Tuesday, August 7, 2012

சர்வ தீமைகளையும் நீக்க குரு கொடுக்கும் பயிற்சி 1


1. தீமையிலிருந்து விடுபட்டுச் சென்ற மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
இந்த வாழ்க்கையில், பித்தனைப் போல் இருந்தார் நமது குருநாதர். ஆனால், “இந்த உலகமே பித்து நிலையில் இருக்கின்றதுஎன்பதை உணர்த்துவதற்கு, இந்த உலகில் உள்ளோர்க்கு அவரைப் பார்த்தால், பித்தனாகத்தான் தெரியும்.

ஆனால், இந்த உலக மக்கள் பித்துப்பிடித்து, பித்தனாக உள்ளனர். இதிலிருந்து நான் விடுபட்டே செல்கின்றேன் என்று, உண்மையின் உணர்வின் இயக்கத்தை, அவர் உடலில் தெளிவாகப் பதிவு செய்து கொண்டார், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஆகையினால், மற்றவர்கள், யார் தவறு செய்கின்றார்கள்? எப்படிச் செய்கின்றார்கள்? என்பதைச் சிந்திப்பதில்லை. அவர் ஏற்றுக்கொள்வதும் இல்லை.

2. “மனமே இனியாகிலும் மயங்காதே”
யாம் ஒரு முறை, குருதேவர் ஆணைப்படி, இமயமலைக்குச் சென்றோம். அப்பொழுது, உடலில் கோவணம் மட்டுமே அணிந்திருந்தோம். வேறு எந்தத் துணியும் எம்மிடம் இல்லை.

அங்கே நிலவும் குளிரில்,  குருதேவர் அருளிக் கொடுத்த உணர்வுகளை,  யாம் நுகர்ந்து கொண்டிருந்ததால், எம் உடலில் வெப்பம் உருவாகி, குளிர் எதுவும் தாக்காத வண்ணம், அங்கே நடந்து சென்று கொண்டிருந்தோம்.

அந்த பனிமலைப் பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, யாம் ஒரு இடத்தைக் கடந்திருப்போம். சற்று நேரத்தில், கால் வைத்து நடந்த பகுதி, இடிந்து தகர்ந்து விழுந்தது. தகர்ந்து விழுந்த இடத்தைப் பார்த்தால், பெரிய பாதாளமே அங்கே இருந்தது.

அதைப் பார்த்தவுடன், எமது சிந்தனைகள் எங்கே சென்றதென்றால், எமது குழந்தைகள், எமது குடும்பம் எவ்வாறு இருக்கின்றதோ?, யாம் மீண்டும் அவர்களைச் சந்திக்க முடியுமா? அல்லது இங்கேயே விழுந்து இறந்துவிடுவோமா? இந்த பாதாளத்தில் விழுந்திருந்தால், என்ன ஆகியிருக்கும்? என்றுதான் எமது சிந்தனைகள் சென்றன.  உடல் மீது தான், ஆசை தோன்றியது. குரு கொடுத்த உணர்வுகளை, அந்த நேரத்தில் மறந்துவிட்டோம்.

இதனால் எமது உடலில் குளிரெடுத்தது. இதயம், “பட படஎனத் துடித்து, இரைச்சலாகி, சற்று நேரத்தில் இறந்தே விடுவோம்என்ற நிலை, எம்மிடத்தில் உருவானது. அப்பொழுது குருதேவர், எமக்கு முன்னால் உதயமானர்.
மனமே இனியாகிலும் மயங்காதே,
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே.
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ?
மின்னலைப் போல மறைவதைப் பாராய்.

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ?
நிலையில்லா இவ்வுலகம் உனக்குச் சதமா?
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே.
என்ற இந்த பாடலைப் பாடிக் காண்பித்து, சோதனையான சமயத்தில், “இப்படி ஆகின்றதேஎன்று வருந்தி, “உன் குழந்தைகளையும் மற்றவர்களையும் எண்ணி, படபடப்பாகி மயங்குகின்றாய்.

ஆனால், சற்று நேரத்திற்கு முன் உனது உயிர் போயிருந்தால், இந்தப் பொன்னடி பொருளை எங்கே காணப் போகின்றாய்?” என்று கேட்கிறார் குருதேவர்.

ஆகவே, ஆசையின் உணர்வை விடுத்து, அருள் ஒளியின் உணர்வை எடுத்து, “அந்தக் குழந்தைகள் அருள் ஞானம் பெறவேண்டும், இருளை அகற்றி மெய்ப்பொருள் காணவேண்டும், அவர்கள் வாழ்க்கை நலம் பெறவேண்டும்”, என்ற உணர்வினை எடுத்தால், அவர்களை வாழ வைக்கலாம். நமக்குள் அருள் உணர்வைக் காக்கலாம் என்றார், குருதேவர்.

மனிதருக்கு,  வாழ வைக்க வேண்டும்என்ற எண்ணம்தான் வரவேண்டுமே தவிர,  இப்படி ஆகி விட்டதேஎன்று எண்ணக் கூடாது.

ஏனென்றால், இப்படி ஆகி விட்டதே என்று வேதனையின் தன்மையை எடுக்கப்படும் பொழுதுதான்,  விஷத்தின் தன்மையைக் கவர நேருகின்றது.  அதனால், மனிதரின் செயலாக்கத்தின் தன்மை குறைகின்றது.

இதுபோன்று யாம் செல்லும் பாதையில், சில விபத்துக்கள் நேரிடும் பொழுதெல்லாம், எமக்குக் குடும்பத்தின் ஞாபகம் வரும். அப்பொழுது, இதிலிருந்து எப்படி காத்துக் கொள்வது என்று, நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார், குருநாதர்.

ஆகவே, குரு காண்பித்த அருள்வழியில்,  நாம் அனைவரும், “நம் உடல்  நமக்கு சொந்தமில்லைஎன்று உணர வேண்டும்.  உயிருடன் ஒன்றும் உணர்வை, அருள் ஒளியின் உணர்வாக இணைத்துச் சொந்தமாக்குதல் வேண்டும்

.மகரிஷிகளின் அருளைப் பற்றுடன் பற்றுதல் வேண்டும். நமது வாழ்க்கையில் வரும் தீமைகளை, பற்றற்றதாக மாற்றுதல் வேண்டும்.

இதுபோன்று, குருநாதர் ஒவ்வொரு சமயத்திலும்,  மனிதர் தாம், சந்தர்ப்பத்தால் அறியாது வரும், தீமைகளில் சிக்கிக் கொள்வதை உணர்த்தி, மனிதர் தாம் எவ்வாறு தீமைகளிலிருந்து மீள்வது? எனும் நிலையை, அனுபவரீதியாக எமக்கு உணர்த்தினார்.
3. தீமையைக் கண்டுணர்ந்தாலும், அதை நமக்குள் இணைக்கக் கூடாது
நமது வாழ்க்கையில், நாம் தவறு செய்யாமலேயே, பிறருடைய தீமைகளை நாம் கண்டுணரும்போது, உணரத்தான் பயன்படுத்தவேண்டும். உணர்ந்தபின், அதை நீக்கிடுதல் வேண்டும்.

அதாவது தெரிந்துகொள்ளப் பயன்படுத்த வேண்டும். ஆனால், தெரிந்த உணர்வுகள் உடலிலே இணைத்திடக் கூடாது. அதை நீக்கிடல் வேண்டும். தீமைகள் எதுவோ, அவைகளை நீக்கி, நன்மையின் பயன் எதுவோ, அதை ஆக்கபூர்வமான நிலைக்கு மாற்றிடல் வேண்டும்.

இன்று நாம் மனிதனாக இருக்கின்றோம். காரத்தைத் தனித்து உணவாக உட்கொண்டால், காரத்தின் ஏக உணர்வுகள் நமக்குள் சுவையற்றதாக மாற்றுகின்றது.

னால் அதே சமயம், அந்தக் காரத்தை மற்றவைகளுடன் இணைக்கப்படுபோது, சுவை மிக்கதாக மாற்றுகின்றது. இதேபோன்றுதான், மனிதனின் வாழ்க்கையில், பிறரின் கசப்பான உணர்வுகள் வெளிப்படுவதைக் கேட்டுணர்ந்தாலும், பிறரின் வாழ்க்கையில் கடும் நோயுற்று, அவர்கள்படும் வேதனையைப் பார்த்து சொல்லால் கேட்டுணர்ந்தால், உணர்ந்த அச்சக்தியை, நம்மில் அது இயங்காது தடைப்படுத்த வேண்டும்.

உணரப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அடுத்த கணம், அதனுடைய தீய வினையாகச் செயல்படும் நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.

நாம் எவ்வாறு தீமையைக் கேட்டறிந்து, தீமையிலிருந்து விடுபட உதவி செய்கின்றோமோ,. இதைப்போல நாம் தீமையான உணர்வுகளைக் கேட்டுணர்ந்தபின், அடுத்தகணம், நம்முன் மறைந்திருக்கும் அருள் மகரிஷிகளின் ஆற்றலை நாம் கவர்ந்து, நமக்குள் அடுத்து, தீமையை விளைவிக்காது, சமப்படுத்தும் நிலையாக மாற்றிடல் வேண்டும்.


4. நம்மைறியாமல் இயக்கும். தீமைகளிலிருந்து மீளச் செய்யும் அருள்ஞானம்
ஒரு முறை ஆனைமலைக் காடுகளுக்கு, குருநாதர் எம்மை அழைத்துச் சென்றுவிட்டு, பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்.

பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அருகில் வந்து கொண்டிருக்கும் பொழுதுவேகமாக வந்து கொண்டிருக்கும் பஸ்ஸிற்கு முன்னால், ரோட்டைக் கடப்பது போன்று குறுக்கே சென்றுஎம்மையும் இழுத்தார். நாங்கள் குறுக்கே புகுந்தவுடன்,  பஸ் திடீரென்று நின்றுவிட்டது.

உடனே குருநாதர் டிரைவரைப் பார்த்து, "மடத்தனமாக வண்டி ஓட்டுகின்றான் பார்" என்கிறார்.

பஸ்ஸின் டிரைவரோ, "ஏனய்யா புத்தி இருக்கிறதாபைத்தியமா பிடித்திருக்கிறது" என்று திட்டினார்.

குருநாதரும், "இது போலவா வண்டி ஓட்டுவது?  அறிவு கெட்டதனமாக வண்டி ஓட்டுகிறாய்" என்று டிரைவரைத் திட்டினார்.

பின்குருநாதர் தெளிவுபடுத்தினார். அதாவதுஇதுபோன்று சமுதாயத்தில், சந்தர்ப்பங்கள் சில நேரங்களில்உணர்வின் வேகம் கொண்டுநம் உணர்வுகள் செயல்பட்டுதான் செய்த தவறை மறந்துபஸ் டிரைவரைத்தான், குறை சொல்கிறோம். 

தவறு எப்படி நேர்ந்தது? என்று சிந்திக்கத் தவறும் பொழுது, டிரைவர் மீது கோபம் கொள்வது போன்ற நிலைகள் ஏற்படுகின்றன. 

டிரைவர் பிரேக் போடாமல் விட்டு விட்டால்அங்கே என்ன நேரும்? என்று நாம் சிந்திப்பதில்லை.  நாம் நசுங்கி இருப்போம் என்று அந்த இடத்தில் சிந்திக்க வேண்டும்.

டிரைவர் திட்டியது சரிதான்என்று ஏற்றுக் கொள்ளும் நிலை வருமானால்நாளை இது போன்ற அவசர புத்தி நமக்கு வராது. நல்ல அறிவினை ஊட்டினார் என்று எண்ணினால்டிரைவர் மீது பகைமை வராது.

இப்படிகுருநாதர் உணர்வுகள் ஒவ்வொன்றையும் அனுபவ ரீதியில் கொடுத்தார். மக்கள் தங்கள் வாழ்க்கையில், தாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் கொண்டு செயல்படும் பொழுது, சிந்தனை அதன்பால் தான் இருக்கின்றதே தவிரஅங்கே தாம் செல்லும் பாதையில் உள்ள, இடையூறுகள் தெரிவதில்லை. தம்முடைய ஆசையின் நிலைகளிலே செல்கின்றனர். ஆனால், பாதையில் இருக்கும் ஆபத்தையும் எதிரியையும் மறந்து விடுகின்றனர்.

இது போன்ற சந்தர்ப்பங்கள் வரும் பொழுது, நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்து, தீமைகள் நம்மிடையே வராது விலக்கிஅருள் உணர்வுகள் அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆகவேநான் கொடுத்த சக்தி கொண்டு பிறரை வீழ்த்துவேன் என்ற அகந்தை கொண்டால்நல்வழியின்  உணர்வுகள் உனக்குள்  வராது என்று, குருநாதர்  எமக்குத்  தெளிவுபடுத்தினார்

ஒருவர் தீங்கு செய்கிறார் என்று எண்ணி, அதே உணர்வினை நுகர்ந்தால், நமக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகள் வரும். ஆகவே, நாம் தீமைகளைத்தான் செய்ய முடியுமே தவிரநன்மை செய்ய முடியுமா?, என்று நாம் சிந்தித்தல் வேண்டும்.

ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று நுகரும் பொழுது, அந்த வேதனை நமக்குள் ஆகின்றது. இதைப் போன்று, ஒருவர் தீங்கு செய்கின்றார் என்றால்தீங்கின் நிலையே நமக்குள் விளைகின்றது.

எனவே, தீங்கு செய்கின்றவர்களை எண்ணும் பொழுது, அவர்கள் அதிலிருந்து மீள வேண்டும் என்று, “நான் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு, அவரைத் தீமையிலிருந்து மீட்ட வேண்டும்என்று ஒவ்வொரு நொடியிலும், அனுபவ ஞானத்தை ஊட்டினார் குருநாதர்.

யாம், தியான வழி அன்பர்கள் அனைவருக்கும், குருநாதர் காண்பித்த அருள் வழியில் தெளிவுபடுத்துகின்றோம். ஒருவர் நமக்குத் தீமைகள் செய்கிறார் என எண்ணும் பொழுது, அவர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணிஉங்களுடைய உயிரான ஈஸ்வரனிடம் வேண்டுங்கள். 

உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வைப் பெறுங்கள். இந்த உணர்வின் தன்மை உங்களுடைய உடலை, உணர்வைத் தூய்மையாக்கிவிடும்.

அதே சமயத்தில், அவர்களைப் பாதுகாக்கும் உணர்வுடன் செயல்படுத்துங்கள்அப்பொழுது நமக்கும் பாதுகாப்பாகின்றது.

நீங்கள் ஆலயங்களுக்குச் சென்று, அபிஷேகமும், ஆராதனையும் செய்வதைப் போன்றுஉங்கள் உடலுக்குள், மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை அபிஷேகம் செய்யுங்கள்.  இதனால், உங்கள் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு, உங்கள் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்குநல் அமுது கிடைக்கின்றது.

நமது குருநாதர், துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு கொண்டு, ஏழாவது அறிவு பெற்ற சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்.

தீமைகளிலிருந்து விடுபடும் நிலையையும், அருள் ஒளியைப் பெறும் நிலையையும், உணர்த்திய உணர்வு கொண்டு, துருவ நட்சத்திரத்தை எமக்குக் காண்பித்தார்.

குருநாதர் எம்மிடம், “அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து, நீ பெற்றுக்கொள். இருளை அகற்ற உதவும், மெய்ப்பொருளைக் காண உதவும், உன்னை அறியாத தீங்கினை அகற்றிட உதவும்என்று உபதேசித்தார். 

