வான்மீகி ஆச்சா மரத்தை வாலியின் தொடர்பில் பதம் பார்த்த பொழுது
“ஆத்ம சக்தி பெறும்...” சக்தி அலைத் தொடர்பில் குறைவுபட்டது.
1.அந்தக் காரணத்தை அறிந்து அதைச் செயல்படுத்தி
2.எண்ணத் தடையாகும் இராமபாணத்தை மீண்டும் எய்ததின் தொடரே வான்மீகி
பெற்ற ஜடாக்கினி அனுபவ ஞானம்,
எடையிடும் பொருளே எடை காட்டும் கல்லாக ஆனதில் எடையிடும் எண்ண அளவீட்டில்
தராசின் முனை முள் அளவீடு காட்டுவதைப் போல் தன்னுடைய அனுபவ ஞானம் நிறைவு காண (மீண்டும்)
சபரியிடம் பதம் பார்த்தான் வான்மீகி.
மனைவியைப் பிரிந்த இராமன் சபரிக்கு மோட்சத்தை அளித்திட இயலவில்லை
என்ற கதையின் தொடர்பிற்குச் “சூட்சம விளக்கம் உள்ளது...!”
இராம ஜெப ஏக்கமாக ஜெபத்தில் ஏங்கினாள் சபரி. அந்த ஏக்கத்தைப் பூர்த்தி
செய்ய
1.சங்கடத்தின் அலைகளை ஈர்த்துக் கொண்ட வழி காட்டும் குருவானவர்
2.பூரணத்துவம் நிறைவு பெறாத தொடர் நிலையில் தன்னை உணர்ந்து மீண்டும்
அதற்குண்டான வழியமைத்தான்.
மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்து பெறும் உயர்ந்த சக்திகளைத்
தன் ஈர்ப்பிற்குக் கொண்டு வர வேண்டும் என்றால் சங்கடமில்லாத சமமான பாவனையில் இருத்தல்
வேண்டும்.
அந்த நிலை இல்லாத போது
1.உண்மைச் சீடர்களின் ஏக்கம் குருவிற்கே எற்பட்டு...
2.உண்மையை உணர்ந்து... தான் தெளிந்து..
3.சூரிய குலம் என்று குறிப்பிடும் வீரிய அமில முலாம் ஈர்ப்பின்
தொடர்புகளில் தொடர்பு கொண்டு...
4.உயர்ந்த உணர்வுகளை மீண்டும் ஈர்க்கும் வலுக் கொண்டால் இராமபாணம்
பாயும்... தன் இலட்சியத்தையும் எய்தும்.
அதாவது
1.இராமபாணம் எய்தால் மீண்டும் அது எய்தியவரிடமே திரும்ப வருவதைப்
போல் செயல் கொண்டிடும் இந்தச் சக்தி
2.நாம் எடுக்கும் எண்ண ஈர்ப்பின் வலுவால் “வலுத்து...”
3.அதன் மூலம் தன் சக்தியை மீண்டும் வலுக் கூட்டிக் கொள்ள முடியும்.
“சபரி மோட்சம்...!” என்று சொல்கின்ற சூட்சமத்தில் சபரி பெற்ற சக்தியின்
வலு ஐயப்ப மாமுனியின் தொடர்பால் தன் எண்ண இலட்சியத்தை அடைந்தது.
இந்தச் சக்தியின் தொடர்பால் அந்த ஐயப்ப மகான் தன் சக்தியின் குறைவுபடாத்
தன்மையில் அந்தச் சபரியின் மூலத்தையே தாய் சக்தியாக ஆக்கிக் கொண்டார்.
ஐயப்பன் தன் அனுபவத்தில் பெற்றுக் கொண்ட எத்தனையோ சக்தித் தொடரில் சபரி சக்தியும் ஒன்று...!