
நம் உடலில் உருப் பெறும் அணுக்களை நல்லதாக மாற்றும் பயிற்சி
நாம் கெட வேண்டும் என்று யார் எண்ணினார்களோ அவர்களை நாம்
எதிரியாகக் கருதும் பொழுது “எதிரியைத்தான்…” உடலுக்குள்
வளர்க்கின்றோம்.
இதை மாற்றுவதற்குத் தான் ஞானிகள் காட்டிய விநாயகர்
தத்துவத்தின்படி
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நல்ல
குணங்களுக்கு ஊக்கச் சக்தியைக் கொடுப்பதும்
2அவர்கள் தீமையான உணர்வுகளைச் சொல்லும்போது மகரிஷிகள் அருள்
சக்தியை வைத்து அதை இடைமறிக்க வேண்டும் என்றும் சொல்வது.
காரணம் கண்களிலே பார்த்தது நமது ஆன்மாவாகின்றது. சுவாசித்த பின் உயிரிலே
படுகின்றது… அந்த உணர்வு இயக்கப்படும் பொழுது ஜீவணுவாக
மாறுகின்றது.
முதல் அணு உருவாகி விட்டாலும் அடுத்த நிமிடம் மகரிஷிகளின்
அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள்
சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.
ஏனென்றால்
1.கண் இப்படி முன்னாடி வருவதை எடுத்து அதன் வழி நேரடியாகப் பேசுகின்றது.
2.ஆனால் கண்களால் மகரிஷிகள் உணர்வை எண்ணி அதை எடுத்து இடைமறித்து
உயிரிலே (புருவ மத்தியிலே) இணைக்க
வேண்டும்.
ஏனென்றால் இதையெல்லாம் திரும்பத் திரும்ப உங்களுக்கு
ஞாபகப்படுத்துகின்றோம். காரணம் என்ன என்றால் மறந்து விட்டுத் தீமைகளை எப்படி மாற்றுவது…? என்று தெரியவில்லை என்று திரும்பக் கேட்பாரும் உண்டு.
அதனால்தான் ஞாபகப்படுத்துவது…!
வாழ்க்கையில் வரும் தீமைகளை இடைமறித்து அருள் ஞானிகள் உணர்வை
உள்ளே செலுத்தப்படும் பொழுது தீமைகளை அகற்ற முடிகின்றது.
தங்க நகைகளைச் செய்கின்றோம்… செம்பு வெள்ளியை அதனுடன் இணைத்துத்தான்
செய்கின்றோம். ஆனால் அதை வைத்து அடுத்த நகை செய்யும் பொழுது
திரவகத்தை ஊற்றிச் சுத்தப்படுத்துகின்றோம்.
1.தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றிய “அந்த வலுப்பெற்ற உணர்வுகள் மகரிஷிகளுடையது…”
2.அதை நாம் நுகர்வதற்குத் தான்… பெறும்
தகுதியை ஏற்படுத்துவதற்குத் தான்… நமது குருநாதர் காட்டிய அருள்
வழியில் “தியானம்…”
அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள்
உடல் முழுவதும் படர வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது இது தியானம். மகரிஷிகள் அருள்
சக்திகளை உடலுக்குள் செலுத்தச் செலுத்த உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அது உரம்
ஆகின்றது.
1.பிறர் செய்த தீமைகள் நம் உடலுக்குள் உருவாவதற்கு முன்பு அந்த
மகரிஷியின் உணர்வை இதனுடன் இணைக்கப்படும் பொழுது
2.தீமையான அணுவாக அது வளர்வதற்கு முன் “அந்த
அணுவையே…” நமக்குச் சாதகமான நிலைகளாக மாற்றிவிடும்.
3.தீமையை அடக்கும் உணர்வாக அணுவாக விளையச் செய்யும் பொழுது “ஒவ்வொன்றிலும் நமக்கு வலுப்பெறுகின்றது…”
இரண்டு தரம் கெட்டதைக் கேட்டோம் அல்லது சொன்னோம் என்றால்
நல்லது செய்வதை அது தடைப்படுத்துகின்றது. ஆனால் அதே சமயத்தில் அது போல் ஆன பின்
அடுத்த கணம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை இணைத்து விட்டால்
1.அந்த அணு நம் வழிக்கே இணைந்து வருகின்றது.
2.அப்பொழுது நம்மைக் காக்கும் அணுவாக விளையத் தொடங்குகிறது.
அதற்குத் தான் விநாயகர் தத்துவத்தில் நமக்குள் எதை வினையாக்க
வேண்டும்…? வினைக்கு நாயகனாக எதை இயக்க வேண்டும்…? என்று கேள்விக்குறி
போட்டுக் காண்பிக்கின்றார்கள்.
உதாரணமாக… வேதனைப்படும் நிலையாகி விட்டால் அது வேதனையை அதிபதியாக்கும்
அணுவாக விளையத் தொடங்குகிறது. அந்த அணுவின் செயலாக்கங்களையே
கொண்டு வருகின்றது.
அதே சமயம் இதை அடக்கிய மகரிஷிகள் உணர்வை அங்கே
இணைக்கப்படும் பொழுது
1.அந்த அணுவிற்குள் ஞானியின் உணர்வுகள் அதிபதியாகத் தொடங்கி
விடுகின்றது.
2.பின் ஒளியான அணுக்களாகவே உருப்பெறத் தொடங்கி விடுகின்றது.
ஆகவே இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைக் கண்டுணர்ந்தாலும்
நாம் அந்த மெய்ஞானியின் உணர்வை வினையாக்க வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மலரைப் போன்ற மணம்
பெற வேண்டும் நாம் பார்ப்போருக்கெல்லாம் அந்த நிலை கிடைக்க வேண்டும் என்று இப்படி
எண்ணினால்
1.நாம் யாரையுமே எதிரியாக ஆக்குவதில்லை.
2.நமக்குள் எதிர்மறையான அணுக்களும் உருவாகாது
3.ஒன்று சேர்ந்து வாழும் நிலைகள் உருவாகின்றது… மகிழ்ந்து வாழும் சக்தி பெறுகின்றோம்.