ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 18, 2025

தீப ஒளித் திருநாள்

தீப ஒளித் திருநாள்


ஒரு ரைஸ் மில் இருக்கிறது என்றால் நெல்லை அதிலே அதிகமாகப் போட்டுவிட்டால் லோடு தாங்காது…” அதை இழுத்து இயக்கக்கூடிய மோட்டாரில் உள்ள காந்தம் குறைந்து விடுகிறது.
 
இப்படிச் சிறுகச் சிறுக அது தேய்மானம் ஆகிவிட்டால் சிறிதளவு நெல்லைப் போட்டாலும் கூட அரைக்க முடியாத நிலை ஆகி விடுகிறது.
 
இதைப் போல நம் உடலில் இருக்கக்கூடிய காந்த சக்திகள் அனைத்தும்
1.கோபம் வெறுப்பு வேதனை போன்ற குணங்களை அதிகமாக எடுக்கப்படும் பொழுது
2.அதைச் சரியான முறையில் ஜீரணிக்கக் கூடிய திறன் இழந்து விடுகிறது.
 
அதனால்… அந்தக் கோபம் வேதனை போன்ற உணர்வுகள் அனைத்தும் நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து உடலுக்குள்து விஷம் கலந்ததாக மாறிவிடுகிறது.
1.அந்த விஷங்கள் கலந்த பின்
2.அடுத்து மகிழ்ச்சியைப் பற்றி எண்ணவே முடிவதில்லை.
 
ஆனால் நாம் சாப்பிட்ட ஆகாரத்தில் இருக்கக்கூடிய விஷத்தை இந்த உடல் லமாக மாற்றி விட்டு உடலை நல்லதாக ஆக்கச் செய்கின்றது உடலிலிருந்து வெளிப்படக்கூடிய மம் ஆறாவது அறிவு.
 
உதாரணமாக கருணைக்கிழங்கில் விஷம் இருக்கிறது என்றால் இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு அதை நீக்கிவிட்டுச் சுவையாகச் சாப்பிடக்கூடிய நிலை வருகிறது.
 
அதே சமயம் ஒருவன் தவறு செய்கின்றான் என்று கண்ணிலே பார்த்த பின் எரிச்சல் ஆகிறது. அவனால் பொருள் விரயம் ஆகின்றது என்கிற பொழுது வேதனையாகின்றது.
 
ந்த இரண்டையும் நாம் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வான சத்துக்கள் எரிச்சலும் வேதனையும் நமக்குள் வடிக்கப்பட்டு ஆகாரத்துடன் 1.
இது இரண்டும் உயிரில் சேர்க்கப்படும் பொழுது இதற்குப் பெயர் காளி
2.மிகவும் துரித நிலைகள் கொண்டு செயல்படும் தன்மை வந்து விடுகிறது.
 
அவ்வளவு சக்திகள் நமக்குள் தோன்றிய பின் அதைக் கழிக்கும் திறனை இழக்கச் செய்து விடுகிறது. விஷம் இவ்வாறு கலந்த பின் சிந்திக்கும் திறன் (ஆறாவது அறிவின் தன்மை) இழந்து விடுகின்றது.
 
கருணைக்கிழங்கில் உள்ள விஷத்தை எப்படி வேக வைத்து நீக்குகின்றோமோ அந்த நீக்கும் எண்ணம் இருந்தாலும்… வாழ்க்கையில் ஒருவன் தவறு செய்வதிலிருந்து இந்த வேகங்கள் நமக்குள் ஆக்கிரமித்துக் கொண்டால் அதை நாம் கழிக்க முடியாத நிலையாகி உடலுக்குள் சேர்த்து விடுகின்றது.
 
நமது உயிர் ஒளியாக இருக்கின்றது. உடல் பெற்ற பின் அறிய வேண்டும் என்று எண்ணி கண் தெரிந்து கெட்டது என்ற நிலை வந்தாலும் அதைச் சுவாசித்த பின் உடலுக்குள் அது வந்து விஷத்தை ட்டிவிடுகிறது.
 
