ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 28, 2026

உயிரின் வேலை


ஒரு ஜீவணு மற்றொரு ஜீவ அணுவால் கொல்லப்படும் நிலை வரும் பொழுது அது தடுமாறி தன் நிலைகளில் தப்பித்துச் செல்லும் பொழுது உடல் அரிப்புகளும் மற்றும் நிலைகளும் ஏற்படும்.
 
இவையெல்லாம் இயற்கையின் நிலைகள் கொண்டு நடைபெறுகின்றன.
 
நாம் கரண்டினை உற்பத்தி செய்து அந்த கரண்ட்டுடன் எதனெதன் நிலைகளை இணைக்கின்றோமோ அதற்குண்டான செயல்களை அந்த கரண்ட் ஆனது செய்விக்கின்றது.
 
அது போன்று தான் நமது உயிரின் வேலையும்.
 
நமது உயிர் நாம் எண்ணிய உணர்வின் சத்தை ஜீவ அணுக்களாக உருமாற்றம் தன்மையைச் செய்விக்கின்றது. இவ்வாறு நமது உயிர் நமது உடலுக்குள் இருந்து செயல்பட்டு வரும் இந்த நிலையில் நாம் நம்மை அறியாதபடி சூட்சுமத்தில் மறைந்திருக்கும் இந்த நிலைகளைக் கண்கொண்டு பார்க்க முடிவதில்லை.
 
நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகளோ நாம் சுவாசித்து உயிரிலே உராயப்படும்போது தான் உணர்வின் தன்மை நம் உடலிலே அதனைக் காண்பிக்கிறது.
 
நாம் கண் கொண்டு திடப்பொருளைக் காணுகின்றோம். அதனின் தன்மையை நாம் அறிகின்றோம். ஆனால் கண்ணின் இந்தக் காந்த புலனறிவு அந்த மனிதன் தவறு செய்யும் பொழுது வெளிப்பட்டதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தாலும் கண்ணுடன் இணைந்த காந்தப் புலன் நாம் யாரை உற்று நோக்குகின்றமோ அதனின்றி வெளிப்படும் உணர்வின் தன்மையை நம்மை நுகரச் செய்கின்றது.
 
நுகர்ந்த உணர்வு உயிரில் மோதியவுடன் அது அகக்கண்ணாக நம் உடலுக்குள் அந்த உணர்வினைப் பரப்பி நம்மை அறியச் செய்கின்றது.
 
கண்ணால் திடப்பொருளைக் கண்டாலும் உணர்வால் அது உடலுக்குள் சென்று அது உணரும் தன்மை வருகின்றது. அத்தகைய உணரும் தன்மை வந்தாலும் நாம் சுவாசித்த உணவின் தன்மையை நம் உயிர் இயக்கிக் காட்டுகின்றது.
 
இயக்கிய உணர்வின் தன்மை நம் உடலில் இயங்கி அதனை இணைத்து விடுகின்றது. இவ்வாறு தான் சூட்சுமத்தில் இருப்பதை நாம் காண முடியவில்லை என்றாலும் அது நம் உடலாக திடமானாலும் அது திடமான பின் அதை நாம் காண முடிகின்றது.
 
இவ்வாறு வேதனை சோகம் போன்ற உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது இந்த உணவின் இயக்கங்களால் உடல்கள் சோர்வடைவதும் நோயாக உருவாவதையும் நாம் காணலாம்.
 
இவ்வாறு நம்மிடத்தில் செயல்படும் உணர்வின் இயக்கங்களை அறிந்து மாமகரிஷிகள் காண்பித்த அருள் வழியினைப் பின்பற்றி மகரிஷிகளின் அருள் ஒன்றே நம் அனைவரையும் உயர்த்தும் வல்லமை வாய்ந்தது என்பதை நாம் உணர்ந்து கொள்வோம்.
 
எல்லாம் வல்ல மகரிஷிகளின் அருள் ஆற்றலை நீங்கள் பெறவேண்டும் என்று ஆசீர்வதிக்கின்றோம்.