நமது குருநாதர், தாம் ஒளியின் சரீரமானபின், எம்மை, “நீ அதில் ஆயுள் மெம்பராகுஎன்று உரைத்தார்.  அதனால், யாம் தியானவழி மெம்பர்கள் உங்கள் அனைவரையும், அங்கு ஆயுள் மெம்பராக இணைத்து விடுகின்றோம்.

5. தோல்வியிலிருந்து மீளச் செயும் அருள்ஞானம்
விஞ்ஞானம், எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. இன்று செவ்வாய்க் கோளுக்கு, இராக்கெட்டை அனுப்புகின்றனர். அங்கே இருக்கும் உண்மைகளை அறிய விரும்புகின்றனர்.

செவ்வாய் நாதகாரகன். இவர்கள் அனுப்பும் இராக்கெட்டின் ஒலியைக் காட்டிலும்செவ்வாயின் ஒலி அதிகமாக இருப்பதனால், செவ்வாய்க் கோளில் இறங்கிய இராக்கெட்டின் ஒலிஅதிர்வுகள் மாறி, இராக்கெட்டின் இயந்திர இயக்கங்களும் மாறுகின்றது. இந்த நிலையானாலும்விஞ்ஞானிகள் விடுவதில்லை. 

ஏன்? எதனால்? எப்படி? என்ற நிலைகளில் சிந்திக்கின்றனர். குறையினை மாற்றியமைத்துமறுபடியும், செவ்வாயில் இராக்கெட்டை இறக்குவதற்கு, விஞ்ஞானிகள் முயற்சி எடுக்கின்றனர்.

ஆகவே, இதைப் போன்று நமது வாழ்க்கையில், தியானவழியில் சில சந்தர்ப்பங்களில் நமது செயல்பாட்டில் தோல்வி அடைந்தாலும், எப்படியும் இதிலிருந்து மீளவேண்டும், எது நம்மை மாற்றியமைத்தது? என்று சிந்தித்து, பேரருளை நமக்குள் பெருக்கி, இருளை அகற்றும் நிலைகளை நமக்குள் பெறுதல் வேண்டும்.

சாமியிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கினேன், தொழில் நன்றாக நடந்தது. சாமியிடம் ஆசீர்வாதம் வாங்கினேன், என் வேதனைகள் நீங்கியது. என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாமல்உயர்ந்த உணர்வின் தன்மையை, அருள் உணர்வை உங்களுக்குள் பெருக்கினால், உங்கள் உடலில் உள்ள குறைகள் நீங்குகின்றது.  தன்னிச்சையாக வியாபாரமும் பெருகிவரும், நீங்கள், தேடி அலைய வேண்டியதில்லை.

அருள் உணர்வைப் பெருக்கினாலே, அதற்குண்டான அமைப்பும் தேடி வருகின்றது என்று அதிக ஆசைப்பட்டால், எதனையும் நிர்வகிக்கும் குறைந்துவிடும்.

பின், நாம் கிடைத்த செல்வத்தையும், பாதுகாக்கும் தன்மையினை இழந்து விடுவோம். இது போன்ற நிலைகள் இல்லாதபடிநாம் நமது வாழ்க்கையில், குரு அருள் ஒன்றையே பிரதானமாக வைத்து வாழ்வோம்.

குருவின் துணையால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினைப் பெறுவோம். நம்மில் அறியாது சேர்ந்த, இருளை விலக்குவோம், என்று அருளுணர்வை தம்முள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று, இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி, மெய்பொருள் காணும் திறன் பெற்று, மலரைப் போன்று மனம் பெற்று, மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று, இந்த வாழ்க்கையில் பிறவியில்லா நிலை பெறும் நிலையாக, பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருளாசிகள்.

6. விதியை மதியால் வெல்ல முடியும்
நாம் எவ்வளவு  நல்லவராக இருந்தாலும், வேதனைப்படுவோரின் நிலைகளைக் கண் கொண்டு பார்க்கும் பொழுது, நமக்குள் வித்தாகப் பதிந்து விடுகின்றது.

உடலில் பதிந்த வேதனையின் வித்து, நமது உடலில் இருந்து கொண்டு, அதனின் உணர்வின் கிளர்ச்சியைத் தூண்டி, வித்துக்குச் சத்தாகத் தன் உணர்வை ஈர்க்கின்றது.

ஆக இது போன்று, எதனின் உணர்வின் குணத்தை, அதிகமாக நமக்குள் பதிவு செய்கின்றோமோ, அது  நமக்குள்  விதியாக  மாறுகின்றது.

நமக்குள் எத்தகைய தீமையைப் பதிவு செய்தாலும், அந்த உணர்வின் தன்மை நம்முள் ஊழ்வினையாக, விதியாக உருவாகின்றது, மீண்டும், மீண்டும் அதே எண்ணங்களை எண்ணும் பொழுதுதான், அதன் வழிகளில் நாம் செயல்பட ஆரம்பித்து விடுகின்றோம்.

இதைத்தான், சிவனுக்குக் கணக்குப் பிள்ளை நந்தீஸ்வரன், என்று பக்தி மார்க்கங்களில், சாதாரண மனிதரும் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் வண்ணம், காவியங்களைத் தொகுத்தனர்.

வித்தாகப் பதிந்து வளரும் உணர்வுகளை, நாம்  மதி கொண்டு மாற்றிடல் வேண்டும். அவ்வாறில்லாமல், வேதனையின் உணர்வுகள் வளர்ந்து, விதியாகச் செயல்படுமானால், அது நம் உடலைக் கரைத்து, இறுதியில் நம்மை மடியச் செய்துவிடும்.

ஆகவே, விதியை மதி கொண்டு மாற்றிடல் வேண்டும். மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தியை, நம்முள் வலுப் பெறச் செய்வதேமதியாகும்.

ஆகவே, இந்த மதி கொண்டு, நம்முள் சேரும் நஞ்சான இருளை அகற்றுவோம். மகரிஷிகளின் அருள் சக்தியின் உணர்வாக வளர்ப்போம். எமது அருளாசிகள்.

7. பிறர் நம்மைத் திட்டும் பொழுது, என்ன செய்ய வேண்டும்?
உங்களை நீங்கள் காப்பாற்றாமல், சாமி காப்பாற்றுவார்! சாமியார் காப்பாற்றுவார்! ஜோசியம் காப்பாற்றும்! இயந்திரம் காப்பாற்றும்  என்று நினைக்கவேண்டாம், ஆக ஒன்றும் காப்பாற்றாது,

இந்த உடலிலும் சரி, இந்த உடலை விட்டுப் போனாலும் சரி, உயிருடன் ஒன்றிய நிலையில் இந்த உணர்வைச் சேர்த்து, உயிர் வெளியிலே போனால், அவனுடன் ஒன்றி அங்கே போக வேண்டும், அதற்கு நீங்கள் தயார் பண்ணிக்கொள்ளுங்கள்.

எமது குருநாதர் கஷ்டப்படச் சொன்னார். சரியென்று யாம் எமது நிலைகளில் எப்பொழுது வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும், எங்கு வேண்டுமென்றாலும் போய்க்கொள்ளலாம்.

ஆனால் அவர் இட்ட கட்டளை, “அனைவரது உயிரையும் கடவுளாக மதிக்கச் சொல்லியிருக்கிறார், உங்களிடமெல்லாம் வரம் கேட்கச் சொல்லி இருக்கிறார்”.

அதே மாதிரி நீங்கள் ஒவ்வொருவரும், நன்றாக இருக்க வேண்டும், நன்றாக இருக்க வேண்டும் என்று வரம் கேளுங்கள். நீங்கள் ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

ஒருவர் கஷ்டப்படுகின்றார் என்றால் நன்றாக ஆக வேண்டும் என்று வேண்டுங்கள். அந்த உடலிலிருந்து நல்லது கிடைக்கும், அந்த உணர்வின் தன்மையில் நல்லது நடக்கும்.

உங்களுக்குப் பிடிக்காத நிலைகளில் இருக்கிறார்கள் என்று சொன்னால், விலகி நில்லுங்கள். அவர்கள் சங்கடத்தைப்பற்றி எண்ண வேண்டாம், விலகி நில்லுங்கள், அவர்களுக்கு நல்ல நேரம் வரட்டும் என்று சொல்லிவிடுங்கள்.

அவர்கள் இம்சை கொடுக்கிறார்கள், இம்சை கொடுக்கிறார்கள் என்று எண்ண வேண்டாம், இதை நீங்கள் செய்து பழகி வாருங்கள்.

நான் எப்படி உங்களை வேண்டுகின்றேனோ, அதைப்போல ஆத்ம சுத்தி செய்துவிட்டு, நன்றாக ஆக வேண்டுமென்று நீங்கள் சொல்லிப்பாருங்கள். இது உங்களுக்கு நன்மையைத் தரும். 

உங்களை யாராவது திட்டிகொண்டே இருந்தால், உடனே சொல்லுங்கள், “மகரிஷிகள் அருள் சக்தியால், அவர் அறியாமல் திட்டிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் மாறி, எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடிய எண்ணம் அவருக்கு வரவேண்டும்”. 

இவ்வாறு அவர் திட்டும் பொழுதெல்லாம், கேட்கும்பொழுதெல்லாம் இதைச் சொல்லிக்கொண்டே வாருங்கள், அவர் திட்டுவது உங்களுக்கு வராது, நீங்கள் செய்வது அவருக்குப் போய்ச் சேரும்.

ஆனால், இப்படித் திட்டுகிறானே, இருக்கட்டும் பார்க்கிறேன் என்று சொன்னால், ஆத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் வந்து இரத்தக் கொதிப்பு, கை கால் குடைச்சல், தலைவலி போன்று நமக்குள் வர ஆரம்பித்துவிடும்.

ஆகவே, அத்தகைய நிலைகள் நமக்குள் வராதபடி, நாம் ஆத்ம சுத்தியைக் கடைப்பிடித்து, தீமைகளை அகற்றுவோம். இதைச் சீராகக் கடைப்பிடிப்போர் அனைவருக்கும், எமது அருளாசிகள்.

8. கௌரவத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக, உயிருக்குள் ஒளியைப் பெருக்கும் நிலை
நமக்குள் இருக்கக்கூடிய உயிரான ஈசன், இந்த உடலை விட்டு போய்விட்டதென்றால், இந்த நீசத்திற்கு வேலையே இல்லை. நாம் எத்தனை கௌரவம், எத்தனை துணி, எத்தனை அலங்காரம், எத்தனை சுகமான நிலை, எத்தனை பஞ்சு மெத்தை போட்டு வைத்திருந்தாலும், இந்த ஈசன் போய்விட்டால், குப்பையில் போய் எரித்துவிடுவார்கள்.

நாம் இங்கே பார்க்கும் கௌரவமெல்லாம், இப்படி இருந்தார்கள் என்றா பார்க்கின்றோம். ஆனால், இழுத்துக்கொண்டு கட்டையில் வைக்கும் போதும், மண்ணைக் கொட்டும் போதும், பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றோம்,

ஏண்டா இப்படிச் செய்கின்றாய்?  என்று கேட்கின்றோமா!  ஒரு நாளைக்கு மேல் வைத்திருந்தால் நாற்றம் அடிக்கும், தூக்கிச் சென்று விடுகிறோம்.

இப்படி இருக்கும்போது, இந்த உடலில் ஈசன் இருக்கும்போதே, நீங்கள் கௌரவத்தைப் பார்ப்பதைக் காட்டிலும், அந்த மெய்ஞானியின் உணர்வை எடுத்து, இந்த நீசமான உணர்வு நமக்குள் வளராதபடி, அந்த மெய்ஞானியின் உணர்வை வளர்க்கச் செய்யுங்கள்.

இந்த கௌரவப் பிரச்சினை, நமக்குள் நிறைய உண்டு. ஏனென்றால் நாம் அல்ல. அரசனுக்கு, கௌரவத்தில் என்ன செய்கிறான்? என்ன தப்பு செய்தாலும் போர் முறைதான், நான் சொன்னேன், கேட்கவில்லை, உடனே போர் முறை.   

இப்பொழுது  நான் வலுவான நிலையில் இருக்கிறேன், நான் சொன்னதைக் கேட்கவில்லை, உடனே எதிர்த்துவிடு. என்னை எதிர்த்துப் பழகியாகி விட்டால், அதே உணர்வு, என்ன சொன்னாலும் அங்கே கேட்க மாட்டார்கள்.

இந்த உணர்வினுடைய வேலை, எதிர் நிலைகளில் வேலை செய்துகொண்டேதான் இருக்கும். ஆக எந்தெந்த உணர்வுகள் நமக்குள் முன்னனியிலே நிற்கிறதோ அது வேலை செய்துகொண்டே இருக்கும். 

இதை மாற்றுவதற்குத்தான் உங்களுக்கு இந்த ஆத்ம சுத்திஎன்ற ஆயுதத்தை வைத்து, வாழ்க்கையில் எப்பொழுது தீமை வருகிறதோ அப்பொழுது, அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்த்து அதை நிவர்த்தித்துப் பழக வேண்டும்.

9. கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்த தீமையை நீக்கும் உபதேசம்
புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையில்,  ஒவ்வொரு உடலையும் காத்துக் கொள்ளும் உணர்வின் தன்மை நாம் எடுத்துக் கொண்டு,  மனிதனுக்குள் வளர்ச்சியின் தன்மை அடைந்ததைக் குறிப்பிடுவதற்குத்தான்,  அர்ச்சுனன் சகலகலா வல்லவன்,  சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டவன், வல்லமை பெற்றவன் என்று ஞானியர்கள் உணர்த்தினார்கள்.

கண்ணன், கீதா உபதேசம் செய்வதாகத் தத்துவங்களைச் சொல்கின்றனர். அன்று ஞானியர்கள் உணர்த்திய உண்மைகளைப் பார்ப்போம்.

கண்ணனின் நிலைகளுக்கு வரப்படும் பொழுது,  தன் சகோதரர்கள் எதிர் நிலையில் இருந்து போர் செய்கின்றார்கள்.   சகோதரப் பாசமான உணர்வுகள் அர்ச்சுனனுக்குள் இருந்ததினால்,  சகோதரர்களைப் பார்த்ததும், கொல்ல மனம் வரவில்லை. 

அவர்களை விட்டுவிட்டால் அவர்கள் உன்னை அழித்து விடுவார்கள்,  ஆகையால், நீ உன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று கண்ணன், அர்ச்சுனனுக்கு உபதேசித்தாகச் சொல்வார்கள்.

அதன் விளக்கம், ஒருவன் தவறு செய்கிறான் என்றால்,  ந்தத் தவறான நிலைகளை நாம் கூர்ந்து கவனித்தால், அந்தத் தவறான உணர்வுகள் நமக்குள் இயக்குகின்றது. 

வேறு ஒருவன் வேதனைப்படுகின்றான் என்றால், அந்த வேதனையான உணர்வை, நம் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுது, அந்த உணர்வுகள் நமக்குள் மாறி, நமது நல்ல குணங்களைச் செயலற்றதாக ஆக்கிவிடும்.

ஆகையால், நீ சகோதரன் என்று பார்த்தாலும், அந்த இரக்க உணர்வால் நீ இதைச் செயலாக்கவில்லை என்றால், அது உன்னை அழித்துவிடும்.  நீ கற்று உணர்ந்த வல்லமை எங்கே செல்கின்றது? என்று கண்ணன், அர்ச்சுனனுக்கு உபதேசித்ததாக,  "கீதையின் தத்துவத்தைச் சொல்கின்றனர். கண்ணன் சொன்னதின் நிலைகள்,  தீய வினைகள் அனைத்தும், பாசத்தால் வரக்கூடியது தான். 

