
சிதம்பரத்தில் வைத்து… யாம் உபதேசித்ததன் நோக்கம்
1.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று சொல்லும் பொழுதெல்லாம்
2.எப்பொழுதுமே நம் நினைவைப்
புருவ மத்திக்கே கொண்டு போய்ப் பழக வேண்டும்.
நம் உயிரே குருவாகவும்
நாம் எண்ணியது ஈசனாகவும் அது உருவாக்கக்கூடிய நிலையை நாம் உணர முடியும். இந்த உணர்வுகளை நாம் எண்ணும் பொழுது “எதை
எண்ணுகின்றோமோ…” உடலுக்குள் இந்த உணர்வுகள் ஊடுருவது நமக்குத்
தெரிய வரும்.
சாதாரணமாக மூக்கின் வழி
கூடித்தான் சுவாசிக்கின்றோம். கண்கள் பார்க்கின்றது… மற்ற உணர்வுகளை எடுக்கின்றோம் ஆன்மாவாக மாறுகின்றது. மூக்கு வழி கூடிச் சுவாசித்து உயிரிலே பட்டு இந்த உணர்வுகளைப் பின்னாடி அறிகின்றோம்.
நாம் ஓம் ஈஸ்வரா என்று
அடிக்கடி சொல்லும் போதெல்லாம் உயிரை எண்ணிப் புருவ மத்தி வழி கூடி எடுக்கும்
பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும். அதன் வழி கூடித் தான்
நாம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
வாழ்க்கையில்
பயன்படுத்துவது கண் வழி கூடி… மூக்கு வழி சுவாசிப்பதும்
என்று அதை அறிந்து கொண்டாலும் கூட
1.தீமையான உணர்வுகள்
நமக்குள் வராதபடி
2.அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று எண்ணி அதை இடைமறிக்க வேண்டும்.
நாம் எவ்வளவு நல்லதைப்
பேசினாலும் கூட பிறிதொருவருடைய நிலைகள்… குடும்பக்
கஷ்டமோ அல்லது நோயோ அதனுடன் கலந்த சொல்லாக வெளி வரும்.
அவரைக் கண்ணுற்றுப் பார்த்துக் கவரும் பொழுது ஆன்மாவாகிச் சுவாசிக்க நேரும். எனக்கு இந்த மாதிரிக் கஷ்டமாக இருக்கின்றது என்று சொல்லும் பொழுது இந்த
உணர்வு கலந்து விடுகின்றது.
இத்தகைய உணர்வுகள்
வந்தாலும் கூட
1.ஈஸ்வரா…! என்று இடைமறித்து அதைப் பலவீனப்படுத்தி
2.மகரிஷியின் உணர்வுகளை
உயிர் வழி கூடி எடுத்து வலுப்பெறும் போது அவரிடமிருந்து கேட்டறிந்த தீமையை
மாற்றுகின்றது.
அவர் பலவீனமான நிலையில்
வெளிப்படுத்தும் போது மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்… அவர் நலம் பெற வேண்டும் என்று இப்படி எண்ணி எடுக்க வேண்டும்
ஏனென்றால் ஒரு
பாத்திரத்தில் சமைத்து அதற்கப்புறம் அதை எடுத்துப் போட்டால் தான் ருசியாக
இருக்கும்.
அதைப் போல மற்றவர்கள்
கஷ்டம் என்று சொல்லும் பொழுது “அடடா… உங்களுக்கு இப்படி ஆகிவிட்டதா…?” என்ற நாம் எண்ணினால்
அதைத்தான் சமைத்து அதையே தான் அவர்களுக்கு மீண்டும் எடுத்துக் கொடுக்கின்றோம்.
1.ஆகவே இதில் மிகவும்
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
2.அடிக்கடி அந்த
மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து அதைக் கலந்து தான் நாம்
வெளிப்படுத்த வேண்டும்.
