
நான் செய்தேன்…! இப்படி இருக்கின்றதே…! என்ற வேதனைப்படக் கூடாது
1.எக்காரணத்தைக் கொண்டும்… இந்த
வாழ்க்கையில் எத்தகைய அச்சுறுத்தும் உணர்வுகள் வந்தாலும்…
2.அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்து அதை வளர்க்கப்படும் பொழுது
3.நம்மை அச்சுறுத்தும் அந்த உணர்வுகள் ஒடுங்கும்.
4.மகரிஷிகள் உணர்வுகள் அதை அச்சுறுத்தும்…!
ஆகவே… ஒவ்வொரு நிமிடத்திலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்க
நீங்கள் பழகிக் கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வாழும் இடங்களில் எல்லாம் அந்த
மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… எங்கள் தெரு முழுவதும் படர வேண்டும்… தெருவில் இருப்பவர்கள் அனைவரும் ஒற்றுமையாக சந்தோசமாக இருக்க வேண்டும்…! என்ற தவத்தை மேற்கொள்ளுங்கள்.
நண்பர்களாக இருக்கின்றோம். சந்தர்ப்பத்தால் அந்தக் குடும்பத்தில்
இன்னல்கள் படுகின்றார்கள் என்று தெரிந்து கொண்டால் அந்த மகரிஷியின் அருள் சக்தி
நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று தியானியுங்கள்.
அந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் அந்தக் குடும்பத்தில் உள்ளோர்
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்… குடும்பம் நலமாக இருக்க வேண்டும்… மகிழ்ந்து வாழ
வேண்டும் என்று இந்தத் தவத்தை எடுங்கள்.
இது உண்மையான தவம் ஆகிறது.
1.இதைச் செயல்படுத்தினீர்கள் என்றால் நமது குரு அருளை உங்களுக்குள்
காணலாம்
2.பேரண்டத்தின் நிலைகளையும் உங்களுக்குள் காண முடியும்.
இதை நீங்கள் செய்து பாருங்கள்.
யார் கஷ்டப்படுகின்றார்கள் என்று கேள்விப்பட்டாலும் கூட உடனே
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானியுங்கள். உடலுக்குள் அதைச்
சேர்த்துக் கொள்ளுங்கள். மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று நினையுங்கள். அந்தக்
குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்ற தவத்தை எடுங்கள்.
இதைப் பெருக்குங்கள். இதையெல்லாம் நீங்கள் செய்து பழக வேண்டும்
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று கூட்டுத்
தியானமிருங்கள்.
அனைவரது குடும்பங்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று தவம்
இருங்கள்.
1.எல்லோரும் அப்படிச் சொல்லி… அதைப் பெற வேண்டும் பெற வேண்டும் என்று
2.எல்லோருடைய தவமும் ஒன்று சேரும் பொழுது நல்ல பலனைக்
கொடுக்கும்.
இதனை வரிசைப்படுத்தி நாம் கொண்டு வருதல் வேண்டும்.
நான் செய்தேன்…! இப்படி இருக்கின்றதே…! என்ற நிலைகளை எடுக்கக் கூடாது. தொழில் செய்யும்
இடங்களிலும் இதைச் செய்து பழகிக் கொள்ளுங்கள். இந்தத் தவத்தை
மேற்கொள்ளும் பொழுது அங்கே தவறுகள் மறையும்.
ஏனென்றால் இந்தத் தவறை வளர்த்துக் கொண்டால் நமக்குள்ளும் தவறுகள்
விளையும்.
அந்த உணர்வே மீண்டும் இயக்கச் சக்தியாக வரும்.
தவறு செய்கின்றான்… தவறு செய்கின்றான்..!
என்று தவறு செய்தவனைச் சொல்லிக் கொண்டிருந்தால் இது
எங்கெல்லாம் சொல்கின்றோமோ இந்த உணர்வு அங்கே விளைந்து
எல்லோரையும் இந்தத் தவறையே செய்ய வைத்துவிடும்.
பின்… “எங்கே பார்த்தாலும் தவறாகவே
இருக்கின்றது…” என்று மீண்டும் அதைத்தான் வளர்க்க ஆரம்பித்து
விடுவோம்.
1.குருநாதர் எந்த வகையிலெல்லாம் எனக்குக்
கொடுத்தாரோ
2.அதையெல்லாம் துணுக்குத் துணுக்காக உங்களுக்குக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
3.அதன் வழியில் ஒவ்வொரு நிமிடமும் தியானித்துப் பழகுங்கள்.
மகரிஷிகளின் அருள் சக்தி நம் குடும்பத்தில் எல்லோரும் பெற
வேண்டும் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற இந்தப் பழக்கத்திற்கு நாம்
அனைவருமே வந்துவிட வேண்டும்.
குரு வழியில் இப்படிச் செயல்படுத்தினால் இந்த உலகையும் காக்கின்றோம்… நம்மையும் காக்கின்றோம்.