எதிரியுடன் இருந்து நின்று, அவர்கள் போர் செய்யும் பொழுது, தவறான உணர்வுகளில் சிக்கித் தவிக்கும் நிலைகளில் இருந்து, அவர்களை மீட்க வேண்டும். அதை எவ்வாறு மீட்க வேண்டும்? என்ற நிலையைக் கண்ணன் உபதேசித்ததாகவும், கீதையிலே எழுதுகின்றனர். 

ஒருவன் செய்யும் தவறான உணர்வை, உன் உடலுக்குள் சேர்க்கா வண்ணம், அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.  அவன் செய்யும் தவறான உணர்வை எண்ணாதபடி,  அவனுக்குள் உன் எண்ணத்தைச் செலுத்த வேண்டும். 

அவன் அறியாத இருள்களிலிருந்து, மீள வேண்டும். தன் சகோதரன் என்று உணர்ந்தாலும், தீய விளைவுகளிலிருந்து, அவர்கள் தீயவர்கள் என்று உணர வேண்டும். 

இதை உணர்த்தவே,  அங்கு அம்பாக எய்யச் சொன்னது. அதாவது, இந்த எண்ணத்தைக் கொண்டு, இவ்வுணர்வுகளின் நிலைகளை (மகரிஷிகளின் அருள் உணர்வுகளை), அவர்களுக்குப் பாயச் செய்வது.

அவர்கள் செய்யும் தவறான உணர்வுகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டால், நமது நல்ல குணங்களை, இங்கு அழித்துவிடுகின்றது. எதிரிகளிடம் இருக்கும் உண்மையின் நிலைகளை, தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்,  என்று, உணர்வின் இயக்க நிலைகளைஅன்று ஞானியர்கள், கண்ணன் சொன்னதாக உணர்த்தினார்கள்.
10. இராமன், வாலியை மறைந்திருந்து தாக்கினான் - விளக்கம்
எண்ணத்தின் வலிமையான நிலைகளைக் காட்டுவதற்கு, இராமாயணத்தில் வாலியைக்காட்டுகின்றனர். வாலி வலிமை பெற்றவன். அவனிடம் யார்  நேரிடையாகப்போர் செய்தாலும், அவர்களிடமிருந்து, பாதி பலத்தை வாலி எடுத்துக் கொள்வான் என்று, காவியத்தில் உணர்த்தியுள்ளார்கள்.

உதாரணமாக, ஒரு மனிதன் கோபத்துடனோ அல்லது வேகத்துடனோ வேதனைப்படும் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது, அவர்களை நேரிடையாகப் பார்த்து, அவர்கள் சொல்வதைக் கேட்டு அறிந்தால், அந்த உணர்வுகள் நமது நல்ல உணர்வுக்குள் இணைந்து, வேதனையான உணர்வுகள், நமக்குள் ஆட்சி புரியத் தொடங்கிவிடும். 

நம் நல்ல குணத்தைச் செயலாக்க முடியாது.பாதி நல்ல குணம் வலு இழக்கப்படுகின்றது. வாலி என்ற நஞ்சான செயல்களை, நாம் பார்க்கப்படும் பொழுது, அந்த உணர்வுகள் நம்மை வீழ்த்திவிடும்.

மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று, இன்று ஒளியின் சரீரமாக விண்ணிலே சுழன்று கொண்டு இருக்கும் துருவ நட்சத்திரம், சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் உணர்வலைகளை, நம் எண்ணத்ததால் அதைக் கவர்ந்து, நுகர்ந்து அந்த உணர்வின் தன்மைகளை, நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்ற உணர்வை, உடலுக்குள் செலுத்த வேண்டும்.

பிறகு, மகரிஷிகளின் அருள் சக்தி வேதனைப்பட்டவர்கள் பெறவேண்டும், அவர்கள் உடல் முழுவதும் படரவேண்டும், அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்  என்று, நாம் மறைமுகமாக,  நம் எண்ணத்தின் வலுவின் தன்மை கொண்டு, அலைகளைப் பரப்பவேண்டும்.

இதைத்தான் சீதாராமன்,   வாலியை நேரிடையாகப் பார்க்காதபடி, அதைக் காட்டிலும்,  சக்தி வாய்ந்த கணையை, மறைந்திருந்து ஏவினான், வாலியின் செயலைத் தடுத்தான்,  என்று இராமாயணத்தில் உணர்த்தினார்கள்.  

11. சீதாராமன் விஷ்ணுதனுசை எடுத்து பரசுராமனைத் தோற்கடித்தான்
பரசுராமனுக்கும், சீதாரமனுக்கும் போர் நடந்து கொண்டே இருக்கும் என இராமாயணக் காவியம் கூறுகின்றது. ஏனென்றால், “சிவ தனுசுஎனும் பொழுதுஉடல் என்ற நிலைகளில் உருவான, உணர்வின் தன்மை கொண்டு, இந்த உடலில், வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து காக்கவே உடலின் உணர்வுகள் வருகின்றது,

ஆனால், “விஷ்ணுதனுசுஎனும் பொழுது, தீமைகளை அகற்றி, ஒளி என்ற உணர்வைக் கொண்டு வருகின்றது.  நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகருகின்ற பொழுது, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள், நமக்குள் "விஷ்ணு தனுசு" ஆகின்றது.

அதாவது, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமது உடலில் இருக்கும் உணர்வுகளை ஊடுருவுகின்ற பொழுதுதான், விஷ்ணு தனுசிற்கும், சிவ தனுசிற்கும் போர் முறை வருகின்றது. 

ஏனென்றால், சீதா என்றால் சுவை கொண்டது, மகிழ்ச்சி கொண்டது, மகிழ்ந்து வாழக்கூடியது, மகிழ்வான செயல்களைச் செய்வது. மகிழ்ச்சி என்ற உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது, மகிழ்ச்சியூட்டும் சக்தி பெற்றது.

நமக்குள் சமப்படுத்தும் உணர்வுகள் இருப்பினும், எந்தெந்த குணங்களை நமக்குள் பெற்றோமோ, அதைத்தான் நமக்குள் சமப்படுத்திக் கொண்டிருக்கும்.

உதாரணமாக,  நாம் கோபப்படுகின்றோம் என்றால்,  அந்தக்  கோபமான நிலைகளை எடுத்துத்தான், நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இந்த சிவ தனுசுஉதவும்.

நாம் ஒருவர் மேல் வெறுப்பு கொண்டிருப்போமானால், “இரு உன்னை நான் பார்க்கிறேன்எனும் எண்ணம்தான், நமக்கு வரும். இது, பரசுராமன் கையிலுள்ள சமப்படுத்தும் உணர்வு பெற்ற, நம் உடலில் வளர்த்துக் கொண்ட சிவ தனுசு”.

இப்படி நாம் கோபப்படும் பொழுதோ, சஞ்சலப்படும் பொழுதோ பிறருடைய நிலைகளால், நம்மில் உருவான தனுசை எடுத்துதான், பயன்படுத்துகின்றோம். நாம், “தேடிச் சேர்த்த செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும்என்று சிவ தனுசைத்தான் பயன்படுத்துகின்றோம்.

உதாரணமாக, நம் குழந்தை மேல் எந்த அளவு பாசம் கொண்டோமோ, அதற்கொப்பதான், அவனைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலை வருகின்றது.

ஆனால், அவன் செய்யும் தவறினை நாம் காண்பதில்லை. அவன் செய்யும் குற்றங்களைப் புரிந்து கொள்வதில்லை. என் பிள்ளை என்ற நிலையில், இந்த உடலில் எதை வளர்த்துக் கொண்டோமோ, அதனின் உணர்வைப் பாய்ச்சித்தான், அவனைக் காக்கும் நிலைக்கு வருகின்றோம்.

இதில், நாம் வேதனையின் உணர்வை நுகர்கின்ற பொழுது நமது உயிர் விஷ்ணுவரம் கொடுத்துவிடுகின்றார். பின், நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் வருகின்றது. நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது, உயிர், நுகர்ந்த உணர்வின் தன்மையை அணுக்கருவாக உருவாக்குகின்றது.

அதே சமயத்தில், உணர்வின் கரு நமது இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது, இந்திரியமாக மாறுகின்றது. இதற்குத்தான்இந்திரலோகம் என்று காரணப்பெயர் வைத்தார்கள், ஞானிகள்.

இரத்த நாளங்களில் சேமிக்கப்பட்ட அணுக்கரு, நமது உடலில் சுழன்று கொண்டேயிருக்கும். குறிப்பிட்ட காலப் பருவம் வரும் பொழுதுதான், அணுக்கரு வெடிக்கின்றது. அப்படி வெடித்தபின், அதன் உணர்வின் தன்மை எதுவோ, அதற்கொப்ப அணுத்தன்மை வெளிப்படுகின்றது.

ஆனால்,  இப்படி உருவான அணு, இவ்வுடலில் சேர்ந்து இயக்கத் தொடங்கி விடுகின்றது. அப்பொழுது, உடலில் உருவான இவ்வணு தன் இனத்தை பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால், அந்த வித்து, எந்த இனச் செடியின் வித்தோ,  அதே இனச் செடியைத்தான் உருவாக்குகின்றது. அதே இன வித்தைத்தான் உருவாக்குகின்றது.

ஆகையினால், ஒரு உணர்வின் தன்மையினை உடலாக்கப்படும் பொழுது என்ன செய்கின்றது? உடலாகும் பொழுது சிவமாகின்றது. உணர்வின் தன்மை சொல்லாக வரப்படும் பொழுது, சிவ தனுசு என்ற நிலை வருகின்றது.

ஒருவர் தவறு செய்கின்றார் என்ற உணர்வை, நாம் நுகர்ந்தோம் என்றால், அவருடைய உடலில் விளைந்த உணர்வுகள், நமக்குள் வரப்படும் பொழுதுஇதற்கும், நமது உடலிலுள்ள நல்ல குணங்களுக்கும், போர் என்ற நிலை நமது உடலில் நடைபெறுகின்றது.

அது சமயம், நாம் கோபத்தின் தன்மை கொண்டு, தனுசைப் பாய்ச்சினோம் என்றால், அதனின் உணர்வின் கூட்டமைப்பு, தன்னில் ஒரு படையே உருவாக்குகின்றது.

சிறுகச் சிறுக கோபத்தின் உணர்வுகள் வளரப்படும் பொழுது, கோபம் அதிகமாகி, கோபக்காரர் என்ன செய்கிறார் என்றால், தன்னைக் காத்துக் கொள்வதற்கு இரு உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்என்ற கோப உணர்வு கொண்டு, பிறிதொருவரைத் தாக்கிக் கொல்கின்றார்.  

கோபம் உள்ளவர், சிவ தனுசை தனக்குள் எடுத்துக் கொண்டு, கோப உணர்வுகளைத் தமக்குள் எடுத்துச் சமப்படுத்துகின்றார்.

இதே போன்று, வேதனை என்ற நிலை வரும் பொழுது, வேதனை உணர்வுகளைத் தனக்குள் எடுத்துச் சமப்படுத்துகின்றார்.  பரசுராம்”, நாம் சுவாசித்த உணர்வுகள் எந்த குணமோ, அதைச் சமப்படுத்தும் எண்ணங்கள்தான் வருகின்றது.

உதாரணமாக, ஒவ்வொரு உயிரினமும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விழைகின்றது. இவை எல்லாம் சிவ தனுசு. இதைப் போன்று, மனிதரிடத்தில் எனும் பொழுது, மனிதர், தாம் எதை முன்னிலையில் வைத்துள்ளாரோ, அது சிவ தனுசு. அதாவது, உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலை வருவதுதான், சிவ தனுசு.

உயிர் என்ற ஒளியின் தன்மையை, என்றும் ஒளியாக வைத்து, இருள் சூழாத நிலையில் இருப்பதுதான் "விஷ்ணு தனுசு".

மனித வாழ்க்கையில் கணவனும், மனைவியும், வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து, நளாயினியைப் போன்று கணவனும் மனைவியும், ஒருவரை ஒருவர் மதித்து நடந்து, சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி, இரு உயிரும் ஒன்றி, இரு உணர்வும் ஒன்றி, உணர்வினை ஒளியாக மாற்றிச் சிருஷ்டித்துக் கொண்ட நிலை ரிஷி, அதுதான் துருவ நட்சத்திரம்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் சத்தை, சூரியனின் காந்த புலனறிவு கவர்ந்து, புவிக்கு வருகின்றது. ஆகவே, இதனை, “ரிஷியின் மகன் நாரதன்என்றும் நாராயணனின் அபிமான புத்திரன்என்றும் காவியங்களில் குறிப்பிட்டனர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வினை நாம் நுகர்ந்தோம் என்றால், நாரதன் என்னும் உணர்வுகள்”, உயிரான விஷ்ணுவிடமும் செல்கின்றது. மற்றும் உடல் பாகங்கள் அனைத்திற்கும் சென்று, பகைமை உணர்ச்சிகளை மாற்றுவதற்கான நிலை எதுவோ, அதைச் சொல்லி, பகைமையை தணிக்கச் செய்கின்றது. உண்மையை விளங்கச் செய்கின்றது,  இந்த நாரதர் என்னும் உணர்வுகள்.

எனவே, நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைத் திரும்பத்  திரும்ப, நுகர்ந்தால் அதன் உணர்வுகள் நம் உடலுக்குள் வந்து, பகைமை உணர்ச்சிகள் நமக்குள் எப்படி இயக்குகின்றதென்ற நிலையை நமக்குள் தெளிவாக்கி, நம்மை வழிப்படுத்தும்.

ஆகவேதான், ரிஷியின் மகன் நாரதன் என்றும், நாராயணனின் அபிமானப்  புத்திரன் என்றும், நாரதர் நன்மைகள்தான் செய்வார்  என்றும், காவியங்களில் காண்பித்தார்கள் ஞானிகள்.

நமது உயிரால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் விஷ்ணு தனுசு”, உயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கின்றது. ஒளியின் உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால், “சீதாமகிழ்ச்சியான உணர்வை நமக்குள் ஊட்டும். ஒளி என்ற உணர்வை ஊட்டும் நாரதன்,  தீமைகளை நீக்கி, சமப்படுத்தும் நிலைகளை உருவாக்கி, உணர்வின் நிலையைத் தெளிவாக்குவார், என்பதுதான் பொருள். 

ஆகவே, அரும்பெரும் ஞானிகள் காண்பித்து, உணர்த்திய உண்மைகளை தம்முள் உணர்ந்து, அதன்வழி இயங்கி, ஒளி என்ற உணர்வைக் கொண்டு வரும், விஷ்ணு தனுசினைக் கைக்கொண்டு, தம்முள் பகைமை உணர்வுகளை அகற்றி, மகிழ்ச்சி தரும் உணர்வை தம்முள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், உடல் நலம், உடல் பலம், மன நலம், மன பலம், மன வளம், செல்வம், செல்வாக்கு பெற்று, பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருள் ஆசிகள்.

12. குருதேவர் ஞானகுருவிற்குக் காண்பித்த உணர்வின் உண்மைகள்
குருநாதர் எம்மைத் தேடி வந்து கொடுத்தார். ஏன் கொடுத்தார்? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், எல்லாவற்றையும் தாங்கும் சக்தி பெறவேண்டும் என்று கொடுத்தார். 

ஆகவே, எதையும் தாங்கக் கூடிய சக்தியும், நன்மை செய்வதற்கு, ஆற்றலைப் பயன்படுத்த வேண்டிய நேரத்திற்குப் பயன்படுத்த வேண்டும். அதைத்தான் நாம் இப்பொழுது செய்யவேண்டும்.

