மனித சரீரத்தின் பஞ்ச உறுப்புகளில் வாய்ப் பகுதியில்
அடி நாக்குத் தொடங்கி ஓடுகின்ற நாடி... குய்யம் என்றிட்ட மூலாதார நாடியுடன் இணைந்து
செயல் கொள்கிறது.
1.தீய எண்ணங்களின் குணங்களினாலும்
2.நினைவை மறக்கச் செய்யும் ஆத்திரமான செயல்களினாலும்
3.வாழ்க்கை நடைமுறையில் அந்த எண்ணமே தீவிரமாகச்
செயல் கொள்ளும் காலத்தில்
4.மூலாதார உஷ்ணத்தினால் தாக்கப்படுவது அந்த நாடியே…!
எண்ண எதிர்பார்ப்பு அற்ற நிலையில் கூட அதிர்ச்சியால்
ஏற்படும் அதி பய உணர்வே
1.இந்த நாடியின் செயலைச் செயல் நடத்திடும்
2.நாபிக் கமல நீர் சக்தி நாடி கலந்து செயல்படும்
இடத்தில் தடை ஏற்பட்டு
3.ஒலி ஏற்படுத்திடும் செயல் தன்மைகளை மாற்றிவிடும்.
அது போன்ற தீய குணங்களின் செயலைக் கோலமாமகரிஷி மாற்றித்
தாய் சக்தியின் அருளாசி பெற்று தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொண்டார்.
1.அந்த உயர் ஞான வளர்ப்பினை... மூகமாகச் செயல்படும்
திறத்தை...
2.அந்த இரகசியத்தை
3.தாய் சக்தியாகப் பெற்ற பேராற்றல் ஞான வளர்ப்பை
4.”அவரது அனுமதியுடன்…!” அந்த வழி முறைகளாகச் சிறிது
கோடி காட்டுகின்றோம்.
கோலமாமகரிஷி தன்னை உணர்ந்து கொண்ட அறிவின் தெளிவில்
1.உயிராத்மாவின் சக்தியைக் குழந்தையாகப் பாவனைப்படுத்தி
2.எண்ணத்தில் தன்னையே தாயாக்கிக் கொண்டு
3.உயிராத்ம சக்தியின் வளர்ப்பிற்கு அன்பு கொண்டு
ஜெப ஆகாரம் ஊட்டினாரப்பா..!
இத்தகைய தனித்துவத் தன்மையை விளக்கிட்டாலும் உண்மையின்
கருப்பொருளை அறிந்து கொள்வார் இல்லையப்பா…!
பூமியே சிவமாகவும் பூமியின் இயக்கமே சக்தியாகவும்
உயர் ஞான சிந்தனையாகத் தெளிந்து... தன் சரீர கதியிலும் தொடர்பு கொண்டு... அதே நிலை
தான் அங்கும் உள்ளது என்று உணர்ந்து கொண்டு... தாய் சக்தியின் ஆக்கம் தன் நிலை உயர்த்தக்
கூட்டிக் கொண்டால் எல்லா உண்மை நிலைகளையும் உணர்ந்து கொண்டிடலாம்.
சமூக அமைப்பில் இந்தச் சக்திதனை நாடி வரும் அனைவரும்
அதைப் பெற வேண்டும் என்ற அன்பு கொண்டு சூட்சம நிலையில் மூலச் சக்கரமாக உருவாக்கினார்
ஆதிசங்கரர் உடலினின்று செயல்பட்ட கோலமாமகரிஷி.
அதாவது “சர்வக்ஞ பீடம் என்ற மூலச்சக்கரமாக…” ஆதிசங்கரரால்
மூகாம்பிகை கோவில் அமையப் பெற்றிருக்கும் இடத்திலிருந்து நேர் கிழக்காக “குடசாஸ்திரி”
என்று அழைக்கப்படும் மலையில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.
பின் அரசர்களின் அதி ஆசை செயல்களுக்கு அகப்பட்டுவிடாமல்
இருக்க அந்த மூலச்சக்கரம் மறைக்கப்பட்டது. அந்த மலையில் ஒரு புறத்தே அமையப் பெற்ற குகைக்குள்
பேழை ஒன்றினுள் வைக்கப்பட்டுள்ளது.
மூகாம்பிகை அம்மன் சக்தியாலும் கோலமாமகரிஷியால்
அருள் ஒளி பாய்ச்சிடும் செயலுக்கே ஆதிசங்கரரே அவருடன் செயல்படுகின்றாரப்பா…!
அந்தப் பகுதியில் அமைந்துள்ள மலைகள் அனைத்திலும்
இரும்புக் கனி வளங்கள் நிறைந்துள்ளது. வனப் பகுதியின் மையத்தில் மலைகளால் சூழப்பட்டு
யாரும் நெருங்கிடாவண்ணம் சரிவின் தாழ்வறையில் ஒரு “காந்தக் கிணறும்…” உண்டு.
மூலச் சக்கரம் வைக்கப்பட்டுள்ள குகைக்கும் மூகாம்பிகைக்
கோவிலுக்கும் தொடர்பு கொண்ட ஒரு நீண்ட நெடிய குகை வழிப்பாதை உண்டு. சுயம்பு காந்தலிங்கம்
இந்தக் குகையின் வழிப் பாதையில் நீண்டே செல்கின்றது.
லிங்கத்தின் உச்சியில் காணப்படும் தங்க ரேகை குகை வழிப்பாதையில் நீண்டு படர்ந்த வண்ணம் காணப்படுகின்றது.