சிந்தனையைக் குலைக்கச் செய்யும் அந்த உணர்விலிருந்து மீட்டிக் கொள்ளக்கூடிய திறன் வாய்ந்த ஆறாவது அறிவை அப்போது அது செயலிழக்கச் செய்துவிடுகின்றது.
 
இப்படி விஷங்கள் கலந்து சிந்திக்கும் செயல் இழக்கப்படும் போது இதிலிருந்து நாம் எப்படித் தப்புவது…? என்ற இந்த உண்மையை உணர்த்துவதற்குத் தான் அன்று சூரசம்காரத்தைக் காட்டித் தீய சக்திகளில் இருந்து மீட்கப்பட வேண்டும்…! என்று காட்டினார்கள்.
 
ஏனென்றால் தவறு செய்பவன் அவனாக இருக்கின்றான். ஆனால் பொருள் போய்விட்டதே என்று நாம் வேதனைப்படும் பொழுது விஷமாகி விடுகின்றது. தவறு செய்தவனைப் பார்த்த உடனே எரிச்சலாகின்றது. இந்த உணர்வை நாம் சுவாசித்து விட்டால் உடலில் நோயாக மாறுகின்றது.
 
ஆரம்பத்தில் கண்ணில்லாத புழுவாக இருக்கும் போது அது பசியின் ஏக்கத்தில் இருந்தது. நகர்ந்து சென்று வேதனையான பின் அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளைச் சுவாசித்தது.
 
அதற்குப்பின் கண் தெரிந்தது.
 
அப்பொழுது கெட்டதை நீக்கி நல்லது எது என்று அறிந்துணர்ந்து செயல்படும் அந்த வழியில் நாம் வளர்ச்சி அடைந்து வந்த பின் கெட்டது என்று தெரிகின்றது கருணைக்கிழங்கில் புறநிலையில் இருப்பதை விஷத்தை வேக வைத்து நீக்குகின்றோம்.
 
அதே சமயம் ஒருவன் தவறு செய்கின்றான் என்று அறிய உதவுகின்றது. பொருள் சேதமாகிவிட்டால் எவ்வளவு நஷ்டம் ஆகி விடுமே என்ற நிலையில் வேதனை அடையச் செய்து சிந்தனையைக்கும்படி செய்கின்றது.
 
அத்தகைய வேதனை உணர்ச்சிகள் தோன்றி அது செயலாக்கிய பின் இந்த உணர்வுகள் நம் ஆகாரத்துடன் சேர்ந்து விடுகின்றது.
1.இப்படிச் சிறுகச் சிறுக நமக்குள் அந்த விஷம் உருப்பெறுகின்றது.
2.அதைத் தடைப்படுத்துவது எப்படி…?
3.தீமை அணுகாத நிலைகள் கொண்டு எப்படி மீட்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்குத் தான் சூரசம்காரம் என்று காட்டுகின்றார்கள்.
 
ஏனென்றால் அதன் வழி சென்றவர்கள் மெய்ஞானிகள். அவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக இன்று இருக்கின்றார்கள். நம் பூமிக்குள் அங்கிருந்து பல ஆற்றல்மிக்க சக்திகள் வந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் வாழ்ந்த காலத்தில் வெளியிட்ட மூச்சலைகளும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் பூமிக்குள் சுழன்று கொண்டிருக்கிறது.
 
அதே போல வெறுப்பு வேதனையுடன் நாம் பேசிய எண்ண அலைகளும் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அதுவும் காற்றிலே மிதந்து கொண்டுள்ளது.
 
