ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 30, 2012

தாவரவியல்


நிலவாழ் தாவர இன வளர்ச்சி
வான்வீதியில் உருப் பெற்ற உயிரணுக்கள், பூமியின் சுழற்சியில் கவரப்பட்டு, பூமியின் ஈர்ப்பிற்குள் வரும்பொழுது, இந்தக் கடல் வாழ்நிலைகளில் உருவாகும், தாவர இனங்களில் பட்டவுடனே, தனது துடிப்பின் ஈர்ப்பால், அதன் சத்தைக் கவர்ந்து, மீனினங்களாக உருவாகின்றது. 

அது எந்தெந்தத் தாவர இனங்களை உணவாக உட்கொண்டதோ, அதற்குத் தகுந்த ரூபம் பெறுகின்றது. தான் கவர்ந்த உணர்வுகள், அந்தத் தாவர இனங்கள், எந்தெந்த நிறங்களில் இருக்கின்றதோ, இதைப் போல இந்த மீனினங்களில் வண்ணங்கள் மாறி, மாறி வருகின்றது.


சனிக் கோள், எவ்வாறு தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வுகளை உறை பனியாக்குகின்றதோ, இதைப் போல, சனிக்கோளின் சுழற்சி, இதன் மேல் (கடலில்) வரப்படும்பொழுது, சூரியனில் வெளிப்படும் ஆவியின் தன்மையும் கலந்து, சுழற்புயலாக வானிலே இழுக்கப்பட்டு, மேகக் கூட்டங்களாக மாறி, மழையாகப் பெய்கின்றது.

அப்பொழுது, இந்த கடலுக்குள் ஏற்பட்ட மற்ற தாவர இன வித்துகளும், மழை நீருடன் கலந்து, நிலப்பகுதியில் வாழும் தாவர இனங்களாக வளர்ச்சி பெறுகின்றது.

நிலப்பரப்பிலும், ஒன்றுடன் ஒன்று கலந்து,
புதுப் புது தாவர இனங்களாக,
கடல் வாழ் நிலைகளைப் போலவே வளர்ச்சி பெறுகின்றது.

நமது பூமியில் உள்ள தாவர இனசத்துக்கெல்லாம், முதன்முதலில் உருவான காளான் தான் குரு.

சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றிய, மற்ற பாறைகளின் சத்துடன்,
இந்த காளானிலிருந்து வெளிப்படும் சத்து,
சூரியனின் காந்தப் புலனறிவால் கவர்ந்து
அலைகளாக மாறும்பொழுது, ஒன்றுடன் ஒன்று கலந்து,
புல், பூண்டு, மற்ற தாவர இனச் செடிகளாக மாறுகின்றது.

செடி கொடிகளிலிருந்து வெளிப்படும் சத்தின் தன்மையை, சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து, இப்புவியில் அலைகளாகப் படர்கின்றது. 

செடியில் விளைந்த வித்து, நிலத்தில் படும்போது, 
அந்த வித்து புவி ஈர்ப்பின் துணை கொண்டு, 
தாய்ச் செடியிலிருந்து வெளிப்பட்ட உணர்வை,
தான் நுகர்ந்து, செடிகளாக விளைகின்றது.

சூரியனில் உருவாகும் வெப்பம் காந்தம், விஷம் இந்த மூன்றும் சேர்ந்து, புவியின் ஈர்ப்பில் படரும் பொழுது, ஒரு செடியிலிருந்து வெளிப்படக்கூடிய, அந்த செடியின் சுவையின் சத்தை, காந்தம் கவர்ந்து அலைகளாக மாற்றப்படும்  பொழுது சீதாலட்சுமி என்ற காரணப் பெயரிடுகின்றனர். 

சூரியன், அந்த செடியின் சத்தைக் கவர்ந்து, அதில் விளைந்த வித்திற்கு உணவாகக் கொடுத்து, வளர்க்கச் செய்கின்றது. அதே சமயத்தில்,
ஒரு ரோஜாச் செடியிலிருந்து வெளிப்படும் பூவின் மணமும்,
ஒரு மாமரத்திலிருந்து வரக்கூடிய இலையின் சத்தையும்,
சூரியன் கவர்ந்து அலைகளாக படரச் செய்கின்றது.

இன்னொரு பக்கம், ஒரு விஷச் செடியின் உணர்வுகள் அதிகமாகி,
அது உமிழ்த்தப்படும் போது, விஷத்தின் தன்மை அதிகரிக்கின்றது.
மாமரத்தில் இருந்து வெளிப்பட்ட
துவர்ப்பான உணர்வுகள் நகர்ந்து ஓடுகின்றன.
இதைக் கண்டு, ரோஜாப் பூவிலிருந்து வெளிப்பட்ட
துவர்ப்பான உணர்வுகள் நகர்ந்து ஓடுகின்றன.

ஓடும் பாதையில், இன்னொரு
விஷச் செடியிலிருந்து வெளிப்படும்
உணர்வுகளோடு மோதும் பொழுது சுழற்சியாகின்றது.
இந்த நான்கும் ஒன்றாக இணைகின்றன.
அவ்வாறு இணைந்து, அரளிச் செடியாக விளைகின்ற வித்தாக உருப் பெறுகின்றது. இதைப் போல, பலவிதமான, எண்ணிலடங்காத  செடி கொடிகள், மரங்கள் உருவாகின்றது.