(பக்கம் 3,4)
மனித
வாழ்க்கையில் மகரிஷிகள் தீமைகளை அகற்றி, விண்ணுலகில்
எவ்வாறு இன்று சுழன்று கொண்டு இருக்கின்றனர்? அவர்கள் உடலிலிருந்து தீமையை அகற்றிய நிலைகள், அவர்கள்
உடலில் விளைய வைத்த உணர்வலைகள், சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு, இன்றும் நம் பூமியில் எவ்வாறு சுழன்று கொண்டிருக்கின்றது?
அதை நீ எவ்வாறு பருக வேண்டும்? என்ற நிலையை எமக்கு உபதேசித்து, அனுபவம் பெறும் வழியில், நமது குருநாதர் எம்மை வழி நடத்தினார்.
எமது
கால்களில் பல ஆணிகள் உண்டு. கால்களில்
ஆணி இருப்பவரைக் கேட்டால் தெரியும். சின்னக்கல்
பாதங்களில் குத்தினால்கூட, உச்சிமயிர் நட்டமாக நிற்கும்.
கால்களில்
ஆணி உள்ளவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றால், சின்னப்
பிரம்பை வைத்து 10 அடிகள்
அடித்தால், ஜீவனே பிரிந்துவிடும் என்றால், அதன்
உணர்வுகள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, எமது இரண்டு கால்களிலும் 26 ஆணிகள் உண்டு. யாம்
ஒரு காலடி எடுத்து வைக்கவேண்டுமென்றால், முள்ளில் கால் வைக்கிற மாதிரி இருக்கும். ஒவ்வொரு
நிமிடத்திலும், இந்த வேதனைகள் தோன்றும்.
எம்மை, செருப்பே போடக்கூடாது என்று குருநாதர் சொல்லி விட்டார். செருப்பு
போட்டால், உன் கஷ்டத்தை நீ உணர முடியாது.
இப்படி, எத்தனையோ பேர்கள் கஷ்டப்படுகிறார்கள்.
இந்த உணர்வுகள் எப்படி வேலை செய்கிறது? என்று நீ உணரவில்லை என்றால், பிறருக்கு, நீ உதவியும் செய்ய முடியாது. இதை நீக்கவும் முடியாது என்று குரு சொல்கின்றார்.
உனக்குள்
வேதனை எப்படி உருவாகின்றது? நீ சுவாசிக்கும் உணர்வுகள், உன்
உடலுக்குள் என்ன செய்கின்றது? என்பதையும் உணர்த்துகின்றார்
கால்
ஆணி வந்தவர்களின் கால் எப்படி முடமாகின்றது? நன்றாக இருப்பார்கள் ஆனால் வந்துவிட்டால், உடல் அப்படியே குறுகி, கால்கள்
எல்லாம் நலிந்த நிலைகள் ஆகும்.
அவர்கள்
மனதும், வேதனைப்படும் உணர்வாக மாறும். இப்படி
மனிதர்கள் எந்தெந்த நிலைகளில் தன்னை அறியாது வேதனை படுகின்றனரோ, அந்த வேதனையின் உருவாக மாறி விடுகின்றனர்.
இதைப்
போன்ற நிலைகளை நீ அறிந்தால்தான், அவைகளை மாற்றியமைக்கும் சக்திகளை நீ பெற்று, மற்றவர்களையும்
பெறச் செய்ய முடியும் என்றார் குருநாதர். ஆகவே,
அந்த அருள்ஞானிகள் காட்டிய அருள்வழிப்படி,
அகத்தியர் காட்டிய அருள்வழிப்படி,
வியாசகன் காட்டிய அருள்நெறிப்படி,
வான்மீகி காட்டிய அருள்நெறிப்படி,
போகர் காட்டிய அருள்நெறிப்படி,
நாம் எதை எண்ணவேண்டும்?
எதனை நாம் பருக வேண்டும்?
எதனை நமக்குள் வலுவாகச் சேர்க்கவேண்டும்?
எதனை வினையாகச் சேர்க்கவேண்டும்?
அதை, நமக்குள் “வினைக்கு நாயகனாக” எவ்வாறு ஆக்க வேண்டும்? என்ற நிலைகளில் எனக்கு உணர்த்துவதற்காக, என்
கால்களில் ஆணி இருக்கின்ற வரையிலும், இப்படி
நடக்கச் சொல்லி, பல
நிலைகளைச் செயல்படுத்தினார், நமது குருநாதர்.
(பக்கம் 5-14)
பல சக்திகளையும், பல வித்தைகளையும் குருநாதர் எமக்குக் காட்டினாலும், அந்தச் சக்தியின்
துணைகொண்டு, எமக்கு இறுமாப்பு
அதிகமாகவே விளைகின்றது.
எதையும், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்ற
நிலைகளில், பல சக்திகளை உணர்த்துகின்றார். அது வந்தவுடன், எமக்குள் இறுமாப்பு வருகின்றது. இறுமாப்பு வரப்படும்பொழுது, சில மந்திரவாதிகளைப் போய் அணுகுவது, அவர்களைச் செயலற்றதாக ஆக்குவது. அப்பொழுது அவர்கள் வன்மம்
கொண்டு, சில நிலைகளைச் செய்வார்கள்.
மந்திரவாதிகளுக்குள்
இந்த மாதிரிப் பழக்கம் உண்டு. தனக்குள் மந்திரம் இருக்கிறது என்றால், அடுத்தவனை என்னவென்று சுண்டிப் பார்ப்பது. அதே மாதிரிதான்,
எமது புத்தியும் செயல்பட்டது.
மனித
வாழ்க்கையில் வந்த யாம், குருநாதர்
சக்தி கொடுத்திருக்கின்றார் என்றால், “இவனை ஒரு கை பார்ப்பது” என்ற நிலையில், அகந்தை கொண்டு செயல்படும் உணர்வே, எமக்குள் தோற்றுவித்தது.
ஆனால், அருள்ஞானியான மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
அவர்கள் உணர்த்திய உணர்வோ, நமக்குள்
ஈர்க்கும் அந்த
உணர்வின் இயக்கங்களைக் கண்டு அறிவதற்காக,
எத்தகைய வலு இருந்தாலும்,
நாம் எண்ணத்தின் வலு கொண்டு செயல்டும் பொழுது, நமது எண்ணம் தீமையின்
வழியில் எப்படி அழைத்துச் செல்கின்றது? என்பதைத் தெளிவாக
உணர்த்தினார்.
குருநாதர்
உயர்ந்த சக்தியினை எமக்குள் கொடுத்தாலும், எமக்குள் அகந்தை என்ற நிலைகள் ஓங்கி வரப்படும் பொழுது, மற்றவர்களை எளிமைப்படுத்திப் பார்ப்பதும்,
“தான் தான்”,
“நான் தான்”
என்று நான்
என்ற அகந்தை கூடும்பொழுது, அந்த நல்ல
உணர்வைக் காக்காதபடி, இந்த ஆறாவது அறிவை செம்மையாக பயன்படுத்தாதபடி. இந்த ஆறாவது
அறிவின் தன்மை கொண்டு, குரு
காட்டிய அருள்வழியில், அவர்கள்
காட்டிய அறநெறியின் தன்மையை,
வலுவாகத் தீமையை அகற்றும் நிலைக்கு வருவதற்குப்
பதில், தீமையை அது தூண்டச்
செய்து, “இரு நான்
பார்க்கின்றேன்” என்று அவனின்
நிலைகளுக்கு, இந்த உணர்வுகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது என்று
பார் என்று, குருநாதர் உணர்த்துகின்றார்.
இவ்வாறு
உணர்த்திக் கொண்டே இருக்கும் பொழுது, நான் எங்கோ சென்று கொண்டிருக்கும் பொழுது, இப்படிப் பல நிலைகளைச் செய்யும் பொழுது, “திடீர் என்று எம்மை அறியாதபடி, ஒரு மலை மீது, பாதம் வைக்க மட்டும்தான் இடம் உள்ளதில், எம்மை நிறுத்திவிட்டார், உட்கார முடியவில்லை”.
அங்கே
எப்படி வந்தோம்? என்ன
செய்வது? என்று தெரியாதபடி திகைப்பின்
நிலையில் இருந்தோம். எந்த மந்திரவாதி இப்படிச் செய்தானோ? என்ற இந்த எண்ணம்தான் வருகிறது.
யாம்
மந்திரவாதிகளைத் தொட்டுப் பரிட்சை செய்ததினாலே, யாரோ மிகவும் சக்தி வாய்ந்தவர்கள், எம்மை இப்படி அழைத்து வந்துவிட்டனர் என்று
நினைத்தோம். எந்தப் பக்கம் பார்த்தாலும், தலை சுற்றியது, அந்த அளவிற்கு மோசமான இடத்தில் இருந்தோம். அந்த மலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளது.
அப்பொழுதுதான்
யாம் திகைத்து, நமக்கு குரு எவ்வளவு சக்தி கொடுத்தாலும், அந்த குருவின் துணை நமக்கு இல்லையே, யாம் அகந்தை கொண்டு
செயல்பட்டதால், ஏதோ மந்திரவாதி
செய்துவிட்டான் என்ற எண்ணங்கள்தான் எமக்கு வந்ததே தவிர, குருவின் வலுவை யாம் எண்ணவில்லை.
எமக்குள்
அகந்தையின் நிலைகள் கொண்டு, யாம் செய்த
செயலுக்கு மற்றவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள் என்ற உணர்வே தோற்றுவித்தது. இந்த
நிலைகளில் இருந்து எப்படி மீள்வது? என்று தவித்துக்
கொண்டிருந்தோம்.
ஒரு மணி
நேரம் ஆகிவிட்டது, நேரம் ஆக, ஆக, எமது உடல்
எல்லாம் வேர்க்கின்றது. சறுக்குப் பாறைபோல் இருந்ததால், வேர்வை வியர்க்க, வியர்க்க கால்கள் தன்னிச்சையாக நகரும் தன்மை வருகின்றது.
எனக்கு எதையும் எட்டிப் பிடிக்கும் நிலையே இல்லை.
