ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 11, 2025

“உயிரே கடவுள்…” என்று தான் முதலிலிருந்தே யாம் சொல்லிக் கொண்டு வருகிறோம்

“உயிரே கடவுள்…” என்று தான் முதலிலிருந்தே யாம் சொல்லிக் கொண்டு வருகிறோம்


1.பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரினங்கள் எல்லாம் தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட நிலைகளை எண்ணிப் பார்க்கின்றது…
2.அதிலிருந்து தப்பிக்க வேண்டும்…! என்ற உணர்வினைத் தான் தனக்குள் உருப் பெறச் செய்கின்றது.
 
அதனுடைய சந்தர்ப்பம் இப்படி உருப்பெறும் பொழுது அது வளர்ச்சியாகி அந்த உடலை விட்டு அகன்ற பின் அந்த வலிமையான உடலுக்குள் சென்று பரிணாம வளர்ச்சி அடைகின்றது…
 
ஆனால் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்த நாம்
1.தீமை செய்வோரின் உணர்வை எடுத்துக் கொண்ட பின்... தீமை செய்வோரையே எண்ணி...
2.அந்தத் தீமை நமக்குள் வலிமையாக வளர்ந்து விட்டால் அது நம்மைத் தேய்பிறையாக மாற்றுகின்றது.
 
அப்படித் தேய்பிறையாக மாறாதடி நாம் மாற்ற வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை மாற்றி நமக்குள் உருவாக்க வேண்டும்.
 
ஏனென்றால்...
1.நாம் எதை எண்ணிக் கொடுக்கின்றோமோ அதன் வழி தான் நம் உயிர் அதை உருவாக்குகின்றது...
2.அணுவாக உருவாக்குகின்றது உணர்வின் சத்தைத் தனக்குள் பதியச் செய்கின்றது.
3.அதையே மீண்டும் எண்ணும் பொழுது கடவுளாக நின்று அந்த வழியிலேயே நமக்குள் உருவாக்குகின்றது.
 
ஆகவே நாம் எண்ணியது எதுவோ உயிர் அது உருவாக்குகின்றது. உருவாக்கியதை... மீண்டும் அந்த எண்ணத்தை வலு சேர்க்கும் போது அந்த வளர்ச்சி நமக்குள் பெறுகின்றது.
 
அதே போல் தான் யாம் கொடுக்கும் அருள் உபதேசங்களை ஒரு தடவைப் பதிவாக்கி விட்டு அதற்குப் பின் அப்படியே விட்டு விட்டால் மீண்டும் அதற்கு உணவு கிடைக்க வேண்டுமல்லவா...!
 
1.நேற்று சாப்பிட்டால் இன்று ஏன் சாப்பிட வேண்டும்…? இன்று விட்டு விட்டால் என்ன ஆகும்...!
2.அது போல் தான் தியானம் இருந்தோம்... ஆத்ம சுத்தியும் செய்தோம்...
3.மீண்டும் மீண்டும் அதை எல்லாம் எதற்குச் செய்ய வேண்டும்...? என்று விட்டுவிட்டால்
4.சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமை நமக்குள் வலுவாகி விடும்.
5.கொடுத்த சக்தியை வளர்ப்பது தடையாகிவிடும்.
 
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து எமக்கு (ஞானகுரு) அனுபவமாகக் கொடுத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
 
நாம் எண்ணியதை உயிர் அணுக்களாக மாற்றும் பொழுது
1.அதைக் காக்கும் காவல்காரனாக இருப்பதும் உயிரே
2.அந்த உணர்வுக்கு உணவு கொடுப்பதும் உயிரே
3.அந்த உணர்வை இயக்கிக் கொண்டிருப்பதும் உயிர்தான்…!
 
ஆறாவது அறிவு கொண்டவர்கள் நாம் இதைத் தெரிந்து கொள்கின்றோம். அந்த மெய்ஞானிகள் உணர்வை இதனுடன் இணைக்கப்படும் பொழுது அதையும் காப்பது ஆண்டவனாக இருப்பதும் உயிர் தான்.
 
ஆகவே…
1.எண்ணியதை இறையாக்கி இறைவனாக இருப்பதும் உயிரே.
2.இறையின் உணர்வே செயலாக்கும் பொழுது தெய்வமாக ஆக்கிக் கொண்டிருப்பதும் உயிரே.
3.ஆண்டவனாக இருப்பதும் ஈசனாக இருப்பதும் உயிரே.
 
இதனால் தான்
1.முதலிலேயே உயிரே கடவுள் என்பதைச் சுருக்கமாகக் காட்டி உணர்வின் செயலாக்கங்களை
2.உயிரே கடவுள்…! என்ற நிலைகளைக் குருநாதர் எம்மிடம் சொல்லி வந்தது.
 
உயிர் கடவுளாக இருக்கின்றான் ஆண்டவனாக இருக்கின்றான் எண்ணியதை இறையாக்குகின்றான் இறையின் உணர்வைச் செயலாக்கும் பொழுது தெய்வமாக இருக்கின்றான்.
 
உறையும் உணர்வின் தன்மையைச் சிவமாக உடலாக்குகின்றான். எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை வினையாக்கி
1.வினைக்கு நாயகனாக இயக்கிக் கொண்டிருக்கின்றான்அது தான் விநாயகா…!
2.இவ்வளவு பெரிய பேருண்மையை நமது குருநாதர் அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த உணர்வை நேரடி அனுபவத்தில் எனக்குக் கொடுத்துக் காட்டினார்.
 
ஆனால் இதை எவ்வளவோ கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டேன்… அதைப் பெற்றேன்.
 
நம் குருநாதர் அவர் உணர்வின் ஒளியாக ஒளியின் சரீரம் பெற்றார். இருந்தாலும் அவர் உடலில் விளைந்த உணர்வலைகள் எப்படி இருக்கின்றது…? அவர் எதை எதை எல்லாம் தன் உடலில் விளைவித்தாரோ இந்த உணர்வலைகள் அனைத்துமே இங்கே உண்டு.
 
ஏனென்றால்… சில பேருக்குக் காட்சிகள் கிடைத்த உடனே குருநாதர் எனக்கு வந்து சொல்கின்றார்…” என்று சொல்வார்கள். உனக்கு இதையெல்லாம் செய்கின்றேன் எனக்கு இதைக் கொடு…! என்று சிலர் கேட்கின்றார்கள்.
 
அந்த ஆசையால் நுகர முடிகிறது. அவர் உருவத்தைக் காண முடிகிறது. அவர் பைத்தியக்காரராக எப்படிச் செயல்பட்டாரோ இந்த உணர்வுகளை எல்லாம் அது இயக்கும். அதையெல்லாம் நாம் விடுத்துப் பழக வேண்டும்
 
அதே சமயத்தில் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்று சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்.
1.அதாவது… உடலிலே உணர்வை ஒளியாக மாற்றி உணர்வின் அறிவாக மாற்றிய அலைகளும் உண்டு.
2.நாம் தைத் தான் பிரித்து எடுக்க வேண்டும்…?