எறும்பிலிருந்து யானை வரை ஊர்வன… பறப்பன…
நடப்பன… எல்லா ஜீவ சரீரத்திற்கும் அவை பெற்ற “ஆத்ம உயிரின் ஒளி” ஒன்று போல் தான் இருக்கின்றது.
ஆனால் ஜீவ காந்த சரீர உணர்வின் நாத ஒலி கொண்ட
செயல்… இம்மனித சரீரத்தின் இயக்கத்தில் அதிகம் உள்ளது.
உணர்வின் எண்ணச் செயலை இச்சரீர இயக்கம் செயல்படுத்தக்
கூடிய அங்கக்கூறுகள் பெற்ற ஜீவ காந்த சரீரத்தைப் பக்குவப்படுத்தி… அதன் பக்குவத்திற்குகதந்த
ஆகாரத்தை நாம் செலுத்த ஜீவ இயக்கத் தொடர் தேவை.
மின்சாரத்தின் மூலம் விளக்கின் ஒளியைப் பெற
அவ்வொளியின் செயலுக்குகந்த காந்தமின் அலை தொடர்பைச் செலுத்திக் கொண்டே இருப்பதால் தான்
விளக்கின் மூலம் ஒளி கிடைத்துக் கொண்டே இருக்கிறது.. தொடர்பு அற்றால் ஒளி பெறும் தன்மையும்
தடைப்படுகின்றது.
அதைப் போன்றே…
1.ஜீவ காந்த மின் அலையின் தொடர்பிற்கு
2.தன் ஒளி என்றுமே ஒளிர்ந்து கொண்டே இருக்கும்
வளர் ஒளியை வளர்க்க
3.ரிஷிகள் தம் வட்டத்தின் வளர்ப்பின் தொடருக்கு
4.உணர்வின் எண்ணம் கொண்ட சரீர பிம்பங்களின்
ஜீவ காந்தத் தொடர்புடன்
5.தான் பெற்ற வலுத் தன்மையின் தொடரை இப்பூமியிலே
பதியச் செய்து
6.அத்தொடரின் ஈர்ப்பு வட்டத்தில் இருந்து
தன் வலுவை வலுவாக்கிக் கொண்டே
7.தொடர் ஜீவ சத்தைத் தன் தொடர் வட்டத்தின்
சுழற்சி கொண்டு எடுத்துக் கொண்டே
8.அத்தொடர் அலை பிரியா வண்ணம் உணர்வின் எண்ண
ஜீவித தொடர்பில்
9.தன் நினைவைப் பதிய வைத்த நிலையிலேயே செயல்
கொள்கின்றனர்.
அதைப் போன்றே… எண்ணத்தின் உணர்வு கொண்ட தொடர்பானது
ஜீவகாந்த மின் அலை செலுத்தும் உணர்வினால் எந்த ரிஷி பெற்ற தொடர்பிலும் எண்ணத்தைச் செலுத்திட
முடியும்.
அவ்வாறு செலுத்தித் தன் ஞானத்தை வளர்க்கும்
வலுவை… அறிய வேண்டிய எண்ணமுடன் தொடர்பைக் கொண்டு செலுத்தக் கூடிய எண்ணத்தின் தொடர்பினால்…
1.ரிஷித் தொடர்பின் அலையை வளர்க்க
2.அந்த காந்த மின் அலைத் தொடர்பை எண்ணத்தின்
பால் எடுக்கப்படும் வலுவைக் கொண்டு
3.நம் வளர்ப்பின் தொடர் சுழற்சி வலு கூடிக்
கொண்டே இருக்கும்.
ஏனென்றால் ஒருவர்பால் ஒருவர் செலுத்தக்கூடிய
உணர்வின் எண்ணத் தொடர்பில் தொடர் கொள்ளக் கூடிய மின் காந்த ஜீவ இயக்க வலுத் தன்மை நம்
வளர்ப்பின் வலுவிற்கு மிகச் சக்திவாய்ந்ததாக அமைகின்றது.
இதே ஜீவ காந்த வலுவை பிராணிகளிடத்திலிருந்தும்
பட்சிகளிடத்திலுருந்தும் நம் உணர்வைச் செலுத்தத்தக்க வழி முறைக்கொப்ப வலுத் தன்மை பெற
முடியும்.
ஜீவ காந்த சரீர எண்ண உணர்வின் செயலை…
1.நமக்குள் உள்ள உயர்ந்த தெய்வத் தன்மையை
வளர்க்கும் ஞான வலுவைக் கொண்டுதான்
2.வளர வேண்டிய வலுவிற்கே சக்தி கூடுகின்றது.
விஞ்ஞானத்தால் மின் காந்த தொடர்பில் இன்று
நாம் சிக்குண்டு… நாத ஒளி ஈர்ப்பை மின் அலைத் தொடர்புடன் அதிகமாகப் பெற்று… அவ்வலையின்
செயலையே இப்பூமியின் காற்று மண்டல அலைத் தொடர்பில் அதிகமாய்ச் சுழல விட்டுக் கொண்டுள்ளோம்.
அதிலேயே சிக்குண்டு அதன் பிடியிலேயே எண்ணத்தைச்
செலுத்தி அந்த ஒலி நாதங்களையே பெறுவதினால்
1.செயற்கை மின் காந்த செயலுக்கு…
2.இச்சரீர இயக்கமே அடிமைப்பட்டு… அதன் செயலாக
ஆகிவிடுகின்றது.
ஆக.. ஒரு ரேடியோ… காற்றில் கலக்கப்படும்
செயற்கைப் பதிவின் ஒலிகளை ஏரியல் மூலம் எடுப்பதைப் போன்று இச்சரீர இயக்கத்தின் ஒலி
நாதத்தால்… நாதத்தின் ஒலித் தொடர்பை…
1.எண்ணத்தின் உணர்வு அறியும் தொடர்பு கொண்ட
2.எத்தொடர் அலையையும்… பதிவு கொண்ட ஒலி அலை
யாவையும்… கேட்க முடியும்.
3.ஒலி பாய்ச்சிக் கேட்கும் ஒலியையும் காட்சியாகப்
பார்க்க முடியும்.
இச்சரீர உணர்வின் ஜீவ காந்த மின் அலைத் தொடர்பைச்
செயல்படுத்தும் ஜெப சக்தியினால் நம்மையும் வளர்த்துக் கொள்ள முடியும்.
பின்… நம் வலுவைக் கொண்டு பிறருக்கும் அந்த
அலைத் தொடர்பை ஊட்டி…
1.அத்தொடர்பின் வலுவை நாம் பெற்று
2.நம் வலுவை வளர்த்தோரின் (ரிஷி சக்திகள்)
வலுவுடன் செலுத்தி
3.அறிவோம்…! என்ற நிலை பெற்றுத் தன்னுள்
இருக்கும் தெய்வத்தின் செயலை உணர முடியும்.
படைப்பின் படைப்பாகப் பலவற்றையும் படைக்க...
ஒவ்வொரு உயிரணுவிலும் தெய்வத்தின் செயல் தன்மை செயல்படுத்துவதை செயலாக்க கூடியது இவ்வெண்ணம்
தான்…!
எண்ணத்தின் உணர்வைக் கர்ம காரியத்தில் உள்ள
இருளில் உள்ள உண்மையை… “ஒளி கொண்டு அறிந்து…!” ஆத்ம உயிரை வலுவாக்கி… வளர்ச்சி கொள்ளும்
“தெய்வ வளர்ப்பாய்…” ஒவ்வொருவரும் வளரலாம்.