முன் பக்கம்
போனாலும் மரணம்தான், பின்பக்கம்
போனாலும் மரணம்தான். குருநாதர் கொடுத்த சக்தியை எண்ணிப் பார்க்கக்கூட நேரம் இல்லை.
கொஞ்சநேரம் போனால், போய்விடுவோமோ
என்ற பய உணர்வுகள் அதிகமாக, அதிகமாக, உடலின் தன்மையில் வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க, உடலிலிருந்து வியர்வை கொட்டத் தொடங்கி விடுகின்றது. ஆக, வலுவிழந்த நிலையில் யாம் இருந்தோம்.
இந்த
நேரத்தில் “மனமே இனியாகிலும் மயங்காதே”, என்ற குரல் வருகின்றது. அது குருவின் குரலாகத் தென்பட்டபின், எமக்குக் கொஞ்சம் ஜீவன் வந்தது.
“நீ கொஞ்ச நேரத்தில்
விழுந்துவிடுகின்றாய், நீ உன் எண்ணத்தால்
பல மனக் கோட்டையை கட்டினாயே, கொஞ்ச நேரத்தில்
மறையப் போகின்றது பார்” என்றார் குருநாதர்.
அதைத்
தொடர்ந்து, ஒவ்வொரு மனிதனும் செல்வங்கள்
குவித்து வைத்து, அந்த
செல்வத்தைக் காத்திடும் நிலையாக, தன்
பந்துக்கள், தன் இனங்களையே
இம்சிக்கின்றனர்.
கடைசி
நிலையில், அந்த பொருளைக் காக்க முடியாத
நிலையில் அவர்கள் எப்படி வேதனைப்படுகின்றனர். சம்பாதித்து வைத்தாலும், அவர்களுக்குள் வேதனையத்தான் வளர்க்க முடிந்தது.
ஆக, செல்வத்தைக் காத்திடும் நிலை அற்று, தனக்குள் வேதனை என்ற நஞ்சின் தன்மை உருப்பெறும் நிலையாக, நல்ல குணங்களை அழித்திடும் நிலைகள் பட்டு, சீர்கெட்டு இருக்கும் நிலைகளை, சினிமாப் படங்களைக் காட்டுவது மாதிரி, ஒன்று ஒன்றாகக் காண்பித்தார். அப்பொழுதுதான்,
மனமே
இனியாகிலும் மயங்காதே
பொல்லா
மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி
பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப்
போல மறைவதைப் பாராய்
நேற்று
இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லா
இவ்வுலகம் உனக்கு சதமா
மனமே
இனியாகிலும் மயங்காதே
பொல்லா
மானிட வாழ்க்கையில் தயங்காதே
என்ற நிலையை
உபதேசித்தார், குருநாதர்.
ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் எவ்வாறு செல்வத்தைச்
சம்பாதித்தனர். அந்த செல்வத்தைக் காப்பதற்காக, எத்தனை வேதனைப்பட்டனர். அந்த வேதனை குடும்பத்திற்குள் எப்படி தொடர்ந்தது. அந்தச்
செல்வத்தைக் காக்கமுடியாத நிலைகள் கொண்டு சாபங்களும், குடும்பத்தில்
நலிந்த உடலாகவும், நிம்மதியற்ற
நிலைகளில் எவ்வாறு வாழ்கின்றனர்? என்ற நிலைகளைத் தெளிவாக
எடுத்துக் காட்டி, குறைந்தது
இரண்டு மணி நேரம் இருக்கும், அதன்
பின், கீழே இறக்கி விட்டார்.
“இனி நீ வலம் வரலாம், உலகை அறியலாம்.
நான் உனக்குக் கண்டுணர்த்திய அனைவரின் உண்மைகள், நீ செல்லும்பொழுது, செல்லும் பாதையில், உனக்கு உண்மையின் உணர்வுகள்
வரும்.
நீ அங்கே
சென்று பார்,
அவர்களின்
குடும்பத்தின் நிலைகளைப் பார்,
ஊன்றிப்
பார், அவர்களின் செயல்களின்
தன்மையைப் பார்,
அதிலிருந்து
அவர்கள் விடுபட, என்னவென்று
சிந்தித்துப் பார்,
“கல்கத்தா
காளி” என்ற துர்தேவதையின் உணர்வுகளை, மந்திரங்களைச் சொல்லி இந்த உணர்வின் தன்மையை அளித்து, அதிலிருந்து
உணர்வுகள் பெற்றது, அரசர்கள்
செய்த நிலைகள். இது
பற்றிய உண்மை நிலைகளை, உணர்த்திக்
கொண்டிருந்த குருநாதர், எம்மை
கொடைக்கானலின் காட்டுப்பகுதிக்குள் அழைத்துச்சென்றார்.
அங்கேயும், கல்கத்தா காளி கோயிலில் நடக்கும் சம்பவங்களைச் சொன்னதோடு மட்டுமில்லாமல், அங்கே நடைபெறும் நிகழ்ச்சியைக் காட்சியாகவும் கண்பித்தார் குருநாதர்.
அது
சமயம், ஒரு சக்தியை நன்றாகத் தீட்டிக்கொண்டு, கல்கத்தா காளி கோயிலில் எதற்காகப் பலி கொடுக்கின்றார்களோ, அதே போன்று, நானும்
உன்னைப் பலி கொடுத்து, சக்தி
பெறப்போகிறேன். அதற்காகத்தான், நான் உன்னை மயக்கிக் கொண்டுள்ளேன் என்றார், குருநாதர்.
தீட்டிய
கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு, குரு
எமது கழுத்துச் சங்கைப் பிடித்து, “இந்தக்
கத்தியால் இப்படிக் குத்தி, உன்
இரத்தம் அனைத்தையும் வடித்து, இங்கேயிருந்து
காளி கோயிலுக்கு அனுப்பிவிட்டு, உன் உயிரை நான் எடுத்து, மந்திரவாதி
ஆகப்போகிறேன் என்று கூறினார்.
எப்படியிருக்கும்
எமக்கு?
“நான்
சொன்னபடி கேள்” என்று
எம்மை மிரட்டியவாறு சொன்னார்.
அப்போது
யாம் சொன்னோம், “யாம்
நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறோம். ஏனென்றால், உங்களைப்
பற்றிய அனைத்து உண்மையும் தெரிந்துவிட்டது. நீங்கள் எதைச் செய்தாலும் சரி. எம்
மனைவியைக் குணப்படுத்தினீர்கள். உங்கள் பிள்ளைகளை, நீங்கள்
காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று கூறினோம்.
குருநாதர்
உடனே சிரிக்க ஆரம்பித்தார். சிரித்ததோடு மட்டுமல்லாமல், கையில் ஆயிரம் ரூபாய் கொடுத்து, எங்கேயும்
நிற்காமல் ஓடி, இரயில்வே
ஸ்டேஷனுக்குப் போய், கல்கத்தாவிற்கு
டிக்கெட் வாங்கு, என்றார்.
இரயில்வே
ஸ்டேஷனுக்குச் சென்று, எழுதிக்
கொடுத்து டிக்கெட் வாங்கினோம். அங்கிருந்து கல்கத்தா செல்வதற்கு நேரடி வசதி இல்லாததால், மாற்று ஏற்பாட்டுடன் எழுதிக் கொடுத்தார்கள். யாம் டிக்கெட் வாங்கிக் கொண்டு திரும்பும் வரையிலும், குருநாதர்
அங்கேயே இருந்தார்.
யாம்
இரயில் டிக்கெட்டை குருநாதரின் கையில் கொடுத்தோம். டிக்கெட்டைத் தம் கையில் வாங்கிக் கொண்ட குருநாதர், எம்மைக்
கட்டி அணைத்தார். அடுத்த நிமிடம், குருதேவரும், யாமும் கல்கத்தாவில் இருந்தோம். குருதேவர் சூட்சும நிலையில், எம்மைக் கல்கத்தாவிற்கு அழைத்துச் சென்றார்.
இப்படிப்பட்ட இந்த ஆன்மா, ஆலயத்தில் இதுபோன்ற தவறுகளைச் செய்கின்றனரே என்று எண்ணிய, இராமகிருஷ்ண பரமகம்சரின் உடலில் புகுந்து கொண்டது.
கல்கத்தா
அழைத்துச் சென்ற குருநாதர், அங்கே, தாம் ஓட்டல் கடை வைத்து நடத்திய இடத்தையெல்லாம் காண்பித்தார். கல்கத்தாவில், காளி கோவிலில் என்னென்ன நடக்கின்றது? என்பதையெல்லாம் காண்பித்தார்.
காளி
ஆலயம் மூடியிருந்தது. அந்த நேரத்தில், சூட்சம
நிலையில் உள்ளுக்குள் அழைத்துச் சென்றார். அங்கும்
சில விஷயங்களைக் காண்பித்தார்.
அப்பொழுது
இராமகிருஷ்ண பரமகம்சரின் வாழ்க்கையில் உள்ள உண்மைகளைக் கூறினார். இராமகிருஷ்ண
பரமகம்சர் பிராமணர். படிப்பறிவில்லாதவர். காளி கோவிலில் பூஜைகள் செய்து கொண்டிருந்தவர். அவர், காளியைப்
பற்றி நிறையத் தெரிந்து கொண்டார். தெரிந்து
கொண்ட உண்மையின் தன்மை கொண்டு, காளி
கோவிலில் பூஜை செய்து வந்தார்.
வருடத்தில்
ஒரு அமாவாசை நாளன்று, காளி
கோவிலில் நரபலி கொடுப்பார்கள். அப்படி நரபலி கொடுக்கப்படும் காலத்தில், ஆலய
சப்தங்கள் எப்படி இருக்கின்றது? காளித் தாய், இதற்கெல்லாம்
அனுமதி கொடுக்கிறாளே, என்று சொல்லி அவருக்குள் பாசத்தால், தான்
ஏங்கி எடுக்கின்றார்.
