
உடலில் உள்ள “ஒவ்வொரு அணுவிலும் விஷத்தை ஒடுக்கும் உணர்வை” நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்
தீமைகளை வென்ற அருள்
மகரிஷிகளின் உணர்வுகளைக் கூர்மையாக வலிமை கொண்டு பதிவாக்கி அதைப் பெற வேண்டும்
என்று மீண்டும் எண்ணப்படும் பொழுது அது நம் உடலுக்குள் செல்கின்றது.
தீமையை வென்றவன்
சுக்ரீவன்… அவன் வாலியின் சகோதரன்… இளையவன்.
விஷத்தின் தன்மை கொண்டு
வளர்ச்சி பெற்றுத் தான்
1.பல கோடிச் சரீரங்களில்
அது எடுத்துக் கொண்ட வலிமை கொண்டு,,, பரிணாம வளர்ச்சி
அடைந்து மனிதனாக உருவாக்கியது.
2.மனிதனான பின் விஷத்தின்
தன்மை ஒடுக்கி அந்த உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றவன் துருவ மகரிஷி.
3.ஆகையினால்… பின் தான் இதனுடைய வளர்ச்சியின் தன்மை பெற்றவன் என்றும் சுக்ரீவன்
வாலியின் சகோதரன் என்றும் இளையவன் என்றும்
4.பின் வந்த நிலையை
நாம் அறிவதற்காக நமக்குக் காட்டியுள்ளார்கள் இராமாயணக் காவியத்தில்.
கடும் வேதனைகளை
அடக்கியவன் சுக்ரீவன். பல கோடிச் சரீரங்களில் உருவான இந்த உணர்வைத்
துருவன் அந்த விண்ணின் ஆற்றலைத் தனக்குள் எடுத்து நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக
மாற்றுகின்றான்.
உதாரணமாக ஒரு விஷமான
பாம்பு உணவுக்காகத் தனக்குள் விளையும் விஷத்தை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சி
அதனை உட்கொள்ளும் பொழுது இந்த விஷமே அந்த உடலைக் கரைக்கும் சக்தியாக மாற்றுகின்றது.
துரித நிலைகள் கொண்டு
தனக்குப் பாதுகாப்பாக இந்த விஷம் விளைந்தாலும் எதை உட்கொள்கின்றதோ அந்த உடலிலும்
விஷம் உண்டு. அந்த விஷத்தையும் தன்னுடன் கலந்து அதை
ஜீரணிக்கும் சக்தி வரப்படும் பொழுது
1.மீண்டும் விஷத்தினை
வளர்த்து விஷம் உருவாக்கும் அந்தப் பையில் (பாம்பின் உடலில்) அதை நிரப்பும்.
2.பையில் நிரப்பப்படும்
பொழுது அதில் சிறுகச் சிறுகச் சேர்த்து வளர்ச்சியின் தன்மை வரும் பொழுது
நாகரத்தினமாக மாறுகின்றது.
3.விஷப் பைகளில்
வளர்ச்சியின் தன்மை பெறும் பொழுது ஒளியின் சுடராக மாறுகின்றது.
அதே போல் தான்
1.ஒவ்வொரு அணுக்களிலும்
விஷத்தை ஒடுக்கும் உணர்வினைப் பெற்று ஒளியின் சரீரம் பெற்றவன் துருவ மகரிஷி.
2.அந்தத் துருவ
மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்வோமென்றால் அது உடலுக்குள் சென்று நம்மை அறியாது
சேர்ந்த வேதனைகளை அடக்குகின்றது.
எந்த உணர்வு நம்மைச்
சோர்வடையச் செய்ததோ… அந்த உணர்வுகள் விஷத்தின் தன்மையை மீண்டும்
நுகர்ந்து சோர்வடையாதபடி… அந்தத் துருவனின் உணர்வுகளைச்
சேர்க்கப்படும் போது… அந்த விஷத்தினை ஒடுக்குகின்றது.
அதனால் தான் வாலியை இராமன்
“சுக்ரீவன் துணை கொண்டு அடக்கினான்…” என்று சொல்வது.
நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த
உணர்வே எண்ணங்களாக இயக்குகின்றது என்றும் “அருள் ஒளியின்
உணர்வாக இயக்கப்பட வேண்டும்” என்றும் காட்டுகின்றார்கள்.
அதாவது பிராணயாமம் என்று
சொல்வார்கள்.
ஆனால்… மூக்கு வழி கூடிச் சுவாசித்து உணர்வினை உடலுக்குள் செலுத்தி அந்த
உணர்வை ஜீவனாக்குவது அல்ல பிராணயாமம்.
1.புருவ மத்தியில் உயிருடன்
ஒன்றி நினைவினை விண்ணிலே செலுத்தி
2.அந்தத் துருவ
மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் ஊடுருவச் செய்து
3.அந்த உணர்வினை
உடலுக்குள் சேர்த்து… அதனின் இயக்கமாக நமக்குள் இயக்கச்
செய்வதே பிராணயாமம் என்பது.
ஏனென்றால் அந்தத் துருவ
மகரிஷியின் உணர்வு நம் உடலுக்குள் சென்று… அந்த உணர்வின்
இயக்கமாகத் தொடரப்படும் பொழுது எதனின் வலுப் பெறுகின்றதோ அதன் இயக்கமாக அது நம்மை “ஒளியான நிலைகளாக…” மாற்றி அமைக்கும்.