நமது உடல் நமக்குச் சொந்தமாகின்றதா? நாம் தேடிய செல்வங்கள் தான், நமக்குச் சொந்தமாகின்றதா? நாம் நல்ல அழகான துணிகளை உடுத்துகின்றோம். சுத்தமாக இருக்க வேண்டும் என்று, முகப் பவுடர், அது, இது என்று பூசுகின்றோம்.

ஆனால்உடலில் ஒரு நோயிருந்து, அதனால் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஒருவர் உங்களிடம் வந்து, “பவுடர் பூசிக் கொள்ளுங்கள்என்று சொன்னால், “என்ன, கிண்டலா செய்கின்றீர்கள், அலங்காரம் செய்து கொள்ளும் நிலையிலா நான் இருக்கிறேன்என்று கேட்பீர்கள்.

நீங்கள் சந்தோஷமாக இருந்து பாருங்கள். உங்களுடைய முகத்தில் அழகு கூடும். அதே சமயத்தில், நல்ல ஆடம்பர உடையினை உடுத்தி, பவுடர் பூசி அலங்காரப்படுத்தி இருந்த போதிலும், மனது சரியில்லை, வேதனை என்ற நிலையானால், முகம் சுருங்கிவிடும்.

ஆகையால், பார்ப்பவர்கள் என்ன கேட்பார்கள், “என்னங்க, ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்? ஏதேனும் கவலையா?” என்று கேட்பார்கள். ஆகவே, நம்மை எது செயல்படுத்துகிறது?

அருள் உணர்வை நமக்குள் பெருக்கி, இருளை அகற்றி, மகிழ்ச்சியூட்டும் உணர்வினை நம் உடலுக்குள் செலுத்தி, நமது அங்கங்களைப் பொலிவுறச் செய்யவேண்டும். சாதாரணமாக இருக்கும் பொழுது, எம்மைப் பாருங்கள். எமது முகத்தில் வித்தியாசமாக இருக்கும். அருளைப் பார்க்கும் பொழுது, வித்தியாசமான தோற்றங்கள் வரும்.

இது போன்று, நல் உணர்ச்சிகளால் முகம் விரிவடைவதும், மகிழ்ச்சியாவதும் போன்ற நிலைகள் பெறுகின்றது. உதாரணத்திற்கு, நீங்கள் ஞானத்தை எடுத்துப் பேசிப் பாருங்கள். அந்நேரத்தில், உங்களிடத்தில் மகிழ்ச்சியின் உணர்வு இருக்கும்.

அதே சமயம், ஒருவர் உங்களைத் தேடி வந்து, தம்முடைய கஷ்டத்தையெல்லாம் கூறுவார். நீங்கள் அது சமயம், ஞானத்தின் நிலை கொண்டு அவருக்கு அறிவுரை கூறுவீர்கள்.

ஆனால்இரண்டாவது தரம் தனது கஷ்டத்தைச் சொன்னால், “என்ன…., இது…, இவ்வளவு தூரம் கூறியும் தனது கஷ்டத்தைத் தானே கூறிக் கொண்டிருக்கின்றார்என்று அப்பொழுதே உங்களுடைய முகம் மாறும்.

ஏனென்றால், அவர் சொன்ன வேதனையின் உணர்வு வலுப் பெறுகின்றது. உங்களுடைய ஞானம் இங்கே அடிபடுகின்றது. உணர்வை மாற்ற முடியவில்லை.

ஆனால்இந்நிலையை மாற்றி உங்களுக்குள் அருள் உணர்வைப் பெறவேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி, அவர் பெறவேண்டும், அவருக்கு, நல்ல காலம் வரவேண்டும், சிந்திக்கும் தன்மை, அவர் பெறவேண்டும், பொருளறிந்து செயல்படும் திறன், அவர் பெறவேண்டும், என்று எண்ணவேண்டும்.

அது சமயம்உங்களுடைய உயிர் என்ன செய்யும்? அருள் உணர்வை எடுத்துஉங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் பங்கிட்டு, தெளிந்த ஞானத்தை ஊட்டும் நிலையும், வழியறிந்து செயல்படும் பக்குவத்தையும் உங்களுக்குள் பெறச் செய்கின்றது.

நமக்கு ஆகாதவர் யாராவது இருந்தால், “இவனால் தான் எனக்குத் தலைவலிஎன்பார்கள். அவர்கள் வந்தாலே, “ஆகா வந்துவிட்டான், தலைவலியும் வந்துவிட்டதுஎன்று கூறுவார்கள். இன்று நல்ல மன நிலையில் இருந்தேன், இவனைப் பார்த்தேன், எல்லாக் காரியமும் கெட்டு விட்டதுஎன்று கூறுவார்கள். இவை எல்லாம் எதைக் காண்பிக்கின்றது? மனிதரின் வாழ்க்கையில், இது போன்ற நிலைகள் வருகின்றன.

தியான வழியில் உள்ளவர்கள், தலைவலியால் வருத்தப்படுபவர்களுக்கு மகரிஷிகளை எண்ணி, அவர் குணமடைய வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். அவருக்குத் தலைவலி நீங்கும். அடுத்து ஒரு முறை, தலைவலி என்று சொல்ல வரும் பொழுது, உங்களை நினைத்து வந்தேன், தலைவலி போய்விட்டது என்று கூறுவார்கள். இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஏனென்றால், உணர்வின் எண்ணம் கொண்டு சுவாசித்தபின், நோய்களை நீக்கும் சக்தி வருகின்றது. ஆனால், ஒருவர் வந்தாலே, தனக்குத் தலைவலி வருவதாக எண்ணுபவரின் உடல், பதட்டமடைகின்றது. தலை சுற்றுகின்றது, சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்கின்றது, இது எதனால் வருகின்றது?

இது போன்று, ஒருவரை பார்த்தாலே தனக்குத் தலை சுற்றுகின்றது, தலை வலிக்கின்றது எனும் பொழுது,  “ஈஸ்வரா..என்று உயிரை எண்ணி, “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெறவேண்டும்அவர் நன்மை செயும் நிலை பெற வேண்டும் என்று எண்ணினால்அவருடைய உணர்வுகள் நமக்குள் வருவதில்லை. 

இவ்வாறு நமது குருநாதர், எமக்கு அனுபவ ரீதியாக, பல நிலைகளை உணர்த்தினார்.  நுகர்ந்த உணர்வை, உயிர் இயக்குகின்றது. உயிர் ஈசனாக இருக்கின்றது. 

மனிதர், தாம் உயர்ந்த ஞானத்தின் தன்மை பெற்று, பிறவி இல்லா நிலை பெறுவதற்குதான்இத்தனை உபாயங்களையும் கொடுப்பது

மனிதர்கள், விஞ்ஞான அறிவு கொண்டு ஒருவருக்குக் கண் இல்லையென்றால், மாற்றுக் கண்ணைப் பொருத்தி, கண் பார்வை கொடுக்கின்றனர். செவித் தன்மைக்கு, இப்படி ஒரு மாற்று ஏற்பாடு இல்லை என்றாலும், அவர்களுக்கு உணர்வின் உணர்ச்சிகளை, (சைகை மூலம்) தெரியும்படி கொண்டு வருகின்றார்கள். இருதயம் பழுதாகி விட்டால், பழுதான இருதயத்தை அகற்றிவிட்டு, செயற்கை இருதயம் பொருத்துகின்றனர்.

நோயாளியின் உடலிலும், மற்றவர் உடலிலும் உள்ள சில செல்களைக் கழித்து, பழுதான உறுப்பு போன்றே மோல்டு செய்யப்பட்டு, அந்த உணர்விற்குள் சேர்க்கப்ப்பட்டு, அதே போன்ற புது உறுப்புகளை உருவாக்குகின்றனர்.

இந்த உடலுக்கும், மற்ற உடலுக்கும் என்ன இருக்கிறதென்று ஆய்ந்து, உணர்வின் செல்களை உருவாக்கி, உறுப்புகளை எடுத்து இணைக்கின்றனர்.

இப்படி இணைத்தபின், இரத்தத்தில் வருவதைச் சமப்படுத்த வேண்டும். எதிர் நிலையானால், கழன்று கொள்ளுகின்றது. மாற்று இருதயம் பொருத்தினாலும், அல்லது மாற்றுச் சிறுநீரகம் பொருத்தினாலும், இதே தான். இரத்தம் சீராக இருக்க வேண்டும்.

இரத்தத்தை வடிகட்டிச் சுத்தப்படுத்துவதற்காக, சில மருந்துகளை டாக்டர்கள் கொடுப்பார்கள். கொடுக்கப்பட்ட மருந்துகளைச் சாப்பிட்டால் தான், இரத்தத்திற்கும், பொருத்தப்பட்ட உறுப்பிற்கும் பொருந்தி வரும். ஒரு நாளைக்கு மருந்து சாப்பிடவில்லை என்றால், பொருத்தப்பட்ட உறுப்பின் இயக்கம் தோற்றுவிடும்.

ஆகையால், இரண்டையும் சமப்படுத்திச் சீராக இருந்தாலும், ஒருவர் காய்ச்சலுடன் வருகின்றார். அவருடைய காய்ச்சலின் வீரியம் கண்டு, அதன் உணர்வை நுகர்ந்துவிட்டால், உடலில் கிருமிகளாகின்றது. அன்றைக்கு இவர்களுக்கு ஆபத்து. ஆபத்து என்று வந்துவிட்டால், அதற்கென்று மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.

அது சமயம், சாதாரண டாக்டரிடம் சென்றால், பொருத்தப்பட்ட உறுப்பு கழன்றுவிடும். இப்படியெல்லாம், விஞ்ஞானிகள், அதற்கென்று பருவத்தைச் பார்த்து செயல்படுத்துகின்றனர்.

ஆனால்இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தும், நாம் எத்தனை நாள் வாழுகின்றோம்சிறிது நாள் தான் வாழுகின்றோம். 

நமக்கு இப்படி ஆகிவிட்டதே, மருந்தையும் சுவையில்லா உணவையும்தான், சாப்பிட்டு வாழ்கின்றோம்என்ற வேதனை அதிகமாகின்றது.

மக்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கின்றார்கள், நம் காலம் இப்படியாகி விட்டதேஎன்று, நாம் நல்லவர்களாக இருந்தாலும், வேதனையின் உணர்வைத்தான் அதிகமாக்க முடிகின்றதே தவிர, மாற முடிகின்றதா?

      ஆகவேநாம் நமது உடலில் இருக்கும் காலத்தில், எதைச் சேர்க்க வேண்டும்? உடல் நலக் குறைவாக இருந்தாலும், அருள் உணர்வைப் பெறவேண்டும், உணர்வின் தன்மை ஒளியின் சரீரம் பெறவேண்டும், என்று நம் உணர்வுகளை மாற்றினால், நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம். இவையெல்லாம்எமக்குக் குருநாதர் காண்பித்த உணர்வின் உண்மைகள். 

13. தீமைகளை நீக்கும் அருள்சக்திகளை, குருவழியில் நாம் பதிவாக்கி, தீமையை நீக்குதல்
குருநாதர் யாம் தீமைகளிலிருந்து தப்புவதற்கு, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை, எமக்குள் பெறச் செய்ததைப் போன்று, உங்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின்  உணர்வுகளை, யாம் பதிவு செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் அருளாற்றலின் உணர்வுகளை, நீங்கள், உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால், உங்களிடத்தில் அறியாது சேர்ந்த தீயவினைகள் நீங்கும், புதிதாக, தீயவினைகள் உங்களிடத்தில் வராது தடுத்து, உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம்.

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றி விட்டபின், அதற்கு நாள்தோறும் நீர் ஊற்றி வந்தால்தான், வளரும். நான் வித்தை ஊன்றிவிட்டேன், என்று சும்மா இருந்தால் வளருமா?  அருளுணர்வுகளை யாம் உங்களிடத்தில் பதித்துவிட்டோம் என்றால், அதன் உணர்வுகளை நாளும் நீங்கள் வளர்த்து வர வேண்டும். 

உயிரின் வாழ்க்கையில் எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று, சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப, மனித ரூபத்தைக் கொடுத்தது நமது உயிர்.

அகஸ்தியர் தம்முள் பல விஷத்தன்மைகளை அடக்கி, மனித உடலின் உணர்வின் தன்மைகளை மாற்றி, ஒளியின் உடலாகத் தாம் பெற்றார்.

அவரிடமிருந்து வெளிப்படும் அருளுணர்வினை, நமது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவிலும் பெறக்கூடிய தகுதி பெற்றால், அகஸ்தியரைப் போன்று, நாமும் நமது உடலில் உள்ள அணுக்களைச் சிறுகச் சிறுக, மாற்றியமைக்க முடியும்.

நம்மிடம் உள்ள முந்தைய தீயவினைகளைத் தணித்து, புது தீயவினைகள் நமக்குள் சேராமல் தடுத்து, நம்முள் நல் உணர்வினை வலுவாக்க முடியும்.

இயற்கையின் உண்மையின் உணர்வை, நாம் நுகர்ந்து கொண்டபின், நமது உணர்வுகள் என்ன செய்கின்றது? ஒரு உணர்வை நமது உடலில் வளர்த்துக் கொண்டபின், நம்மை நமது நண்பர்கள் பார்க்கும் பொழுது, நமக்கு வெறுப்போ, அல்லது பாசமோ எப்படி நமக்குள் வருகின்றது? 

இதெல்லாம் நமது உடலில் உள்ள  உணர்வுக்கொப்பத்தான் வரும்  என்பதனை, நீங்கள் ஒவ்வொருவரும் அனுபவரீதியாக உணர வேண்டும்.  தெரிந்து, தெளிந்து, வாழ்ந்திடும் வாழ்க்கையாக, உங்கள் வாழ்க்கையை அமைத்திடல் வேண்டும்.

எல்லோரும் எல்லோரிடத்திலும் பழகியிருக்கின்றோம். நமக்கு கோபம் எப்படி வருகின்றது? வெறுப்பு எப்படி வருகின்றது? என்பதை அறிய வேண்டும்.

நம்மை வெறுப்படையச் செய்வது எது? வெறுப்பான பின்னால், குடும்பத்தில் என்னென்ன வேதனையாகின்றது? வெறுப்பை நீக்குவது எப்படி? என்பது போன்றவைகளை, நாம் அனுபவப்பூர்வமாக கொண்டு வர வேண்டும்.

ஏனென்றால், இத்தனை நிலைகளையும் யாம் கஷ்டப்பட்டுத்தான் தெரிந்து கொண்டோம். கஷ்டத்திலிருந்து உங்களைக் காப்பதற்குத்தான், உயர்ந்த சக்திகளை உங்களிடம் சொல்லி, பதிய வைக்கின்றோம்.

தீமைகளை நீக்க வேண்டும் என்ற சக்தியை, நீங்கள் பெறுவதற்காகத் தான்,  யாம் உபாயங்களைக் கூறுகின்றோம்.  யாம் அப்படிச் செய்து விடுவோம், இப்படி செய்து விடுவோம் என்று சொல்லவில்லை.

உதாரணமாக, பயந்த சுபாவம் உள்ள ஒருவர் சந்தர்ப்பவசத்தால், கண்கூடாக ஒரு விபத்தைக் காண நேரிடுகிறதென்றால், விபத்தைக் கண்கூடாக பார்த்ததின் உணர்வு, அவரிடத்தில் ஜீவ அணுவாக விளைந்துவிடுகின்றது.