அது
போன்ற காலத்தில், ஆலய
நிர்வாகிகள் ஒரு மந்திரவாதியிடம், அதற்கென்ற நிலைகளைப் பதிவாக்கி, பூஜைகளை
நடத்துகின்றனர். மந்திரவாதி என்ற நிலைகள் வரப்படும் பொழுது, அவருக்கு
மயக்க நிலை கொடுத்து, அவரின்
உணர்வின் தன்மையை, அதற்குண்டான
முறையில், பலி கொடுக்கின்றனர்.
அந்த
மந்திரவாதி, பல ஜோசியங்களைக் கற்றுக் கொண்டவர். பல
அற்புதங்களைக் கற்றுக் கொண்டவர். பல
உணர்வுகளை, மந்திரத்தால் அறியும் தன்மை பெற்றவர்.
இப்படிப்பட்ட இந்த ஆன்மா, ஆலயத்தில் இதுபோன்ற தவறுகளைச் செய்கின்றனரே என்று எண்ணிய, இராமகிருஷ்ண பரமகம்சரின் உடலில் புகுந்து கொண்டது.
இப்படிப்
புகுந்து கொண்ட பின் தான், இராமகிருஷ்ண
பரமகம்சர் பித்தரைப் போன்று ஆனது, இதன்
தொடர் கொண்டுதான், அவர் (மந்திரவாதி) தன் உடலில் வாழும் காலத்தில் என்னென்ன அற்புதங்களைச் செய்தாரோ, அதைப்போன்ற
நிலையை, இராமகிருஷ்ண பரமகம்சரின் உடலிலிருந்தும் பல அற்புதங்களை நடத்துகின்றார்.
அதாவது, கோவில்களில் பூஜை செய்வதை விடுத்து, இறந்த
மனிதர்களைப் புதைக்கும் இடங்களில் சென்று அமர்வதும், அந்த
உடல்களிலிருந்து வரக்கூடிய மணங்களை நுகர்வதும், அவர்கள் எப்படி இறந்தார் என்ற நிலைகளிலும், இராமகிருஷ்ண பரமகம்சர் செயல்பட்டு வந்தார்.
இராமகிருஷ்ண
பரமகம்சர், கங்கை ஆற்றின் வழியில் செல்லும் போது, அரிச்சந்திரா
காட், கேதார் காட் என்ற நிலை உண்டு. அதற்கென்று, காவலாளி என்னும் அரசனும் உண்டு. ஊரிலிருந்து, புதைக்கக் கொண்டு செல்லப்படும் பிரேதங்களை அந்த அரசனிடம் ஒப்படைத்து, அவருக்கு வேண்டிய காணிக்கைச் செலுத்திய பின் தான், எரிப்பார்கள்.
இப்படி
எரிக்கப்படும் காலங்களில் தான், இராமகிருஷ்ண
பரமகம்சர் படகில் செல்கின்றார். இப்படிப் படகில் சென்று கொண்டிருக்கும் பொழுது, சுடுகாட்டில்
பிணங்கள் வெந்து கொண்டிருப்பதைப் பார்த்து, ஆழ்நிலைத்
தியானத்திற்குச் சென்றார்.
இப்படி
அமர்ந்தபின், அவருடன் படகில் சென்றவர்கள் பரமகம்சர் ஆழ்நிலைத் தியானத்தில் அமர்ந்துவிட்டாரே, எங்கு சென்றார், ஏது
சென்றார் என்ற நிலை தெரியாமல் இருந்தனர்.
சில
மணிநேரம் கழித்து, இராமகிருஷ்ண
பரமகம்சர் சமாதி நிலையிலிருந்து விடுபட்டதும், அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து, “என்ன
சாமி பார்த்தீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு
இராமகிருஷ்ண பரமகம்சர்,
“அங்கே
நான் சிவனையும், சக்தியையும்
பார்த்தேன்.
என்ன
ஆனந்தமாக இருந்தது” என்று
அவர் சொன்னார்.
அவர் பார்த்தது எது? உடல் சிவம், உடல் வெந்தபின், உடலுக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வலைகள் எப்படி வெளிப்படுகின்றது?
சக்தியாக நுகர்ந்த உணர்வு, சிவமாக எப்படி ஆனது?
ஆனால் இப்பொழுது, சிவமான நிலைகள் கரைந்து,
அது சக்தியாக எப்படி வெளிப்படுகின்றது?
என்பதைத்தான் இராமகிருஷ்ண பரமகம்சர் கூறினார்.
ஆனால், இராமகிருஷ்ண
விஜயத்தில் (புத்தகத்தில்) இதற்கு மாறாக, சிவனையும், சக்தியையும்தான் பார்த்தார் என்று, எழுத்து
வடிவில் கொண்டு வருகின்றனர் என்று குருநாதர் தெளிவாகக் காண்பித்தார்.
நமது
மெய்ஞானியான குருநாதர், இயற்கையின்
இயக்கத்தின் உண்மையின் உணர்வினை எமக்குள் பாய்ச்சி, பரமகம்சரைப்
பற்றிய உண்மைகளை, உணர்ந்து
கொள்ளும்படி செய்தார்.
அப்பொழுதுதான், இராமகிருஷ்ண பரமகம்சர் பார்த்த உணர்வும், அவருடைய
உடலில் நுகர்ந்த உணர்வும், அங்கே
கேள்வி, பதில் என்ற நிலைகளில் வெளிப்பட்ட உணர்வுகளும், சூரியனால் சூரியனால் கவரப்பட்டு, இப்புவியில் பரவியுள்ள நிலைகளை, “நீ
உற்றுப் பார். உணர்வின்
அறிவு உனக்குத் தெரியும், அவரின்
உடலும் தெரியும். அவருடைய
சம்பாஷணைகளும் தெரியும்” என்று
உணர்த்தினார் குருநாதர்..
ஆனால், இதைப் போன்று நீ தெரிந்து கொண்டு, இதன்
வழியில் நீ அதிகமாக நாட்டம் செலுத்தினால்,
அவர்களின் உடல்களில் உள்ள, சில தீமையின் உணர்வுகள்
உனது இரத்தத்தில் கலந்துவிடும்.
இதன்
நிலை உன்னில் அதிகமாக்கப்படும் பொழுது
நீ
பித்தனாக வேண்டிய நிலை வரும்.
இப்படி வரும் தீமைகளைத் தடுப்பது எங்ஙனம்? என்று, அங்கு பல உபாயங்களைக் காண்பித்தார் குருநாதர்.
இராமகிருஷ்ண
பரமகம்சர், தெய்வீகப் பண்புகளைப் பற்றியும், இராமாயணத்தைப்
பற்றியும், இராவணனைப் பற்றியும், மகாபாரதத்தைப்
பற்றியும் பல வினாக்களுக்கு தெளிவாகப் பதிலைக் கூறினார்.
காவியங்கள், மனிதரின் உணர்வின் தன்மை கொண்டுதான் வந்ததே தவிர, இதைப் போன்ற ரூபங்கள் இல்லை என்று வாதாடினார்.
ஆனால், இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளும் பண்பு, அன்றும்
இல்லை. இராமகிருஷ்ண பரமகம்சர் உபதேசத்தைக் கேட்டவர்கள் ஏராளமான பேர். ஆனால்
அவர்
கூறிய உணர்வை மாற்றி, நூல்களை
வெளியிட்டதும்,
அவருடைய
உணர்வுகளைக் கேட்டறிந்தபின்,
திரிபுகளாக
மற்றவர்களால் உணர்த்தப்பட்டு,
உண்மையின் உணர்வுகள் மறைக்கப்பட்டு,
நூல்களை வெளியிட்டனர்.
தங்களுக்கு ஏற்றவாறு, பக்திமார்க்கங்களுக்கு உண்டான ஞானத்தைப் பயன்படுத்தி, மதங்களுக்கு இணக்கமாகக் கருத்துக்கள் கலக்கப்பட்டு, அவருடைய உண்மையின் உணர்வுகள் வெளியாகப்பட்டது என்ற உண்மையை, எமக்குக் காண்பித்தார் குருநாதர்.
இப்படி
இராமகிருஷ்ணர் சுற்றி வரப்படும் பொழுது, அவருடன்
ஒரு மந்திரவாதியும் வந்தார். ஏனென்றால், இராமகிருஷ்ண பரமகம்சர் படிப்பறிவில்லாதவர். ஆனால், அவர்
பல அற்புத வேலைகளைச் செய்கிறார். புராணங்களைப் பற்றிக் கூறுகிறார்.
இவர், அடிக்கடி மனிதரைப் புதைக்கும் இடங்களுக்கும், எரிக்கும் இடங்களுக்கும் சென்று, அங்கு
வரும் மணத்தை நுகர்ந்து, அதனின்
உணர்வு என்ன? என்று
அறிகின்றார்.
அவருக்கு
இந்தச் சக்தி எதிலிருந்து வந்தது? எதனை
அறிகின்றார்? எதனைப் பின்பற்றுகின்றார்? என்று அவரைச் சூழ்ந்திருந்த, பல மந்திரவாதிகள் அறிய முற்பட்டனர்.
மாலை
நேரத்தில் இவர் நடந்து வரப்படும் பொழுது, இருண்டு
விடுகின்றது. இராமகிருஷ்ண
பரமகம்சருடன் வந்த ஒருவருக்கு, கல் தடுக்கியது. அப்பொழுது, “ஐயோ, இருட்டாகிவிட்டதே, விளக்கு இல்லாமல் வந்துவிட்டோமே” என்று, ஒருவர்
சொன்னார்.
இதனால், அவர்களுடன் வந்த ஒரு மந்திரவாதி ஒருவர், “ஜெய்
பவானி” என்று தொடையைத் தட்டினார். “சலோ’ என்று சொன்னவுடன், ஒரு வெளிச்சம் முன்னால் சென்றது. இதன் உணர்வைக்
காண்பித்தார் குருநாதர்.
மந்திரவாதி, தன் மந்திரத்தின் தன்மை கொண்டு, ஆவியை ஏவல் செய்து,
அந்த விளக்கை முன் அனுப்பினார். அப்பொழுது,
இராமகிருஷ்ண பரமகம்சர் சொன்னார்.
