கடந்த கால மனிதர்கள்
(பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்) அவர்கள் நம்மைப் போன்று வேலை செய்வதில்லை. மிருகங்களைப்
போலத்தான் தன் உணவுக்காகத் தேடி அலைவதும்... உணவு உட்கொள்ளும் நிலையும் இருந்து வந்தது.
அவர்கள் சேமித்து
வைத்திருக்கும் உணவும் சிறிதளவு தான் இருக்கும். ஆனால் அதுவும் சிறிது காலத்தில் இருக்காது...
சேமித்து வைத்தால் நிற்காது (கெட்டுவிடும்) என்று அக்கால மனிதர்கள் சேமித்து வைப்பது
இல்லை. “கெட்டுப் போய் விட்டது...” என்று விட்டு விட்டுச் சென்று விடுவார்கள்.
1.உயிரினங்களைப்
போலத் தான் அன்றைய மனிதர்கள் இருந்தார்கள்
2.ஆனாலும் இயற்கையின்
நிலைகளைத் தன் எண்ணத்தால் நுகர்ந்து அறியும் சக்தி பெற்றவர்கள்.
அவர்கள் எண்ணங்கள்
அப்படி இருந்தாலும் இன்று இருக்கும் விஞ்ஞான அறிவு எப்படி வருகின்றது...?
முந்தி எல்லாம்
பள்ளிக்கூடங்களில் “மாகாணி வாய்ப்பாடு” சொல்வார்கள். அந்த வாய்ப்பாடுகளைச் சொல்லப்
போகும் போது பேசிக் கொண்டிருக்கும்போதே இத்தனைக்கு இத்தனை என்ன...? என்று கேட்டால்
உடனே சொல்லிவிடுவார்கள்.
இப்பொழுது விஞ்ஞான
அறிவில் வந்த மாணவர்களை எடுத்துக் கொண்டால் கால்குலேட்டர் வேண்டும். அதை வைத்துத் தட்டிப்
பார்த்துத் தான் சொல்வார்கள். கால்குலேட்டர் இல்லாமல் அவர்களால் சொல்ல முடியாது.
1.மனிதனுடைய
மூளை வளர்ச்சி அங்கே தான் (இயந்திரத்திற்கு) போகிறது
2.இன்னொன்றை
நாடும் போது சுயமாக சிந்திக்கும் நிலை இழக்கப்படுகின்றது.
3.எந்த இயந்திரத்தால்
மனிதன் செயல்பட்டானோ அந்த இயந்திரத்தின் துணை வேண்டித்தான் அவன் எண்ணம் செல்கின்றது.
இயந்திரத்தின்
நிலையை வடிவமைத்த... அது எந்த இன்ஜினியரோ அல்லது விஞ்ஞானியோ... அவன் உணர்வுதான் தான்
வருகின்றது. இந்த உடலின் இச்சைக்குத் தான் இது நடக்கின்றது
இதைப்போல செயற்கையில்
செய்யப்பட்ட கெமிக்கல் கலந்த உணர்வு இயக்கப்பட்டு... எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற
நிலையில் இவனால் உருவாக்கப்பட்ட நிலைகள் அந்த அதிர்வுகளைக் கொடுக்கும் பொழுது அதன்
செயலாக்கம் நடக்கின்றது.
கம்ப்யூட்டர்
அல்லது டிவி.. ஃபோன் இதை எல்லாம் பார்த்தோம் என்றால் படமாகத் தெரிகிறது. அதை ஒவ்வொரு
நாளும் பார்த்துப் பார்த்துப் பழகி விட்டால் அதே உணர்வின் சிந்தனை தான் நமக்குள் வரும்.
அதையே தான் பார்த்துக் கொண்டிருப்போம்.
உதாரணமாக ஒரு
கம்ப்யூட்டர் இயக்கக்கூடியவர்கள் அதிலேயே உட்கார்ந்திருந்தால்...
1.ஒரு பிரமை
பிடித்த மாதிரித் தான் இருப்பார்கள்.
2.சகஜ வாழ்க்கையில்
அதற்கு மேற்கொண்டு என்ன செய்வது...? ஏது செய்வது...? என்று தெரிவதில்லை.
3.இயல்பான அறிவின்
ஞானம் இல்லாது போகிறது.
4.மனிதனால் இயக்கப்பட்ட
அந்தக் கெமிக்கல் தான் இவன் உணர்வுக்குள் வளர்க்கப்பட்டுக் கொண்டு வருகிறது.
மனிதனால் செயற்கையில்
இயக்கப்பட்டு எந்த விஷத்தன்மை கொண்ட அதிர்வின் ஒலி/ஒளிகளைக் காணுகின்றானோ அதே உணர்வுதான்
இன்று மனிதனுக்குள் வளர்ந்து கொண்டே வருகின்றது.
இப்படி அந்த
விஷத்தின் அலைகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு சிந்தனை இழக்கும் தன்மையாகத் தான் மனிதன்
மாறுகின்றானே தவிர மெய் ஞான வழிக்கு வர முற்படவில்லை.
இவன் உடலில்
விளைந்த செயற்கை அலைகள் வெளிப்படுவதை சூரியன் கவர்ந்து காற்றிலே பரவச் செய்கிறது.
1.அந்த எலெக்ட்ரானிக்
சாதனங்களை மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தும் போது
2.அதே உணர்வு
தான் வரும் அதே உணர்வின் இயக்கமாகத் தான் வரும் (ARTIFICIAL INTELLIGENCE).
மனிதனுக்கு அடுத்த நிலையான உயர் ஞான வழிக்குச் செல்லும் நிலை தடைப்படுகின்றது..!