அடுத்த முறை, அவர் ஏதேனும் ஒரு விபத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால்,  அஞ்சி ஓடமாட்டார். அது எங்கே என்று, தேடிப் பிடித்துப் போய்ப் பார்ப்பார்.  ஆக, பயத்தின் உணர்வை ஒரு முறை நம்மில் பதிவு செய்தாலும், அடுத்த முறை, அங்கே செல்லாமல் இருக்கின்றோமோ என்றால், இல்லை.

ஏனெனில்,  ஏற்கனவே விளைந்த ஜீவ அணுவிற்கு, உணவு தேவை. நாம் சும்மா இருந்தாலும், அது நம்மை அழைத்துச் சென்றுவிடும். 

நாம் எத்தகைய நிலைகளையும், வேடிக்கையாகப் பார்த்தாலும் சரி, பரிவுடன் பார்த்தாலும் சரி, அது நமக்குள் ஜீவ அணுவாக விளைந்து விடுகின்றது.

உதாரணமாக, குழந்தைகளாக இருப்பவர்கள் ஏதாவதொன்றைக் கண்டால், அடுத்த சில மணி நேரத்திற்குள், அந்த விஷயம் அதனின் நினைவில் இருக்காது. ஏதாவதொன்றைக் கண்டு பயந்துவிட்டால், பின் அதனின் நினைவு வரும் பொழுது, அந்த குழந்தைக்கு மனதில் பயம் உருவாகும். திரும்பவும் அந்த இடத்திற்குச் செல்லாது.

ஆனால் பெரியவர்களாக இருப்பவர்களுக்குப் பயம் இருந்தாலும், மன வலிமை கொண்டு என்ன, ஏதுஎன்று எட்டிப் பார்க்கச் சொல்லும்.

குழந்தைப் பருவத்தில், அணுவின் செல்கள் எளிமையாக இருப்பதனால், அது தனக்குள் கண்டபின் உடனே மறைந்து விடுகின்றது. எண்ண நிலைகளை, மற்ற நிலைகளுக்கு அழைத்துச் செல்கின்றது.

அதே சமயத்தில், குழந்தைகளிடத்தில் ஒரு உயர்ந்த கருத்தைச் சொன்னால், அது அதனிடத்தில் ஆழப் பதிந்துவிடுகின்றது. மீண்டும், அதே கருத்தினைச் சொல்லும் நிலை வருகின்றது.

வேதனை போன்ற மற்ற உணர்வுகளை, பெரியவர்களான நாம் வளர்த்துக் கொள்ளும் பொழுது, பிறர் சொல்லும் நல்ல உயர்ந்த குணங்கள், நம்மிடத்தில் பதிவதில்லை,  தீய வேதனையான குணத்தின் உணர்வே, நமக்குள் நினைவில் வரும்.

குழந்தைகளிடத்தில் உயர்ந்த கருத்தினைச் சொன்னால் அது அவர்களிடத்தில் எளிதில் பதிவாகும். அதே சமயத்தில், தீமையான உணர்வுகள் அவர்களிடத்தில் பதிவாகி விட்டால், தீமையின் உணர்வே அதிகமாக வரும். அதுவே முன்னனியில் நிற்கும். குழந்தைகள் நல்லதையும் பதிவு செய்து கொள்ளும். தீயதையும் பதிவு செய்து கொள்ளும். வளரும் பருவம் கொண்ட சரீரங்களில்இந்த நிலை.

மனித உணர்வுகளின் தன்மையை அறிந்து, மகரிஷிகள் காண்பித்த அருள் வழியை நாம் ஒரு முறை பதிவு செய்து கொண்டு, அடுத்தடுத்து,  அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டுமென்று இந்த உணர்வைக் கட்டாயப்படுத்திச் செலுத்துவோம் என்றால், அந்தச் சக்தி நமக்குள் வரும். 

நமக்கு நோய் என்று ஒன்று வந்துவிட்டால், அதற்கு, மிகவும் கசப்பான மருந்தைக் கட்டாயப்படுத்தி உள்ளே செலுத்தும் பொழுதுதான், அந்த நோயே, நம்மை விட்டு அகன்று ஓடுகின்றது.

ஞானிகளின் உயர்ந்த கருத்துக்களை, தத்துவங்களைக் கேட்க நேரும் பொழுது, நமது கவலைகள், வேதனைகள் இவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஆர்வமுடன் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் அதனின் ஞானம் நம்மிடத்தில் பதியும். 

வேதனைகளை மனதில் நிறைத்துக் கொண்டு உள்ளவர்களிடத்தில்நல் உணர்வுகள் எதுவும் பதியாது.

இந்த உடல், என்றும் நம்முடன் வரப் போவதில்லை. ஆனால், இந்த உடலில் இருந்து, விளைய வைத்த உணர்வின் சத்துதான், நம்முடன் என்றும் நிலைத்திருக்கும்.

ஆகவே, நமது வாழ்க்கையில், நாம் அனைவரும் துருவ தியானம் மற்றும் கூட்டு தியானங்களை வலுப்படுத்துவதன் மூலமாக, ஒவ்வொரு நிமிடமும், ஆத்ம சுத்தி செய்யும் ஆற்றலைப் பெருக்கி, அந்த துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளியான சக்திகளை, நமது உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும், சத்தாகச் சேர்ப்போம்.

நாம் அனைவரும், வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறுவோம், செல்வம் செல்வாக்கு பெற்று, தொழில் வளம் பெற்று, உடல் நலம் பெற்று, மன பலம் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றென்றும் இணைந்து, மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.  
இது போன்று, நல் உணர்ச்சிகளால் முகம் விரிவடைவதும், மகிழ்ச்சியாவதும் போன்ற நிலைகள் பெறுகின்றது. உதாரணத்திற்கு, நீங்கள் ஞானத்தை எடுத்துப் பேசிப் பாருங்கள். அந்நேரத்தில், உங்களிடத்தில் மகிழ்ச்சியின் உணர்வு இருக்கும்.

அதே சமயம், ஒருவர் உங்களைத் தேடி வந்து, தம்முடைய கஷ்டத்தையெல்லாம் கூறுவார். நீங்கள் அது சமயம், ஞானத்தின் நிலை கொண்டு அவருக்கு அறிவுரை கூறுவீர்கள்.

ஆனால்இரண்டாவது தரம் தனது கஷ்டத்தைச் சொன்னால், “என்ன…., இது…, இவ்வளவு தூரம் கூறியும் தனது கஷ்டத்தைத் தானே கூறிக் கொண்டிருக்கின்றார்என்று அப்பொழுதே உங்களுடைய முகம் மாறும்.

ஏனென்றால், அவர் சொன்ன வேதனையின் உணர்வு வலுப் பெறுகின்றது. உங்களுடைய ஞானம் இங்கே அடிபடுகின்றது. உணர்வை மாற்ற முடியவில்லை.

ஆனால்இந்நிலையை மாற்றி உங்களுக்குள் அருள் உணர்வைப் பெறவேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி, அவர் பெறவேண்டும், அவருக்கு, நல்ல காலம் வரவேண்டும், சிந்திக்கும் தன்மை, அவர் பெறவேண்டும், பொருளறிந்து செயல்படும் திறன், அவர் பெறவேண்டும், என்று எண்ணவேண்டும்.

அது சமயம்உங்களுடைய உயிர் என்ன செய்யும்? அருள் உணர்வை எடுத்துஉங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் பங்கிட்டு, தெளிந்த ஞானத்தை ஊட்டும் நிலையும், வழியறிந்து செயல்படும் பக்குவத்தையும் உங்களுக்குள் பெறச் செய்கின்றது.

நமக்கு ஆகாதவர் யாராவது இருந்தால், “இவனால் தான் எனக்குத் தலைவலிஎன்பார்கள். அவர்கள் வந்தாலே, “ஆகா வந்துவிட்டான், தலைவலியும் வந்துவிட்டதுஎன்று கூறுவார்கள். இன்று நல்ல மன நிலையில் இருந்தேன், இவனைப் பார்த்தேன், எல்லாக் காரியமும் கெட்டு விட்டதுஎன்று கூறுவார்கள். இவை எல்லாம் எதைக் காண்பிக்கின்றது? மனிதரின் வாழ்க்கையில், இது போன்ற நிலைகள் வருகின்றன.

தியான வழியில் உள்ளவர்கள், தலைவலியால் வருத்தப்படுபவர்களுக்கு மகரிஷிகளை எண்ணி, அவர் குணமடைய வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். அவருக்குத் தலைவலி நீங்கும். அடுத்து ஒரு முறை, தலைவலி என்று சொல்ல வரும் பொழுது, உங்களை நினைத்து வந்தேன், தலைவலி போய்விட்டது என்று கூறுவார்கள். இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஏனென்றால், உணர்வின் எண்ணம் கொண்டு சுவாசித்தபின், நோய்களை நீக்கும் சக்தி வருகின்றது. ஆனால், ஒருவர் வந்தாலே, தனக்குத் தலைவலி வருவதாக எண்ணுபவரின் உடல், பதட்டமடைகின்றது. தலை சுற்றுகின்றது, சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்கின்றது, இது எதனால் வருகின்றது?

இது போன்று, ஒருவரை பார்த்தாலே தனக்குத் தலை சுற்றுகின்றது, தலை வலிக்கின்றது எனும் பொழுது,  “ஈஸ்வரா..என்று உயிரை எண்ணி, “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெறவேண்டும்அவர் நன்மை செயும் நிலை பெற வேண்டும் என்று எண்ணினால்அவருடைய உணர்வுகள் நமக்குள் வருவதில்லை. 

இவ்வாறு நமது குருநாதர், எமக்கு அனுபவ ரீதியாக, பல நிலைகளை உணர்த்தினார்.  நுகர்ந்த உணர்வை, உயிர் இயக்குகின்றது. உயிர் ஈசனாக இருக்கின்றது. 

மனிதர், தாம் உயர்ந்த ஞானத்தின் தன்மை பெற்று, பிறவி இல்லா நிலை பெறுவதற்குதான்இத்தனை உபாயங்களையும் கொடுப்பது

மனிதர்கள், விஞ்ஞான அறிவு கொண்டு ஒருவருக்குக் கண் இல்லையென்றால், மாற்றுக் கண்ணைப் பொருத்தி, கண் பார்வை கொடுக்கின்றனர். செவித் தன்மைக்கு, இப்படி ஒரு மாற்று ஏற்பாடு இல்லை என்றாலும், அவர்களுக்கு உணர்வின் உணர்ச்சிகளை, (சைகை மூலம்) தெரியும்படி கொண்டு வருகின்றார்கள். இருதயம் பழுதாகி விட்டால், பழுதான இருதயத்தை அகற்றிவிட்டு, செயற்கை இருதயம் பொருத்துகின்றனர்.

நோயாளியின் உடலிலும், மற்றவர் உடலிலும் உள்ள சில செல்களைக் கழித்து, பழுதான உறுப்பு போன்றே மோல்டு செய்யப்பட்டு, அந்த உணர்விற்குள் சேர்க்கப்ப்பட்டு, அதே போன்ற புது உறுப்புகளை உருவாக்குகின்றனர்.

இந்த உடலுக்கும், மற்ற உடலுக்கும் என்ன இருக்கிறதென்று ஆய்ந்து, உணர்வின் செல்களை உருவாக்கி, உறுப்புகளை எடுத்து இணைக்கின்றனர்.

இப்படி இணைத்தபின், இரத்தத்தில் வருவதைச் சமப்படுத்த வேண்டும். எதிர் நிலையானால், கழன்று கொள்ளுகின்றது. மாற்று இருதயம் பொருத்தினாலும், அல்லது மாற்றுச் சிறுநீரகம் பொருத்தினாலும், இதே தான். இரத்தம் சீராக இருக்க வேண்டும்.

இரத்தத்தை வடிகட்டிச் சுத்தப்படுத்துவதற்காக, சில மருந்துகளை டாக்டர்கள் கொடுப்பார்கள். கொடுக்கப்பட்ட மருந்துகளைச் சாப்பிட்டால் தான், இரத்தத்திற்கும், பொருத்தப்பட்ட உறுப்பிற்கும் பொருந்தி வரும். ஒரு நாளைக்கு மருந்து சாப்பிடவில்லை என்றால், பொருத்தப்பட்ட உறுப்பின் இயக்கம் தோற்றுவிடும்.

ஆகையால், இரண்டையும் சமப்படுத்திச் சீராக இருந்தாலும், ஒருவர் காய்ச்சலுடன் வருகின்றார். அவருடைய காய்ச்சலின் வீரியம் கண்டு, அதன் உணர்வை நுகர்ந்துவிட்டால், உடலில் கிருமிகளாகின்றது. அன்றைக்கு இவர்களுக்கு ஆபத்து. ஆபத்து என்று வந்துவிட்டால், அதற்கென்று மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.

அது சமயம், சாதாரண டாக்டரிடம் சென்றால், பொருத்தப்பட்ட உறுப்பு கழன்றுவிடும். இப்படியெல்லாம், விஞ்ஞானிகள், அதற்கென்று பருவத்தைச் பார்த்து செயல்படுத்துகின்றனர்.

ஆனால்இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தும், நாம் எத்தனை நாள் வாழுகின்றோம்சிறிது நாள் தான் வாழுகின்றோம். 

நமக்கு இப்படி ஆகிவிட்டதே, மருந்தையும் சுவையில்லா உணவையும்தான், சாப்பிட்டு வாழ்கின்றோம்என்ற வேதனை அதிகமாகின்றது.

மக்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கின்றார்கள், நம் காலம் இப்படியாகி விட்டதேஎன்று, நாம் நல்லவர்களாக இருந்தாலும், வேதனையின் உணர்வைத்தான் அதிகமாக்க முடிகின்றதே தவிர, மாற முடிகின்றதா?

      ஆகவேநாம் நமது உடலில் இருக்கும் காலத்தில், எதைச் சேர்க்க வேண்டும்? உடல் நலக் குறைவாக இருந்தாலும், அருள் உணர்வைப் பெறவேண்டும், உணர்வின் தன்மை ஒளியின் சரீரம் பெறவேண்டும், என்று நம் உணர்வுகளை மாற்றினால், நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம். இவையெல்லாம்எமக்குக் குருநாதர் காண்பித்த உணர்வின் உண்மைகள். 

13. தீமைகளை நீக்கும் அருள்சக்திகளை, குருவழியில் நாம் பதிவாக்கி, தீமையை நீக்குதல்
குருநாதர் யாம் தீமைகளிலிருந்து தப்புவதற்கு, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை, எமக்குள் பெறச் செய்ததைப் போன்று, உங்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின்  உணர்வுகளை, யாம் பதிவு செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் அருளாற்றலின் உணர்வுகளை, நீங்கள், உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால், உங்களிடத்தில் அறியாது சேர்ந்த தீயவினைகள் நீங்கும், புதிதாக, தீயவினைகள் உங்களிடத்தில் வராது தடுத்து, உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம்.

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றி விட்டபின், அதற்கு நாள்தோறும் நீர் ஊற்றி வந்தால்தான், வளரும். நான் வித்தை ஊன்றிவிட்டேன், என்று சும்மா இருந்தால் வளருமா?  அருளுணர்வுகளை யாம் உங்களிடத்தில் பதித்துவிட்டோம் என்றால், அதன் உணர்வுகளை நாளும் நீங்கள் வளர்த்து வர வேண்டும். 

உயிரின் வாழ்க்கையில் எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று, சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப, மனித ரூபத்தைக் கொடுத்தது நமது உயிர்.

அகஸ்தியர் தம்முள் பல விஷத்தன்மைகளை அடக்கி, மனித உடலின் உணர்வின் தன்மைகளை மாற்றி, ஒளியின் உடலாகத் தாம் பெற்றார்.

