ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 11, 2026

வித்தையைக் காண்பிக்கின்றேன் என்றார் குருநாதர்

வித்தையைக் காண்பிக்கின்றேன் என்றார் குருநாதர்


ஒரு சமயம் என் நண்பர் பாப்பம்பட்டி இராமசாமி நாயுடுவின் கரும்புத் தோட்டத்தில் யாமும் நமது குருநாதர் நாங்கள் இரண்டு பேரும் இருந்து கொண்டிருக்கின்றோம்.
 
1“நான் வித்தையைக் காண்பிக்கிறேன்டாவித்தையைக் காண்பிக்கிறேன்டா…!என்று சொல்லி விட்டுக் குருநாதர் என்ன செய்தார்?
 
கரும்புச் சக்கை சுற்றி எல்லாப் பக்கமும் கிடக்கின்றது. கரும்பு ஆலை இயங்கி கொண்டிருக்கின்றது. கரும்பு ஆலையில் பாகு சரியாக வரவில்லை
 
கரும்பு ஆலைக்குள் போனவுடன் சாறை எடுத்துக் குடிடா…! என்றார். குடித்தேன்அந்தப் பாகு சரியாக வரவில்லை என்று சொல்லி எம்மை அழைத்துச் சென்றார்கள்.
 
குருநாதர் நானும் வருகிறேன் என்றார்…! கூட்டிக் கொண்டு சென்றோம்.
 
உள்ளே சென்றவுடன் அங்கே மிஷினை நிறுத்தி விட்டார்கள். வெல்லம் எதுவுமே சரியாக வரவில்லை என்று சொன்னார்கள்.
 
குருநாதர் இரண்டு பேரும் போகலாம் என்றார். போனோம்…!
 
போனவுடன் மிஷினை ஓட்டுடா என்றார் என்னிடம்.
 
ஆயிலும் இல்லை ஒன்றும் இல்லைமிஷினை ஓட்டச் சொன்னால் எப்படி ஓட்ட முடியும்…? என்றேன்.
 
ஓட்டுடா என்கிறேன்சக்தியை வைத்துக் கொண்டிருக்கின்றான் திருட்டுப் பயல் ஓட்டுடா…! என்று மீண்டும் எமது குருநாதர் சொன்னார். எல்லாமே வைத்துக் கொண்டிருக்கிறாய் சுவிட்சைப் போட்டு வைத்திருக்கிறாய்உதை என்கிறார்.
 
எனக்கு ஒன்றும் தெரியாது சாமி…! என்கிறேன்.
 
1.இவன் என்னென்னமோ சொல்கிறான்இவன் என்னமோ பண்ணி வைத்து விட்டான்.
2.இவன் தான் செய்து வைத்திருக்கிறான்…! என்று திட்டிவிட்டு என்னென்னமோ பண்ணினார்…
3.கரும்புச் சாறும் வந்தது… கரும்புச் சாறு வந்தபின், முதல் தடவை வெல்லம் நன்றாக வந்தது.
 
அடுத்து என்னை இழுத்துக் கொண்டு போனார் குருநாதர்.
 
இராமசாமி நாயுடுவுக்கு எல்லாம் தெரியும். இராத்திரி பனிரெண்டு மணிக்கு நான் எடுத்துக் கொண்ட துணிமணிகளையெல்லாம் குருநாதர் ஒரு பையில் எடுத்து வைத்து விட்டார். இராத்திரி கை கால் வராமல் முடங்கிக் கொண்டு அவர் சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்.
 
எங்களைச் சுற்றிக் கரும்புக் காடு. சோகைகள் நிறைய இருந்தது. தீயை வைத்துவிட்டார் குருநாதர். இரண்டு பேரும்தான் உள்ளே இருக்கிறோம். எல்லோரும் வெளியிலே இருக்கிறார்கள். தீ சுற்றி எரிந்தால் கரும்புக் காடு எல்லாமே எரிந்துவிடும்.
 
ஐய்யயோ…! இவன் தீயை வைத்து விட்டான் தீயை வைத்து விட்டான்என்று என் பெயரைச் சொல்லி சத்தம் போடுகிறார். என்னைக் காப்பாற்றுங்கள்,. என்னைக் காப்பாற்றுங்கள் என்னை நெருப்புக்குள் போட்டு வாட்டுகிறான் பாவிப்பயல்…! என்று சத்தம் போடுகிறார். கை கால்களை இழுத்துக் கொண்டே, சத்தம் போடுகிறார்.
 
மற்றவர்கள் எல்லோரும் சுற்றி நின்று, பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு எங்கும் போக முடியவில்லை. என் வேஷ்டியிலும் தீ பிடித்துவிட்டது. அணைப்பதற்குத் தண்ணீர் கூட அந்த இடத்தில் இல்லை.
 