விஞ்ஞான அறிவால்… ஒன்றும் அறியாத நாடாக்களில் பூசப்பட்ட உலோக முலாமுக்குள் பதிவு செய்து அதை மீண்டும் ஒரு இயந்திரத்தில் போட்டு அந்த உணர்வின் ஒலியைப் பரப்பச் செய்யும் பொழுது காந்தப் புலன்கள் தனக்குள் கவர்ந்து அலைகளாக அனுப்புகின்றது.
1.டிவியில் அதே ஸ்டேஷனைத் திருப்பி வைக்கப்படும் பொழுது
2.காற்றுக்குள் மறைந்திருக்கக்கூடிய நுண்ணிய அலைகளைக் குவித்த பின் அங்கே எந்தப் புகைப்படத்தைப் பதிவு செய்தார்களோ அதை ஈர்க்கின்றது.
3.டிவியைப் பார்க்கப்படும் பொழுது அந்தச் சாதனம் சரியாக இருந்தால் அந்தப் படத்தை ஒழுங்காக் காட்டுகிறது,
 
இதே போன்று தான் நம்மை அறியாதபடி சலிப்பு சஞ்சலம் வேதனை போன்ற உணர்வுகள் நம் நல்ல குணங்களுக்குள் கலந்த பின் நல்லதை எண்ணி இழுக்கும் திறன் இழந்து விடுகின்றோம்…!”
 
பாலுக்குள் காரத்தைக் கலந்தால் அதைக் குடிக்கும் பொழுது வெறுக்கச் செய்கின்றது. இதைப் போல நம் நல்ல மனம் கொண்டு நாளுக்கு நாள் ஒவ்வொன்றையும் பார்க்கப்படும் பொழுது
1.பிறர் தவறு செய்வதை நுகர நேருகின்றது அந்த உணர்வை அறிந்து கொள்கின்றோம்
2.ஆனால் அவை நமக்குள் தீங்கு விளைவிக்கும் சக்திகளாக மாறுகின்றது.
 
அந்த சமயம் அந்தச் செயலை நீக்கிவிட்டாலும் உடலுக்குள் சேர்ந்த அந்த விஷமான சத்தை நீக்கும் திறன் இழந்து இருக்கின்றோம். அதைத் கழிப்பதற்குத் தான் தீபாவளி திருநாளை வைத்தார்கள்.
 
மனிதனா நாம் அனைத்தும் அறியக்கூடிய வளர்ச்சி பெற்று வந்திருந்தாலும் ஞானிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவதற்குண்டான தகுதியை ஏற்படுத்துவதற்குத் தான் தீபாவளி நாள்…”
 
ஞானிகள் அவர்கள் வாழ்க்கையில் வந்த தீய சக்திகளை எல்லாம் மாற்றி உணர்வை ஒளியாக மாற்றி சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டு ஜீவன் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
1.அவர்கள் பேசிய உணர்வலைகளை நாம் நுகர்ந்து
2.அவர்கள் எந்த வழிகளில் விண் சென்றார்களோ அந்த நிலையை நாமும் பெறுதல் வேண்டும்.
 
உயிர் ஒளியாகத் தோன்றியது உணர்வை ஒளியாக மாற்றினார்கள். அந்த வழியிலே ஒளியாக இன்றும் வாழ்கின்றார்கள்.
 
இதைத்தான் ஓர் உயிர் ஒளியாகத் தோன்றி பூமிக்குள் விஜயம் செய்து நவராத்திரி என்று காட்டுகிறார்கள். அதாவது… பல உணர்வின் சக்திகள் உடலுக்குள் கொலு வீற்றிருந்து இருளுக்குள் நின்று ஒளியை அறிந்து தனக்குள் வழியறிந்து உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்றவர்கள் சப்தரிஷிகள்.
 
1.அந்த மகரிஷிகள் காட்டி அருள் வழிப்படி நாம் அனைவரும் ஒளியின் உணர்வாக ருப் பெறுவோம்
2.அந்தத் தகுதியை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் தான் தீப ஒளித் திருநாள்…!