அவரிடமிருந்து வெளிப்படும் அருளுணர்வினை, நமது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவிலும் பெறக்கூடிய தகுதி பெற்றால், அகஸ்தியரைப் போன்று, நாமும் நமது உடலில் உள்ள அணுக்களைச் சிறுகச் சிறுக, மாற்றியமைக்க முடியும்.

நம்மிடம் உள்ள முந்தைய தீயவினைகளைத் தணித்து, புது தீயவினைகள் நமக்குள் சேராமல் தடுத்து, நம்முள் நல் உணர்வினை வலுவாக்க முடியும்.

இயற்கையின் உண்மையின் உணர்வை, நாம் நுகர்ந்து கொண்டபின், நமது உணர்வுகள் என்ன செய்கின்றது? ஒரு உணர்வை நமது உடலில் வளர்த்துக் கொண்டபின், நம்மை நமது நண்பர்கள் பார்க்கும் பொழுது, நமக்கு வெறுப்போ, அல்லது பாசமோ எப்படி நமக்குள் வருகின்றது? 

இதெல்லாம் நமது உடலில் உள்ள  உணர்வுக்கொப்பத்தான் வரும்  என்பதனை, நீங்கள் ஒவ்வொருவரும் அனுபவரீதியாக உணர வேண்டும்.  தெரிந்து, தெளிந்து, வாழ்ந்திடும் வாழ்க்கையாக, உங்கள் வாழ்க்கையை அமைத்திடல் வேண்டும்.

எல்லோரும் எல்லோரிடத்திலும் பழகியிருக்கின்றோம். நமக்கு கோபம் எப்படி வருகின்றது? வெறுப்பு எப்படி வருகின்றது? என்பதை அறிய வேண்டும்.

நம்மை வெறுப்படையச் செய்வது எது? வெறுப்பான பின்னால், குடும்பத்தில் என்னென்ன வேதனையாகின்றது? வெறுப்பை நீக்குவது எப்படி? என்பது போன்றவைகளை, நாம் அனுபவப்பூர்வமாக கொண்டு வர வேண்டும்.

ஏனென்றால், இத்தனை நிலைகளையும் யாம் கஷ்டப்பட்டுத்தான் தெரிந்து கொண்டோம். கஷ்டத்திலிருந்து உங்களைக் காப்பதற்குத்தான், உயர்ந்த சக்திகளை உங்களிடம் சொல்லி, பதிய வைக்கின்றோம்.

தீமைகளை நீக்க வேண்டும் என்ற சக்தியை, நீங்கள் பெறுவதற்காகத் தான்,  யாம் உபாயங்களைக் கூறுகின்றோம்.  யாம் அப்படிச் செய்து விடுவோம், இப்படி செய்து விடுவோம் என்று சொல்லவில்லை.

உதாரணமாக, பயந்த சுபாவம் உள்ள ஒருவர் சந்தர்ப்பவசத்தால், கண்கூடாக ஒரு விபத்தைக் காண நேரிடுகிறதென்றால், விபத்தைக் கண்கூடாக பார்த்ததின் உணர்வு, அவரிடத்தில் ஜீவ அணுவாக விளைந்துவிடுகின்றது.

அடுத்த முறை, அவர் ஏதேனும் ஒரு விபத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால்,  அஞ்சி ஓடமாட்டார். அது எங்கே என்று, தேடிப் பிடித்துப் போய்ப் பார்ப்பார்.  ஆக, பயத்தின் உணர்வை ஒரு முறை நம்மில் பதிவு செய்தாலும், அடுத்த முறை, அங்கே செல்லாமல் இருக்கின்றோமோ என்றால், இல்லை.

ஏனெனில்,  ஏற்கனவே விளைந்த ஜீவ அணுவிற்கு, உணவு தேவை. நாம் சும்மா இருந்தாலும், அது நம்மை அழைத்துச் சென்றுவிடும். 

நாம் எத்தகைய நிலைகளையும், வேடிக்கையாகப் பார்த்தாலும் சரி, பரிவுடன் பார்த்தாலும் சரி, அது நமக்குள் ஜீவ அணுவாக விளைந்து விடுகின்றது.

உதாரணமாக, குழந்தைகளாக இருப்பவர்கள் ஏதாவதொன்றைக் கண்டால், அடுத்த சில மணி நேரத்திற்குள், அந்த விஷயம் அதனின் நினைவில் இருக்காது. ஏதாவதொன்றைக் கண்டு பயந்துவிட்டால், பின் அதனின் நினைவு வரும் பொழுது, அந்த குழந்தைக்கு மனதில் பயம் உருவாகும். திரும்பவும் அந்த இடத்திற்குச் செல்லாது.

ஆனால் பெரியவர்களாக இருப்பவர்களுக்குப் பயம் இருந்தாலும், மன வலிமை கொண்டு என்ன, ஏதுஎன்று எட்டிப் பார்க்கச் சொல்லும்.

குழந்தைப் பருவத்தில், அணுவின் செல்கள் எளிமையாக இருப்பதனால், அது தனக்குள் கண்டபின் உடனே மறைந்து விடுகின்றது. எண்ண நிலைகளை, மற்ற நிலைகளுக்கு அழைத்துச் செல்கின்றது.

அதே சமயத்தில், குழந்தைகளிடத்தில் ஒரு உயர்ந்த கருத்தைச் சொன்னால், அது அதனிடத்தில் ஆழப் பதிந்துவிடுகின்றது. மீண்டும், அதே கருத்தினைச் சொல்லும் நிலை வருகின்றது.

வேதனை போன்ற மற்ற உணர்வுகளை, பெரியவர்களான நாம் வளர்த்துக் கொள்ளும் பொழுது, பிறர் சொல்லும் நல்ல உயர்ந்த குணங்கள், நம்மிடத்தில் பதிவதில்லை,  தீய வேதனையான குணத்தின் உணர்வே, நமக்குள் நினைவில் வரும்.

குழந்தைகளிடத்தில் உயர்ந்த கருத்தினைச் சொன்னால் அது அவர்களிடத்தில் எளிதில் பதிவாகும். அதே சமயத்தில், தீமையான உணர்வுகள் அவர்களிடத்தில் பதிவாகி விட்டால், தீமையின் உணர்வே அதிகமாக வரும். அதுவே முன்னனியில் நிற்கும். குழந்தைகள் நல்லதையும் பதிவு செய்து கொள்ளும். தீயதையும் பதிவு செய்து கொள்ளும். வளரும் பருவம் கொண்ட சரீரங்களில்இந்த நிலை.

மனித உணர்வுகளின் தன்மையை அறிந்து, மகரிஷிகள் காண்பித்த அருள் வழியை நாம் ஒரு முறை பதிவு செய்து கொண்டு, அடுத்தடுத்து,  அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டுமென்று இந்த உணர்வைக் கட்டாயப்படுத்திச் செலுத்துவோம் என்றால், அந்தச் சக்தி நமக்குள் வரும். 

நமக்கு நோய் என்று ஒன்று வந்துவிட்டால், அதற்கு, மிகவும் கசப்பான மருந்தைக் கட்டாயப்படுத்தி உள்ளே செலுத்தும் பொழுதுதான், அந்த நோயே, நம்மை விட்டு அகன்று ஓடுகின்றது.

ஞானிகளின் உயர்ந்த கருத்துக்களை, தத்துவங்களைக் கேட்க நேரும் பொழுது, நமது கவலைகள், வேதனைகள் இவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஆர்வமுடன் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் அதனின் ஞானம் நம்மிடத்தில் பதியும். 

வேதனைகளை மனதில் நிறைத்துக் கொண்டு உள்ளவர்களிடத்தில்நல் உணர்வுகள் எதுவும் பதியாது.

இந்த உடல், என்றும் நம்முடன் வரப் போவதில்லை. ஆனால், இந்த உடலில் இருந்து, விளைய வைத்த உணர்வின் சத்துதான், நம்முடன் என்றும் நிலைத்திருக்கும்.

ஆகவே, நமது வாழ்க்கையில், நாம் அனைவரும் துருவ தியானம் மற்றும் கூட்டு தியானங்களை வலுப்படுத்துவதன் மூலமாக, ஒவ்வொரு நிமிடமும், ஆத்ம சுத்தி செய்யும் ஆற்றலைப் பெருக்கி, அந்த துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளியான சக்திகளை, நமது உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும், சத்தாகச் சேர்ப்போம்.

நாம் அனைவரும், வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறுவோம், செல்வம் செல்வாக்கு பெற்று, தொழில் வளம் பெற்று, உடல் நலம் பெற்று, மன பலம் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றென்றும் இணைந்து, மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

14. “ஓம் ஈஸ்வரா” என்ற நெருப்பைக் கூட்டி மகரிஷிகளின் அருள் ஒளியைக் கூட்டு
வேதனயின் உணர்வை நாம் நுகர்ந்தால், அது நமது இரத்த நாளங்களில் கலந்து விடுகின்றது. நம்மை மனிதனாக உருவாக்கிய, உடலின் அணுக்கள் விஷத்தின் தன்மை கொண்டபின், உடலின் அணுவின் தன்மை மாறுகின்றது.

உடலின் அணுத்தன்மை விஷத்தின் தன்மையாக மாறும் பொழுது, உடலில் வலி வருகின்றது. வலி வந்தால், உடல் நலிகின்றது, எண்ணம் குறைகின்றது.

நம் ஊர்களில், திரும்பும் பக்கமெல்லாம் மாரியம்மன் கோவில் இருக்கும். மனித வாழ்க்கையில் அடிக்கடி சலிப்பு வருகிறது, சங்கடம் வருகிறது.

ஆனால், ஒருவர் தவறு செய்கின்றார் என்றால், அந்தத் தவறான நிலைகளைப் பார்க்கும்பொழுது, அந்த உணர்வு தனக்குள் மாறி, (மாரி) தன்னையறியாமல் ஆட்டிப்படைக்கின்றது. நிவர்த்திப்பதற்கு என்ன செய்கிறார்கள்? 

மாரியம்மன் கோவிலில்,  நெருப்புச்சட்டி வைத்திருப்பார்கள். அந்தச் சக்தியின் நிலைகளில் நெருப்பு என்ன செய்யும்?  ந்தத் தீமைகள் அனைத்தையும் அதில் போட்டு,  சுட்டுப் பொசுக்க வேண்டும். 

நாம் எடுத்துக்கொண்டது விஷம், நமக்குள் வந்தால் பதறச்செய்கிறது. மாரியம்மனின் கோவிலில், அக்கினிச் சட்டியைக் கண்டு தீயதைச் சுட்டுப் பொசுக்க வேண்டும்.

அந்த மாரியைத் தடுப்பதற்கு என்ன செய்கிறோம்?  நெருப்பு, யாராவது, அதைக் காட்டியிருக்கிறார்களா?  யாராவது சொல்லி இருக்கிறார்களா?  இல்லை.  அந்த நெருப்பு யார்?  இந்த மகரிஷிகள்.  ஆக, இந்த மனித வாழ்க்கையில் வந்த இடைஞ்சல்களை, நீக்கிப் பழகியவர்கள்.

‘’ஓம் ஈஸ்வரா’’ இந்த நெருப்பைக் கூட்டி, ‘’மகரிஷிகளின் அருள் ஒளியைக் கூட்டு’’. மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து, எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள், ஜீவாத்மாக்கள் பெறவேண்டும் என்று, ஏங்க வேண்டும்.

அவ்வாறு ஏங்கிவிட்டு, நமக்குத் தீங்கு செய்தவர்கள், நாளை அறியாமையிலிருந்து விடுபடவேண்டும். நல்லதைச் செய்யும் எண்ணம் அவர்களுக்குள் வரவேண்டும் என்ற, இந்த உணர்வை நமக்குள் சுவாசிக்கும்போது, இங்கே என்ன செய்கிறது? 

மாரியம்மன் கோவிலில், மத்தியில் அக்கினிச் சட்டி  வைத்திருப்பார்கள். எதற்கு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கோவில்களெல்லாம் தப்பல்ல, நாம் வழிப்படும் முறைதான் தப்பாக இருக்கும். அர்ச்சனை செய்துவிட்டு, காசைக் கொடுத்துவிட்டு நாம் என்ன செய்கிறோம்?  தியானிக்கவேண்டும், எதை?

இந்தத் தெய்வம் நல்லது செய்திருக்கிறது. இந்த தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும், நாங்கள் செய்வதனைத்தும் நல்லதாக இருக்கவேண்டும், எங்கள் பேச்செல்லாம், பிறருக்கு நல்லதாக இருக்கவேண்டும்.

இந்த தெய்வகுணத்தின் சக்தி, வளரவேண்டும். இதை உணர்த்திய மெய்ஞானிகளின் அருள் ஒளி வளரவேண்டும். அந்த அருள் ஒளியால் எல்லாம் நல்லதாக இருக்கவேண்டும் என்று தியானித்துப் பாருங்கள்.  இதுதான் அர்ச்சனை,

இதைத்தான் ஆதிசங்கரர் சொன்னார்.  “அத்வைதம், சூட்சுமமாக இருப்பதை, உனக்குள் எடுக்கக்கூடிய உணர்வை எடுத்து, சுவாசமாக்கு. இந்த சக்தியை உனக்குள் கூட்டு, என்று அன்றைக்கு ஆதிங்கரர் சொன்னார்.

ஆகவே, அவர் காட்டிய அருள்வழியில், காற்றில் மறைந்துள்ள அருள் ஞானிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து, அனைவரும் மகிழ்ந்து வாழ்வோம், பிறவியில்லா நிலையெனும் அழியா ஒளிச்சரீரம் நாம் அனைவரும் பெறுவோம்

15. கட்டாயப்படுத்தித்தான், அருள் ஒளியை நமக்குள் பெருக்க வேண்டும்
நாம் நமது சகஜ வாழ்க்கையில், ஒருவன் தீய செயலைச் செய்கின்றதைப் பார்க்கும்பொழுது, அதனின் உணர்வுகளை நுகர்ந்து நமக்குள் பதிவாக்கிவிட்டால், பின்,  அவன் தீய செயல்களைச் செய்கின்றான், செய்கின்றான்என்று அடிக்கடி எண்ணும்போது, அதனின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து, அவன் எந்த தீய செயலைச் செய்தானோ, அதையே, நாமும் செய்யக் கூடிய தன்மை வந்துவிடுகின்றது.

தியானத்தில் உட்கார்ந்தால், இது முடியலே, அது முடியலே, உட்கார முடியாலே என்று எண்ணிக் கொண்டே உட்கார்ந்தால், இதுதான் வளரும். 

எப்படியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள்  பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உட்கார்ந்து பாருங்கள். இந்த உணர்வுகள் உங்களுக்குள் வலுபெறும் பொழுது, உங்களைச் சும்மா இருக்க விடாது. 

அந்த நேரத்தில் இதனின் உணர்வை எடுக்கச் சொல்லும். இந்த உணர்வு வரும்பொழுது, பிறருடைய தீமைகளை அகற்றும் வலிமையினைப் பெறுகின்றோம். தீமைகள் வராதபடி தடுக்கவும் முடியும்.

மனிதர்களான நாம் இந்தச் சரீரத்திற்குப்பின், இனி ஒரு பிறவியில்லை என்ற நிலையில், முழுமை பெற வேண்டும். நாம் முழுமை பெறும் நிலையாக, நமது குருநாதர் காண்பித்த அருள் வழியில், “துருவ நட்சத்திரத்தின் பெரருளும் பேரொளியும் பெற வேண்டும்என்ற உணர்வை மட்டும் நீங்கள் கூட்டி வளர்த்துக் கொண்டால் போதும், அகண்ட அண்டத்தையும், இந்தப் பிண்டத்தையும், இவைகளின் இயக்கத்தின் உண்மைகளையும், அறியும் தன்மை வரும். தீமைகளை அகற்றும் சக்தியும் வரும்.

