ஆண், பெண் என்ற நிலைகளில் ஒவ்வொன்றின் கலவைகள் கொண்டு, பல நட்சத்திரங்களின் உயிரணுக்கள் உருவாகின்றன.

ரேவதி நட்சத்திரத்தின் தன்மை அதிகமாக இருப்பின், அது பெண்பாலாக உருவாக்கும் உயிரணுவாக உருவாகின்றது. கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள்  அதிகமானால், ஆண்பாலாக உருவாக்கும் அணுவாக உருவாகின்றது.