தியானத்தில் 27 நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும்…
நவக் கோள்களின் சக்தி பெற வேண்டும்… சப்தரிஷி மண்டலங்களின்
சக்தி பெற வேண்டும்… சப்தரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…! என்று சொல்கின்றோம்.
ஏன்…?
அவைகளில் இருந்து
விளைந்தது… அந்தச் சக்திகளை எல்லாம் நாம் பெற்றவர்கள்.
27 நட்சத்திரங்களுடைய உணர்வுகள்
எல்லாவற்றிலும் உண்டு. அதில் எந்த நட்சத்திரத்தினுடைய சக்தி
கூட்டல் கழித்தல் என்று அதிகமாக அல்லது குறைவாக இருக்கின்றதோ அதற்குத் தக்கவாறு
உணர்ச்சிகளைத் தூண்டுவதும்… எண்ணங்கள் இயக்குவதும் எல்லாமே
அமைந்திருக்கின்றது.
1.எல்லாவற்றையும் நாம் ஐக்கியப்படுத்தி
நமக்குள் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது பிரிவு இல்லை.
2.மகரிஷிகளின் அருள்
சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன்.
3.மகரிஷிகளின் அருள்
சக்தி நான் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்.
ஆக… நமது குருநாதர் காட்டிய வழியில் தியானத்தில் அமர்ந்திருக்கும்
எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
1.முதலில் அந்த 27
நட்சத்திரங்களுடைய சக்தி பெற வேண்டும் என்று சொல்லும் பொழுது
2.எல்லோருடைய எண்ணங்கள்
நமக்குள் பிரதிபலித்து “ஒன்றாகிறது…”
அடுத்து… நவக்கோளின் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதனுடன் சப்தரிஷி மண்டலங்கள்… மனிதனான அந்த
உணர்வுகளை இதனுடன் கலக்கின்றோம். பார்வையால் எடுக்கின்றோம்… எண்ணத்தால் எடுத்து இங்கே கொண்டு வருகின்றோம்.
நம் ஆன்மாவிலே அதைக்
கலந்து கொண்டே வருகின்றோம். சப்தரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும்
என்று நினைக்கின்றோம். இது எல்லாமே கலக்கின்றது.
அவர்கள் உடலில்
விளைந்ததும் கோள்தான்… அவர்கள் எண்ணமும் நட்சத்திரம்தான்.
1.முதலிலே… அவர்கள் வாழ்க்கையில் அந்தச் சக்திகளைப் பெறும் தகுதி பெற்ற உணர்வுகள்
உண்டு.
2.இதை எல்லாம் ஐக்கியப்படுத்தித்
தான் அந்த உணர்வை எடுக்க வேண்டும் என்பதற்காக…
27 நட்சத்திரங்களைப் பற்றிச் சொல்வது.
குருநாதர் இதையெல்லாம்
காண்பித்தார். அதைப் பதிவு செய்யும்போது அந்த எண்ணங்கள்
வருகின்றது. எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க
வேண்டும். எல்லோரும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று
தியானிக்கும் போது இந்த எண்ண அலைகள் பரவும்.
அப்பொழுது ஐக்கிய உணர்வுகள்
நமக்குள் வளர்கின்றது.
இதற்கு முன்பும் இதைப்
பற்றிச் சொல்லி இருக்கின்றேன். ஆனால் அர்த்தங்கள்
உங்களுக்குச் சரியாக ஆகியிருக்காது. இப்பொழுது அதை விளக்கிக்
கொடுக்கின்றேன்.
27 நட்சத்திரத்தின்
நிலைகள் அது எது எதில் கலந்திருக்கின்றதோ செடியில் கலந்தாலும் அந்தச் சக்தி
கலக்கப்படும் பொழுதுதான் அந்த உணர்வுக்குத் தக்கவாறு தாவர இனத்தை உருவாக்குகின்றது.
பூமியில் செடி கொடிகள்
இருந்த இடத்திலிருந்து எப்படி அதனுடைய சக்திகளைப்
பெறுகின்றதோ இதே போன்று நாம் சுவாசித்து உடலில் உருபெற்ற அணுக்கள் அந்தந்த
இடத்திலிருந்து விளைகின்றது.