நமது உயிர்  நாம் எதை நுகர்கின்றோமோ, அதன் உணர்வை வளர்த்து, அதன் உணர்ச்சியின் தன்மை கொண்டுதான், இந்த உடலை இயக்குகின்றது. சந்தர்ப்பத்தால் தீமையின் உணர்வுகளை நாம் நுகரப்படும்போது, தீமையின் நிலைகளில் அந்த அணுக்கள் நமது உடலில் வளர்ந்து விட்டால், அதனின் உணர்ச்சிகளைத் தூண்டி, அது தன் இனத்தைப் பெருக்குகின்றது.

தீமைகளை வென்ற அருள் உணர்வின் தன்மையை, நமக்குள் உருவாக்கிவிட்டால், அதன் தன்மை கொண்டு, தீமைகள் வராது காக்கும் நிலையினை, நம்முள் உருவாக்குகின்றது.

இன்று ஒரு விஞ்ஞானி, ஒரு உயிரினத்தின் செல்களை எடுத்து, மற்றவைகளுடன் இணைக்கும் நிலையாக கட்டாயப்படுத்தித்தான் திணிக்கின்றான்.

இதன்படி, இந்த உயிருடன் இணைத்துக் கொண்டபின், இதனின் ரூபமே மாறுகின்றது. இப்படி ஆட்டை மாடாக்குகின்றான், மாட்டை ஆடாக்குகின்றான். இதன் வழிகளிலே எத்தனையோ வகை செயல்படுத்துகின்றான்.  இப்படி, ஒவ்வொன்றிலும் கட்டாயப்படுத்தியே திணிக்கின்றான்.

நாம் பள்ளிக்குச் செல்கின்றோம். டாக்டருக்குப் படிக்கின்றோம். அங்கே, எத்தனையோ வகையான நிலைகளைச் செயல்படுத்தி காண்பிக்கின்றனர். ஆனால்,  தானே, தன்னைக்  கட்டாயப்படுத்திப் படிக்க வேண்டும், பார்க்கவேண்டும் என்ற உந்துதல் கொண்டு,  எவர் செயல்படுகின்றனரோ, அவரே உயர்ந்த டாக்டர்களாக ஆகின்றார்கள்.

ஆனால் படிக்கும்பொழுது, “இது என்னடாசங்கடமாக இருக்கிறதுஎன்ற உணர்வை எடுத்துக் கொண்டவர்கள், நிச்சயம் சங்கட டாக்டராகத்தான் வருவார். டாக்டரான பின், முதலிரண்டு நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்தபின், மூன்றாவது நோயாளியைப் பார்க்கும் பொழுது இவரை அறியாமலேயே, சலிப்பு வந்துவிடும். இந்த உணர்வு கலந்தபின், இவர் பார்க்கும் வைத்தியமெல்லாம், சீராக இருக்காது.

எனவே,  நாம் கட்டாயப்படுத்தித்தான் அருள் ஒளியின் உணர்வுகளை, நமக்குள் தியானித்தல் வேண்டும்.

ஒரு விஞ்ஞானியோ, இன்ஜினியரோ ஆராய்ச்சி என்ற தத்துவத்தில் வரப்படும்போது., “இதைப் பெற வேண்டும்என்று எப்படியும் கட்டாயப்படுத்தி, ஆராய்ச்சி செய்து, உயர்ந்த நிலைகளுக்குக் கொண்டு வருகின்றனர். இப்படி வலுகொண்ட உணர்வு கொண்டு, ஆராய்ச்சிகளைச் செய்யும் பொழுதுதான், விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெறுகின்றது.

இதன் வழிகொண்டு, அகண்ட அண்டத்தையும் ஆய்ந்தறியும் நிலைகள் வருகின்றது. ஒரு விஞ்ஞானி ஒன்றைக் கண்டுபிடிக்கின்றான் என்றால், அவருடைய மாணவன், அதைவிட ஒன்றைப் பெற வேண்டுமென்று தன் உணர்வை வலுபெறச் செய்யும்பொழுது, அவன், குரு கண்டறிந்ததைவிட, அதிகமான ஒன்றைக் கண்டறியும் நிலை வருகின்றது. இப்படி வளர்ந்ததுதான் விஞ்ஞானம்.

இதைப் போன்று, நமது குரு காண்பித்த அருள்வழியில், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியின் உணர்வுகளை, நாம் நமக்குள் பெறும்பொழுது, நாம் அகண்ட அண்டத்தின் பேருண்மையின் தன்மைகளை, அறியும் ஆற்றல் பெறுகின்றோம்.

நமது உணர்வின் தன்மையே, நமக்குள் ஒளியாக மாற்றும்பொழுது, மிகவும் உயர்ந்த நிலைகளை நாம் பெறுகின்றோம்.

நமது உயிருக்கு என்றும் அழிவில்லை. உணர்வுகள் மட்டுமே மாறிக் கொண்டே உள்ளது.  ஆகவே, நாம் இன்று மனிதனாக இருக்கிறோம். இந்த மனித உடலில் விஷமான உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொண்டால், உயிர் அடுத்த சரீரத்தை, விஷப் பாம்பாக மாற்றிவிடுகின்றது.

அருள் ஒளி என்ற உணர்வினை நாம் கூட்டினால், நம் இந்திரலோகத்திற்குள் உருவாக்கி, நம்முள் ஏகாந்த நிலைகொண்டு, சொர்க்கலோகத்தை உருவாக்கலாம்.

இதை நாம், நம்முள் கட்டாயப்படுத்திச் செயலாக்க முடியும். மனிதரால் இது சாத்தியமாகக் கூடியதே. சிறிது காலம், இந்த உணர்வின் தன்மையை நம்முள் வளர்த்தால்,  இந்த உணர்வுகள் நமக்குள் சொர்க்கபூமியாக மாற்றும்.

நம் உயிரைச் சொர்க்க வாசலாக அமைக்கலாம்.  இந்த  உயிருடன் ஒன்றி, உயிரின் வழிகொண்டுதான்  நமக்குள் சொர்க்கலோகம் என்ற நிலையை உருவாக்கி, என்றும்  ஏகாந்த நிலை என்ற நிலையை அடையலாம். எமது அருளாசிகள்.

16. தீமைகளை நீக்க, நாம் எப்படி  தியானிக்க வேண்டும்?
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியிலும் தியானம் என்பது, பிறருடைய கஷ்டங்களைப் பார்த்தால், அதை நாம் திரும்ப எண்ணுவது தியானம்தான். 

ஆனால் அதே சமயத்தில், அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், ங்கள் உடல் முழுவதும் படர்ந்து,ங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய, அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்,  என்று அதை ஏங்கி, திரும்பத் திரும்ப எண்ணினால், இதுவும் தியானம்தான்.

ஆக, பிறர் கஷ்டப்படும் உணர்வை, நமக்குள் வராமல் தடுக்கலாம். அந்த வேதனைப்படுவோரைக் கேட்டு உணர்ந்தபின், நமக்குள் வராது தடுக்க வேண்டுமென்றால், இதே  துருவ நட்சத்திரத்தின் பேரருளை, இதே போல முறைப்படுத்தி, நம் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெற வேண்டுமென்று செலுத்திவிட்டால், உண்மையான தியானம் இதுதான்.

வாழ்க்கையையே, இதை தியானமாக்குதல் வேண்டும்; தீமையைப் புகாது தடுத்தல் வேண்டும்; தீமையை நீக்கிய, அருள் ஞானியின் உணர்வுகளை, நமக்குள் செலுத்திப் பழகுதல் வேண்டும்; நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும், தைப் பெறும்படி நாம் செய்யமுடியும்.

காரணம், நம் உடலில் உள்ள வேதனை, அல்லது ஒருவர் கோபப்படுகிறார் என்ற உணர்வை நாம் நுகர்ந்தால், நமது உடலிலே இரத்தக் கொதிப்பாகி விடுகின்றது.

இந்த இரத்தக் கொதிப்பு ஆவதற்குக் காரணமே, நாம் நுகர்ந்த உணர்வுகள், அந்தக் காரமான உணர்வுகளை, உணவாக உட்கொள்ளும் அணுவாக உருவாகிவிடுகின்றது. ஒரு அணு உருவாகி விட்டால், அது மீண்டும் தன் உடலிலே பல அணுக்களை உருவாக்கி, நமக்குள் இரத்தக் கொதிப்பின் தன்மையைக் கொண்டு வந்துவிடுகின்றது.

இப்படி ஆகாதபடி, ஒருவர் கோபப்பட்ட உணர்வை நாம் நுகர்ந்தாலும், அடுத்த நிமிடம், அந்தத் துருவ நட்சத்திரத்தின் பெரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்றும், ங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும்; ங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பெரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற நினைவினை, உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அவ்வாறு நாம் செலுத்தினால், நாம் நுகர்ந்த உணர்வுகள் உமிழ்நீராக மாறி, நம் ஆகாரத்துடன் கலந்து, இரத்தமாக மாறி, அந்த இரத்தத்திற்குள், காரமான உணர்ச்சியை இயக்கும் அணுவாக உருவாவதற்குமுன்,  இதை நாம் முந்திச் செலுத்திவிட்டால், நம் இரத்தத்தில் உள்ள அணுக்கள் அனைத்திலும், அந்த துருவ நட்சத்திரத்தின் பெரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் எண்ணும்பொழுது, அந்தக் காரமான உணர்வுகள் வந்தாலும், அதைத் தணித்து விடுகின்றது.

உதாரணமாக,  மிளகாய் காரமாக இருக்கின்றது. அதை நாம் குழம்பிலே கலக்கப்படும் பொழுது, அது எல்லாவற்றுடன் கலந்து சுவையாக மாற்றுகின்றது. 

இதைப்போல நமது வாழ்க்கையில், வெறுப்போ, வேதனையோ, கோபமோ, குரோதமோ போன்ற உணர்வுகளை நாம் நுகர்ந்து அறிந்து கொண்டாலும், அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்திடாது தடுத்துப் பழகுதல் வேண்டும். ஏன்? 

அந்த அகஸ்தியன் துருவனாகி, துருவ நட்சத்திரமாகி இத்தனையும், விஷத்தை நீக்கி, உணர்வை ஒளியாக மாற்றிய, அதனின்று வரும் உணர்வுகளை நாம் நுகர்ந்து, நமது இரத்தங்களில் கலக்கச் செய்யும் பொழுது, நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும், அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை பெறச் செய்யும் பொழுது, அது வீரியமடைகின்றது, தீமைகள் வராது தடுக்கின்றோம்.

இந்த தியானத்தின் அருளை, நீங்கள் ஒவ்வொரு நொடியிலும் பெற முடியும். உங்கள் வாழ்க்கையில் இதுவே தியானமாக்கி, இதேபோல உங்கள் வாழ்க்கையில் எத்தகைய கொடிய நிலைகளை நுகர்ந்து அறிய நேர்ந்தாலும், அந்தக் கொடிய உணர்வுகள் உங்களிலே வளராது தடுக்க, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று, அதன் உணர்வை வலுவாக்க, இதைத் தியானித்து, உங்கள் உடலில் உள்ள அணுக்களை, அந்த வலுவான அணுக்களாக மாற்றி அமைக்க முடியும், இது மனிதன் ஒருவனால்தான், செய்ய முடியும்.

17. மன வலிமையைக் கூட்டி, தீமையை நீக்கும் நிலை
சாதாரணமாக, மனிதர் பாம்பினைக் கண்டால் அஞ்சுகின்றார். ஆனால், பாம்பு பிடிப்பதில் தெளிந்த மனிதன் ஒருவன், ஒரு பாம்பைப் பிடிக்கச் சென்றால், பாம்பு அவனைக் கண்டு அஞ்சுகின்றது. 

அவன் கையில், ஒரு குச்சி மட்டுமே இருக்கும். பாம்பைக் கண்டு நாம் பயப்பட்டோம் என்றால், பாம்பு இந்த உணர்வை நுகர்ந்து, “சிர்என்று சீறித் தாக்கும், பயந்த மனிதன் தாக்குகின்றான் என்று உணர்கின்றது.

தெளிந்த மனிதன் வலிமையைக் கண்டு, “இவன் தாக்குவான்என்று பாம்பு அஞ்சி ஓடுகின்றது.  ஆனால், பயந்தவன் தாக்கும் பொழுது, பாம்பும் அஞ்சி இவனைத் தாக்குகின்றது.

வலிமையுள்ளதை நுகர்ந்துணரும் சக்தி, பிற உயிரினங்களுக்கு உண்டு.  மனிதருக்கும் இந்த அறிவு இருப்பினும், இந்த அறிவை சீராகப்  பயன்படுத்துவதில்லை. ஆதலால், நாம் அறியும் தன்மை இழந்திருக்கின்றோம்.

பாம்பு பிடிப்பதில் தெளிந்த மனிதன், இந்தப் புற்றுக்குள் பாம்பு இருக்கிறது என்று அறிகின்றான். இவனின் மணத்தை நுகரும் பாம்பு, புற்றுக்குள் அஞ்சி ஒடுங்குகின்றது. இவன் தூண்டும்போது வெளிவரும் பாம்பு, இவனைத் தாக்குவதில்லை, அஞ்சி ஓடுகின்றது.

ஆனால், இவன் பாம்பை எளிதில் பிடித்து, கவட்டையில் போட்டு, பாம்பு உயிருடன் இருக்கும் பொழுதே, பாம்பின் தோலை உரிக்கின்றான். இத்தகைய உணர்வுகள் பாம்பு பிடிப்பவனிடத்தில் இருப்பதால், அவனிடமிருந்து வெளிப்படும் மணத்தை, பாம்பினம் காண்கிறது. ஆகவே, அவனைக்  கண்டு அஞ்சி ஓடுகின்றது. சாதாரண மனிதனைக் கண்டால், சீறித் தாக்குகின்றது, எதிர்த்து நிற்கின்றது.

இதைப் போன்றுதான், வாழ்க்கையில் பகைமை என்ற உணர்வுகள், எத்தனையோ நம்மிடத்தில் வருகின்றது. நாம் அன்பும், பண்பும், பரிவும் கொண்டு, பிறருடைய கஷ்டங்களை, நோய்களை கேட்டறிந்து உபகாரம் செய்தாலும், நாம் கேட்டறிந்த உணர்வுகள் ஓம் நமசிவாயஎன்று நம் உடலாக மாற்றுகின்றது. அதுவே வினையாகின்றது, வினைக்கு நாயகனாக அதன் வலுவைக் காண்பிக்கத் தொடங்கிவிடுகின்றது. ஆகவே, இதுபோன்ற  தீமைகளிலிருந்து, எங்ஙனம் நாம் விடுபட வேண்டும்என்பதைச் சிந்திக்க வேண்டும்.

ஒரு இயந்திரத்தை உருவாக்கும் இஞ்சினியர், அந்த இயந்திரத்தில், எங்கெங்கே அழுத்தம் அதிகமாக இருக்கும், எங்கெங்கே வலிமை தேவை என்பதைக் கணக்கிட்டு, உலோகத் தன்மையின் வலிமையையும், இயந்திரத்தில் ஏற்படும் உராய்வையும் கணக்கிட்டு, இயந்திரத்தை உருவாக்குகின்றார்.

ஆனால்,  இயந்திரத்தைச் சோதித்து பார்க்கும் பொழுது, உலோகக் கலவையில் வலு சிறிது குறைவாக இருக்கும் பொழுது, இயந்திரம் நொறுங்கி விடுகின்றது.