“நான் இந்த வெளிச்சத்தை விரும்பவில்லை,
என் உடலில் அக வெளிச்சமும்,
இருளை அகற்றி, நான் செயல்படும்
“முன் சிந்தனை” என்ற,
இந்த உணர்வு இல்லாது போய்விட்டதே”
என்று சொன்னவுடன், கூட வந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.
இதனின் உணர்வுகளை அப்படியே பதிவாக்கிக்
காண்பித்தார், குருநாதர். இந்த உணர்வின் ஒலி அலைகள்,
பதிவாகியிருந்த அந்தப் பகுதியில் நடந்து செல்லப்படும் பொழுது,
இதனின் உணர்வின் அதிர்வுகளை நினைவுபடுத்தும்போது, அதை எப்படி நீ கவர்ந்து உணர்கின்றாய்? என்பதைக்
காண்பித்தார் குருநாதர்.
இப்படியான நிலையில் அந்த மந்திரவாதி, இராமகிருஷ்ண பரமகம்சர் பல பேருக்கு மத்தியில், தன்னை அவமதித்து விட்டாரே என்று ஏவல் செய்தார். எந்த வாயினால் கூறினாரோ, அந்த உணர்வை அடக்க,
ஏவல் செய்து, உணவு உட்கொள்ள முடியாதபடி,
பல துன்பங்களை இராமகிருஷ்ண பரமகம்சருக்கு உருவாக்கினார், அந்த மந்திரவாதி.
ஆனால், இராமகிருஷ்ண பரமகம்சருக்கு மந்திரம் தெரியும். உடலில் உள்ள உணர்வுகள் தெரிகின்றது. உண்மைகளைத்
தெரிந்து கொண்டபின், மந்திரவாதி செய்யும் போராட்டத்திற்கு,
தான் செல்லாமல், இனி இந்த உடலிலிருந்தே பிறவியில்லா
நிலை அடைய வேண்டுமென்று, முழுமை பெற்ற உணர்வுகளை எண்ணினார்,
இராமகிருஷ்ண பரமகம்சர்
ஆகையினால் பரமகம்சர் மற்றவர்களிடம், “உடலின் இச்சைக்கு,
நாம் செல்ல வேண்டாம், உயிருடன் ஒன்றிய உணர்வுகள், நமக்குள் நிச்சயமாக இருந்தால் போதும். இந்த உடல் கழியக் கூடியது”
இந்தக் கழிவின் நிலைகளுக்கு, நாம்
ஏன் செல்ல வேண்டும்? என்று, பல முறை எடுத்துக் கூறியும்,
கேட்காமல் எத்தனையோ வைத்தியரைக் கொண்டு, பரீட்சிக்கப் பார்த்தாலும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இருந்தாலும், இராமகிருஷ்ண பரமகம்சர் வாழவேண்டும் என்ற நிலைகளில் அவரைத் துன்புறுத்தினர்.
இராமகிருஷ்ண பரமகம்சர், தவறேதும் செய்யவில்லை.
ஆனால் மந்திரவாதி, பரமகம்சர் தன்னை அவமதித்து
விட்டார் என்று எண்ணி, அவர் உணவுகூட உண்ண முடியாதபடி செய்தார்.
இராமகிருஷ்ண பரமகம்சர், நீங்கள் எனக்கு ஒன்றும் இதனாலெல்லாம் நிவர்த்திக்க முடியாது என்று சொன்னால்,
யாரும் கேட்கவில்லை.
பரமகம்சர் இறந்தார். ஆனால், அவருக்குக் கேன்சர் என்றுதான் மற்றவர்கள்
முடிவு செய்தனர். ஆனால், எவ்வாறு
ஏவல் செய்தனர் என்ற நிலையை எமக்குத் தெளிவாகக் காண்பித்தார், நமது குருநாதர்.
(பக்கம்
56-57)
ஒரு சமயம், யாம் அஸ்ஸாம் பகுதிக்குச் சென்றிருந்தோம்.
அப்பொழுது, அங்கே வசிக்கக்கூடிய மலைவாழ் மக்கள் எம்மைப் பிடித்துக் கொண்டார்கள்.
மலைப்பகுதியில் வாழும் மக்களின் மத்தியில், “என்ன
நடைபெறுகிறது” என்பதை யாம் தெரிந்து கொள்ளும் பொருட்டு, “அவசியம் நீ அங்கு செல்லத்தான்
வேண்டும்” என்று, குருநாதர் கூறிவிட்டார்.
அந்தக் காடோ, யானைகளும், காண்டா மிருகங்களும்,
மற்றும் பல்வேறு விலங்குகளும், வாழும் அடர்ந்த பகுதி. குருநாதர் கொடுத்த உபாயத்தின்
பேரில், யாம் அங்கே சென்று, மலைவாழ் மக்களிடம் பிடிபட்டு, அவர்கள் இழுத்துச் சென்ற
பகுதிக்குச் சென்றோம்.
அங்கே, அவர்கள் எம்மை ஒரு மரத்தோடு கட்டிப் போட்டார்கள்.
உண்பதற்கு ஆகாரம் கொடுத்தார்கள். அங்கே காளி கோவில் மாதிரி, ஒரு கோவிலை வைத்திருக்கிறார்கள்.
அதற்கு முன்னால், அந்த மலைவாழ் மக்கள், ஆட்டமும் பாட்டமுமாக இருந்து கொண்டிருந்தார்கள்.
இதையெல்லாம் கவனிக்கும்படி குருநாதர் கூறினார்.
ஆட்டமும் பாட்டமுமாக இருந்த அந்தக் கூட்டத்தில், தலைவனாக இருந்த பூசாரி பாடிக் கொண்டே
வந்து, எம் மீது பல இடங்களில் ஊசியால் குத்தினார்.
“ஆ” என்று அலறினோம். அந்த சமயம், சில மந்திரங்களைச்
சொல்கிறார்கள். அவைகளை எமக்குள் பதியும்படிச் செய்தனர். இவ்வாறு சில நாட்கள், அதே இடத்தில்
கட்டி வைத்திருந்து, மந்திர ஒலிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக, எம்முள் பதியச் செய்து, குறிப்பிட்ட
காலம் வந்ததும், எம்மைப் பலியிடக் காத்திருந்தனர்.
இதனின் நிலைகளை எல்லாம் குருநாதர் காண்பித்து,
குறிப்பிட்ட நாள் வந்ததும் உன்னைப் பலியிடுவார்கள். உன் ஆத்மாவைப் பிரித்தெடுத்துக்
கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.
பின், உனது உடலைத் துண்டு துண்டாக வெட்டி, தசைகளைத்
தாங்கள் வெள்ளாமை செய்யும் பகுதிகளில் வீசிவிடுவார்கள். மேலும், உனது தசைகளைக் கோவிலில்
பொங்கலிடுவார்கள் என்று, குருநாதர் எமக்கு உணர்த்தினார். இவைகளெல்லாம், யாம், குருநாதர்
அருள் துணை கொண்டு, அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்ட உண்மைகள்.
மனிதரைப் பலியிட்டு, அவர்களது ஆன்மாவைக் கைவல்யப்படுத்தி,
மந்திர ஒலிகளின் துணை கொண்டு, தங்களைத் தற்காத்துக் கொள்ளும் விதமாக, அந்த ஆன்மாவை
எப்படி பயன்படுத்துவர் என்பதை, அந்த இரவில் யாம் மரத்தில் கட்டப்பட்டிருக்கும் நிலையில்,
எமக்குக் குருநாதர் உணர்த்திக் கொண்டிருந்தார்.
இன்று
பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். மலைப் பகுதிக்குச் சென்றால், அமைதியாகத் தனித்து
வாழலாம் என்று.
ஆனால்,
சில மலைப் பகுதிகளுக்குச் சென்றால், எவ்வளவு பெரிய ஆபத்து இருகிறது, என்பதையும்
உணர்த்துகிறார்.
இறுதியில், யாம் குருநாதர் எமக்குக் கொடுத்த சக்தியின்
துணைக் கொண்டு, வெளியே வந்தோம். பின், இதே மந்திரத்தின் நிலைகளை நகரப் பகுதியில் எப்படி
உருவாக்குகின்றார்கள்? என்ற நிலையைத் தெளிவாக உபதேசித்தார்.
இதைப்
போன்ற நிலைகள், நமது நாட்டில் மட்டும்தான் என்றில்லாமல் உலக நாடுகள் அனைத்திலுமே இதன்
நிலைகள்தான் இருந்தன. எகிப்து, ஈரான், ஈராக் மற்றும் ரோமன் நாடுகள் பற்றியும்,
அங்கு நடைபெறும் நிலைகளையும், நமது குருநாதர் எமக்குக் கூறினார்.
(பக்கம் 69-71)
யாம் ஒரு முறை, குருதேவர் ஆணைப்படி, இமயமலைக்குச் சென்றோம். அப்பொழுது, உடலில் கோவணம் மட்டுமே அணிந்திருந்தோம்.
வேறு எந்தத் துணியும் எம்மிடம் இல்லை.
அங்கே
நிலவும் குளிரில், குருதேவர் அருளிக் கொடுத்த உணர்வுகளை, யாம்
நுகர்ந்து கொண்டிருந்ததால், எம் உடலில்
வெப்பம் உருவாகி, குளிர்
எதுவும் தாக்காத வண்ணம், அங்கே நடந்து சென்று கொண்டிருந்தோம்.
அந்த
பனிமலைப் பகுதியில், நடந்து
சென்று கொண்டிருந்த பொழுது, யாம் ஒரு
இடத்தைக் கடந்திருப்போம். சற்று நேரத்தில், கால் வைத்து நடந்த பகுதி, இடிந்து தகர்ந்து விழுந்தது. தகர்ந்து விழுந்த இடத்தைப்
பார்த்தால், பெரிய பாதாளமே அங்கே இருந்தது.
அதைப்
பார்த்தவுடன் எமது சிந்தனைகள் எங்கே சென்றதென்றால், எமது குழந்தைகள், எமது குடும்பம் எவ்வாறு இருக்கின்றதோ?, யாம் மீண்டும் அவர்களைச் சந்திக்க முடியுமா? அல்லது இங்கேயே விழுந்து இறந்துவிடுவோமா? இந்தப் பாதாளத்தில் விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? என்றுதான், எமது சிந்தனைகள் சென்றன.