ஒவ்வொரு நாளும் பிறருடைய கஷ்டங்களைக் கேட்கின்றோம். அந்தக் கஷ்டமான அலைகளைச்
சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்திருக்கின்றது.
அதை மாற்றக் கூட்டுத் தியானங்களிலிருந்து எல்லோருக்கும் அந்த
உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று அந்த ஞானிகள் உணர்வு இங்கே வரப்படும் பொழுது
தீமைகள் ஒடுங்குகின்றது.
நம்முடைய எண்ணங்கள் அதிகமாக இதைப் பிரதிபலிக்கும் பொழுது
காற்றில் கலந்துள்ள நச்சுத்தன்மையை ஈர்க்கும் நிலை இழக்கப்பட்டு அந்த உணர்வுகள்
அகன்று சென்று விடுகிறது.
நாம் வசிக்கும் தெருவிலே இது போன்ற அலைகளைப் பாய்ச்சப்படும்
பொழுது அதை மாற்றி அமைக்கும் சக்தி நமக்குக் கிடைக்கின்றது.
1.குரு அருளை நமக்குள் வளர்த்து… நாம்
எல்லாம் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த உலகைக் காக்கும் சக்தியாக வர வேண்டும்.
2.எல்லா இடங்களிலும் இதைப் பரப்பி பழகுதல் வேண்டும்.
3.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை வழி நடத்திக் கொண்டு
போக வேண்டும்.
இந்த உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் இதைச் செயல்
வடிவுக்கு கொண்டு வந்தால் போதும்.
“சிரமம்…” என்ற அந்தச் சொல்லே நமக்கு
வேண்டியதில்லை. உடனுக்குடன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற
வேண்டும் என்று தியானியுங்கள். இந்தக் குடும்பங்கள் எல்லாம்
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தவமிருந்தால் “அந்தத் தவம்…” நமக்குள் வளர்கின்றது.
அதே சமயத்தில் குடும்பம் நன்றாக வேண்டும் என்று திரும்பத்
திரும்ப எண்ணும் போது “அந்தக்
குடும்பங்களின் கஷ்டங்கள் நம்மைச் சாடாது…”
1.இதைத் தொடர்ந்து செய்து வந்தால் நாம் பார்க்க விரும்பிய
சப்தரிஷி மண்டலமும்
2.எப்படியெல்லாம் அந்த ஞானிகள் உணர்வை ஒளியாக மாற்றி உருபெற்றார்களோ
அதையும் நீங்கள் பார்க்கலாம்.
3.நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்…
நீங்களும் பார்க்கலாம்.
சில பேருக்கு இப்பொழுதும் தெரிகின்றது. தெரிந்தாலும் நிஜமா… பொய்யா..? என்று சந்தேகம் உள்ளுக்குள் மாற்றிக்
கொண்டே இருக்கும். நாம் பார்ப்பது நிஜமா…? என் எண்ணம் தான் இவ்வாறு இயக்குகின்றதா…? என்ற இந்த
வினாக்கள் இருக்கும்.
உதாரணமாக… அச்சுறுத்தும் உணர்வுகளைக் கேட்கப்படும் பொழுது இரவிலே
தூங்கும் பொழுது அந்த உணர்வு எப்படி இயக்குகின்றதோ… அதே போன்று
மெய்ஞானிகள் உணர்வை நாம் எடுக்கப்படும் பொழுது அந்த அச்சுறுத்தும் உணர்வை அடக்கி
அந்த ஞானி உணர்வுகளை நாம் காண முடியும்.
1.அச்சுறுத்தும் உணர்வுகள் தெரிவது போல் தான்
2.மெய் ஞானிகளையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
யாரும் தவறு செய்யவில்லை. தெரிந்து யாரும் ஞானியாக ஆகவில்லை நான்
ஞானியாக வேண்டும் என்று “தெரிந்து… அப்படி
ஆகவில்லை…”
1.மற்றவர்கள் நலம் பெற வேண்டும் நலம் பெற வேண்டும் என்று இந்த
உணர்வைச் செலுத்தப்படும் பொழுது தான் ஞானி ஆகின்றார்கள்.
2.பிறர் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணும் போது
தான் ஞானியாக முடிகின்றது.
ஞானிகளைப் போன்று நாமும் வாழ்க்கையில் அதைக் கடைபிடித்துச் செயல்படும் பொழுது
அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடைகின்றோம்.
அந்த உயர்வான நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்று உங்கள்
எண்ணத்தை உயர்த்தி…
எல்லோரையும் அந்த உயர்ந்த நிலையை நீங்கள் பெறச் செய்ய முடியும்
1.உங்கள் பார்வையால் உலகில் உள்ள நஞ்சின் தன்மையை மாற்ற
முடியும்.
2.இங்கே 50 பேர் தான் இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்
என்று எண்ண வேண்டாம்… இது ஐம்பது இலட்சமாகவும் ஐம்பது கோடியாகவும் மாறலாம்.