பின்,  எதனால் இப்படி நேர்ந்ததென்று சிந்திக்கின்றார். சிந்தித்து,  இயந்திரத்திற்குண்டான வலிமையைக் கூட்டுகின்றார். இதனைத் தொடர்ந்து, சரியான ஒரு இயந்திரத்தை உருவாக்குகின்றார்.

இதைப் போன்று தான், ஞானத்தின் நிலைகள். தீமை என்று ஒன்று வரும் பொழுது, நாம் அருள்ஞானிகளின் உணர்வை, நம்முள் பதிவாக்கினால், உடனே சிந்தனை தூண்டப்பட்டு, தீமைகளை அகற்றும் தன்மை நம்மிடத்தில் உருவாகின்றது.

அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது, அது, நம்முள் விஷத்தின் தன்மையை அடக்கி, நம்மிடத்தில், சிந்திக்கக்கூடிய மனவலிமையைக் கூட்டுகின்றது.

இத்தகைய ஆற்றலை நீங்கள் பெற்றால்தான், உங்களுடைய வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும். உங்கள் வாழ்க்கையைச் சீராக்க முடியும்.

பேரருள் பேரொளி பெறும் நிலையாக, தனக்குள் அருள் ஒளியின் உணர்வின் தன்மையைக் கூட்டும் பொழுது, அதன் உணர்வின் அலைகளை நீங்கள் பெற்று, இந்த உடலுக்கு பின், பிறவியில்லை என்ற நிலையை, அடைந்திட முடியும்.

இதை உணர்ந்து, ஞானிகள் காண்பித்த அருள் வழியில் அருள் ஞானத்தை வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், தம்முள் நஞ்சினை வென்று, பேரருள் பெற்று, பிறவியில்லா நிலை என்ற அருள் சக்தி பெற்று, பிறவியில்லா நிலை என்ற அருள் வாழ்க்கை வாழ்ந்து, இவ்வாழ்க்கையில் பிறவியில்லாப் பெருநிலையாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருள் ஆசிகள்.

18. தீமைகள் நமக்குள் புகாமல் தடுக்கும் வழி
எவ்வளவு செல்வம் தேடினாலும், எவ்வளவு செல்வம் சேமித்து வைத்தாலும், கடுமையான நோய்கள் வந்துவிட்டால், வாழ்க்கையில் வெறுப்புதான் வருகின்றது. வெறுப்பான உணர்வுகள் வரப்படும்பொழுது, உடலை வெறுக்கின்றோம், வேதனையை வளர்க்கின்றோம். இதனால், நாம் நிம்மதியற்ற நிலைகளில்தான், வாழ வேண்டி வரும்.
     
ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியில், அழுக்குபட்டு விட்டால், கண்ணாடியின் அழுக்கை துடைத்தால்தான், நம்முடைய உருவத்தைக் காணமுடியும்.

இது போன்று, பிறருடைய தீமையின் உணர்வுகள் நமது ஆன்மாவில் பெருகிவிட்டால், நம்மை எது இயக்குகிறது என்று அறிய முடியாதபடி, நாம் பார்த்த உணர்வுகள் நமது உடலை இயக்கி, நம்மை நாம் அறிய முடியாத நிலைகளாக ஆகி விடுகின்றது.

ஆகவே, நம்மை நாம் எப்படி அறியவேண்டும்? கண்ணாடியில் அழுக்குப் படிந்திருந்தால், நாம் எப்படிப் பார்த்தாலும் நமது முகம் தெரியாது.

இது போன்றுதான், நமது ஆன்மாவில் அழுக்குப் படிந்துவிட்டால், சிந்திக்கும் தன்மை இழக்கும் நிலை வருகின்றது. கண்ணாடியில் படிந்த அழுக்கை நீக்கினால், கண்ணாடியில் நமது உருவம் தெளிவாகத் தெரிவது போன்று, நம்து ஆன்மாவில் கலந்த அழுக்கை நீக்கி, தூய்மைப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வராஎன்று, சிறிது நேரம் ஏங்கி தியானித்துவிட்டு, “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் உடலிலுள்ள ஜீவான்மாக்கள், ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வராஎன்று நம் உடலுக்குள் உணர்வின் தன்மையைச் செலுத்த வேண்டும்.

அவ்வாறு நாம் செலுத்தப்படும்போது,  வேதனைப்பட்ட உணர்வின் தன்மை நமது ஆன்மாவிலிருந்து நீங்கி, நமது ஆன்மா தூய்மை பெறுகின்றது. 

ஆகவே, நமக்குள் தெளிவான நிலைகள் வரும். சிந்திக்கும் தன்மை நமக்குள் வருகின்றது. தீமை அகற்றும் வல்லமை பெறுகின்றது. தீமைகள் புகாது தடுக்கவும் முடிகின்றது.

நீங்களும் ஒரு டாக்டர்தான்,  உங்களுடைய உயிர்தான், டாக்டராக இருக்கின்றது. உயிரான டாக்டரிடம், உங்களுடைய உணர்வுகளைச் சொன்னீர்களென்றால், அதற்குத் தகுந்த மாதிரி உயிரான டாக்டர், உங்களை இயக்கி, உங்களை நல் வழிப்படுத்துவார். 

ஆனால், நாம் வேதனை, வெறுப்பு என்ற உணர்வுகள் நம்மிடம் வரும்பொழுது, உயிரான டாக்டரை மதிக்காதபடி இருந்து விடுகின்றோம்.

உயிர், நமக்கு நல்லது கெட்டது போன்றவைகளைக் காண்பிக்கின்றது. கெட்டது என்று தெரிந்து, அதை உள்ளே விடாதபடித் தடுக்கவில்லை என்றால், என்னவாகும். டாக்டர்கள், “ஒன்றைச் சாப்பிடாதீர்கள்என்று சொல்லியிருந்தும், அதைச் சாப்பிட்டோம் என்றால், உடல் நோயாகும்.

இது போன்றுதான்,  நாம் ஒருவர் வேதனை படுவதைப் பார்த்து, “நல்ல மனிதர் இப்படி ஆகிவிட்டாரேஎன்று வேதனைப்படுகின்றோம். அப்பொழுது என்ன செய்கின்றோம்? வேதனையின் உணர்வுகள், நம்முள் நுழைவதற்கு ஏதுவாகத் திறந்து வைத்துவிடுகின்றோம்.

இதனால், வேதனை உணர்வுகள் நம்முள் புகுந்து விடுகின்றது. ஆகவே, நாம் எப்பொழுதும் தீய உணர்வுகள் நம்முள் நுழையாதவண்ணம், கதவுகளை மூடி வைக்கவேண்டும்.

உதாரணமாக, காற்று பலமாக உள்ள பொழுது என்னவாகும்? தூசி, நாற்றம், அனைத்தையும் அடித்துக் கொண்டு வரும். அப்படி வரும் பொழுது, அவை அனைத்தும் நம்முள் நுழைந்துவிடும். ஆகவே, நாம் கதவை மூடி வைத்திருக்கப் பழக வேண்டும்.

நாம் ஒரு உணர்வை, மூக்குவழி நுகரும் பொழுது, அது நம் உயிரில் மோதுகின்றது. நமது கண் ஒன்றைப் பார்க்கும் பொழுது, கருவிழி ருக்மணி என்ன செய்கின்றது? கவர்ந்த உணர்வை, நமது உடலில் உள்ள, விலா எலும்புகளில் உள்ள ஊனில் பதிவாக்கிவிடுகின்றது. வேதனைப்பட்ட உணர்வை நுகர்ந்து, நமது எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது.

இவைகளெல்லாம், சுவாசித்தல் மூலம் நம்முள் செல்வதில்லை. சுவாசத்தில் இல்லாமலே, கருவிழி ஒன்றைப் பார்த்துப் படமாக்கி, நம்முள் பதிவாக்கி விடுகின்றது.

எக்ஸ்ரே படம் எடுத்தால், உடனே படமாகக் காட்டுவதைப் போன்று, கருவிழி பார்த்தவுடனே, நமது உடலில் உள்ள விலா எலும்புகள், கடிகாரம் மாதிரி படபடவெனதுடித்து இழுக்கும். இழுத்து, உடனே தன்னுள் பதிவாக்கிக் கொள்கின்றது.

இவ்வாறு பதிவான பின்னே என்ன செய்கின்றது? கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன், அதனின்று வெளிப்படும், வேதனை உணர்வைக் கவர்ந்து, அவ்வுணர்வை இயக்கக்கூடிய அணுக்களாக மாற்றுகின்றது.

வேதனையின் உணர்வுகள், நமது உடலுக்குள் வலுவானபின், அதன் அருகில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களைப் பலவீனப்படுத்தும். மேலும், அந்த நல்ல அணுக்களை உணவாக எடுத்துச் சாப்பிடத் தொடங்கும். பின், நாம் நலிவடைய வேண்டியது தான்.

எனவே,  இதை போன்ற நிலைகளைத் தடுக்க, நாம் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில், அந்த துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை, உயிர் வழி கவர்ந்து, நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு உணவாக கொடுக்க வேண்டும். 

இவ்வாறு நாம் செய்துவர, நாம் அனைத்துத் தீமைகளிலிருந்தும் விடுபட முடியும். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ முடியும்.


19. தீமைகளைத் தடைப்படுத்தும் வழி
தீய உணர்வுகளின் தன்மைகளைத் தடைப்படுத்தும் பொழுது, நம்மிடத்தில் சிந்தித்துச் செயல்படும் தன்மை வருகின்றது. அப்படிச்  சிந்திக்கும் தன்மை இல்லையென்றால், பிழை என்ற நிலை உருவாகும். பிழை என்ற நிலையில், நண்பர்களுக்குள் சிறிது குறையாகி விட்டதென்றால், பிறகு நீங்கள் குறையத்தான் வளர்க்க முடியுமே தவிர, அங்கே நல் உணர்வை எடுக்க முடியாது.

நண்பர்களுக்குள், தவறு என்று யார் செய்திருந்தாலும், சந்தர்ப்பங்கள் நம்மை எப்படி இயக்குகின்றது, என்ற நிலையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சந்தர்ப்பங்களால், நம்மை பிறிதொரு தீமை இயக்கி விடாதபடி, நாம் நம்மை முதலில் பாதுகாக்கும்  நிலை பெறவேண்டும்.

எப்படிப் பாதுகாக்க வேண்டுமென்றால், “ஈஸ்வரா”…. என்று உயிரை எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வினை எண்ணி நுகர்ந்து, தீமைகளைத் தடைப்படுத்துதல் வேண்டும்.

யாம், நிறைய அருள் உபதேசங்களை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.  அருள் உணர்வுகளை, எப்படி உங்களிடத்தில் இயக்கமாக்க வேண்டும்? எப்படித் தீமைகளைத் தடுக்க வேண்டும்? என்று யாம் அடிக்கடி உங்களுக்கு உபதேசித்திருக்கின்றோம்.

சாமி சொன்னார்கள், மறந்துவிட்டதுஎன்று இருக்கக்கூடாது.  அருள் உணர்வுகளை, உங்களுக்குள்ஆழமாகப் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.  இந்த விளக்கங்களை நாம் தெரிந்து கொண்டால், ஒவ்வொரு நிமிடமும் தீமைகள் வராதபடி தடுக்கலாம்.

நாம் எதை எண்ணுகின்றோமோ, அவைகளை நம்முள் சேர்க்கின்றோம். நம்மிடம் ஒருவர் கஷ்டத்தைக் கூறும் பொழுது, அதை  நாம் உற்றுக் கேட்கும் பொழுது, அவ்வுணர்வுகள் நம்மில் பதிவாகின்றது.
 
ஆனால் பிறர், தான் சொல்லும் கஷ்டத்தைக் கேட்கவில்லை என்றால், “என்னவோ பெரிய பிகு பண்ணுகின்றான் பார், நாம் சொல்லுகிறோம், காது கூடக் கேட்க மாட்டேன் என்கிறதுஎன்று நம்மைப் பற்றிக் குறை கூற ஆரம்பித்து விடுவார்கள்.

ஆகையினால்,  ஈஸ்வரா என்று உயிரை எண்ணி, வேதனையின் உணர்வுகளைக் கேட்டால்,  அதனைச் செவியுடன் நிறுத்திக் கொண்டு, உள்ளுக்கே கவரும் தன்மையாக எடுக்கக் கூடாது.  நம்முடைய எண்ணங்கள், துருவ நட்சத்திரத்தின்பால் சேர்க்கப்படும் பொழுது, பிறர் சொல்லும் வேதனை உணர்வுகளை, தன்னுள்ளே கவராது.

இப்பொழுது, யாம் உங்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சமயம், நீங்கள் நம்முடைய வீட்டில் செய்யவேண்டிய வேலை என்ன, வீட்டில் மகன் என்ன செய்து கொண்டிருக்கின்றானோ, ஏதாவது செய்து விட்டால் என்னவாகும்?” என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள் என்றால், யாம் சொல்லும் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகாது.

ஆகையால், ஒருவர் நம்மிடம், தீமை தரும் உணர்வுகளையோ, வேதனை தரும் உணர்வுகளையோ, சொல்வாரே என்றால், அது சமயம், துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம்முள் இணைப்போமேயானால், அத்தீய உணர்வுகளை நம்முள் புகாது தடுக்கலாம்.

அவர்கள் சொல்லும் உணர்வுகள் செவிகளில் கேட்கும்,  ஆனால், ஈர்க்காது.  இதனை ஒரு பயிற்சிக்குக் கொண்டு வரவேண்டும்.

இன்று,  எத்தனையோ பேர் எம்மிடம் கஷ்டங்களை நிவர்த்திக்க வருகின்றார்கள், அவர்களுடைய வேதனைகளைச் சொல்கின்றார்கள்.  யாம் அதை ஈர்ப்பதில்லை. யாம்,  எம்மைத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளுக்குள் இணைத்துக் கொள்வதால்,  அவர்கள் என்ன சொன்னாலும், கேட்டுக் கொள்வோம்.

அதன் பிறகு, யாம் கோபமாக என்ன சொல்வோம். போங்கள்…, உங்களுக்கு ஒன்றுமில்லை, போங்கள்…,  என்று சொல்வோம்.

 அப்படி யாம் சொன்னால், “சாமி திடீரென்று நம்மைக் கோபிக்கின்றாரேஎன்று எண்ணினால் என்னவாகும். ஏனென்றால், அவர்கள் சொல்லும் வேதனையின் உணர்ச்சிகளை, உடனே தாங்கி, மடக்கி அனுப்புகின்றோம்.

நீங்கள், சாமி நம்மைக் கோபித்துக் கொண்டார் என்று சொன்னால், யாம் என்ன பண்ணுவது. அப்படியானால், அவர்கள் சொல்லும் கஷ்டத்தை யாம் ஈர்க்க வெண்டுமா? யாம் உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்குத்தான், அப்படிச் சொல்கின்றோம்.

 மற்றவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தையெல்லாம், நீங்கள் உற்றுக் கேட்பீர்கள் என்றால் என்னவாகும்? அந்த உணர்வுகள் உங்களுக்குள் இந்திரீகமாக மாறும்.

ஆகையால், இந்தத் தீய உணர்வுகளை நீங்கள், உங்களிடத்தில் வராது தடைப்படுத்தக் கற்றுக் கொள்ளவெண்டும். இவ்வாறு, தீமைகள் தமக்குள் வராது தடைப்படுத்த, தியானத்தை சீராகக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவருக்கும், எமது அருள் ஆசிகள்.