1.ஒரு உணர்வின் தன்மை கொண்டு ஒரு கோளின் உணர்வை அதிகரித்து இந்த
மனித உடலில் வாழ்ந்தால்
2.அந்தக் கோளுக்கு மாற்றாக நல்ல உணர்வின் தன்மையை இணைந்து வாழும்
உணர்வின் கணக்கிற்கொப்ப
3.நட்சத்திரங்களின் திசை நோக்கி எந்தக் கோள்களுக்கும் சிக்காது அதனின்
உணர்வின் நேர்பார்வையில்
4.சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்துடன் இணைப்பு வரும்
பகுதியை இணைத்து வைத்தார்கள்.
அந்த இணைப்பின் தன்மை கொண்டு... துருவ நட்சத்திரத்தின் இணைப்பும்
மற்ற கோள்களின் இணைப்பும்... துருவப் பகுதியில் கவரும் அதற்கு நேராக ஆலயத்தை அமைத்து
தெய்வீகப் பண்பை நாம் ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்று எண்ணும்படி அன்றைய ஞானியர்கள்
செய்தார்கள்.
ஏனென்றால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பையும்...
2.மற்ற வெள்ளிக் கோளின் உணர்வுகளையும் கார்த்திகை நட்சத்திரத்தின்
உணர்வுகளையும் இரண்டாகச் சேர்க்கும் நிலை வரும்போது
3.இதன் உணர்வின் ஒளிக்கற்றைகள் அது பிரிவடைந்து
4.அந்த ஆலயத்தின் அமைப்பிற்குள் சூரியனுடைய ஒளி நேர் பார்வைக்கு
வரும் பொழுது அதனை மாற்றி அமைத்து
5.அது எதனைக் கவர்கிறது என்பதை அளவுகோலிட்டுக் கால் மாகாணி என்று
முந்தைய கணக்கிடும் தன்மைகள் வந்தது.
இன்று விஞ்ஞான அறிவு கொண்டு கால்குலேட்டர் போன்ற சாதனங்களை அமைத்து
மனிதன் சிந்தித்து நுகரும் தன்மைக்கு இல்லாது கொண்டு வந்து விட்டனர்.
கால்குலேட்டர் என்ற உணர்வைப் பதிவு செய்து இதன் மேல் ஞாபகப்படுத்தும்
நிலையில் அது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற உணர்வின் கதிர் கொண்டு ஒன்று ஒன்றுடன் மோதும்
பொழுது ஒன்றின் உணர்வுகள் எப்படிக் கணக்கிடுகிறது... என்ற நிலையில் இன்று கணக்கிடுகின்றார்கள்.
இந்த உணர்வின் தன்மை சென்றவன் அதிலேதான் நாட்டம் கொண்டு செல்கின்றானே
தவிர மெய் ஞானிகள் உணர்வின் நிலையும் பிரபஞ்சத்தின் உணர்வின் ஆற்றலையோ கணக்கிடும் முறைப்படுத்தி
அவன் உலகப் பிரபஞ்சத்துடன் இயக்கும் நிலை காலத்தால் மறைந்து விட்டது... விஞ்ஞான அறிவு
ஓங்கி விட்டது...!
நம் உயிர் எலக்ட்ரிக்... சுவாசித்ததை நம் உடலுக்குள் எலக்ட்ரானிக்காக
மாற்றுகிறது. மாற்றிய உணர்வின் தன்மை கொண்டு அதை நாம் மீண்டும் எண்ணுவோம் என்றால்
1.நமது உணர்வுக்கும் நுகர்ந்த உணர்வுக்கும் எதிர்நிலை வரப்படும்
பொழுது
2.அதன் உணர்வின் அறிவைப் பிரித்துக் காட்டும் நிலைகள் வருகின்றது.
அதே சமயத்தில் கம்ப்யூட்டரில் எதிர் அலைகளைப் பதிவாக்கினால் அதனை
உடனே மாற்றி அமைக்கும் சக்தி கொண்டு வருகின்றனர்... கணக்கை மாற்றி விடுகின்றனர் (COMPUTER
PROTECTION).
அதே போலத் தான் நமது உயிரின் தன்மை எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் என்ற
நிலை வரப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதை நாம் சீராக்கி நல்லதாக
மாற்றிட முடியும்.
இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கங்கள் மாற்றம் ஆகும் பொழுது அதற்குத்தக்க
ஒரு நல்ல குணத்தின் உணர்வுகள் பிறிதொரு எதிர் நிலையில் இருந்து உருவாக்கப்பட்ட நிலைகளை
ஒரு தெய்வத்திற்குக் காரணப் பெயராக வைத்து... அந்தத் திசையை நோக்கி நாம் எண்ணும் பொழுது...
வெள்ளி கோளின் உணர்வுகளும் கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகளும் இதைப் போன்ற மற்ற
கோள்களின் நிலைகளை இணைந்து அந்த அந்த உணர்வின் தன்மை மூன்றும் ஒன்றாகச் சேர்க்கும்
அத்தகைய நல்ல உணர்வுகளாக உருவாகிப் பரவும் போது அந்தத் திசை வழியாக நம்மை நுகரும்படி
வைப்பார்கள் அந்த ஆலயத்திலே.
1.அந்த உணர்வுகள் சூரியனால் கவரப்பட்டுப் பரவி வரும் திசையில் நாம்
உற்று நோக்கும் பொழுது
2.அந்த உயர்ந்த குணத்தின் உணர்வுகளை நமக்குள் கிடைக்கும்படி வைத்தார்கள்
ஞானிகள்.
இதுகள் எல்லாம் வானியல் சாஸ்திரம் என்ற நிலையில் கடந்த காலத்தில்
இயற்கையின் உண்மைகளை அறிந்து அந்த உணர்வைத் தனக்குள் பதிவு செய்து கொண்டு மனக்கணக்காக
வைத்துக் கணக்கிட்டனர்.
அந்த மனக்கணக்கு கொண்டு தெளிவாக்கி... தெளிந்த உணர்வு கொண்டு செயலாக்கி...
அதன் வழி அந்த வான இயலின் உணர்வின் தன்மைக்கொப்ப ஆலயங்களையும் கோபுரங்களையும் அமைத்தனர்.
1.அவர்களை “ஸ்தபதியர்கள்...” என்று சொல்வார்கள்.
2.இப்படிக் கணக்கிட்டுச் செயல்படுத்திய உலக நிலைகளில் பெருங்கொண்ட
மெய் ஞானிகளாக அன்று இருந்தனர்.