சாமிவேஷ்டி எல்லாம் தீ பிடித்துவிட்டது என்றேன்.
 
ஏன்டா…? தீயை நீ வைத்துவிட்டு என்னை ஏன்டா சொல்கிறாய்? என்கிறார் குருநாதர். இப்படியெல்லாம் அவஸ்தைப்படுத்தினார்.
 
தீ சுற்றி சூழ்ந்துவிட்டது. இன்னும் ஒரு நிமிடம் தான் இருக்கிறது…! அந்த அளவில் இருக்கப்படும்போது,
1.இந்தத் தீ எப்படிப் பரவுகிறது…?
2.இந்தத் தீயிற்குஉண்டான ஆற்றல் என்ன?
 
அவனுடைய ஆசை எப்படிக் கரும்புச் சாறுக்காக வேண்டி இங்கே ஆலையை வைத்தான்? என்று இத்தனை உணர்வை அங்கே காட்டுகின்றார்.
 
அவன் பணத்திற்காக வேண்டி ஆசைப்பட்டு வைத்தான். நீ சக்தி பெற வேண்டும் என்ற நிலைகளில் இங்கே வந்து கொண்டிருக்கின்றாய். நெருப்பு வந்து சூழ்ந்து கொண்டிருக்கின்றதுநீ எங்கே தப்பப் போகின்றாய்?
 
1.நீ ஆசையின் நிலைகளில் இருந்து கொண்டிருக்கின்றாய்.
2.அவன் ஆசையில் அங்கே இருக்கிறான்
3.ஆனால் அவன் வெளியே இருக்கிறான் நீ இங்கே இருக்கின்றாய்.
 
அந்த இடத்தில் உபதேசம் எப்படிக் கொடுக்கிறார்…? பாருங்கள்.
 
எல்லாவற்றையும் போட்டு நசுக்கித் தீயை அணைக்க முற்படுகிறார்கள். எல்லாம் நசுக்கினாலும்சுற்றி அனல் தாங்க முடியவில்லை, சோகை முழுவதும் அனல் பிடித்திருக்கிறது. இவ்வளவு அவஸ்தையில் இருந்து கொண்டிருக்கிறேன்.
 
அவன் ஆசையில் வந்தான். கரும்புச் சாறு சரியாக இருக்கிறது என்றான் உன்னைப் போற்றினான்நீயும் எல்லாம் பண்ணினாய். இப்பொழுது தீ பிடித்துக் கொண்டது.
 
இப்பொழுது என்னை யாரடா காப்பாற்றப் போகிறார்கள்…? சக்தி என்ன ஆனது? என்று கேட்கிறார்.
 
தீ பிடிக்கிறது எல்லாம் பண்ணிவிட்டு என்னமோ மந்திர வேலை பண்ணிவிட்டான். என்னைத் தீயை வைத்துக் கொல்கிறான்என்னைக் காப்பாற்றுங்கள்…! என்றார் குருநாதர்.
 
அவர்கள் அங்கே அருகில் நெருங்க முடியவில்லை. என் கரும்புக் காடெல்லாம் போகிறதே…!” இங்கே தண்ணீர் ஊற்றுஅங்கே தண்ணீர் ஊற்று..,! என்கிறார்கள்.
 
மோட்டர் பம்பைப் போடு என்றாலும் கூட அங்கே சுவிட்ச் தண்ணீராகி விட்டதால் அந்த மோட்டாரே பாயிலாகி போய்விடுவது போல இருக்கிறது. இந்த அளவுக்கு ஆபத்தான நிலைகளில் சிக்க வைத்துவிட்டு நம்மைப் பார்க்கிறார்.
அப்படியெல்லாம் சிக்க வைத்துத் தான் எனக்கு உண்மைகளை உணர்த்தினார்.
1.அவ்வாறு உணர்ந்ததை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
2.கஷ்டத்தைப் போக்குவதற்குக் கஷ்டம் வரும்போது அதை நிவர்த்தி செய்ய ஆத்ம சுத்தி செய்யச் சொன்னால் நேரம் இல்லைஎன்கிறீர்கள்.
 
ஆனால் அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தைப் புகுத்தி எனக்கு அப்படியே மரணமடையும் நிலை வந்து விட்டது. அப்படி மரணமடையும் நிலைகளில்தான் விளக்கமும் கொடுக்கிறார்.
 