உடல் மீது தான், ஆசை தோன்றியது.
குரு கொடுத்த உணர்வுகளை, அந்த நேரத்தில் மறந்து விட்டோம்.
இதனால் எமது
உடலில் குளிரெடுத்தது. இதயம், “பட
பட” எனத் துடித்து இரைச்சலாகி, சற்று நேரத்தில் “இறந்தே விடுவோம்” என்ற நிலை, எம்மிடத்தில்
உருவானது.
அப்பொழுது
குருதேவர், எமக்கு முன்னால் உதயமானர்.
மனமே
இனியாகிலும் மயங்காதே
பொல்லா
மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி
பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப்
போல மறைவதைப் பாராய்
நேற்று
இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லா
இவ்வுலகம் உனக்குச் சதமா
மனமே
இனியாகிலும் மயங்காதே
பொல்லா
மானிட வாழ்க்கையில் தயங்காதே
என்ற இந்த
பாடலைப் பாடிக் காண்பித்து, சோதனையான சமயத்தில், “இப்படி ஆகின்றதே” என்று வருந்தி, “உன் குழந்தைகளையும், மற்றவர்களையும் எண்ணி, படபடப்பாகி மயங்குகின்றாய்”.
ஆனால், சற்று நேரத்திற்கு முன் உனது உயிர் போயிருந்தால், இந்தப் பொன்னடி பொருளை எங்கே காணப் போகின்றாய்?” என்று கேட்கிறார் குருதேவர்.
ஆகவே, ஆசையின் உணர்வை விடுத்து, அருள் ஒளியின் உணர்வை எடுத்து, “அந்த குழந்தைகள் அருள் ஞானம் பெறவேண்டும், இருளை அகற்றி மெய்பொருள் காணவேண்டும், அவர்கள் வாழ்க்கை நலம் பெறவேண்டும்”, என்ற உணர்வினை எடுத்தால், அவர்களை வாழ வைக்கலாம். நமக்குள் அருள் உணர்வைக் காக்கலாம்
என்றார் குருதேவர்.
மனிதருக்கு, “வாழ வைக்க வேண்டும்” என்ற எண்ணம்தான்
வரவேண்டுமே தவிர, “இப்படி ஆகி விட்டதே” என்று எண்ணக்
கூடாது.
ஏனென்றால், “இப்படி ஆகி விட்டதே” என்று, வேதனையின் தன்மையை
எடுக்கப்படும் பொழுதுதான், விஷத்தின்
தன்மையைக் கவர நேருகின்றது. அதனால், மனிதரின்
செயலாக்கத்தின் தன்மை குறைகின்றது.
இதுபோன்று, யாம் செல்லும்
பாதையில் சில
விபத்துக்கள் நேரிடும் பொழுதெல்லாம், எமக்குக் குடும்பத்தின் ஞாபகம் வரும். அப்பொழுதெல்லாம், இதிலிருந்து எப்படி
காத்துக் கொள்வது என்று, நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார், குருநாதர்.
ஆகவே, குரு காண்பித்த அருள்வழியில், நாம் அனைவரும், “நம் உடல் நமக்குச் சொந்தமில்லை” என்று உணரவேண்டும். உயிருடன் ஒன்றும் உணர்வை, அருள் ஒளியின் உணர்வாக இணைத்துச் சொந்தமாக்குதல் வேண்டும்.
மகரிஷிகளின் அருளைப் பற்றுடன் பற்றுதல் வேண்டும். நமது
வாழ்க்கையில் வரும் தீமைகளை, பற்றற்றதாக மாற்றுதல் வேண்டும்.
இதுபோன்று
குருநாதர் ஒவ்வொரு சமயத்திலும்,
“மனிதர் தாம்
சந்தர்ப்பத்தில் அறியாது வரும்
தீமைகளில்
சிக்கிக் கொள்வதை உணர்த்தி,
மனிதர் தாம்
எவ்வாறு தீமைகளிலிருந்து மீள்வது?”,
எனும்
நிலையை அனுபவரீதியாக எமக்கு உணர்த்தினார்.
(பக்கம் 83-88)
ஒரு முறை யாம் குருதேவருடன், சென்னையிலிருந்து மும்பைக்கு இரயிலில் சென்று
கொண்டிருந்தோம். அப்பொழுது, இரயிலில்
ஒரு நோய்வய்ப்பட்ட பெண்மணியை,
அவர்களுடைய உறவினர்கள் வேலூர் ஆஸ்பத்திரியிலிருந்து, மும்பைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.
நோய்வாய்ப்பட்ட பெண்மணி வேதனை
தாளாமல், உறவினர்களிடம் “தண்ணீர் கொடு, அது கொடு, இது
கொடு” என்று கேட்டுக் கொண்டே
இருந்தார். ஆனால் உறவினர்களோ, மருத்துவர்
சொன்னபடி “உணவோ, தண்ணீரோ, ஒரு
அளவிற்கு மேல் கொடுக்கக்கூடாது” என்பதைக்
கடைப்பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் நோய்வாய்ப்பட்ட
பெண்மணியோ, “அடப்பாவிகளா, எனக்கு நாக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றது, உண்ணுவதற்கு எதுவும் கொடுக்கமாட்டீர்களா?”, என்று சாபமிட்டுக் கொண்டிருந்தார்.
உறவினர்கள் நோயாளியைப்
பார்த்து, “நீ சும்மா இருக்க மாட்டாயா” என்று மிரட்டுகிறார்கள்.
உடன் வந்தவர்கள், நோயான பெண்மணியைப் பார்த்து, “உனக்கு என்ன வேண்டும் அம்மா” என்று இரக்கமாகக் கேட்டார்கள்.
அதற்கு, உறவினர்கள், “ஏனய்யா, என்ன
கொடுக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா?, நீ ஏன் கேட்கிறாய்?” என்று சொன்னவுடன், நோயான பெண்மணி “பார், உதவி
செய்பவர்களைக் கூட திட்டுகிறார்களே” என்று எண்ணுகின்றார்.
சந்தர்ப்பம், இது போன்ற
உணர்வுகளை நுகரும்பொழுது,
உயிர், அதை ஜீவ அணுவாக அவர்களுக்குள் உருவாக்குகின்றது.
குருநாதர் இதைக் காண்பித்தார்.
ஆனால், அங்கு யாரும் தவறு
செய்யவில்லை. மருத்துவர்கள் கூறிய அறிவுரையை
உறவினர்கள் கடைபிடிக்கிறார்கள். எதற்காக?. நோயான பெண்மணியைக் காப்பாற்ற வேண்டும் என்று.
ஆனால் நோயான பெண்மணியோ, “இப்படி அவஸ்தைப்படுகிறேனே, கேட்டதைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே, கொஞ்சம்கூட இரக்கம் இல்லையே” என்று எண்ணுகின்றார்.
இந்த உணர்வின் சொல்லைக்
கேட்டவுடனே, உறவினர்கள் வேகம் கொண்டு “நீ பேசாமல் இரு” என்கிறார்கள். இதனால் நோயான பெண்மணி, “நாம் இவர்களுக்கு எத்தனை செய்திருப்போம், என்னுடைய நோயின் தன்மை தெரியாமல் இப்படி
சீறிப்பாய்கிறார்களே, வேதனைப்படுத்துகிறார்களே” என்று நோயாளியின் உணர்வுகள் மாறுகின்றது. இதெல்லாம் சந்தர்ப்பங்கள்.
இரயிலை விட்டு இறங்கியவுடன், நோயான பெண்மணியின் வீடுவரை எம்மை சென்றுவரச் சொல்லிவிட்டு,
குருநாதர் ஒரு இடத்தில் இருந்துவிட்டார். யாம் அவர்களைப் பின் தொடர்ந்து, அவர்கள் வீடு வரை சென்றோம். இரண்டு நாள் அங்கே இருந்தோம்.
மூன்றாம் நாள், நோயான பெண்மணியின் உயிராத்மா
பிரிந்தது.
இரயிலில் வரும்பொழுது, நோயான பெண்மணிக்காக பரிந்து பேசினார்களே, அவர்களுடைய நினைவு, நோயான பெண்மணிக்கு சாகும் தருவாயில் வந்தது. “மகராசி எனக்கு உதவி செய்தாளே” என்ற எண்ணம்
வந்தது.
ஆனால், உறவினர்களை நினைத்து “என்னுடைய எல்லாச் சொத்துக்களையும் வைத்துக் கொண்டு, “துரோகம் செய்தார்களே” என்று சாபமிட்டது.
இத்தகைய சாப
அலைகளை நுகர்ந்த உறவினர் குடும்பத்தில்,
சாப உணர்வுகள் விளைந்து பெருகி,
அவர்கள் குடும்பத் தொழில்
நசுங்கியது,
குடும்பத்தில் பல குழப்பங்கள்
விளைந்தது.
இதையெல்லாம் குருநாதர், எம்மை 48 நாட்கள் அந்த வீட்டிற்கு
அருகாமையில் இருந்து, பார்க்கும்படி செய்தார். ஒரு பக்கத்தில் அமர்ந்து, இங்கே என்ன நடக்கிறது என்று, பார்த்துக் கொண்டிருந்தோம்.
அதே சமயத்தில், நோயான பெண்மணிக்கு
பரிந்து பேசினார்களே, அவர்கள் நோயான
பெண்மணியின் வீட்டுப்பக்கம் வந்து பார்த்தவுடனே, நோயான பெண்மணியின் உயிராத்மா இவருடைய உடலுக்குள்
வந்து, தான்
எப்படியெல்லாம் நோயால் அவஸ்தைப்பட்டதோ, அதே வேதனையின் உணர்ச்சிகளை, இவருடைய
உடலுக்குள் ஊட்டுகின்றது.