உதாரணமாக மலைப் பகுதியில்
விளையும் செடிகள் கீழே தரையில் விளைவது இல்லை. அதே போல்
தரையில் விளைவதை மலையில் வைத்தால் அங்கே அது விளைவது இல்லை.
இதைப் போன்று தான் நம்
உடலில் அந்தந்தக் காலப் பருவம் அதனுடைய நிலைகள் வரப்படும் பொழுது அணுக்கள்
விளைகின்றது. அது அது அதற்குத் தக்கவாறு சுவாசத்தை
எடுத்து வளர்கின்றது. இருந்த இடத்திலிருந்தே அது பெறுகிறது.
1.இத்தனைக்கும்
சாப்பாடு கொடுப்பது நமது உயிர் தான்… உருவாக்குவதும் உயிர்
தான்.
2.பிரபஞ்சத்தில்
சூரியனும் இதைப் போன்று தான் சந்தர்ப்பத்தில் ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரு வித்தை
உருவாக்குகின்றது.
விளைந்த பின் எதை எதை எடுத்து
அது வித்தாக உருப்பெற்றதோ புவியின் ஈர்ப்பின் துணையை வைத்து அதற்குண்டான சத்தைக்
கொடுத்து அதைச் செடியாக வளர்க்கின்றது. அது
சந்தர்ப்பம்.
நாம் நல்ல குணங்களுடன் இருந்தாலும்
பிறருடைய உணர்வுகளைக் கவர்ந்து அவர்களுக்கு உதவி செய்கின்றோம். அவர்கள் உடலில் இருந்து வரக்கூடிய உணர்வு நம்முடைய
எண்ணங்களுடன் கலந்து உயிரணுக்களாக மாறும் பொழுது புதுப் புது குணங்களாக
உருவாகின்றது.
ஒருவரைப் பார்த்து… இவர் நேற்று நன்றாகப் பேசினார் இன்று மோசமாகப் பேசுகின்றார்
என்போம். அதே போல்… நேற்று மோசமாக
இருந்தார்… இன்று நன்றாகப் பேசுகிறார் என்று சொல்வோம்.
ஏனென்றால் அவர் அடிக்கடி
யாரிடத்தில் அதிகமாகப் பழகுகின்றாரோ அந்த உணர்வின் இயக்கங்கள் அவருக்குள் வளர்ச்சி
பெறுகின்றது. அத்தகைய அணுக்கள் வளரப்படும் போது அதற்குத்
தக்கவாறு தான் அவருடைய மணங்கள் மாறிச் சொல்களும் வெளி
வருகின்றது.
ஆரம்பத்தில் எல்லாவற்றையும்
யாம் பொதுவாகச் சொல்லிக் கொண்டு
வந்திருந்தாலும்
1.அதை எப்படி
உங்களுக்குள் இணைத்துக் கொடுப்பது…? என்கிற வகையில் முதலிலே
சொல்லவில்லை.
2.பொது இடத்திலே
(PUBLIC) அதைப் பெற முடியாது… அப்படிக்
கொடுக்க முடியாது.
3.குருநாதர் உடலில்
விளைந்த அந்த அருள் உணர்வுகள் எனக்குள் இருக்கிறது.
4.அதைப் பெற்று
விளைவித்து உங்களிடம் திரும்பச் சொல்லும் போது உங்களுக்குள் அதை இணைத்துக் கொண்டு வர முடிகிறது.
5.அதற்குத் தான் இங்கே
சிதம்பரத்திற்கு உங்களை எல்லாம் வரச் சொல்லித் தெளிவாக்குகிறோம்.
அப்பொழுது… குருவால் பெற்ற உணர்வுகள்
எனக்குள் விளைவதும்… அடுத்து அது உங்களுக்குள்ளும் விளையத் தொடங்கும்.