அவருடைய ஆசையில் உன்னைக் கூட்டிக் கொண்டு வந்தாலும் அந்த ஆசையிலிருந்து அவரகள் தப்பிப் போக முடிந்தது. அவர்கள் அங்கே இருக்கிறார்கள்.
1.ஆனால் நீ எல்லாச் சக்திகளைப் பெற்றாலும், புகழுக்காக வேண்டி இதைச் செய்தாய்.
2.நீ இதற்குள் மாட்டிக் கொண்டிருக்கும் போது உன் புகழ் எங்கே போகப் போகிறது?
3.இவ்வளவு பெரிய சக்தியை வைத்துக் கொண்டு நீ என்ன பண்ணப் போகின்றாய்?
4.என்னையும் இழுத்துக் கொண்டு சிக்க வைத்துவிட்டாய்…! நான் என்னடா பண்ணட்டும்?  என்கிறார் குருநாதர்.
 
கொஞ்ச நேரம் கழித்துஹா.. ஹா. என்று சிரித்துவிட்டு இந்த உணர்வின் நிலைகள் அத்தனையுமே மனிதனாகப் போகும்போது என்னவாகும்?  என்பதை உணர்த்தினார்.
 
மரணமாகக் கூடிய தருணம்,.. வேஷ்டி தீ பிடித்து எரிகிறது. வேறு வழியே இல்லை…! அப்பொழுது நெருப்புக்குள் இருந்து அந்த உணர்வின் அலையை எடுத்துக் காட்டுகிறார்.
1.நீ மரணமடையப் போகும் பொழுது எந்த நிலை?
2.உன் உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் அலைகள் என்னென்ன செய்கிறது?
3.அணுக்களின் செயலும்உன் ஆசையின் நிலைகளும்உன் உடலுக்குள் வளர்ந்த முந்தைய அணுவின் நிலை எப்படி?
4.அணுவின் ஆற்றலின் தன்மையைக் காட்டுகின்றார்.
 
ஆனால்… என் உடலில் தீ பிடிக்க வைத்து அந்த மாதிரிச் செய்தார்.  இதையெல்லாம் முதல் புத்தகத்தில் யாம் கொடுக்கவில்லை. கொடுத்தால் பயந்து விடுவீர்கள். இப்படியும் இருக்கிறதா? என்று.
 
இன்று உலகத்தின் நிலைகளில் விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்டது. அவனுடைய ஆசையில் தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய உணர்வுகளிலேயே அவன் அதற்குள்ளேயே போய் சிக்கிக் கொண்டான்.  
 
ஏனென்றால் விஞ்ஞானிகள் இயற்கையின் நிலைகளில் இதனுடைய அலைகளை வைத்து ஒரு நொடிக்குள் அனைவரையும் மாய்க்க வந்துவிட்டார்கள்.
 
மனிதன் சூரியனிலிருந்து தோன்றிய உணர்வின் அணு கொண்டு வளர்ந்தான். இதையெல்லாம் பின்னாட்களில் விஞ்ஞானிகள் அறிவிப்பார்கள். ஒவ்வொரு நிமிடத்திலும் யாம் காலத்தை விரயம் செய்யவில்லை.
 
உங்கள் ஒவ்வொருவர் உயிரையும் ஈசனாக மதித்து அந்த உடலுக்குள் இருக்கக்கூடிய உயிரை மதித்து
1.அந்த அணுவின் இயக்கங்களுக்குள் உங்களுடன் இரவும் பகலும் தொடர்பு கொண்டு
2.அருள் ஞானிகள் உணர்வைப் பதிவு செய்கின்றோம்.
3.அந்த ஞானிகளின் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்று
4.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் சதா ஜெபித்துக் கொண்டிருக்கின்றோம்.
 
ஆனால் எவ்வளவு சிரமப்பட்டு விஞ்ஞான அழிவிலிருந்து மீளுவவதற்கு இந்த உணர்வைப் பாய்ச்சச் செய்து உங்களுக்குள் ஆற்றல் மிக்க சக்தியைப் பெருக்கினாலும் இதைச் சிந்திப்பார் யாரும் இல்லை…
 
இவ்வளவு பெரிய ஆற்றல்களையும் நமது குருநாதர் எப்பொழுதும் இயக்கிக் கொண்டிருக்கின்றார்.
1.குருநாதர் இட்ட கட்டளைப்படி ஒவ்வொருவரது உடலிலும் இதைப் பதிவு செய்கின்றோம்.
2.விஞ்ஞான அறிவால் உலகையே கரைக்கும் நிலைகள் வரும்போது அதை மாற்றும் நிலை வேண்டும்.
 
அதற்கு துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஒரு பத்து நிமிடமாவது எடுத்துக் கொள்ளூங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தனக்குள் கூட்டியபின் மகரிஷிகளின் ஒளியை நீங்கள் பெறுங்கள்.