குருநாதர் இதையும் பார்க்கச்
சொன்னார். ஆன்மா இன்னொரு உடலுக்குள் செல்கின்றது. இவரை எப்படிச்
சிரமப்படுத்துகின்றது. தொடர்ந்து இவருடைய வீட்டில், ஒருவருக்கொருவர் குழப்பமாகி, வியாபார மந்தம், தங்களை அறியாமலே குழந்தைகளைச் சீறிப் பேசுவது, தவறான நிலையில் பேசுவது, சங்கடங்கள் போன்ற பல இயக்கங்களை, அங்கே எம்மைக் கண்டுணரும்படி செய்தார்.
இயற்கையின் இயக்கத்தில், சந்தர்ப்பம் எப்படி,
மனிதர்களைக் குற்றவாளியாக ஆக்குகின்றது? சந்தர்ப்பத்தால்
நோய் எப்படி விளைகின்றது? என்பதையெல்லாம் குருநாதர் காண்பித்தார்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
கோலமாமகரிஷி, ரிஷி நிலையை எப்படிப் பெற்றார் என்று அறிவதற்காக, மங்களூர் அருகில் உள்ள கொல்லூரில், யாம் தியானமிருந்து வந்தோம். அதற்காக, மங்களூரில் நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம். அப்பொழுது, அங்கிருந்து இன்னொரு வீட்டிற்குப் போய் வருமாறு, குருநாதர் கூறினார். அங்கு போனோம்.
அந்தக் குடும்பத்தில், ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையன் பிறந்த பின், சந்தர்ப்பத்தால் பையனுடைய அப்பா இறந்து
போனார். அப்பா இறந்தவுடன், பையனுடைய
அம்மா வேதனை கொள்கின்றார்.
பையனுக்கு ஏற்கனவே மூத்த
சகோதரி இருக்கிறார். அந்த அம்மாவோ “இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு, கணவர் இறந்து விட்டாரே என்றும், இரண்டு குழந்தைகளையும் என்ன செய்வது” என்றும் எண்ணினார்கள்.
இப்படி, தன் கணவருடைய உணர்வை எடுத்துக் கொண்டபின், சிறிது நாட்களில் பையனுடைய அம்மாவும் இறந்து போனார்கள்.
இந்தப் பையனுடைய அம்மாவுடைய அம்மா, அதாவது பையனுக்குப் பாட்டிதான் தொழில் செய்து, குடும்பத்தைப் பராமரித்து வந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் பாட்டி
தன் பேரனைப் பார்த்து, “நாசமாகப் போகிறவன், இவன்
பிறந்தான், இரண்டு
பேரைக் கொன்றுவிட்டான், தொலைந்து
போடா, நாசமாகப் போகிறவனே”, என்று பேரனைக் கண்டாலே விரட்டினார்கள்.
பையனுடைய அக்காவோ, “அவன் என்ன செய்வான் பாட்டி, அவர்கள் இறந்து போனால், இவன் என்ன செய்வான், இவனா அவர்களைக் கொன்றான்” என்று பையனுடைய சகோதரி, தன் சகோதரனை அரவணைத்துப் பேசினாள்.
ஆனால் பாட்டி, “அவனுக்குச் சோறு
போடாதே, வெளியே தள்ளிவிடு, எங்கேயாவது பிச்சையெடுத்துச் சாப்பிடட்டும்” என்று
சொல்கிறது. ஆனால் பையனுடைய அக்கா, “தம்பி
என்ன செய்வான்” என்று கூடுமான வரையில் தன்
தம்பியைப் பாதுகாத்து வளர்த்து வந்தாள்.
பாட்டியோ, “பையன் பிறந்தவுடன் அப்பா இறந்தார், மூன்று வருடங்களில் அம்மாவும் இறந்தார், வியாபாரமும் கெட்டது, இருக்கின்ற சொத்தும் போனது”, என்ற உணர்வுகளை வளர்த்துக் கொண்டபின், பாட்டி
தன் பேரனை “வெடுக், வெடுக்” என்று கடுமையாகத் திட்டிப் பேசினார்கள்.
பாட்டிக்குத் தன் பேரன் மேல் வெறுப்பு அதிமான அதே
நேரத்தில், தன் பேத்தி
மீது, அதிகமான பாசத்தைக் காண்பித்தார்கள். இதனின்
தொடர் கொண்டு பாட்டி இறந்த
பின், பாட்டியின்
உயிராத்மா, அதன் பேத்தியின் உடலுக்குள் சென்றுவிட்டது.
பேத்தியின் உடலுக்குள் பாட்டியின் உயிராத்மா சென்றபின், பாட்டி பையனை
எப்படித் திட்டிப் பேசினார்களோ, அதே போன்று பையனின் சகோதரியும், பாட்டியின்
உயிராத்மா தன்னுள் இணைந்துள்ள நிலையில், தம்பியைப்
பார்த்து, “தோலைந்து போடா, நாசமாகப்
போடா” என்று சொன்னாள். அதன்படியே
தம்பியையும் விரட்டினாள்.
ஒரு உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள்,
மற்றொரு உடலுக்கு மாறுவதும்,
அதனின் உணர்ச்சிகள் வந்ததும்
செயலாக்கங்கள் எப்படி அமைகின்றதென்றும்,
யாம் அறிந்து கொள்ளவே,
குருநாதர் எம்மை மங்களூருக்கு அனுப்பினார்.
அதற்கான இடத்தைக் காண்பித்து, “இன்னின்ன நிகழ்ச்சிகள் நடக்கும், இதனுடைய நிலைகளை நீ பார்” என்று சொல்லியிருந்தார் குருநாதர். அவர் சொன்னது போன்றே
நடந்தது.
ஆக இதன் தொடர் கொண்டு, பெண் பிள்ளையின் உடலில் வேதனை உணர்வுகள் வளர்ந்து, நோய் வந்து, பையனின் சகோதரியும் மடிந்து விட்டது. பையனோ, ஒதுக்கப்பட்ட நிலைகளிலிருந்து மற்றவர்களால் காக்கப்பட்டு, தொழிலில் அவன்
பெரியவனாக வளர்ந்து விட்டான். ஒதுக்கப்பட்டாலும், தன் மீது பற்றுகொண்டு தான் எப்படியும் வளர வேண்டும் என்று
பற்றுகொண்டு, மற்றவர்களின் அன்பைப் பெற
ஆரம்பித்தான்.
மற்றவர்கள் ‘பாவம் பையன் என்ன செய்வான்” என்று எண்ணிய உணர்வு கொண்டு அவனுக்கு உதவிகள் செய்தனர்.
அவன் இன்று சிறந்த விஞ்ஞானியாகவே ஆகிவிட்டான். இன்றைக்கு அவன் அமெரிக்காவில்
இருக்கின்றான்.
அவன் அனாதையாக இருந்தாலும், தன் உணர்வின் வேகத்தைக் கூட்டி, தன்னைக் காக்க வேண்டுமென்ற உணர்வு எடுத்து, இன்று விஞ்ஞானி என்ற நிலை பெற்று விட்டான், இது நடந்த நிகழ்ச்சி.
(பக்கம்
104-106)
யாம் குருநாதர் உரைத்த வண்ணம்,
ஒரு கிராமத்துப் பக்கம் வந்து கொண்டிருந்தோம். அந்த சமயத்தில், ஒரு நான்கு முனைச் சந்திப்புள்ள இடத்தில் உள்ள கடையில், எம்மை
அமரும்படி செய்தார் குருநாதர். அப்பொழுது அந்த இடத்திற்கு, ஒரு கார் வந்து
நின்றது. அந்தக் காரில், ஆறேழு பேர் சாமியார் வேடம் பூண்டு, அற்புதமாக இருந்தனர்.
அவர்கள் காரை நிறுத்திவிட்டு, யாம் இருந்த கடைக்கு வந்து கடையில் இருப்பவரிடம், “டீ கொடுங்கள்” என்றனர். ஆனால் டீ போடும் ஆளுக்குக் காது கேட்கவில்லை.
அவர்கள், “அட.. தம்பி… இங்கு… வா…” என்றனர். இப்படி இரண்டு முறை கூப்பிட்டும் கேட்காததால், ஜாடையில் காண்பித்து வரச் சொல்லி “உனக்குக் காது கேட்கவில்லையா?” என்று கேட்டனர்.
டீ கடைக்காரர், “எனக்கு சுத்தமாகக் கேட்காது” என்றார்.
அதற்குபின் சாமியார் வேடம்
பூண்டவர்கள், “முருகா!, ஏன் உன் பிள்ளையை இப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய், உன் பிள்ளைக்குக் காது கேட்கவை, முருகா”, என்றனர்.
உடனே, அவருக்குக் காது கேட்க
ஆரம்பித்துவிட்டது. அதன்பின், “எனக்கு
முதுகுவலி, தலைவலி, இடுப்புவலி”, என்று ஒவ்வொருவரும் ஒன்றைச் சொல்லிக் கேட்டு, குணமாகத்
தொடங்கியதும், எங்கிருந்து அவ்வளவு கூட்டம் வந்ததென்று தெரியவில்லை, அப்படி ஒரு பெருங்கூட்டம் கூடிவிட்டது.
அந்த கூட்டத்தில் முடக்குவாதம்
வந்த ஒருவரைக் கொண்டுவந்து, “ஐயா, நீங்கள் எத்தனையோ பேருக்கு நல்லது செய்கிறீர்கள். ஐந்தாறு
வருடங்களாக, கட்டிலிலேயே படுத்திருக்கிறார். மலஜலம் எல்லாம், கட்டிலில் துவாரம்
போட்டு எடுக்கின்றோம். இப்படியேதான் படுத்திருக்கின்றார். அவரைக்
குணப்படுத்துங்கள்” என்று
கேட்டனர்.
சாமியார்களாக வந்தவர்கள்
விபரங்களைக் கேட்டுவிட்டு, “முருகா!..
உனக்கு இந்தப் பிள்ளை மேல் கருணை இல்லையா… இவ்வளவு காலம் வேடிக்கை பார்க்கின்றாயே… முருகா…, அவர்
உன்னை நினைக்கவில்லையா?…, அய்யா
நீங்கள் முருகனை நினையுங்கள்” என்கின்றனர்.
முடமானவரும் முருகனை
வேண்டுகின்றார். மீண்டும் அவர்கள் “முருகா… உன்
பிள்ளையை எழுப்பிவிடப்பா… கொஞ்சம்
இவர் மேல் கருணை வை” என்று
சொல்கின்றனர்.
