ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 12, 2025

ஆதிசங்கரர்

ஆதிசங்கரர்


காசி கங்கைக் கரையின் எதிர்த் திசையில் இருக்கும் கரைக்கு குருநாதர் என்னைப் போகச் சொன்னார். அங்கிருக்கக்கூடிய அரண்மனைக்கு அருகில் தான் ஆதிசங்கரருக்கும் துவைதவாதிகளுக்கும் அத்வைதத்திற்கும் வாக்குவாதம் நடந்து.
 
ஆதிசங்கரருக்கு ஏவல் செய்து வயிற்று வலியை வரவழைத்தார்கள். யாக வேள்விகளை எல்லாம் செய்தால்தான் இந்த வயிற்று வலி போகும் நீ தைச் செய்ய வேண்டும் என்று சொல்கின்றார்கள்.
 
ஆதிசங்கரர் அதற்கு விளக்கம் கொடுத்து
1.மெய் ஞானிகள் காட்டிணர்வைத் தனக்குள் எடுத்துத் தன் உயிரான நெருப்பிலே இட்டு இந்த உணர்வினைப் பரப்பி
2.நீ ஏவல் செய்ததை என்னால் சுட முடியும் என்று அதை எடுத்துச் சேர்த்துத் தன் வயிற்று வலியை நீக்குகின்றார்.
 
ஏவல் செய்ததை நீக்கிய பின்பு தான் இவரை இப்படியே விட்டு விட்டால் மீண்டும் நமக்குத் தொல்லைகள் வரும் என்று எண்ணி… ஆதிசங்கரரை ஆற்றின் மறு கரையில் கொண்டு போய் விடுகிறோம் என்று படகிலே அழைத்துச் செல்லும் பொழுது கங்கையிலே கவிழ்த்து அவரை நீர் சமாதி வைத்து விடுகின்றார்கள்.
 
அதிலிருந்து ஆதிசங்கரருடைய (சரித்திரம்) உண்மை நிலைகள் தெரியாது. போனார் வந்தார் என்று இருக்கும். சங்கரர் உடலை விட்டு எப்படிப் பிரிந்தார்…? என்று இருக்காது.
 
இந்த உண்மையைச் சொல்லி அவர் எடுத்துக் கொண்ட ஆற்றலை எனக்கு உணர்த்துகிறார் குருநாதர்.
 
சாங்கிய சாஸ்திரத்திலே மூழ்கிய நிலைகள் கொண்டு துவைதத்தின் படி உருவத்தைக் காட்டிச் சாங்கியம் செய்து கடவுளிடம் வரம் கேட்பதும் அத்வைதப்படி உண்மையின் உணர்வின் சக்தியை நினைவில் கொண்டு கவர்ந்து தனக்குள் அந்த உணர்வின் தன்மை உறையச் செய்வதும் உணர்வின் நினைவாற்றல் நாம் எவ்வாறு பெற வேண்டும்…? என்ற அந்த வாக்குவாதத்தன்மை அங்கே நடந்ததைக் குருநாதர் உணர்த்துகின்றார்.
 
அத்வைதம் துவைதம் என்று சொல்கிற பொழுது
1.சூட்சம நிலைகளில் நாம் எதை எடுக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை உடலாக்குகின்றது.
2.அந்த உணர்வின் அணுவாக இயக்கப்படும் போது விசிஷ்டாத்வைதம்
3.தனக்குள் இந்த உணர்வின் கிளர்ச்சிகள் தூண்டப்பட்டு இந்த உணர்வின் செயலாக்கங்கள் எப்படி இருக்கிறது…? என்று…!
 
ஆனால் ஆதிசங்கரருக்கு ஏன் கடைசியில் அந்தக் கதி…? என்று வரும் பொழுது
1.அவருக்கு உடல் பற்று இல்லை விண்ணின் பற்றைத் தன் குருவான கோலமாமகரிஷியின் உணர்வுகளைப் பெற்றவர்.
2.அவரோ கோள்களின் தன்மைகளை அறிந்தவர்.
3.தைணர்ந்த நிலையில் தனக்குள் விளைய வைத்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணியர்.
4.இந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கியவர்.
5.அதை எவ்வாறு பெற வேண்டும்…? என்ற நிலையை உணர்ந்தவர்.
6.விண்வெளியின் அந்தத் துருவ மகரிஷியின் உணர்வைப் பற்றுடன் பற்றியவர் என்று
7.அந்த இடத்திலே வைத்து குருநாதர் எனக்கு இந்த விளக்கத்தைக் கொடுக்கின்றார்கள்.
 
கோலமாமகரிஷி… தான் வாழ்ந்த காலத்தில் அவர் பெற முடியாத இந்தச் சக்தியை ஆதிசங்கர் உடலுக்குள் புகுந்து அத்வைதத்தின் தத்துவத்தைப் பரப்பியவர். அதன் வழி தனக்குள் விண்ண்ணின் ஆற்றலைப் பெருக்கியவர். அதன் துணை கொண்டு ஆதிசங்கரருக்கும் அந்தச் சக்தியைக் கிடைக்கச் செய்தவர்.
 
ஆதிசங்கர் என்ன செய்தார்…? கோலமாமகரிஷி என்ன செய்தார்…? என்று நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம். இந்த உண்மைகளை எல்லாம் அங்கே குரு உணர்த்துகின்றார்.
 
அவர் உடலைப் பற்றவில்லை. அந்த அருள் ஞான உணர்வை எடுத்து ஏவலால் உண்டான வயிற்று வலியை நீக்குகின்றார். பின் தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் செல்கிறார்.
1.அவர்கள் இருவருமே சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விட்டார்கள்.
2.ஆதிசங்கரருடைய அருள் உணர்வுகளை நாமும் பெற முடியும்.
3.அவர் கண்ட மெய் ஒளியையும் நாம் பெற முடியும்.
 
தாய் வழியில் தான் அவருக்கு அந்தச் சக்தி கிடைத்தது. கங்கைக் கரையில் வைத்து குருநாதர் இதை எல்லாம் எனக்கு உணர்த்துகின்றார்.