
எலெக்ட்ரானிக்கின் இயக்கம் – முகப்பு பற்றிய உண்மை
சூரியனிலிருந்து வரக்கூடியது எலக்ட்ரிக். அதைக் கடந்து
வரும் பொழுது காந்தம் இழுத்துக் கொண்டால் நியூட்ரான். அது ஓடும் ஓட்டத்தில் இரண்டற இணைந்து உணர்வின் தன்மை ஒரு அணுவாக மாறப்படும் பொழுது புரோட்டான்… சத்தாக
மாறுகின்றது… விஞ்ஞானிகள் சொல்வது.
ஞானிகள் சொல்வது… சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது.
1.அது ஒரு செடியின்
சத்தைக்
கவர்ந்தால் எலக்ட்ரானிக். அதை நாம் நுகர்ந்தால் அதே எலக்ட்ரானிக் நம்மை இயக்கும்.
2.நம் உயிர்
எலக்ட்ரிக்… அதே
சமயத்தில் நாம் உருவாக்கும் உணர்வலைகள் வெளிப்படும் பொழுது
3.சூரியன்
எடுத்துக் கொண்டால் எலக்ட்ரானிக் ஆக மாறுகிறது.
4.இவ்வாறு
வெளிப்படுவதை இன்னொருவர் நுகர்ந்தால் அதே எலக்ட்ரானிக் அங்கேயும் இயக்குகின்றது.
இப்படித்தான் எலக்ட்ரானிக் என்பது மனித உணர்வின் தன்மை
எடுத்து மனித உணர்வை விஷத்தன்மை கொண்ட நாடாக்களில் பதிவு செய்கின்றார்கள்.
இந்த உணர்வின் அழுத்தம் வரும் பொழுது எதனுடன் கலக்கப்படுகின்றதோ அந்த அறிவே அதிலே இணைகிறது.
1.நோயாகி விட்டால்
அது கம்ப்யூட்டரில் உள்ள நாடாவில் இணைந்து விட்டால் அடுத்தவருக்கும் இந்த நோய்
வரும்.
2.குடும்பத்தில்
சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அதே உணர்வுகள் இணைந்து
4.அந்த
நாடாவின் மூலமாக அடுத்த குடும்பத்திலும் இந்தச் சண்டை
வரும்.
ஆகவே… கம்ப்யூட்டர்
இயக்குபவர்கள் தவறான பாதையில் செல்வது… தவறான நிலைகள் செயல்படுவது இதற்கும் அதற்கும் சம்பந்தம் உண்டு.
ஏனென்றால் இந்த உணர்வு எலெக்ட்ரானிக்காக மாறப்படும் பொழுது இதே உணர்வுகள் நாடாக்களில் பதிவாகும். பல நோய்கள்
வருவதற்கும்… சில வைரஸ்
என்று இவர்கள் சொல்வார்கள்… அதெல்லாம் உருவாவதற்கும் காரணமாகின்றது.
இதே போன்று தான் கம்ப்யூட்டரின் பயன்பாட்டால்
கோள்களின் உணர்வின் தன்மையை முகப்பில் இணைக்கின்றான். இவர்கள் விண்வெளிக்கு
அனுப்பும் சாதனங்களிலே அதைப் பொருத்துகின்றார்கள்.
அவ்வாறு முகப்பில்
வைத்து இணைத்து அனுப்பப்படும்
பொழுது எதைப் படமெடுத்து இந்த
உணர்வைப் பதிவாக்கினானோ அதனின்
இடத்திற்கு அழைத்துச் செல்கின்றது.
எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் வரப்படும் பொழுது குறிப்பிட்ட எல்லைக்கு ராக்கெட்
மூலமாக அனுப்பும் பொழுது கம்ப்யூட்டர் பதிவு செய்த நிலையில் அந்த எல்லைக்குச்
செல்கின்றது.
இதே போன்று தான்
1.நல்ல
குணங்கள் கொண்டிருக்கும் பொழுது ஒரு தீயவனின் உணர்வு பதிவான பின்
2.அந்த எல்லைக்கு
இந்த
உணர்வு நம்மை அழைத்துச் செல்கின்றது.
பிற உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம். இந்த
உடலுக்குள் பதிவாகி அது முகப்பான பின் உடலை விட்டுச் சென்றால்
அங்கே அழைத்துச் செல்கின்றது.
அதே சமயத்தில்
1.துருவ
நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களின் ஒவ்வொரு
முகப்பிலும் இணைத்து விட்டால்
2.உடலை
விட்டுச் செல்லும் பொழுது நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்கின்றோம்.
3.கணவன்
மனைவி இருவரும் அதை எடுத்து ஒன்றாக்கி விட்டால் சிருஷ்டிக்கும் ஆற்றல் பெறுகின்றோம்.
விஞ்ஞான அறிவுப் பிரகாரம் உங்களுக்கு இதை நிரூபித்துச் சொல்கிறேன்.
இதை எல்லாம் குருநாதர் எமக்குத் தெளிவாகக் காட்டினார். விஞ்ஞானிகள் எப்படிச்
செயல்படுத்துகின்றார்கள்…? புதிதாக எப்படிக்
கண்டுபிடிக்கிறான்…? எப்படி
எல்லாம் அதை இணைக்கிறார்கள்…? எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை வரும் பொழுது
எப்படியெல்லாம் உருவாகின்றது…?
படிக்காததனால் தான் இந்த அளவிற்குச் சொல்கின்றேன். ஆங்கில அறிவு
எனக்கு இல்லை…
இருந்திருந்தால் “தூள் கிளப்பி இருக்கலாம்…” ஆனால்
குருநாதர் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
குருநாதர் எல்லா பாஷைகளும்
பேசுவார். எனக்கு அது வேண்டாம்
என்று சொல்லிவிட்டார்.
பாஷைகள் கற்றவர் எத்தனையோ பேர்
இருக்கின்றார்கள். பற்று கொண்டோர் வரும் பொழுது அதன் வழிகளில் இதைக் கொண்டு செல்லலாம். உன் நேரத்தை
வீணாக்காதே… நீ இதைச்
செயல்படுத்து…! என்று
சொல்லிவிட்டார். அதன் வழியில் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை முகப்பில் நீங்கள் வைத்துக் கொண்டால் அது உங்களை
அங்கு அழைத்துச் செல்லும்.
2.துருவ
நட்சத்திரத்தின் உணர்வை பெருக்கும்பொழுது அது வளர்ச்சி அடையும்.
இதிலே வித்தையும் இல்லை ஒன்றும் இல்லை…!