இப்படிச் சொன்னவுடனே,
முடமானவரும் சடாரென எழுந்திருக்கின்றார். “முருகா…, இவரை
இந்தக் கல்லைத் தூக்கச் செய்யேன்” என்றனர்.
அவரும் உடனே எழுந்து போய், நான்கு பேர் தூக்கமுடியாத கல்லைத் தூக்கினார். அங்கே இருந்த
அனைவருக்கும், ரொம்ப ஆச்சரியமாகப் போய்விட்டது. முருகனே… அங்கு வந்ததாக, அந்தக் கூட்டம் நம்பியது.
கடைசியில் சாமியார் வேடம்
தரித்தவர்கள், “நாங்கள் முருகன் கோயில்
கட்டவேண்டும் என்று, முருகன் எங்களுக்கு
உத்தரவிட்டிருக்கின்றார்”. நீங்களெல்லாம்
முருகன் கோயில் கட்டுவதற்கு உதவி செய்யவேண்டும். எல்லா மக்களையும், முருகன் பெருமையை உணரும்படிச் செய்யவேண்டும். ஆகவே,
உங்களால் இயன்ற பணம் கொடுங்கள் என்று சொன்னவுடனே, அங்கிருக்கும் கூட்டத்தினர், தாங்கள் போட்டிருக்கும் நகை,
மற்றும் பணம் ஏராளமாகக் கொடுத்தனர்.
சாமியார் வேடம் பூண்டவர்களும்,
அனைத்தையும் சுருட்டி, கட்டிக் கொண்டனர். “முருகன் கோயில் கட்டி முடிந்ததும், உங்கள் அனைவருக்கும் அழைப்பு வைக்கின்றோம், அனைவரும் வாருங்கள்”. அங்கு வரும் பொழுது, உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும், முருகனிடம் சொல்லித்
தீர்த்து வைக்கின்றோம் என்று சொல்லிவிட்டு, காரில் ஏறிப் போய்விட்டனர்.
இதையெல்லாம், குருநாதர் பார்க்குமாறு சொல்லியதால் பார்த்துக் கொண்டிருந்தோம். உலகில் எத்தனை
விதமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்? என்பதைக் கண்டுணரும்படி செய்தார்
குருநாதர்.
நகைகளையும், பணத்தையும்,
அள்ளிக் கொண்டு சாமியார் வேடம் பூண்டவர்கள் காரில் ஏறிப்போனபின், 2 அல்லது 3 மணி நேரம் இருக்கும்.
முடமாகியிருந்தவர், குணமானதாக
நம்பிய நிலையில், கட்டிலில்
உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். “எனக்கு முருகனே நேரில் வந்தார், காட்சி கொடுத்தார், குணமாக்கினார்” என்று பேசிக் கொண்டிருந்தவர், திடீரென்று “ஐயோ, அம்மா” என்று கத்தி, கட்டிலிலே சுருண்டு படுத்துக் கொண்டார்.
காது கேட்காமலிருந்த டீ
கடைக்காரருக்கு, மறுபடியும் காது கேட்கவில்லை.
இது எப்படியென்றால், இவையனைத்தும் ஆவி வேலைகள். இத்தகைய ஆவிகளை ஏவினால்,
குறிப்பிட்ட நேரம் வரை செயல்படுத்தும்.
(பக்கம் 109-111)
ஒரு முறை எம்மை குருநாதர், காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக்
கொண்டிருந்தார். அப்பொழுது, திடீரென்று
காட்டுக்குள் ஒளிவெள்ளம் தெரிந்தது, எமக்கு வெகு ஆச்சரியமாக இருந்தது.
அவ்வொளி வெள்ளத்தின் நடுவே “காளி” உருவம்
தெரிந்தது. அது மறைந்து விலை உயர்ந்த கற்கள், ஆபரணங்கள் குவியலாகத் தெரிந்தது. அவைகள் வைரங்கள், வைடூரியங்கள், நகைகள் போன்றவைகளாக இருந்தன. குருதேவர் எம்மிடம் வந்து, அவைகளைச் சுட்டிக் காட்டி, “இவைகள் பொய்யல்ல, நிஜமானவைகள்தான், எடுத்துக் கொள்” என்றார்.
எம்மால் நம்ப முடியவில்லை.
ஏனென்றால், இதற்கு முன்னால், இவ்வளவு
நகைகளை யாம் கண்டதில்லை.
மேலும் குருதேவர், “தொட்டுப் பார்” என்று கூறி, “நீ காண்பது கனவல்ல, நிஜம்தான்” என்று
சொல்லி அதை நிரூபிக்க, எம்மை
நறுக்கென்று கிள்ளினார்.
எமக்கு வலி தெரிந்தது. நகைகளைத்
தொட்டுப் பார்த்தோம், நிஜமானவைகள்தான்
என்று நம்பினோம்.
“இவைகளெல்லாம் உனக்குச்
சொந்தமாக்கினால் என்ன செய்வாய்?” என்று
குருதேவர் கேட்டார்.
அவர் கேட்ட வேகத்தில் யாம்
சொன்ன பதில், “ஏழைகளுக்குத் தர்மம் செய்வேன்” என்றோம். பதில் சொன்ன வேகம்தான், எனக்கு “படாரென்று
ஓர் அடி” விழுந்தது. அடித்தவர் குருதேவர்.
யாம் கதி கலங்கி விட்டோம். அந்த நிமிடமே, எல்லாப் பொருள்களும் மறைந்து போனது.
அதைத் தொடர்ந்து குருதேவர்
கூறினார். நீ ஒரு பொருளை தர்மம் செய்கிறாய் என்று கூறினால், அதைத் தொடர்ந்து உன்னைத் தேடி வருபவர்கள், தங்களுடைய கஷ்டங்களை எல்லாம் சொல்லி, “நான் சாகப் போகின்றேன், என்னுடைய கஷ்டங்களிலிருந்து மீளவே வழி தெரியவில்லை, நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சுவார்கள்.
நீயும் இரக்கப்பட்டு, தானம் செய்கிறாய் என்றால், அவர்களுக்கு பொருளைப் பற்றித்தான் ஞாபகம் வருமே ஒழிய, ஞானத்தைப் பெற
வேண்டும் என்ற எண்ணம், அவர்களுக்கு உண்டாகாது.
ஆகையால், நீ எதைத் தானம் செய்ய
வேண்டும்? நீ, பிறருக்கு பொருள் அடிப்படையில் உதவவேண்டும் என்று
முற்பட்டால், பிறகு உன்னைத் தேடி வருபவர்கள், “எனக்கு ஏராளமான துன்பங்கள் இருக்கின்றது” என்று,
இல்லாத துன்பங்களை, இருப்பது போல்
சொல்லிக் கொண்டு வருவார்கள்.
நீயும் இரக்க உணர்வு கொண்டு,
அவர்களுக்கு தானங்கள்
செய்துகொண்டிருந்தால்,
அவர்களுக்கு ஆசைகள் தான்
பெருகும்.
மனிதர்களுடைய தேவைகளை, பொருள்களை அள்ளிக்
கொடுத்துத் தீர்த்து வைக்க முடியாது. ஒரு தேவையை
நிறைவேற்ற, மனிதருக்கு மற்றொரு
தேவையும் உருவாகும். ஆகவே அவர்கள் அறிய வேண்டியது, பெறவேண்டியது, ஒன்றே ஒன்று.
அது, அகப்பொருளின் உணர்வின்
தன்மையுடன்,
மெய்ஞான உணர்வின் தன்மையைக்
கலந்து வளர்த்து,
இருளைப் போக்கி, பொருளைக்
காணும்
நிலையைப் பெறச் செய்யவேண்டும்.
புறப்பொருளைத் தேடாது, அகப் பொருளைத் தேடும் பொழுது, புறப் பொருள் தானே
வரும். புறப்
பொருளைத் தேட வேண்டிய அவசியமே இல்லை.
(பக்கம் 111-115)
நமது குருநாதர் எமக்கு அருளிய
அருள் வழிப்படி, யாம்
உங்களுக்கு, “குருநாதர் உணர்த்தி அருளிய
பேருண்மைகளைத் தெளிவாகச் சொல்கிறோம்”. நமது வாழ்க்கையில், நம்மையறியாது வரும், தீமைகளின் உணர்வுகளை நீக்கிடும் அருள்சக்தியின் உணர்வுகளை,
நம்முள் பெறுதல் வேண்டும்.
வயல்களில் களைகளை நீக்குவது
போன்று, நமது வாழ்க்கையில் வரும்,
விஷத் தன்மையான களைகளை நீக்க வேண்டும். அப்படி விஷத் தன்மைகளை நீக்கத் தவறினால், “துன்பமே வாழ்க்கை” என்ற நிலைகள் நம்முள் ஊடுருவி, தீமைகள் நமக்குள் வளர்ந்திடும் நிலை பெறுகின்றது. ஆகவே, மனிதர்கள் தம்மில் தீமைகளை நீக்கிடும் அருளாற்றலைப்
பெறவேண்டும்.
துன்பத்தை நீக்கிப் பேரின்பத்தை உருவாக்கும் அருள் உணர்வுகளையும், நச்சுத் தன்மையைப்
பிளக்கும் அருள் உணர்வுகளையும், குருநாதர் தமக்குள் விளைய வைத்து, அவர் வெளிப்படுத்திய நிலைகள், இப்புவியில் காற்று
மண்டலத்தில் பரவிப் படர்ந்துள்ளது.
நாம் பல ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து, கூட்டமைப்பாக தியானம் இருந்து, காற்றில் பரவிப் படர்ந்துள்ள அருள் உணர்வுகளைத் தம்முள்
கவர்ந்து, வளர்த்து, அதன்வழியில் மற்றவர்களையும் இணைத்திடல் வேண்டும்.
இப்புவியில், விஞ்ஞானிகளால் பரவியுள்ள நஞ்சுகளும், மனிதரை மனிதரே கொன்று குவிக்கச் செய்யும், இரக்கமற்ற செயல்களைச் செயல்படுத்தும் உணர்வுகளும், எண்ண அலைகளும் ஒவ்வொரு மனித உடலிலும் விளைந்து, அது வெளிப்பட்டு, இந்த காற்று மண்டலத்தில் நச்சுத்தன்மையாகப்
படர்ந்துள்ளது.
மக்களை இந்த நச்சுத்
தன்மையிலிருந்து மீட்பதற்கு, அருள்ஞான
உணர்வுகளை, நமக்குள் எடுத்து, வளர்த்து, நஞ்சின்
உணர்வுகள் நம்முள் வளராது தடுத்து, அருள் ஞான உணர்வுகள், நல்லதை எண்ணும் நல்ல உள்ளங்களில் வளரவேண்டும் என்று ஏங்கி,
இந்த உணர்வை ஒலிபரப்புச் செய்யும்பொழுது, நாம் எடுத்த இந்த உணர்வுகள் காற்றிலே படர்ந்து, ஒவ்வொரு
உள்ளத்திலும் விளைகின்றது.
ஒரு நெல்லை மண்ணில் விதைத்தால், அது நெற்செடியாக விளைந்து, அந்த செடியில் பல நெல் மணிகள் விளைகின்றன. அப்படி விளைந்த
பல நெல் மணிகளையும் மண்ணில் விதைத்தால், விதைத்த பல நெல் மணிகளும் விளைந்து, மலைபோல நெல் குவிகின்றது. அப்படி மலைபோலக்
குவிந்தால்தான், அவரவர்
பசிக்கு அளவுக்குத் தக்கவாறு, உணவாக எடுத்து உட்கொள்ள முடியும்.
“ஆகவே நீ ஒரு
நெல்லாக இருக்கின்றாய், அந்த நெல்லின் தன்மையை
பலவாக வளர்த்துக் கொண்டு, சக்தி வாய்ந்த
உணர்வின் ருசியை ஒவ்வொரு உள்ளத்துகுள்ளும் ஊட்டு”.
“தீமைகளை நீக்கிய
அருள்ஞான உணர்வுகளை ஒலி பரப்புச் செய்” என்று இதைச்
செய்யும்படி, நமது குருநாதர் எமக்கு அருள்
பணியாக இட்டார்.
நமது குருநாதர், எம்மைக் காடு
மேடெல்லாம் அலையச் செய்து, யாம் அவர்
இட்ட பணிகளைச் செம்மையாகச் செய்வோமா, செய்ய மாட்டோமா என்று அறிவதற்கு, எம்மைப் பல பரீட்சைகளுக்கு உட்படுத்தினார்.
ஒவ்வொரு நிலையிலும், யாம்
பலருக்கு பல உதவிகளைச் செய்வோம். ஆனால், எம்மால் நன்மை பெற்றவவர்களில், சிலர் எமக்குத் தீமை செய்ய முயல்வார்கள்.
குருநாதர் தீமைகளை அழித்திட,
எமக்குப் பல சக்திகளைக் கொடுத்தார். யாம் எண்ணத்தால் எண்ணினால் போதும், தீயவர்களுடைய நிலைகள் செயலற்றதாகிவிடும்.
ஆனால் குருநாதர்,
“பிறர் நமக்குத்
தீமைகள் செய்தாலும்,
நம்மை எண்ணும் போது, அவர்களுக்குள்
தீமைகள் செய்யும் எண்ணங்கள்தான் அழியவேண்டும்,
அவர்களுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் ஓங்கி வளர்ந்து,
நன்மை பயக்கும் சக்தியாக மலரவேண்டும்” என்றுதான்
எமக்கு அருள் சக்தியினைக் கொடுத்தார்.
இப்படி ஆற்றல்மிக்க சக்தியினை,
எமக்கு குருநாதர் கொடுத்திருந்தாலும், எமக்குப் பரிசீலனை வரும் பொழுது, அந்த நிலைகளில் கூர்ந்து கவனித்து,
தீமை செய்பவர்களுடைய உணர்வுகளை
எமக்குள் செலுத்தாதபடி,
”அவர்கள் நலம் பெறவேண்டும்,
அவர்கள் அறியாத
நிலைகளிலிருந்து விடுபடவேண்டும்,
பொருளறிந்து செயல்படும் சக்தி
பெறவேண்டும்”
என்ற நிலைகளைத்தான், குருநாதர் காண்பித்த அருள் வழியில் செய்து வருகின்றோம். இதன்
வழியில்தான், நீங்களும் செயல்படுத்த
வேண்டும் என்று உங்களுக்கு யாம் சொல்வது.
இதைப் பெறுவதற்கு, நாம் அனைவரும் கூட்டமைப்பாக ஒன்று சேர்ந்து, அருள் உணர்வின் ஆற்றலை நம்மில் பெருக்கி, அதை நாம் மூச்சாக, சொல்லாக வெளிப்படுத்த வேண்டும்.
இதை அறிந்து கொண்டவர்கள், எந்த நிமிடத்திலும், எங்கே சென்றாலும், “எனக்குப்
பிறிதொருவர் துன்பம் செய்தார், எனக்குத் துன்பம்
வந்து கொண்டே இருக்கின்றது” என்று எண்ணாதபடி, அந்த வேதனையின் உணர்வை நம்மில் மாற்றவேண்டும்.
இதற்குத் தான், “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை எமக்கு குருநாதர் அருளிய அருள் வழிப்படி,
உங்களுக்கும் தைரியத்துடன், ஏனென்றால்
தைரியம் பெறவே இதைக் கொடுக்கின்றோம். எமது அருளாசிகள்.
குருநாதர் எமக்கு உரைத்த அருளுரைகள்
(1) “மனிதருடைய உடலைக் கோவிலாக மதி.
உடலுக்குள் இருக்கும் உயிரைக்
கடவுளாக மதி. உடலைக் கோவிலாக மதித்து, உடலில் நற்சுவையாக சுவைக்கச் செய்யும், உணர்வின் ஆற்றல் மிக்க நிலையாக, ஒவ்வொரு உடலையும் நீ மதித்திடல் வேண்டும்”.
(2) “ஆறாவது அறிவின் தன்மையை, இந்த மனித உடலில் நாம் பெற்ற பாக்கியத்தை இழந்திடாது, எல்லோரும் துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்றும், நீ சந்திக்கும்
அனைவரும் தங்களுக்குள் அறியாது சேர்த்த நஞ்சினை நீக்கி, அருள்ஞான உணர்வை
தங்களுக்குள் விளைய வைக்கவேண்டும் என்றும் எண்ணவேண்டும்”.
(3) நான் (ஈஸ்வராய குருதேவர்) கொடுத்த அருள் சக்தியின் துணைகொண்டு, இப்புவியின் காற்றில் பரவி படர்ந்து இருக்கும்
அருள்ஞானிகளின் உணர்வுகளை நீ பெற்று, உன்னை அறியாது உனது
ஆறாவது அறிவில் கலந்த, அழுக்கினைத் துடைத்திடல் வேண்டும்.
(4) அழுக்கினைத் துடைத்திட்ட, அருள் உணர்வின் ஆற்றல் மிக்க சக்தியை நினைவு கூர்ந்து, ஒவ்வொரு
உயிரையும் ஈசனாக மதித்து, ஈசனுக்கு அபிஷேகம் செய்வதாக நினைவில்
கொண்டு, நீ சொல்லும் உணர்வின் நிலைகlளைக்
கூர்மையாக கவனிக்க வைத்து, அந்த உணர்வுகளைச்
சுவாசிக்கச் செய்.
(5) அங்கே உடலுக்குள் வீற்றிருந்து
உடலை இயக்கிக் கொண்டிருக்கும்,
உடலைக் காத்துக் கொண்டிருக்கும்,
உடலை உருவாக்கிக் கொண்டிருக்கும்,
உணர்வுகளை வளர்த்துக் கொண்டிருக்கும்,
உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொண்டிருக்கும் “ஈசனை” உயர்ந்த நிலைகளை
எண்ணி, மெய்ஞானிகளின் அருள் உணர்வுகள் அங்கே விளைய வேண்டும், அருள் உணர்வின் தன்மை அங்கே பெருக வேண்டும், அருள்ஞான சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று அவர்களுடைய உடலை
எண்ணி, உடலில்
வீற்றிருக்கும் உயிரான ஈசனுக்கு, இவ்வருள் உணர்வுகளை நீ அபிஷேகம் செய்ய
வேண்டும்”
இப்படி, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த அருள்வழியில்,
யாம் பார்க்கும் ஒவ்வொருவரின் உயிரையும் ஈசனாக மதித்து, உடலை ஆலயமாக மதித்து, அவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், அவர்களுக்குள்
அறியாது சேர்ந்த நஞ்சுகள் நீங்கி, இவ்வாழ்க்கையில் தெளிந்த ஞானமும், மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள்சக்தியும் பெற்று, பிறவியில்லா நிலை பெரும் நிலையாக, பேரின்பப்
பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திடும் நிலைகள் பெறவேண்டும் என்று,
எமது அருள் உணர்வுகளைப் பரவச் செய்து,
அவர்களை நுகரச் செய்து,
அவர்கள் “உயிரில்” இணையச் செய்து வருகின்றோம்.
இதன்வழி, யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைக் கூர்ந்து கவனித்து, தங்களில் விளைய வைத்து வெளிப்படுத்தி வரும் அன்பர்கள்
அனைவரும், தங்களில் தீயவினைகள் நீங்கி, சாபவினைகள் நீங்கி, பாவவினைகள் நீங்கி, பூர்வ ஜென்மவினைகள் நீங்கி, உடல் நலம், மனநலம், மனபலம், மனவளம், செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கு அனைத்தும் பெற்று, தொழில் வளமும், செல்வச் செழிப்பும் பெற்று, பிறவியில்லா நிலை பெறும் அருள்ஞானம் பெற்று, பிறவியில்லா நிலை பெறும் அருள் வாழ்க்கையாக வாழ்ந்து
வளர்ந்திட, எமது அருளாசிகள்.
நலம் பெறுக வளம் பெறுக
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுக